كَدَأْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۚ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ۗ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ ١١
- kadabi
- كَدَأْبِ
- தன்மையைப் போன்று
- āli
- ءَالِ
- கூட்டத்தாரின்
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- ஃபிர்அவ்னுடைய
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- min qablihim
- مِن قَبْلِهِمْۚ
- அவர்களுக்கு முன்னர்
- kadhabū
- كَذَّبُوا۟
- பொய்ப்பித்தார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நம் வசனங்களை
- fa-akhadhahumu
- فَأَخَذَهُمُ
- எனவே அவர்களைப் பிடித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bidhunūbihim
- بِذُنُوبِهِمْۗ
- அவர்களுடைய பாவங்களின் காரணமாக
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- shadīdu
- شَدِيدُ
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- தண்டிப்பதில்
(இவர்களின் நிலை) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன் இருந்தவர்களின் நிலை போன்று உள்ளது. அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களின் (இப்)பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௧)Tafseer
قُلْ لِّلَّذِيْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰى جَهَنَّمَ ۗ وَبِئْسَ الْمِهَادُ ١٢
- qul
- قُل
- கூறுவீராக
- lilladhīna
- لِّلَّذِينَ
- எவர்களுக்கு
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- satugh'labūna
- سَتُغْلَبُونَ
- வெற்றி கொள்ளப்படுவீர்கள்
- watuḥ'sharūna
- وَتُحْشَرُونَ
- இன்னும் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
- ilā jahannama
- إِلَىٰ جَهَنَّمَۚ
- நரகத்தின் பக்கம்
- wabi'sa
- وَبِئْسَ
- இன்னும் கெட்டு விட்டது
- l-mihādu
- ٱلْمِهَادُ
- தங்குமிடம்
எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றிகொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம்." ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௨)Tafseer
قَدْ كَانَ لَكُمْ اٰيَةٌ فِيْ فِئَتَيْنِ الْتَقَتَا ۗفِئَةٌ تُقَاتِلُ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَاُخْرٰى كَافِرَةٌ يَّرَوْنَهُمْ مِّثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ ۗوَاللّٰهُ يُؤَيِّدُ بِنَصْرِهٖ مَنْ يَّشَاۤءُ ۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ ١٣
- qad kāna
- قَدْ كَانَ
- திட்டமாக இருந்தது
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- āyatun
- ءَايَةٌ
- ஓர் அத்தாட்சி
- fī fi-atayni
- فِى فِئَتَيْنِ
- இரு கூட்டங்களில்
- l-taqatā
- ٱلْتَقَتَاۖ
- சந்தித்தன
- fi-atun
- فِئَةٌ
- ஒரு கூட்டம்
- tuqātilu
- تُقَٰتِلُ
- போர் புரிகிறது
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- wa-ukh'rā
- وَأُخْرَىٰ
- இன்னும் மற்றொன்று
- kāfiratun
- كَافِرَةٌ
- நிராகரிக்கக் கூடியது
- yarawnahum
- يَرَوْنَهُم
- இவர்களை காண்கின்றனர்
- mith'layhim
- مِّثْلَيْهِمْ
- தங்களைப் போன்று இரு மடங்குகளாக
- raya
- رَأْىَ
- பார்ப்பது
- l-ʿayni
- ٱلْعَيْنِۚ
- கண்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yu-ayyidu
- يُؤَيِّدُ
- பலப்படுத்துகிறான்
- binaṣrihi
- بِنَصْرِهِۦ
- தன் உதவியால்
- man
- مَن
- எவர்களை
- yashāu
- يَشَآءُۗ
- நாடுகிறான்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில்
- laʿib'ratan
- لَعِبْرَةً
- திட்டமாக ஒரு படிப்பினை
- li-ulī l-abṣāri
- لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
- பார்வை உடையோருக்கு
(பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கொரு அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகின்றான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர் களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩)Tafseer
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَاۤءِ وَالْبَنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ۗ ذٰلِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ ١٤
- zuyyina
- زُيِّنَ
- அலங்கரிக்கப்பட்டுள்ளது
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- ḥubbu
- حُبُّ
- நேசிப்பது
- l-shahawāti
- ٱلشَّهَوَٰتِ
- விருப்பங்கள்
- mina
- مِنَ
- இருந்து
- l-nisāi
- ٱلنِّسَآءِ
- பெண்கள்
- wal-banīna
- وَٱلْبَنِينَ
- இன்னும் ஆண் பிள்ளைகள்
- wal-qanāṭīri
- وَٱلْقَنَٰطِيرِ
- இன்னும் குவியல்கள்
- l-muqanṭarati
