Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 6

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௫௧

اِنَّ اللّٰهَ رَبِّيْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ۗهٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ ٥١

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
rabbī
رَبِّى
என் இறைவன்
warabbukum
وَرَبُّكُمْ
இன்னும் உங்கள் இறைவன்
fa-uʿ'budūhu
فَٱعْبُدُوهُۗ
ஆகவே அவனை வணங்குங்கள்
hādhā ṣirāṭun
هَٰذَا صِرَٰطٌ
இது/ஒரு வழி
mus'taqīmun
مُّسْتَقِيمٌ
நேர்
நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான வழி" (என்றும் கூறினார்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௧)
Tafseer
௫௨

۞ فَلَمَّآ اَحَسَّ عِيْسٰى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِيْٓ اِلَى اللّٰهِ ۗ قَالَ الْحَوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ اٰمَنَّا بِاللّٰهِ ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ ٥٢

falammā
فَلَمَّآ
போது
aḥassa
أَحَسَّ
உணர்ந்தார்
ʿīsā
عِيسَىٰ
ஈஸா
min'humu
مِنْهُمُ
அவர்களில்
l-kuf'ra
ٱلْكُفْرَ
நிராகரிப்பை
qāla
قَالَ
கூறினார்
man
مَنْ
யார்
anṣārī
أَنصَارِىٓ
என் உதவியாளர்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்விற்காக
qāla
قَالَ
கூறினார்
l-ḥawāriyūna
ٱلْحَوَارِيُّونَ
தோழர்கள்
naḥnu
نَحْنُ
நாங்கள்
anṣāru
أَنصَارُ
உதவியாளர்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wa-ish'had
وَٱشْهَدْ
சாட்சி அளிப்பீராக
bi-annā
بِأَنَّا
நிச்சயமாக நாங்கள்
mus'limūna
مُسْلِمُونَ
முஸ்லிம்கள்
அவர்களில் பலர் (தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த பொழுது (அவர்களை நோக்கி) "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?" எனக் கேட்டார். (அதற்கு) அவருடைய தோழர்கள் "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்களுக்கு) உதவி செய்கின்றோம். மெய்யாகவே! அல்லாஹ்வை நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். (ஆதலால்) நிச்சயமாக நாங்கள் முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டோம் என்பதாக நீங்கள் சாட்சி கூறுங்கள்" என்று கூறினார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௨)
Tafseer
௫௩

رَبَّنَآ اٰمَنَّا بِمَآ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ ٥٣

rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
bimā
بِمَآ
எதை
anzalta
أَنزَلْتَ
நீ இறக்கினாய்
wa-ittabaʿnā
وَٱتَّبَعْنَا
இன்னும் பின்பற்றினோம்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதர்
fa-uk'tub'nā
فَٱكْتُبْنَا
ஆகவே எங்களை பதிவு செய்
maʿa l-shāhidīna
مَعَ ٱلشَّٰهِدِينَ
சாட்சியாளர்களுடன்
(அன்றி) "எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகின்றோம். (உன்னுடைய) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால், (அவரை) உண்மைப் படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" (என்றும் அந்தத் தோழர்கள் பிரார்த்தித்தனர்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௩)
Tafseer
௫௪

وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ۗوَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ ࣖ ٥٤

wamakarū
وَمَكَرُوا۟
சதி செய்தார்கள்
wamakara
وَمَكَرَ
இன்னும் சதி செய்தான்
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
khayru
خَيْرُ
மிக மேலானவன்
l-mākirīna
ٱلْمَٰكِرِينَ
சதி செய்பவர்களில்
(ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௪)
Tafseer
௫௫

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰٓى اِنِّيْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ۚ ثُمَّ اِلَيَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ ٥٥

