Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 12

An-Nisa

(an-Nisāʾ)

௧௧௧

وَمَنْ يَّكْسِبْ اِثْمًا فَاِنَّمَا يَكْسِبُهٗ عَلٰى نَفْسِهٖ ۗ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ١١١

waman yaksib
وَمَن يَكْسِبْ
இன்னும் எவர்/சம்பாதிப்பார்
ith'man
إِثْمًا
ஒரு பாவத்தை
fa-innamā
فَإِنَّمَا
எல்லாம்
yaksibuhu
يَكْسِبُهُۥ
சம்பாதிப்பார்/அதை
ʿalā nafsihi
عَلَىٰ نَفْسِهِۦۚ
தனக்கெதிராகத்தான்
wakāna l-lahu
وَكَانَ ٱللَّهُ
அல்லாஹ் இருக்கின்றான்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
ஞானவானாக
எவன் பாவத்தைச் சம்பாதிக்கின்றானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே அதனைச் சம்பாதிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧௧)
Tafseer
௧௧௨

وَمَنْ يَّكْسِبْ خَطِيْۤـَٔةً اَوْ اِثْمًا ثُمَّ يَرْمِ بِهٖ بَرِيْۤـًٔا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا ࣖ ١١٢

waman yaksib
وَمَن يَكْسِبْ
எவர்/சம்பாதிப்பார்
khaṭīatan
خَطِيٓـَٔةً
ஒரு குற்றத்தை
aw
أَوْ
அல்லது
ith'man
إِثْمًا
ஒரு பாவத்தை
thumma yarmi
ثُمَّ يَرْمِ
பிறகு/எறிகிறார்
bihi
بِهِۦ
அதை
barīan
بَرِيٓـًٔا
ஒரு நிரபராதியை
faqadi
فَقَدِ
திட்டமாக
iḥ'tamala
ٱحْتَمَلَ
சுமந்து கொண்டார்
buh'tānan
بُهْتَٰنًا
அவதூறை
wa-ith'man
وَإِثْمًا
இன்னும் பாவத்தை
mubīnan
مُّبِينًا
பகிரங்கமான
எவரேனும், யாதொரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதனை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧௨)
Tafseer
௧௧௩

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّاۤىِٕفَةٌ مِّنْهُمْ اَنْ يُّضِلُّوْكَۗ وَمَا يُضِلُّوْنَ اِلَّآ اَنْفُسَهُمْ وَمَا يَضُرُّوْنَكَ مِنْ شَيْءٍ ۗ وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُۗ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا ١١٣

walawlā faḍlu
وَلَوْلَا فَضْلُ
அருளும் இல்லாதிருந்தால்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
waraḥmatuhu
وَرَحْمَتُهُۥ
அவனின் கருணை
lahammat
لَهَمَّت
திட்டமாக நாடியிருக்கும்
ṭāifatun
طَّآئِفَةٌ
ஒரு பிரிவு
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
an
أَن
அல்லது வழிகெடுத்துவிட
yuḍillūka
يُضِلُّوكَ
அல்லது வழிகெடுத்துவிட உம்மை
wamā yuḍillūna
وَمَا يُضِلُّونَ
அவர்கள் வழிகெடுக்க மாட்டார்கள்
illā
إِلَّآ
தவிர
anfusahum
أَنفُسَهُمْۖ
தங்களையே
wamā yaḍurrūnaka
وَمَا يَضُرُّونَكَ
தீங்கிழைக்க மாட்டார்கள்/உமக்கு
min shayin
مِن شَىْءٍۚ
எதையும்
wa-anzala
وَأَنزَلَ
இறக்கினான்
l-lahu ʿalayka
ٱللَّهُ عَلَيْكَ
அல்லாஹ்/உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
இவ்வேதத்தை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
waʿallamaka
وَعَلَّمَكَ
இன்னும் உமக்குக் கற்பித்தான்
مَا
எவற்றை
lam takun
لَمْ تَكُن
நீர் இருக்கவில்லை
taʿlamu
تَعْلَمُۚ
அறிகிறீர்
wakāna
وَكَانَ
இருக்கிறது
faḍlu l-lahi
فَضْلُ ٱللَّهِ
அல்லாஹ்வின்அருள்
ʿalayka ʿaẓīman
عَلَيْكَ عَظِيمًا
உம்மீது/மகத்தானது
(நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனது கிருபையும் உங்கள்மீது இல்லாதிருந்தால் (நீங்கள் தவறிழைத்திருக்கக் கூடும். ஏனென்றால், எந்த விதத்திலும்) உங்களை வழி கெடுத்து விடவேண்டுமென்று அவர்களில் ஒரு கூட்டத்தினர் முடிவு கட்டியிருந்தனர். எனினும், அவர்கள் தங்களையே அன்றி (உங்களை) வழி கெடுக்கவில்லை. அவர்கள் உங்களுக்கு யாதொரு தீங்கிழைத்து விடவும் முடியாது. அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உங்கள்மீது அருட்செய்து நீங்கள் அறியாத அனைத்தையும் உங்களுக்குக் கற்பித்திருக்கின்றான். உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாகவே இருக்கின்றது. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧௩)
Tafseer
௧௧௪