- ٱلْمُقَنطَرَةِ
- குவிக்கப்பட்டவை
- mina
- مِنَ
- இருந்து
- l-dhahabi
- ٱلذَّهَبِ
- தங்கம்
- wal-fiḍati
- وَٱلْفِضَّةِ
- இன்னும் வெள்ளி
- wal-khayli
- وَٱلْخَيْلِ
- இன்னும் குதிரைகள்
- l-musawamati
- ٱلْمُسَوَّمَةِ
- அடையாளமிடப் பட்டவை
- wal-anʿāmi
- وَٱلْأَنْعَٰمِ
- இன்னும் கால்நடைகள்
- wal-ḥarthi
- وَٱلْحَرْثِۗ
- இன்னும் விளை நிலம்
- dhālika
- ذَٰلِكَ
- இவை
- matāʿu
- مَتَٰعُ
- இன்பம்
- l-ḥayati
- ٱلْحَيَوٰةِ
- வாழ்வின்
- l-dun'yā
- ٱلدُّنْيَاۖ
- உலகம்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿindahu
- عِندَهُۥ
- அவனிடம்தான்
- ḥus'nu
- حُسْنُ
- அழகிய
- l-maābi
- ٱلْمَـَٔابِ
- தங்குமிடம்
பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪)Tafseer
۞ قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّنْ ذٰلِكُمْ ۗ لِلَّذِيْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ ۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِۚ ١٥
- qul a-unabbi-ukum
- قُلْ أَؤُنَبِّئُكُم
- கூறுவீராக/உங்களுக்கு நான் அறிவிக்கவா?
- bikhayrin
- بِخَيْرٍ
- சிறந்ததை
- min dhālikum
- مِّن ذَٰلِكُمْۚ
- இவற்றைவிட
- lilladhīna ittaqaw
- لِلَّذِينَ ٱتَّقَوْا۟
- அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு
- ʿinda
- عِندَ
- இடம்
- rabbihim
- رَبِّهِمْ
- தங்கள் இறைவன்
- jannātun tajrī
- جَنَّٰتٌ تَجْرِى
- சொர்க்கங்கள்/ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- ஆறுகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்கள்
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- wa-azwājun
- وَأَزْوَٰجٌ
- இன்னும் மனைவிகள்
- muṭahharatun
- مُّطَهَّرَةٌ
- பரிசுத்தமானவள்
- wariḍ'wānun
- وَرِضْوَٰنٌ
- இன்னும் பொருத்தம்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِۗ
- அல்லாஹ்வின்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- baṣīrun
- بَصِيرٌۢ
- உற்று நோக்குபவன்
- bil-ʿibādi
- بِٱلْعِبَادِ
- அடியார்களை
(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கின்றவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. (இவைகளன்றி, மகத்தான) அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫)Tafseer
اَلَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَآ اِنَّنَآ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِۚ ١٦
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுவார்கள்
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- innanā
- إِنَّنَآ
- நிச்சயமாக நாங்கள்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- fa-igh'fir
- فَٱغْفِرْ
- எனவே மன்னி
- lanā
- لَنَا
- எங்களுக்கு
- dhunūbanā
- ذُنُوبَنَا
- எங்கள் பாவங்களை
- waqinā
- وَقِنَا
- இன்னும் எங்களை காப்பாற்று
- ʿadhāba
- عَذَابَ
- வேதனையிலிருந்து
- l-nāri
- ٱلنَّارِ
- நரக நெருப்பின்
இத்தகையவர்கள் (தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் உன்னை நம்பிக்கை கொள்கின்றோம். ஆதலால் நீ எங்களுடைய பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து, நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக!" என்றும் (தொடர்ந்து) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬)Tafseer
اَلصّٰبِرِيْنَ وَالصّٰدِقِيْنَ وَالْقٰنِتِيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ ١٧
- al-ṣābirīna
- ٱلصَّٰبِرِينَ
- பொறுமையாளர்கள்
- wal-ṣādiqīna
- وَٱلصَّٰدِقِينَ
- இன்னும் உண்மையாளர்கள்
- wal-qānitīna
- وَٱلْقَٰنِتِينَ
- இன்னும் பணிந்தவர்கள்
- wal-munfiqīna
- وَٱلْمُنفِقِينَ
- இன்னும் தர்மம்புரிபவர்கள்
- wal-mus'taghfirīna
- وَٱلْمُسْتَغْفِرِينَ
- இன்னும் மன்னிப்புக் கோருபவர்கள்
- bil-asḥāri
- بِٱلْأَسْحَارِ
- இரவின்இறுதிகளில்
அன்றி (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையே பேசுகின்றவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கின்றவர்களாகவும், "ஸஹர்" நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருக்கின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭)Tafseer
شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰۤىِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَاۤىِٕمًاۢ بِالْقِسْطِۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ١٨
- shahida
- شَهِدَ
- சாட்சி கூறினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- annahu
- أَنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- lā
- لَآ
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- வணக்கத்திற்குரியவன்
- illā
- إِلَّا
- தவிர
- huwa
- هُوَ
- அவன்
- wal-malāikatu
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- இன்னும் வானவர்கள்
- wa-ulū l-ʿil'mi
- وَأُو۟لُوا۟ ٱلْعِلْمِ
- இன்னும் கல்விமான்கள்
- qāiman bil-qis'ṭi
- قَآئِمًۢا بِٱلْقِسْطِۚ
- நீதத்தை நிலை நிறுத்துபவன்
- lā
- لَآ
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- வணக்கத்திற்குரியவன்
- illā huwa
- إِلَّا هُوَ
- அவனைத் தவிர
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- ஞானவான்
(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை." அவ்வாறே மலக்குகளும் (வேதத்தை ஆராய்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௮)Tafseer
اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَهُمُ الْعِلْمُ بَغْيًاۢ بَيْنَهُمْ ۗوَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ ١٩
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-dīna
- ٱلدِّينَ
- மார்க்கம்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- l-is'lāmu
- ٱلْإِسْلَٰمُۗ
- இஸ்லாம்
- wamā ikh'talafa
- وَمَا ٱخْتَلَفَ
- மாறுபடவில்லை
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- கொடுக்கப்பட்டார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதம்
- illā
- إِلَّا
- தவிர
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- mā jāahumu
- مَا جَآءَهُمُ
- அவர்களுக்கு வந்த
- l-ʿil'mu
- ٱلْعِلْمُ
- அறிவு
- baghyan
- بَغْيًۢا
- பொறாமையினால்
- baynahum
- بَيْنَهُمْۗ
- தங்களுக்கு மத்தியில்
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- yakfur
- يَكْفُرْ
- நிராகரிப்பார்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- sarīʿu
- سَرِيعُ
- விரைவானவன்
- l-ḥisābi
- ٱلْحِسَابِ
- கணக்கெடுப்பதில்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் ("இதுதான் உண்மையான வேதம்" என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, (இவ்வாறு) எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௯)Tafseer
فَاِنْ حَاۤجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِيَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ ۗوَقُلْ لِّلَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّيّٖنَ ءَاَسْلَمْتُمْ ۗ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ ۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ ࣖ ٢٠
- fa-in ḥājjūka
- فَإِنْ حَآجُّوكَ
- அவர்கள் உம்முடன் தர்க்கித்தால்
- faqul
- فَقُلْ
- கூறுவீராக
- aslamtu
- أَسْلَمْتُ
- பணியவைத்தேன்
- wajhiya
- وَجْهِىَ
- என் முகத்தை
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- wamani ittabaʿani
- وَمَنِ ٱتَّبَعَنِۗ
- இன்னும் என்னைப் பின்பற்றியவர்கள்
- waqul
- وَقُل
- இன்னும் கூறுவீராக
- lilladhīna
- لِّلَّذِينَ
- எவர்களுக்கு
- ūtū l-kitāba
- أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
- வேதம் கொடுக்கப் பட்டார்கள்
- wal-umiyīna
- وَٱلْأُمِّيِّۦنَ
- இன்னும் பாமரர்கள்
- a-aslamtum
- ءَأَسْلَمْتُمْۚ
- பணிய வைக்கிறீர்களா?
- fa-in aslamū
- فَإِنْ أَسْلَمُوا۟
- அவர்கள் பணியவைத்தால்
- faqadi ih'tadaw
- فَقَدِ ٱهْتَدَوا۟ۖ
- திட்டமாக நேர்வழி அடைவார்கள்
- wa-in tawallaw
- وَّإِن تَوَلَّوْا۟
- அவர்கள் திரும்பினால்
- fa-innamā ʿalayka
- فَإِنَّمَا عَلَيْكَ
- உம்மீது எல்லாம்
- l-balāghu
- ٱلْبَلَٰغُۗ
- தெரிவிப்பதுதான்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- baṣīrun
- بَصِيرٌۢ
- உற்று நோக்குபவன்
- bil-ʿibādi
- بِٱلْعِبَادِ
- அடியார்களை
(நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உங்களுடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர் களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி "நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கின்றீர்களா?" என்று கேளுங்கள். (அவ்வாறே) அவர்களும் தலை சாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அன்றி அவர்கள் புறக்கணித்துவிட்டால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். நம்முடைய தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உங்கள் மீது கடமையாக இருக்கின்றது. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௦)Tafseer