Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௩௫

Qur'an Surah Ali 'Imran Verse 135

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْۗ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۗ وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ (آل عمران : ٣)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those
இன்னும் எவர்கள்
idhā faʿalū
إِذَا فَعَلُوا۟
when they did
செய்தால்
fāḥishatan
فَٰحِشَةً
immorality
ஒரு மானக்கேடானதை
aw
أَوْ
or
அல்லது
ẓalamū
ظَلَمُوٓا۟
wronged
அநீதியிழைத்தால்
anfusahum
أَنفُسَهُمْ
themselves -
தங்களுக்கு
dhakarū
ذَكَرُوا۟
they remember
நினைவுகூர்வார்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
fa-is'taghfarū
فَٱسْتَغْفَرُوا۟
then ask forgiveness
இன்னும் மன்னிப்புத் தேடுவார்கள்
lidhunūbihim
لِذُنُوبِهِمْ
for their sins -
தங்கள் பாவங்களுக்கு
waman yaghfiru
وَمَن يَغْفِرُ
and who (can) forgive
யார்?/மன்னிப்பார்
l-dhunūba
ٱلذُّنُوبَ
the sins
பாவங்களை
illā
إِلَّا
except
தவிர
l-lahu
ٱللَّهُ
Allah?
அல்லாஹ்
walam yuṣirrū
وَلَمْ يُصِرُّوا۟
And not they persist
இன்னும் நிலைத்திருக்க மாட்டார்கள்
ʿalā
عَلَىٰ
on
மீது
mā faʿalū
مَا فَعَلُوا۟
what they did
எது/செய்தார்கள்
wahum
وَهُمْ
while they
அவர்களுமோ
yaʿlamūna
يَعْلَمُونَ
know
அறிந்து கொண்டு

Transliteration:

Wallazeena izaa fa'aloo faahishatan aw zalamooo anfusahum zakarul laaha fastaghfaroo lizunoobihim; wa mai yaghfiruz zunooba illal laahu wa lam yusirroo 'alaa maa fa'aloo wa hum ya'lamooo (QS. ʾĀl ʿImrān:135)

English Sahih International:

And those who, when they commit an immorality or wrong themselves [by transgression], remember Allah and seek forgiveness for their sins – and who can forgive sins except Allah? – and [who] do not persist in what they have done while they know. (QS. Ali 'Imran, Ayah ௧௩௫)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வையன்றி (இத்தகையவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௩௫)

Jan Trust Foundation

தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) ஒரு மானக்கேடானதைச் செய்தால் அல்லது தங்களுக்கு அநீதியிழைத்தால் அல்லாஹ்வை நினைத்து, தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்துகொண்டு, தாங்கள் செய்த (பாவத்)தின் மீது நிலைத்திருக்க மாட்டார்கள்.