Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௩

Qur'an Surah An-Nisa Verse 113

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّاۤىِٕفَةٌ مِّنْهُمْ اَنْ يُّضِلُّوْكَۗ وَمَا يُضِلُّوْنَ اِلَّآ اَنْفُسَهُمْ وَمَا يَضُرُّوْنَكَ مِنْ شَيْءٍ ۗ وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُۗ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا (النساء : ٤)

walawlā faḍlu
وَلَوْلَا فَضْلُ
And if not (for the) Grace
அருளும் இல்லாதிருந்தால்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ʿalayka
عَلَيْكَ
upon you
உம்மீது
waraḥmatuhu
وَرَحْمَتُهُۥ
and His Mercy
அவனின் கருணை
lahammat
لَهَمَّت
surely (had) resolved
திட்டமாக நாடியிருக்கும்
ṭāifatun
طَّآئِفَةٌ
a group
ஒரு பிரிவு
min'hum
مِّنْهُمْ
of them
அவர்களில்
an
أَن
to
அல்லது வழிகெடுத்துவிட
yuḍillūka
يُضِلُّوكَ
mislead you
அல்லது வழிகெடுத்துவிட உம்மை
wamā yuḍillūna
وَمَا يُضِلُّونَ
But not they mislead
அவர்கள் வழிகெடுக்க மாட்டார்கள்
illā
إِلَّآ
except
தவிர
anfusahum
أَنفُسَهُمْۖ
themselves
தங்களையே
wamā yaḍurrūnaka
وَمَا يَضُرُّونَكَ
and not they will harm you
தீங்கிழைக்க மாட்டார்கள்/உமக்கு
min shayin
مِن شَىْءٍۚ
in anything
எதையும்
wa-anzala
وَأَنزَلَ
And has sent down
இறக்கினான்
l-lahu ʿalayka
ٱللَّهُ عَلَيْكَ
Allah to you
அல்லாஹ்/உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
இவ்வேதத்தை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
and [the] Wisdom
இன்னும் ஞானத்தை
waʿallamaka
وَعَلَّمَكَ
and taught you
இன்னும் உமக்குக் கற்பித்தான்
مَا
what
எவற்றை
lam takun
لَمْ تَكُن
not you did
நீர் இருக்கவில்லை
taʿlamu
تَعْلَمُۚ
know
அறிகிறீர்
wakāna
وَكَانَ
And is
இருக்கிறது
faḍlu l-lahi
فَضْلُ ٱللَّهِ
(the) Grace (of) Allah
அல்லாஹ்வின்அருள்
ʿalayka ʿaẓīman
عَلَيْكَ عَظِيمًا
upon you great
உம்மீது/மகத்தானது

Transliteration:

Wa law laa fadlul laahi 'alaika wa rahmatuhoo lahammat taaa'ifatum minhum ai yudillooka wa maa yudilloona illaaa anfusahum wa maa yadurroonaka min shai'; wa anzalal laahu 'alaikal Kitaaba wal Hikmata wa 'allamaka maa lam takun ta'lam; wa kaana fadlul laahi 'alaika 'azeemaa (QS. an-Nisāʾ:113)

English Sahih International:

And if it was not for the favor of Allah upon you, [O Muhammad], and His mercy, a group of them would have determined to mislead you. But they do not mislead except themselves, and they will not harm you at all. And Allah has revealed to you the Book and wisdom and has taught you that which you did not know. And ever has the favor of Allah upon you been great. (QS. An-Nisa, Ayah ௧௧௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனது கிருபையும் உங்கள்மீது இல்லாதிருந்தால் (நீங்கள் தவறிழைத்திருக்கக் கூடும். ஏனென்றால், எந்த விதத்திலும்) உங்களை வழி கெடுத்து விடவேண்டுமென்று அவர்களில் ஒரு கூட்டத்தினர் முடிவு கட்டியிருந்தனர். எனினும், அவர்கள் தங்களையே அன்றி (உங்களை) வழி கெடுக்கவில்லை. அவர்கள் உங்களுக்கு யாதொரு தீங்கிழைத்து விடவும் முடியாது. அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உங்கள்மீது அருட்செய்து நீங்கள் அறியாத அனைத்தையும் உங்களுக்குக் கற்பித்திருக்கின்றான். உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாகவே இருக்கின்றது. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௧௩)

Jan Trust Foundation

(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனின் கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் உம்மை வழி கெடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு திட்டமாக நாடியிருக்கும். அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்கமாட்டார்கள். அவர்கள் உமக்கு எதையும் தீங்கிழைக்க மாட்டார்கள். அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கினான். நீர் அறிந்திராதவற்றை உமக்குக் கற்பித்தான். உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கிறது.