وَاتَّقُوا النَّارَ الَّتِيْٓ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ ۚ ١٣١
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- இன்னும் அஞ்சுங்கள்
- l-nāra allatī
- ٱلنَّارَ ٱلَّتِىٓ
- நெருப்பை/எது
- uʿiddat
- أُعِدَّتْ
- தயார்படுத்தப்பட்டது
- lil'kāfirīna
- لِلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர் களுக்காக
(நரக) நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௧)Tafseer
وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۚ ١٣٢
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- இன்னும் கீழ்ப்படியுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வுக்கு
- wal-rasūla
- وَٱلرَّسُولَ
- இன்னும் தூதருக்கு
- laʿallakum tur'ḥamūna
- لَعَلَّكُمْ تُرْحَمُونَ
- நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௨)Tafseer
۞ وَسَارِعُوْٓا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ ١٣٣
- wasāriʿū
- وَسَارِعُوٓا۟
- இன்னும் விரையுங்கள்
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- maghfiratin
- مَغْفِرَةٍ
- மன்னிப்பு
- min rabbikum
- مِّن رَّبِّكُمْ
- உங்கள் இறைவனின்
- wajannatin
- وَجَنَّةٍ
- இன்னும் சொர்க்கம்
- ʿarḍuhā
- عَرْضُهَا
- அதன் அகலம்
- l-samāwātu
- ٱلسَّمَٰوَٰتُ
- வானங்கள்
- wal-arḍu
- وَٱلْأَرْضُ
- இன்னும் பூமி
- uʿiddat
- أُعِدَّتْ
- தயார்படுத்தப்பட்டுள்ளது
- lil'muttaqīna
- لِلْمُتَّقِينَ
- அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர் களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௩)Tafseer
الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّۤاءِ وَالضَّرَّۤاءِ وَالْكَاظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِۗ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَۚ ١٣٤
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yunfiqūna
- يُنفِقُونَ
- தர்மம் புரிவார்கள்
- fī l-sarāi
- فِى ٱلسَّرَّآءِ
- செல்வத்தில்
- wal-ḍarāi
- وَٱلضَّرَّآءِ
- இன்னும் வறுமையில்
- wal-kāẓimīna
- وَٱلْكَٰظِمِينَ
- இன்னும் மென்றுவிடுபவர்கள்
- l-ghayẓa
- ٱلْغَيْظَ
- கோபத்தை
- wal-ʿāfīna
- وَٱلْعَافِينَ
- இன்னும் மன்னித்து விடுபவர்கள்
- ʿani l-nāsi
- عَنِ ٱلنَّاسِۗ
- மக்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- நேசிக்கிறான்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- நல்லறம் புரிவோரை
அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௪)Tafseer
وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْۗ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۗ وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ ١٣٥
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- idhā faʿalū
- إِذَا فَعَلُوا۟
- செய்தால்
- fāḥishatan
- فَٰحِشَةً
- ஒரு மானக்கேடானதை
- aw
- أَوْ
- அல்லது
- ẓalamū
- ظَلَمُوٓا۟
- அநீதியிழைத்தால்
- anfusahum
- أَنفُسَهُمْ
- தங்களுக்கு
- dhakarū
- ذَكَرُوا۟
- நினைவுகூர்வார்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- fa-is'taghfarū
- فَٱسْتَغْفَرُوا۟
- இன்னும் மன்னிப்புத் தேடுவார்கள்
- lidhunūbihim
- لِذُنُوبِهِمْ
- தங்கள் பாவங்களுக்கு
- waman yaghfiru
- وَمَن يَغْفِرُ
- யார்?/மன்னிப்பார்
- l-dhunūba
- ٱلذُّنُوبَ
- பாவங்களை
- illā
- إِلَّا
- தவிர
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- walam yuṣirrū
- وَلَمْ يُصِرُّوا۟
- இன்னும் நிலைத்திருக்க மாட்டார்கள்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- mā faʿalū
- مَا فَعَلُوا۟
- எது/செய்தார்கள்
- wahum
- وَهُمْ
- அவர்களுமோ
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- அறிந்து கொண்டு
அன்றி, அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வையன்றி (இத்தகையவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௫)Tafseer
