اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰى بِهٖۗ اُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ وَّمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ ࣖ ۔ ٩١
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- wamātū
- وَمَاتُوا۟
- இன்னும் இறந்தார்கள்
- wahum kuffārun
- وَهُمْ كُفَّارٌ
- அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே
- falan yuq'bala
- فَلَن يُقْبَلَ
- அறவே அங்கீகரிக்கப்படாது
- min
- مِنْ
- இருந்து
- aḥadihim
- أَحَدِهِم
- அவர்களில் ஒருவர்
- mil'u l-arḍi
- مِّلْءُ ٱلْأَرْضِ
- பூமி நிறைய
- dhahaban
- ذَهَبًا
- தங்கத்தை
- walawi if'tadā bihi
- وَلَوِ ٱفْتَدَىٰ بِهِۦٓۗ
- அதை ஈடாக கொடுத்தாலும் சரியே
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- lahum
- لَهُمْ
- இவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- துன்புறுத்தக் கூடியது
- wamā
- وَمَا
- இன்னும் இல்லை
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- min nāṣirīna
- مِّن نَّٰصِرِينَ
- உதவியாளர்களில் ஒருவரும்
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதனைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இத்தகையவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்! ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௧)Tafseer
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ۗوَمَا تُنْفِقُوْا مِنْ شَيْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ ٩٢
- lan tanālū
- لَن تَنَالُوا۟
- அறவே அடைய மாட்டீர்கள்
- l-bira
- ٱلْبِرَّ
- நன்மையை
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- tunfiqū
- تُنفِقُوا۟
- தர்மம் செய்கிறீர்கள்
- mimmā
- مِمَّا
- எதிலிருந்து
- tuḥibbūna
- تُحِبُّونَۚ
- நேசிக்கிறீர்கள்
- wamā tunfiqū
- وَمَا تُنفِقُوا۟
- எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும்
- min shayin
- مِن شَىْءٍ
- ஒரு பொருள் / இல்
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- bihi
- بِهِۦ
- அதை
- ʿalīmun
- عَلِيمٌ
- மிக நன்கறிந்தவன்
உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள். ஒரு சொற்பத்தை நீங்கள் தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனையும் நன்கறிவான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௨)Tafseer
۞ كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَاۤءِيْلُ عَلٰى نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰىةُ ۗ قُلْ فَأْتُوْا بِالتَّوْرٰىةِ فَاتْلُوْهَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٩٣
- kullu
- كُلُّ
- எல்லா(ம்)
- l-ṭaʿāmi
- ٱلطَّعَامِ
- உணவு(ம்)
- kāna
- كَانَ
- இருந்தது
- ḥillan
- حِلًّا
- ஆகுமானதாக
- libanī is'rāīla
- لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- இஸ்ரவேலர்களுக்கு
- illā
- إِلَّا
- தவிர
- mā
- مَا
- எவை
- ḥarrama
- حَرَّمَ
- விலக்கினார்
- is'rāīlu
- إِسْرَٰٓءِيلُ
- இஸ்ராயீல்
- ʿalā nafsihi
- عَلَىٰ نَفْسِهِۦ
- தன் மீது
- min qabli
- مِن قَبْلِ
- முன்னர்
- an tunazzala
- أَن تُنَزَّلَ
- இறக்கப்படுவதற்கு
- l-tawrātu
- ٱلتَّوْرَىٰةُۗ
- தவ்றாத்
- qul
- قُلْ
- கூறுவீராக
- fatū
- فَأْتُوا۟
- வாருங்கள்
- bil-tawrāti
- بِٱلتَّوْرَىٰةِ
- தவ்றாத்தைக்கொண்டு
- fa-it'lūhā
- فَٱتْلُوهَآ
- இன்னும் ஓதுங்கள்/அதை
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டுவந்து ஓதிக் காண்பியுங்கள்." ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௩)Tafseer
فَمَنِ افْتَرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ مِنْۢ بَعْدِ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ٩٤
- famani
- فَمَنِ
- எவர்(கள்)
- if'tarā
- ٱفْتَرَىٰ
- கற்பனை செய்கிறார்(கள்)
- ʿalā
- عَلَى
- மீது
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- l-kadhiba
- ٱلْكَذِبَ
- பொய்யை
- min baʿdi dhālika
- مِنۢ بَعْدِ ذَٰلِكَ
- இதற்குப் பின்னர்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறினால் அவர்கள்தான் அநியாயக்காரர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௪)Tafseer
قُلْ صَدَقَ اللّٰهُ ۗ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًاۗ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ ٩٥
- qul
- قُلْ
- கூறுவீராக
- ṣadaqa
- صَدَقَ
- உண்மை கூறி விட்டான்
- l-lahu
- ٱللَّهُۗ
- அல்லாஹ்
- fa-ittabiʿū
- فَٱتَّبِعُوا۟
- ஆகவே பின்பற்றுங்கள்
- millata
- مِلَّةَ
- மார்க்கத்தை
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீமின்
- ḥanīfan
- حَنِيفًا
- இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர்
- wamā kāna
- وَمَا كَانَ
- இன்னும் அவர் இருக்கவில்லை.