۞ لَا خَيْرَ فِيْ كَثِيْرٍ مِّنْ نَّجْوٰىهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍۢ بَيْنَ النَّاسِۗ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ ابْتِغَاۤءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا ١١٤

لَّا
அறவே இல்லை
khayra
خَيْرَ
நன்மை
fī kathīrin
فِى كَثِيرٍ
அதிகமானவற்றில்
min
مِّن
இருந்து
najwāhum
نَّجْوَىٰهُمْ
அவர்களின் ரகசியம்
illā man
إِلَّا مَنْ
தவிர/எவர்
amara
أَمَرَ
ஏவினார்
biṣadaqatin
بِصَدَقَةٍ
தர்மத்தை
aw
أَوْ
அல்லது
maʿrūfin
مَعْرُوفٍ
நன்மையை
aw
أَوْ
அல்லது
iṣ'lāḥin
إِصْلَٰحٍۭ
சமாதானத்தை
bayna
بَيْنَ
இடையில்
l-nāsi
ٱلنَّاسِۚ
மக்கள்
waman
وَمَن
எவர்
yafʿal
يَفْعَلْ
செய்வார்
dhālika
ذَٰلِكَ
அதை
ib'tighāa
ٱبْتِغَآءَ
நாடி
marḍāti
مَرْضَاتِ
பொருத்தம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fasawfa nu'tīhi
فَسَوْفَ نُؤْتِيهِ
தருவோம்/அவர்களுக்கு
ajran
أَجْرًا
கூலியை
ʿaẓīman
عَظِيمًا
மகத்தானது
(நபியே!) அவர்கள் (உங்களுடன்) பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. ஆயினும், தானம் கொடுப்பதைப் பற்றியோ, நன்மையானவற்றைப் பற்றியோ, மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர. ஆகவே, எவரேனும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இவ்வாறு (இரகசியம்) பேசினால் (மறுமையில்) நாம் அவர்களுக்கு மகத்தான (நற்) கூலியைத் தருவோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧௪)
Tafseer
௧௧௫

وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدٰى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَنَّمَۗ وَسَاۤءَتْ مَصِيْرًا ࣖ ١١٥

waman
وَمَن
எவர்
yushāqiqi
يُشَاقِقِ
முரண்படுகிறார்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதருக்கு
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā tabayyana
مَا تَبَيَّنَ
தெளிவானது
lahu
لَهُ
தனக்கு
l-hudā
ٱلْهُدَىٰ
நேர்வழி
wayattabiʿ
وَيَتَّبِعْ
பின்பற்றுவார்
ghayra sabīli
غَيْرَ سَبِيلِ
அல்லாதது/பாதை
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களின்
nuwallihi
نُوَلِّهِۦ
திருப்பி விடுவோம்/ அவரை
mā tawallā
مَا تَوَلَّىٰ
எது/திரும்பினார்
wanuṣ'lihi
وَنُصْلِهِۦ
இன்னும் நுழைப்போம்/ அவரை
jahannama
جَهَنَّمَۖ
நரகத்தில்
wasāat
وَسَآءَتْ
கெட்டுவிட்டது
maṣīran
مَصِيرًا
மீளுமிடத்தால்
எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கின்றாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧௫)
Tafseer
௧௧௬

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ يَّشَاۤءُ ۗ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا ۢ بَعِيْدًا ١١٦

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yaghfiru
لَا يَغْفِرُ
மன்னிக்க மாட்டான்
an yush'raka bihi
أَن يُشْرَكَ بِهِۦ
இணைவைக்கப்படுவதை/அவனுக்கு
wayaghfiru
وَيَغْفِرُ
இன்னும் மன்னிப்பான்
mā dūna dhālika
مَا دُونَ ذَٰلِكَ
அது அல்லாததை
liman
لِمَن
எவருக்கு
yashāu
يَشَآءُۚ
நாடுவான்
waman
وَمَن
எவர்
yush'rik
يُشْرِكْ
இணைவைப்பார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
faqad
فَقَدْ
திட்டமாக
ḍalla
ضَلَّ
வழிகெட்டார்
ḍalālan
ضَلَٰلًۢا
வழிகேடு
baʿīdan
بَعِيدًا
தூரமானது
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கின்றார். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧௬)
Tafseer
௧௧௭