اُولٰۤىِٕكَ جَزَاۤؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ۗ وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَۗ ١٣٦
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- jazāuhum
- جَزَآؤُهُم
- அவர்களின் கூலி
- maghfiratun
- مَّغْفِرَةٌ
- மன்னிப்பு
- min rabbihim
- مِّن رَّبِّهِمْ
- அவர்களுடைய இறைவனிடமிருந்து
- wajannātun
- وَجَنَّٰتٌ
- இன்னும் சொர்க்கங்கள்
- tajrī
- تَجْرِى
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- அவற்றின்கீழிருந்து
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- ஆறுகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்கள்
- fīhā
- فِيهَاۚ
- அதில்
- waniʿ'ma
- وَنِعْمَ
- இன்னும் சிறந்ததாகிவிட்டது
- ajru l-ʿāmilīna
- أَجْرُ ٱلْعَٰمِلِينَ
- கூலி/நன்மைபுரிவோர்
இத்தகையவர்களுக்குப் பிரதிபலன், அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே! ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௬)Tafseer
قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌۙ فَسِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ ١٣٧
- qad khalat
- قَدْ خَلَتْ
- சென்றுவிட்டன
- min qablikum
- مِن قَبْلِكُمْ
- உங்களுக்குமுன்னர்
- sunanun
- سُنَنٌ
- வரலாறுகள்
- fasīrū
- فَسِيرُوا۟
- ஆகவே சுற்றுங்கள்
- fī l-arḍi fa-unẓurū
- فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟
- பூமியில்/இன்னும் பாருங்கள்
- kayfa kāna
- كَيْفَ كَانَ
- எப்படி இருந்தது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- முடிவு
- l-mukadhibīna
- ٱلْمُكَذِّبِينَ
- பொய்ப்பிப்பவர்களின்
உங்களுக்கு முன்னரும் (இத்தகைய) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௭)Tafseer
هٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِيْنَ ١٣٨
- hādhā
- هَٰذَا
- இது
- bayānun
- بَيَانٌ
- தெளிவுரையாகும்
- lilnnāsi
- لِّلنَّاسِ
- மக்களுக்கு
- wahudan
- وَهُدًى
- இன்னும் நேர்வழி
- wamawʿiẓatun
- وَمَوْعِظَةٌ
- இன்னும் நல்லுபதேசம்
- lil'muttaqīna
- لِّلْمُتَّقِينَ
- அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதாகவும், (சிறப்பாக) இறை அச்சமுடைய வர்களுக்கு வழிகாட்டியாகவும், நல்லுபதேசமாகவும் இருக்கின்றது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௮)Tafseer
وَلَا تَهِنُوْا وَلَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ١٣٩
- walā tahinū
- وَلَا تَهِنُوا۟
- துணிவிழக்காதீர்கள்
- walā taḥzanū
- وَلَا تَحْزَنُوا۟
- இன்னும் கவலைப்படாதீர்கள்
- wa-antumu
- وَأَنتُمُ
- நீங்கள்
- l-aʿlawna
- ٱلْأَعْلَوْنَ
- உயர்ந்தவர்கள்தான்
- in kuntum
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௩௯)Tafseer
اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ۗوَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاۤءَ ۗوَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ ١٤٠
- in yamsaskum
- إِن يَمْسَسْكُمْ
- உங்களைஅடைந்தால்
- qarḥun
- قَرْحٌ
- காயம்
- faqad massa
- فَقَدْ مَسَّ
- அடைந்துள்ளது
- l-qawma
- ٱلْقَوْمَ
- (அக்)கூட்டத்திற்கு
- qarḥun
- قَرْحٌ
- காயம்
- mith'luhu
- مِّثْلُهُۥۚ
- அது போன்ற
- watil'ka
- وَتِلْكَ
- அந்த
- l-ayāmu
- ٱلْأَيَّامُ
- நாள்கள்
- nudāwiluhā
- نُدَاوِلُهَا
- அவற்றை சுழற்றுகிறோம்
- bayna l-nāsi
- بَيْنَ ٱلنَّاسِ
- மத்தியில்/மக்கள்
- waliyaʿlama
- وَلِيَعْلَمَ
- இன்னும் அறிவதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- wayattakhidha
- وَيَتَّخِذَ
- இன்னும் எடுப்பதற்காக
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- shuhadāa
- شُهَدَآءَۗ
- தியாகிகளை
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களை
நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறி மாறி வரும்படி நாம்தாம் செய்கின்றோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்(தறிவிப்ப) தற்காகவுமே (இவ்வாறு செய்கின்றான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௪௦)Tafseer