- mina l-mush'rikīna
- مِنَ ٱلْمُشْرِكِينَ
- இணைவைப்பவர்களில்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(இவைகளைப் பற்றி) அல்லாஹ் கூறியவைதான் (முற்றிலும்) உண்மை. ஆகவே (நம்பிக்கை யாளர்களே! இவர்களைப் புறக்கணித்து விட்டு) நேரான வழியில் சென்ற இப்ராஹீமுடைய மார்க்கத்தையே பின்பற்றுங்கள். அவர் இணைவைத்து வணங்குபவராக இருக்கவில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௫)Tafseer
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِيْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَۚ ٩٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- awwala baytin
- أَوَّلَ بَيْتٍ
- முதல்/இல்லம்
- wuḍiʿa
- وُضِعَ
- அமைக்கப்பட்டது
- lilnnāsi lalladhī
- لِلنَّاسِ لَلَّذِى
- மக்களுக்கு/எதுதான்
- bibakkata
- بِبَكَّةَ
- பக்கா வில்
- mubārakan
- مُبَارَكًا
- அருள்செய்யப்பட்டது
- wahudan
- وَهُدًى
- இன்னும் நேர்வழி
- lil'ʿālamīna
- لِّلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களுக்கு
(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக "பக்கா"வில் (மக்காவில்) இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௬)Tafseer
فِيْهِ اٰيٰتٌۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ ەۚ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ۗ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ۗ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِيٌّ عَنِ الْعٰلَمِيْنَ ٩٧
- fīhi
- فِيهِ
- அதில்
- āyātun
- ءَايَٰتٌۢ
- அத்தாட்சிகள்
- bayyinātun
- بَيِّنَٰتٌ
- தெளிவானவை
- maqāmu
- مَّقَامُ
- நின்ற இடம்
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَۖ
- இப்றாஹீம்
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- dakhalahu
- دَخَلَهُۥ
- நுழைகிறார்/அதில்
- kāna
- كَانَ
- ஆகி விட்டார்
- āminan
- ءَامِنًاۗ
- அச்சமற்றவராக
- walillahi
- وَلِلَّهِ
- அல்லாஹ்வுக்காக
- ʿalā
- عَلَى
- மீது
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்கள்
- ḥijju
- حِجُّ
- ஹஜ் செய்வது
- l-bayti
- ٱلْبَيْتِ
- இல்லத்தை
- mani
- مَنِ
- எவர்
- is'taṭāʿa
- ٱسْتَطَاعَ
- சக்தி பெற்றார்
- ilayhi
- إِلَيْهِ
- அதன் பக்கம்
- sabīlan
- سَبِيلًاۚ
- பாதையால்
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- kafara
- كَفَرَ
- நிராகரித்தார்
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ghaniyyun
- غَنِىٌّ
- தேவையற்றவன்
- ʿani
- عَنِ
- விட்டு
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களை
அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவர் அதில் நுழைகின்றாரோ அவர் (பாதுகாப்பு பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்குச் சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௭)Tafseer
قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا تَعْمَلُوْنَ ٩٨
- qul
- قُلْ
- கூறுவீராக
- yāahla l-kitābi
- يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களே
- lima
- لِمَ
- ஏன்
- takfurūna
- تَكْفُرُونَ
- நிராகரிக்கிறீர்கள்
- biāyāti l-lahi
- بِـَٔايَٰتِ ٱللَّهِ
- வசனங்களை/ அல்லாஹ்வின்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- shahīdun
- شَهِيدٌ
- சாட்சியாளன்
- ʿalā mā taʿmalūna
- عَلَىٰ مَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதற்கு
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! அல்லாஹ்வின் வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கின்றீர்கள். அல்லாஹ்வோ நீங்கள் செய்யும் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றான்."’ ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௮)Tafseer
قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَاۤءُ ۗ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ٩٩
- qul
- قُلْ
- கூறுவீராக
- yāahla l-kitābi
- يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களே
- lima taṣuddūna
- لِمَ تَصُدُّونَ
- ஏன்/தடுக்கிறீர்கள்
- ʿan
- عَن
- விட்டும்
- sabīli
- سَبِيلِ
- பாதை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- man
- مَنْ
- எவரை
- āmana
- ءَامَنَ
- நம்பிக்கை கொண்டார்
- tabghūnahā
- تَبْغُونَهَا
- அதில் தேடுகிறீர்கள்
- ʿiwajan
- عِوَجًا
- கோணலை
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்களே
- shuhadāu
- شُهَدَآءُۗ
- சாட்சிகள்
- wamā
- وَمَا
- இல்லை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bighāfilin
- بِغَٰفِلٍ
- கவனமற்றவனாக
- ʿammā taʿmalūna
- عَمَّا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதைப் பற்றி
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (செல்லும்) நம்பிக்கையாளர்களை ஏன் தடை செய்கின்றீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சியம் கூறிக்கொண்டே அதனைக் கோணலாக்க விரும்புகின்றீர்களா? உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௯௯)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كٰفِرِيْنَ ١٠٠
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே
- in tuṭīʿū
- إِن تُطِيعُوا۟
- நீங்கள் கீழ்ப்படிந்தால்
- farīqan
- فَرِيقًا
- ஒரு பிரிவினருக்கு
- mina
- مِّنَ
- இருந்து
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- கொடுக்கப்பட்டார்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதம்
- yaruddūkum
- يَرُدُّوكُم
- மாற்றிடுவார்கள்/ உங்களை
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- īmānikum
- إِيمَٰنِكُمْ
- நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
- kāfirīna
- كَٰفِرِينَ
- நிராகரிப்பவர்களாக
நம்பிக்கையாளர்களே! வேதத்தையுடையவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்படிந்தால், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதற்கு பின் உங்களை அவர்கள் அவனை நிராகரிப்பவர்களாக மாற்றி விடுவார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௦௦)Tafseer