يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ࣖ ٧١
- yāahla l-kitābi
- يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களே
- lima talbisūna
- لِمَ تَلْبِسُونَ
- ஏன் கலக்கிறீர்கள்
- l-ḥaqa
- ٱلْحَقَّ
- உண்மையை
- bil-bāṭili
- بِٱلْبَٰطِلِ
- பொய்யுடன்
- wataktumūna
- وَتَكْتُمُونَ
- இன்னும் மறைக்கிறீர்கள்
- l-ḥaqa
- ٱلْحَقَّ
- உண்மையை
- wa-antum taʿlamūna
- وَأَنتُمْ تَعْلَمُونَ
- நீங்கள் அறிந்து கொண்டே
வேதத்தையுடையவர்களே! உண்மையை பொய்யுடன் ஏன் கலக்கின்றீர்கள். நீங்கள் நன்கறிந்து கொண்டே உண்மையை ஏன் மறைக்கின்றீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௧)Tafseer
وَقَالَتْ طَّاۤىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِيْٓ اُنْزِلَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْٓا اٰخِرَهٗ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَۚ ٧٢
- waqālat
- وَقَالَت
- கூறினர்
- ṭāifatun
- طَّآئِفَةٌ
- ஒரு கூட்டத்தினர்
- min ahli l-kitābi
- مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களில்
- āminū
- ءَامِنُوا۟
- நம்பிக்கை கொள்ளுங்கள்
- bi-alladhī
- بِٱلَّذِىٓ
- எதை
- unzila
- أُنزِلَ
- இறக்கப்பட்டது
- ʿalā alladhīna
- عَلَى ٱلَّذِينَ
- மீது/எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- wajha l-nahāri
- وَجْهَ ٱلنَّهَارِ
- பகலின் ஆரம்பம்
- wa-uk'furū
- وَٱكْفُرُوٓا۟
- இன்னும் நிராகரியுங்கள்
- ākhirahu
- ءَاخِرَهُۥ
- அதன் இறுதியில்
- laʿallahum yarjiʿūna
- لَعَلَّهُمْ يَرْجِعُونَ
- அவர்கள் திரும்புவதற்காக
வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: "நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதனை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கை கொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்" (என்றும்) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௨)Tafseer
وَلَا تُؤْمِنُوْٓا اِلَّا لِمَنْ تَبِعَ دِيْنَكُمْ ۗ قُلْ اِنَّ الْهُدٰى هُدَى اللّٰهِ ۙ اَنْ يُّؤْتٰىٓ اَحَدٌ مِّثْلَ مَآ اُوْتِيْتُمْ اَوْ يُحَاۤجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْ ۗ قُلْ اِنَّ الْفَضْلَ بِيَدِ اللّٰهِ ۚ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُ ۗوَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ۚ ٧٣
- walā tu'minū
- وَلَا تُؤْمِنُوٓا۟
- இன்னும் நம்பாதீர்கள்
- illā
- إِلَّا
- தவிர
- liman
- لِمَن
- எவரை
- tabiʿa
- تَبِعَ
- பின்பற்றினார்
- dīnakum
- دِينَكُمْ
- உங்கள் மார்க்கத்தை
- qul
- قُلْ
- கூறுவீராக
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-hudā
- ٱلْهُدَىٰ
- நேர்வழி
- hudā
- هُدَى
- நேர்வழி
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- an yu'tā
- أَن يُؤْتَىٰٓ
- கொடுக்கப்படுவார்
- aḥadun
- أَحَدٌ
- ஒருவர்
- mith'la mā
- مِّثْلَ مَآ
- போன்று/எது
- ūtītum
- أُوتِيتُمْ
- கொடுக்கப்பட்டீர்கள்
- aw yuḥājjūkum
- أَوْ يُحَآجُّوكُمْ
- அல்லது/உங்களோடு தர்க்கிப்பார்கள்
- ʿinda
- عِندَ
- இடம்
- rabbikum
- رَبِّكُمْۗ
- உங்கள் இறைவன்
- qul
- قُلْ
- கூறுவீராக
- inna l-faḍla
- إِنَّ ٱلْفَضْلَ
- நிச்சயமாக/அருள்
- biyadi
- بِيَدِ
- கையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- yu'tīhi
- يُؤْتِيهِ
- அதை கொடுக்கின்றான்
- man
- مَن
- எவருக்கு
- yashāu
- يَشَآءُۗ
- நாடுகிறான்
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- wāsiʿun
- وَٰسِعٌ
- விசாலமானவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- மிக அறிந்தவன்
"உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உண்மையான நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்." (அன்றி அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி) "உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று (வேதம்) மற்றெவருக்கும் கொடுக்கப்படும் என்பதையோ அல்லது அந்த நம்பிக்கையாளர்கள் உங்கள் இறைவன் முன்பாக தர்க்கித்து உங்களை வெற்றிக் கொள்வார்கள் என்பதையோ நம்பாதீர்கள்!" (என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(வேதம் என்னும்) பெரும்பாக்கியம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கின்றது. அதனை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (மனிதர்களின் தகுதியை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௩)Tafseer
يَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ يَّشَاۤءُ ۗوَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ ٧٤
- yakhtaṣṣu
- يَخْتَصُّ
- சொந்தமாக்குகிறான்
- biraḥmatihi
- بِرَحْمَتِهِۦ
- தனது அருளுக்கு
- man
- مَن
- எவரை
- yashāu
- يَشَآءُۗ
- நாடுகிறான்
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- dhū l-faḍli
- ذُو ٱلْفَضْلِ
- அருளுடையவன்
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- மகத்தானது
அல்லாஹ் தான் விரும்பியவர்களை தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். அவன் மகத்தான கொடையாளி யாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௪)Tafseer
۞ وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّهٖٓ اِلَيْكَۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَأْمَنْهُ بِدِيْنَارٍ لَّا يُؤَدِّهٖٓ اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَاۤىِٕمًا ۗ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِى الْاُمِّيّٖنَ سَبِيْلٌۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُوْنَ ٧٥
- wamin ahli l-kitābi
- وَمِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களில்
- man
- مَنْ
- எவர்
- in tamanhu
- إِن تَأْمَنْهُ
- நீர் அவரை நம்பினால்
- biqinṭārin
- بِقِنطَارٍ
- ஒரு பொற்குவியலில்
- yu-addihi
- يُؤَدِّهِۦٓ
- அதை நிறைவேற்றுவார்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- wamin'hum
- وَمِنْهُم
- இன்னும் அவர்களில்
- man
- مَّنْ
- எவர்
- in tamanhu
- إِن تَأْمَنْهُ
- (நீர்) அவரை நம்பினால்
- bidīnārin
- بِدِينَارٍ
- ஒரு நாணயத்தால்
- lā yu-addihi
- لَّا يُؤَدِّهِۦٓ
- அதை நிறைவேற்ற மாட்டார்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- illā
- إِلَّا
- தவிர
- mā dum'ta
- مَا دُمْتَ
- (நீர்) தொடர்ந்தால்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவரிடம்
- qāiman
- قَآئِمًاۗ
- நிற்பவராக
- dhālika
- ذَٰلِكَ
- இது
- bi-annahum
- بِأَنَّهُمْ
- காரணம்/நிச்சயமாக அவர்கள்
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- laysa
- لَيْسَ
- இல்லை
- ʿalaynā
- عَلَيْنَا
- நம்மீது
- fī l-umiyīna
- فِى ٱلْأُمِّيِّۦنَ
- பாமரர்கள்விஷயத்தில்
- sabīlun
- سَبِيلٌ
- குற்றம்
- wayaqūlūna
- وَيَقُولُونَ
- இன்னும் கூறுகின்றனர்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- l-kadhiba
- ٱلْكَذِبَ
- பொய்யை
- wahum yaʿlamūna
- وَهُمْ يَعْلَمُونَ
- அவர்கள் அறிந்து கொண்டே
(நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (யாதொரு குறைவுமின்றி) உங்களிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீங்கள் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரையில் அதனைத் திரும்பக் கொடுக்க மாட்டார்கள். இதன் காரணம்: (தங்களையல்லாத) "பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை" என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௫)Tafseer
