குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௩௪
Qur'an Surah Ali 'Imran Verse 134
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّۤاءِ وَالضَّرَّۤاءِ وَالْكَاظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِۗ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَۚ (آل عمران : ٣)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- yunfiqūna
- يُنفِقُونَ
- spend
- தர்மம் புரிவார்கள்
- fī l-sarāi
- فِى ٱلسَّرَّآءِ
- in [the] ease
- செல்வத்தில்
- wal-ḍarāi
- وَٱلضَّرَّآءِ
- and (in) the hardship
- இன்னும் வறுமையில்
- wal-kāẓimīna
- وَٱلْكَٰظِمِينَ
- and those who restrain
- இன்னும் மென்றுவிடுபவர்கள்
- l-ghayẓa
- ٱلْغَيْظَ
- the anger
- கோபத்தை
- wal-ʿāfīna
- وَٱلْعَافِينَ
- and those who pardon
- இன்னும் மன்னித்து விடுபவர்கள்
- ʿani l-nāsi
- عَنِ ٱلنَّاسِۗ
- [from] the people -
- மக்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- and Allah
- அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- loves
- நேசிக்கிறான்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- the good-doers
- நல்லறம் புரிவோரை
Transliteration:
Allazeena yunfiqoona fissarraaa'i waddarraaa'i wal kaazimeenal ghaiza wal aafeena 'anin-naas; wallaahu yuhibbul muhsineen(QS. ʾĀl ʿImrān:134)
English Sahih International:
Who spend [in the cause of Allah] during ease and hardship and who restrain anger and who pardon the people – and Allah loves the doers of good; (QS. Ali 'Imran, Ayah ௧௩௪)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௩௪)
Jan Trust Foundation
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள்) செல்வத்திலும், வறுமையிலும் தர்மம் புரிபவர்கள்; கோபத்தை மென்றுவிடுபவர்கள்; மக்களை மன்னித்து விடுபவர்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.