Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 17

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௬௧

وَمَا كَانَ لِنَبِيٍّ اَنْ يَّغُلَّ ۗوَمَنْ يَّغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيٰمَةِ ۚ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ١٦١

wamā kāna
وَمَا كَانَ
தகுதி இல்லை
linabiyyin
لِنَبِىٍّ
ஒரு நபிக்கு
an yaghulla
أَن يَغُلَّۚ
மோசம் செய்வது
waman
وَمَن
எவர்
yaghlul
يَغْلُلْ
மோசம் செய்வாரோ
yati
يَأْتِ
வருவார்
bimā
بِمَا
எதைக் கொண்டு
ghalla
غَلَّ
மோசம் செய்தார்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
thumma
ثُمَّ
பிறகு
tuwaffā
تُوَفَّىٰ
கொடுக்கப்படும்
kullu nafsin
كُلُّ نَفْسٍ
ஒவ்வொரு/ஆன்மா
mā kasabat
مَّا كَسَبَتْ
எதை/செய்தது
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டு வர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௧)
Tafseer
௧௬௨

اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْۢ بَاۤءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَأْوٰىهُ جَهَنَّمُ ۗ وَبِئْسَ الْمَصِيْرُ ١٦٢

afamani ittabaʿa
أَفَمَنِ ٱتَّبَعَ
பின்பற்றியவர்
riḍ'wāna
رِضْوَٰنَ
விருப்பத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kaman bāa
كَمَنۢ بَآءَ
திரும்பியவனைப் போல்
bisakhaṭin
بِسَخَطٍ
கோபத்துடன்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
wamawāhu
وَمَأْوَىٰهُ
இன்னும் தங்குமிடம்/ அவனுடைய
jahannamu
جَهَنَّمُۚ
நரகம்
wabi'sa
وَبِئْسَ
இன்னும் கெட்டுவிட்டது
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடம்
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவன் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௨)
Tafseer
௧௬௩

هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ۗ وَاللّٰهُ بَصِيْرٌ ۢبِمَا يَعْمَلُوْنَ ١٦٣

hum
هُمْ
அவர்கள்
darajātun
دَرَجَٰتٌ
(பல) தரங்கள்
ʿinda
عِندَ
இடம்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
bimā
بِمَا
எதை
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
(அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௩)
Tafseer
௧௬௪

لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ١٦٤

laqad manna
لَقَدْ مَنَّ
திட்டமாக அருள்புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَى
மீது
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
idh baʿatha
إِذْ بَعَثَ
(ஏ) அனுப்பினான்
fīhim
فِيهِمْ
அவர்களுக்கு மத்தியில்
rasūlan
رَسُولًا
ஒரு தூதரை
min anfusihim
مِّنْ أَنفُسِهِمْ
அவர்களில் இருந்தே
yatlū
يَتْلُوا۟
ஓதுகிறார்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
āyātihi
ءَايَٰتِهِۦ
வசனங்களை/ அவனுடைய
wayuzakkīhim
وَيُزَكِّيهِمْ
இன்னும் பரிசுத்தப்படுத்து கிறார்/அவர்களை
wayuʿallimuhumu
وَيُعَلِّمُهُمُ
இன்னும் கற்பிக்கிறார் / அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானம்
wa-in
وَإِن
நிச்சயமாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
min qablu
مِن قَبْلُ
(இதற்கு) முன்னர்
lafī ḍalālin
لَفِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான்
mubīnin
مُّبِينٍ
பகிரங்கமானது
அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். அன்றி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௪)
Tafseer
௧௬௫

اَوَلَمَّآ اَصَابَتْكُمْ مُّصِيْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَيْهَاۙ قُلْتُمْ اَنّٰى هٰذَا ۗ قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١٦٥

awalammā
أَوَلَمَّآ
இன்னும் / போது
aṣābatkum
أَصَٰبَتْكُم
ஏற்பட்டது/உங்களுக்கு
muṣībatun
مُّصِيبَةٌ
ஒரு சோதனை
qad aṣabtum
قَدْ أَصَبْتُم
திட்டமாக அடைந்தீர்கள்
mith'layhā
مِّثْلَيْهَا
அது போன்று இரு மடங்கை
qul'tum
قُلْتُمْ
கூறினீர்கள்
annā hādhā
أَنَّىٰ هَٰذَاۖ
எங்கிருந்து/இது
qul
قُلْ
கூறுவீராக
huwa
هُوَ
அது
min ʿindi anfusikum
مِنْ عِندِ أَنفُسِكُمْۗ
உங்களிடமிருந்துதான்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
kulli
كُلِّ
எல்லாம்
shayin
شَىْءٍ
பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நம்பிக்கையாளர்களே! "பத்ரு" போரில்) இதைவிட இருமடங்கு கஷ்டத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்தக் கஷ்டம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எவ்வாறு (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான் என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௫)
Tafseer
௧௬௬

وَمَآ اَصَابَكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِيْنَۙ ١٦٦

wamā
وَمَآ
எது
aṣābakum
أَصَٰبَكُمْ
ஏற்பட்டது/உங்களுக்கு
yawma
يَوْمَ
நாளில்
l-taqā
ٱلْتَقَى
சந்தித்தார்(கள்)
l-jamʿāni
ٱلْجَمْعَانِ
இரு கூட்டங்கள்
fabi-idh'ni
فَبِإِذْنِ
அனுமதி கொண்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waliyaʿlama
وَلِيَعْلَمَ
இன்னும் அறிவதற்காக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது.) உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௬)
Tafseer
௧௬௭