بَلٰى مَنْ اَوْفٰى بِعَهْدِهٖ وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ ٧٦
- balā
- بَلَىٰ
- ஏனில்லை
- man
- مَنْ
- எவர்
- awfā
- أَوْفَىٰ
- நிறைவேற்றினார்
- biʿahdihi
- بِعَهْدِهِۦ
- தன் வாக்குறுதியை
- wa-ittaqā
- وَٱتَّقَىٰ
- இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- நேசிக்கிறான்
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- அஞ்சுபவர்களை
(உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ அவர்கள்தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறை அச்சம் உடையவர்களை நேசிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௬)Tafseer
اِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا اُولٰۤىِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِى الْاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا يَنْظُرُ اِلَيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ ۖ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٧٧
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yashtarūna
- يَشْتَرُونَ
- வாங்குகிறார்கள்
- biʿahdi
- بِعَهْدِ
- வாக்குறுதிக்குபகரமாக
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wa-aymānihim
- وَأَيْمَٰنِهِمْ
- இன்னும் அவர்களுடைய சத்தியங்கள்
- thamanan
- ثَمَنًا
- விலையை
- qalīlan
- قَلِيلًا
- சொற்பமானது
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- lā khalāqa
- لَا خَلَٰقَ
- அறவே (நற்)பாக்கியமில்லை
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- walā yukallimuhumu
- وَلَا يُكَلِّمُهُمُ
- இன்னும் அவர்களுடன் பேசமாட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- walā yanẓuru
- وَلَا يَنظُرُ
- இன்னும் பார்க்கமாட்டான்
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்கள் பக்கம்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- walā yuzakkīhim
- وَلَا يُزَكِّيهِمْ
- இன்னும் அவர்களைத் தூய்மைப்படுத்தமாட்டான்
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- துன்புறுத்தக்கூடியது
எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்களுடைய சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்)பாக்கியமுமில்லை. அன்றி அல்லாஹ் மறுமையில் அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான்; (அன்புடன்) அவர்களை இறுதிநாளில் திரும்பிப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் புனிதப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௭)Tafseer
وَاِنَّ مِنْهُمْ لَفَرِيْقًا يَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِۚ وَيَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُوْنَ ٧٨
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- min'hum
- مِنْهُمْ
- அவர்களில்
- lafarīqan
- لَفَرِيقًا
- உறுதியாக ஒரு பிரிவினர்
- yalwūna
- يَلْوُۥنَ
- கோணுகின்றனர்
- alsinatahum
- أَلْسِنَتَهُم
- தங்கள் நாவை
- bil-kitābi
- بِٱلْكِتَٰبِ
- வேதத்தில்
- litaḥsabūhu
- لِتَحْسَبُوهُ
- (நீங்கள்) அதை எண்ணுவதற்காக
- mina l-kitābi
- مِنَ ٱلْكِتَٰبِ
- வேதத்தில்
- wamā
- وَمَا
- இன்னும் இல்லை
- huwa mina l-kitābi
- هُوَ مِنَ ٱلْكِتَٰبِ
- அது/வேதத்தில்
- wayaqūlūna
- وَيَقُولُونَ
- இன்னும் கூறுகின்றனர்
- huwa
- هُوَ
- அது
- min ʿindi l-lahi
- مِنْ عِندِ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- wamā
- وَمَا
- இல்லை
- huwa
- هُوَ
- அது
- min
- مِنْ
- இருந்து
- ʿindi l-lahi
- عِندِ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- wayaqūlūna
- وَيَقُولُونَ
- இன்னும் கூறுகின்றனர்
- ʿalā
- عَلَى
- மீது