اِنْ يَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖٓ اِلَّآ اِنَاثًاۚ وَاِنْ يَّدْعُوْنَ اِلَّا شَيْطٰنًا مَّرِيْدًاۙ ١١٧

in yadʿūna
إِن يَدْعُونَ
அவர்கள் பிரார்த்திப்பதில்லை
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
illā
إِلَّآ
தவிர
ināthan
إِنَٰثًا
பெண்(சிலை)களை
wa-in yadʿūna
وَإِن يَدْعُونَ
அவர்கள் பிரார்த்திப்பதில்லை
illā
إِلَّا
தவிர
shayṭānan
شَيْطَٰنًا
ஷைத்தானிடம்
marīdan
مَّرِيدًا
கீழ்ப்படியாதவன்
அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடையவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத்தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧௭)
Tafseer
௧௧௮

لَّعَنَهُ اللّٰهُ ۘ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيْبًا مَّفْرُوْضًاۙ ١١٨

laʿanahu
لَّعَنَهُ
சபித்தான்/அவனை
l-lahu
ٱللَّهُۘ
அல்லாஹ்
waqāla
وَقَالَ
கூறினான்
la-attakhidhanna
لَأَتَّخِذَنَّ
நிச்சயமாக எடுத்துக்கொள்வேன்
min
مِنْ
இருந்து
ʿibādika
عِبَادِكَ
அடியார்கள்/உன்
naṣīban
نَصِيبًا
ஒரு தொகையை
mafrūḍan
مَّفْرُوضًا
குறிப்பிட்டது
அந்த ஷைத்தானை அல்லாஹ் கோபித்து சபித்தான். அதற்கவன் "உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்" என்று கூறினான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧௮)
Tafseer
௧௧௯

وَّلَاُضِلَّنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ ۚ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا ١١٩

wala-uḍillannahum
وَلَأُضِلَّنَّهُمْ
இன்னும் நிச்சயம் வழிகெடுப்பேன்/அவர்கû ள
wala-umanniyannahum
وَلَأُمَنِّيَنَّهُمْ
இன்னும் நிச்சயமாக வீண் நம்பிக்கையூட்டுவேன்/அவர்களுக்கு
walaāmurannahum
وَلَءَامُرَنَّهُمْ
இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு
falayubattikunna
فَلَيُبَتِّكُنَّ
ஆகவே நிச்சயம் அறுப்பார்கள்
ādhāna
ءَاذَانَ
காதுகளை
l-anʿāmi
ٱلْأَنْعَٰمِ
கால்நடைகளின்
walaāmurannahum
وَلَءَامُرَنَّهُمْ
இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு
falayughayyirunna
فَلَيُغَيِّرُنَّ
நிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள்
khalqa
خَلْقَ
படைப்புகளை
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
waman
وَمَن
எவன்
yattakhidhi
يَتَّخِذِ
எடுத்துக் கொள்வான்
l-shayṭāna
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தானை
waliyyan
وَلِيًّا
நண்பனாக, பாதுகாவலனாக
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
faqad khasira
فَقَدْ خَسِرَ
திட்டமாகநஷ்டமடைந்தான்
khus'rānan
خُسْرَانًا
நஷ்டம்
mubīnan
مُّبِينًا
பகிரங்கமானது
அன்றி "நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டுபண்ணி (பிசாசு களுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ் லிவின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்" (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி (இத்தகைய) ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கின்றானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்து விடுவான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧௯)
Tafseer
௧௨௦

يَعِدُهُمْ وَيُمَنِّيْهِمْۗ وَمَا يَعِدُهُمُ الشَّيْطٰنُ اِلَّا غُرُوْرًا ١٢٠

yaʿiduhum
يَعِدُهُمْ
வாக்களிக்கிறான் அவர்களுக்கு
wayumannīhim
وَيُمَنِّيهِمْۖ
இன்னும் வீண்நம்பிக்கையூட்டுகிறான்/அவர்களுக்கு
wamā yaʿiduhumu
وَمَا يَعِدُهُمُ
வாக்களிக்க மாட்டான்/அவர்களுக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
illā ghurūran
إِلَّا غُرُورًا
ஏமாற்றத்தைத் தவிர
(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கின்றான். அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகின்றான். எனினும், ஏமாற்றுவதற்கன்றி ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௨௦)
Tafseer