idh
إِذْ
சமயம்
qāla
قَالَ
கூறினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yāʿīsā
يَٰعِيسَىٰٓ
ஈஸாவே
innī
إِنِّى
நிச்சயமாக நான்
mutawaffīka
مُتَوَفِّيكَ
உம்மை கைப்பற்றுவேன்
warāfiʿuka
وَرَافِعُكَ
இன்னும் உம்மை உயர்த்துவேன்
ilayya
إِلَىَّ
என் பக்கம்
wamuṭahhiruka
وَمُطَهِّرُكَ
இன்னும் உம்மை பரிசுத்தப்படுத்துவேன்
mina alladhīna
مِنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
wajāʿilu
وَجَاعِلُ
இன்னும் ஆக்குவேன்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
ittabaʿūka
ٱتَّبَعُوكَ
உம்மைப் பின்பற்றினார்கள்
fawqa alladhīna
فَوْقَ ٱلَّذِينَ
மேல்/எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
ilā
إِلَىٰ
வரை
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِۖ
மறுமை நாள்
thumma ilayya
ثُمَّ إِلَىَّ
பிறகு/என் பக்கம்
marjiʿukum
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
fa-aḥkumu
فَأَحْكُمُ
இன்னும் தீர்ப்பளிப்பேன்
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
fīmā
فِيمَا
எதில்
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
fīhi
فِيهِ
அதில்
takhtalifūna
تَخْتَلِفُونَ
தர்க்கம் செய்கிறீர்கள்
(ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள்: "ஈஸாவே நிச்சயமாக நான் உங்களுக்கு (உங்களுடைய) ஆயுளை முழுமைபடுத்துவேன். உங்களை நம்மளவில் உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதிநாள் வரையில் மேலாக்கியும் வைப்பேன்" (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் பின்னும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவைகளைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்" (என்றும் கூறினான்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௫)
Tafseer
௫௬

فَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۖ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ ٥٦

fa-ammā alladhīna
فَأَمَّا ٱلَّذِينَ
ஆகவே/எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
fa-uʿadhibuhum
فَأُعَذِّبُهُمْ
அவர்களை வேதனை செய்வேன்
ʿadhāban
عَذَابًا
வேதனையால்
shadīdan
شَدِيدًا
கடினமானது
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமையில்
wamā
وَمَا
இன்னும் இல்லை
lahum
لَهُم
அவர்களுக்கு
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்களில் எவரும்
ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உங்களை) நிராகரிக் கின்றார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௬)
Tafseer
௫௭

وَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ ۗ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ ٥٧

wa-ammā
وَأَمَّا
ஆக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
fayuwaffīhim
فَيُوَفِّيهِمْ
முழுமையாக வழங்குவான்/அவர்களுக்கு
ujūrahum
أُجُورَهُمْۗ
கூலிகளை அவர்களின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கின்றார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௭)
Tafseer
௫௮

ذٰلِكَ نَتْلُوْهُ عَلَيْكَ مِنَ الْاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ ٥٨

dhālika
ذَٰلِكَ
இது
natlūhu
نَتْلُوهُ
இதை ஓதுகிறோம்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
mina
مِنَ
இருந்து
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்கள்
wal-dhik'ri
وَٱلذِّكْرِ
இன்னும் உபதேசம்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
ஞானமிகுந்தது
(நபியே!) நாம் உங்கள்மீது ஓதிய இவை (இறைவனுடைய) வசனங்களாகவும், ஞான(ம் நிறைந்த) உபதேசங்களாகவும் இருக்கின்றன. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௮)
Tafseer
௫௯

اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ۗ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ ٥٩

inna
إِنَّ
நிச்சயமாக
mathala
مَثَلَ
உதாரணம்
ʿīsā
عِيسَىٰ
ஈஸாவின்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப் போன்று
ādama
ءَادَمَۖ
ஆதம்
khalaqahu
خَلَقَهُۥ
அவரைப் படைத்தான்
min turābin
مِن تُرَابٍ
இருந்து/மண்
thumma qāla
ثُمَّ قَالَ
பிறகு/கூறினான்
lahu
لَهُۥ
அவருக்கு
kun
كُن
ஆகு
fayakūnu
فَيَكُونُ
ஆகிவிட்டார்
நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்திச் செய்து (மனிதனாக) "ஆகு" என்று கூறினான். உடனே (அவ்வாறு) ஆகிவிட்டது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௫௯)
Tafseer
௬௦

اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِيْنَ ٦٠

al-ḥaqu min
ٱلْحَقُّ مِن
உண்மை/இருந்து
rabbika
رَّبِّكَ
உம் இறைவன்
falā takun
فَلَا تَكُن
ஆகவே ஆகிவிடாதீர்
mina l-mum'tarīna
مِّنَ ٱلْمُمْتَرِينَ
சந்தேகிப்பவர்களில்
(நபியே! ஈஸாவைப் பற்றி) உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த இவ்விஷயங்கள்தான் உண்மையானவை. ஆகவே (இதைப்பற்றி) சந்தேகப்படுபவர்களில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௬௦)
Tafseer