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- l-kadhiba
- ٱلْكَذِبَ
- பொய்
- wahum yaʿlamūna
- وَهُمْ يَعْلَمُونَ
- அவர்கள் அறிந்து கொண்டே
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்) வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங் களைக் கலந்து, அதுவும்) வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக்கொள்வதற்காக தங்கள் நாவைக் கோணி உளறுகின்றனர். எனினும் அது வேதத்திலுள்ளது அல்ல. அன்றி "அது அல்லாஹ்விடமிருந்து வந்தது" என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் நன்கறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது இவ்வாறு பொய் கூறுகின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௮)Tafseer
مَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّؤْتِيَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّيْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ كُوْنُوْا رَبَّانِيّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَ ۙ ٧٩
- mā kāna
- مَا كَانَ
- உசிதமில்லை
- libasharin
- لِبَشَرٍ
- ஒரு மனிதருக்கு
- an yu'tiyahu
- أَن يُؤْتِيَهُ
- அவருக்கு கொடுக்க
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- wal-ḥuk'ma
- وَٱلْحُكْمَ
- இன்னும் ஞானம்
- wal-nubuwata
- وَٱلنُّبُوَّةَ
- இன்னும் நபித்துவம்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yaqūla
- يَقُولَ
- கூறுவார்
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- kūnū
- كُونُوا۟
- ஆகிவிடுங்கள்
- ʿibādan
- عِبَادًا
- அடியார்களாக
- lī
- لِّى
- என்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வைத் தவிர்த்து
- walākin
- وَلَٰكِن
- என்றாலும்
- kūnū
- كُونُوا۟
- ஆகிவிடுங்கள்
- rabbāniyyīna
- رَبَّٰنِيِّۦنَ
- சீர்திருத்தம் செய்யும் இறையச்சமுள்ள நிர்வாகிகளாக
- bimā kuntum
- بِمَا كُنتُمْ
- நீங்கள் இருப்பதால்
- tuʿallimūna
- تُعَلِّمُونَ
- கற்பிக்கிறீர்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- wabimā kuntum
- وَبِمَا كُنتُمْ
- இன்னும் நீங்கள் இருப்பதால்
- tadrusūna
- تَدْرُسُونَ
- கற்றுக் கொள்கிறீர்கள்
ஒரு மனிதருக்கு, வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி "அல்லாஹ்வை அன்றி என்னை வணங்குங்கள்" என்று கூறுவதற்கு இல்லை. ஆயினும் (மனிதர்களை நோக்கி) "நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதில் உள்ளவாறு) இறைவன் ஒருவனையே வணங்கும் மனிதர்களாக ஆகிவிடுங்கள்" என்றுதான் கூறுவார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௭௯)Tafseer
وَلَا يَأْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰۤىِٕكَةَ وَالنَّبِيّٖنَ اَرْبَابًا ۗ اَيَأْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ࣖ ٨٠
- walā
- وَلَا
- அவர் ஏவுவது இல்லை
- yamurakum
- يَأْمُرَكُمْ
- அவர் ஏவுவது இல்லை உங்களை
- an tattakhidhū
- أَن تَتَّخِذُوا۟
- நீங்கள்எடுத்துக்கொள்வது
- l-malāikata
- ٱلْمَلَٰٓئِكَةَ
- வானவர்களை
- wal-nabiyīna
- وَٱلنَّبِيِّۦنَ
- இன்னும் நபிமார்களை
- arbāban
- أَرْبَابًاۗ
- கடவுள்களாக
- ayamurukum
- أَيَأْمُرُكُم
- உங்களைஏவுவாரா?
- bil-kuf'ri
- بِٱلْكُفْرِ
- நிராகரிக்கும்படி
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- idh antum
- إِذْ أَنتُم
- நீங்கள் ஆகிய
- mus'limūna
- مُّسْلِمُونَ
- முஸ்லிம்களாக
தவிர "மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் அவர் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார். என்னே! இறைவன் ஒருவனையே நீங்கள் அங்கீகரித்த பின்னர் (அவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா? ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௮௦)Tafseer