وَلِيَعْلَمَ الَّذِيْنَ نَافَقُوْا ۖوَقِيْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ۗ قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّاتَّبَعْنٰكُمْ ۗ هُمْ لِلْكُفْرِ يَوْمَىِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِيْمَانِ ۚ يَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَيْسَ فِيْ قُلُوْبِهِمْ ۗ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يَكْتُمُوْنَۚ ١٦٧

waliyaʿlama
وَلِيَعْلَمَ
இன்னும் அறிவதற்காக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
nāfaqū
نَافَقُوا۟ۚ
நயவஞ்சகம்செய்தனர்
waqīla
وَقِيلَ
இன்னும் கூறப்பட்டது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
taʿālaw
تَعَالَوْا۟
வாருங்கள்
qātilū
قَٰتِلُوا۟
போர் புரியுங்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
awi id'faʿū
أَوِ ٱدْفَعُوا۟ۖ
அவர்கள் தடுங்கள்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
law naʿlamu
لَوْ نَعْلَمُ
நாங்கள் அறிந்திருந்தால்
qitālan
قِتَالًا
போரை
la-ittabaʿnākum
لَّٱتَّبَعْنَٰكُمْۗ
திட்டமாக பின்பற்றி இருப்போம்/உங்களை
hum
هُمْ
அவர்கள்
lil'kuf'ri
لِلْكُفْرِ
நிராகரிப்புக்கு
yawma-idhin
يَوْمَئِذٍ
அன்றைய தினம்
aqrabu
أَقْرَبُ
நெருக்கமானவர்(கள்)
min'hum
مِنْهُمْ
அவர்களில்
lil'īmāni
لِلْإِيمَٰنِۚ
நம்பிக்கைக்கு
yaqūlūna
يَقُولُونَ
கூறுகிறார்கள்
bi-afwāhihim
بِأَفْوَٰهِهِم
வாய்களால்/தங்கள்
mā laysa
مَّا لَيْسَ
எது/இல்லை
fī qulūbihim
فِى قُلُوبِهِمْۗ
தங்கள் உள்ளங்களில்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā yaktumūna
بِمَا يَكْتُمُونَ
எதை/மறைக்கின்றனர்
(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு "(இதனை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௭)
Tafseer
௧௬௮

اَلَّذِيْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ۗ قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٦٨

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
li-ikh'wānihim
لِإِخْوَٰنِهِمْ
தங்கள் சகோதரர்களுக்கு
waqaʿadū
وَقَعَدُوا۟
இன்னும் உட்கார்ந்தார்கள்
law aṭāʿūnā
لَوْ أَطَاعُونَا
அவர்கள் கீழ்ப்படிந்திருந்தால்/எங்களுக்கு
mā qutilū
مَا قُتِلُوا۟ۗ
அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்
qul fa-id'raū
قُلْ فَٱدْرَءُوا۟
கூறுவீராக/தடுங்கள்
ʿan anfusikumu
عَنْ أَنفُسِكُمُ
விட்டு/உங்களை
l-mawta
ٱلْمَوْتَ
மரணத்தை
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
அன்றி இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்துகொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்றும் கூறினார்கள். (ஆகவே நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன!) நீங்கள் உங்களையே மரணத்தில் இருந்து தப்பவையுங்கள்!"" ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௮)
Tafseer
௧௬௯

وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ۗ بَلْ اَحْيَاۤءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ ١٦٩

walā taḥsabanna
وَلَا تَحْسَبَنَّ
எண்ணாதீர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qutilū
قُتِلُوا۟
கொல்லப்பட்டார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
amwātan
أَمْوَٰتًۢاۚ
இறந்தவர்களாக
bal
بَلْ
மாறாக
aḥyāon
أَحْيَآءٌ
உயிருள்ளவர்கள்
ʿinda
عِندَ
இடம்
rabbihim
رَبِّهِمْ
இறைவன்/தங்கள்
yur'zaqūna
يُرْزَقُونَ
உணவளிக்கப்படுகிறார்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) வெட்டப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள். (அன்றி) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௯)
Tafseer
௧௭௦

فَرِحِيْنَ بِمَآ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۙ وَيَسْتَبْشِرُوْنَ بِالَّذِيْنَ لَمْ يَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْ ۙ اَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَۘ ١٧٠

fariḥīna
فَرِحِينَ
மகிழ்ச்சியடைந்தவர்கள்
bimā
بِمَآ
எதைக் கொண்டு
ātāhumu
ءَاتَىٰهُمُ
கொடுத்தான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min faḍlihi
مِن فَضْلِهِۦ
தன் அருளால்
wayastabshirūna
وَيَسْتَبْشِرُونَ
இன்னும் மகிழ்ச்சியடைவார்கள்
bi-alladhīna
بِٱلَّذِينَ
எவர்களைக் கொண்டு
lam yalḥaqū
لَمْ يَلْحَقُوا۟
அவர்கள் வந்துசேரவில்லை
bihim
بِهِم
அவர்களுடன்
min khalfihim
مِّنْ خَلْفِهِمْ
அவர்களுக்குப் பின்னால்
allā khawfun
أَلَّا خَوْفٌ
ஒரு பயமும் இல்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்த வர்களாக இருக்கின்றார்கள். தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று (மற்றொரு) மகிழ்ச்சியடைந்தவர்களாகவும் இருக்கின்றனர். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௭௦)
Tafseer