Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௯௭

Qur'an Surah Ali 'Imran Verse 97

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْهِ اٰيٰتٌۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ ەۚ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ۗ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ۗ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِيٌّ عَنِ الْعٰلَمِيْنَ (آل عمران : ٣)

fīhi
فِيهِ
In it
அதில்
āyātun
ءَايَٰتٌۢ
(are) signs
அத்தாட்சிகள்
bayyinātun
بَيِّنَٰتٌ
clear
தெளிவானவை
maqāmu
مَّقَامُ
standing place
நின்ற இடம்
ib'rāhīma
إِبْرَٰهِيمَۖ
(of) Ibrahim
இப்றாஹீம்
waman
وَمَن
and whoever
இன்னும் எவர்
dakhalahu
دَخَلَهُۥ
enters it
நுழைகிறார்/அதில்
kāna
كَانَ
is
ஆகி விட்டார்
āminan
ءَامِنًاۗ
safe
அச்சமற்றவராக
walillahi
وَلِلَّهِ
And (due) to Allah
அல்லாஹ்வுக்காக
ʿalā
عَلَى
upon
மீது
l-nāsi
ٱلنَّاسِ
the mankind
மக்கள்
ḥijju
حِجُّ
(is) pilgrimage
ஹஜ் செய்வது
l-bayti
ٱلْبَيْتِ
(of) the House
இல்லத்தை
mani
مَنِ
(for one) who
எவர்
is'taṭāʿa
ٱسْتَطَاعَ
is able
சக்தி பெற்றார்
ilayhi
إِلَيْهِ
to [it]
அதன் பக்கம்
sabīlan
سَبِيلًاۚ
(find) a way
பாதையால்
waman
وَمَن
And whoever
இன்னும் எவர்
kafara
كَفَرَ
disbelieved
நிராகரித்தார்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
then indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
ghaniyyun
غَنِىٌّ
(is) free from need
தேவையற்றவன்
ʿani
عَنِ
of
விட்டு
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
the worlds
அகிலத்தார்களை

Transliteration:

Feehi Aayaatum baiyinaatum Maqaamu Ibraaheema wa man dakhalahoo kaana aaminaa; wa lillaahi 'alan naasi Hijjul Baiti manis tataa'a ilaihi sabeelaa; wa man kafara fa innal laaha ghaniyyun 'anil 'aalameen (QS. ʾĀl ʿImrān:97)

English Sahih International:

In it are clear signs [such as] the standing place of Abraham. And whoever enters it [i.e., the Haram] shall be safe. And [due] to Allah from the people is a pilgrimage to the House – for whoever is able to find thereto a way. But whoever disbelieves [i.e., refuses] – then indeed, Allah is free from need of the worlds. (QS. Ali 'Imran, Ayah ௯௭)

Abdul Hameed Baqavi:

அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவர் அதில் நுழைகின்றாரோ அவர் (பாதுகாப்பு பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்குச் சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௯௭)

Jan Trust Foundation

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (அவற்றில் ஒன்று,) இப்றாஹீம் நின்ற இடம். எவர் அதில் நுழைகிறாரோ அவர் அச்சமற்றவராக ஆகிவிடுவார். அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அதன் பக்கம் பாதையால் சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் தேவையற்றவன்.