وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نَّصْبِرَ عَلٰى طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْۢ بَقْلِهَا وَقِثَّاۤىِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ۗ قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِيْ هُوَ اَدْنٰى بِالَّذِيْ هُوَ خَيْرٌ ۗ اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَكُمْ مَّا سَاَلْتُمْ ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاۤءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ ۗ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ الْحَقِّ ۗ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ ࣖ ٦١
- wa-idh qul'tum
- وَإِذْ قُلْتُمْ
- இன்னும் சமயம்/கூறினீர்கள்
- yāmūsā
- يَٰمُوسَىٰ
- மூஸாவே!
- lan naṣbira
- لَن نَّصْبِرَ
- சகிக்கவே மாட்டோம்
- ʿalā ṭaʿāmin
- عَلَىٰ طَعَامٍ
- மீது/ஓர் உணவு
- wāḥidin
- وَٰحِدٍ
- ஒரே (ஒன்று)
- fa-ud'ʿu
- فَٱدْعُ
- ஆகவே பிரார்த்திப்பீராக
- lanā
- لَنَا
- எங்களுக்காக
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவனிடம்
- yukh'rij
- يُخْرِجْ
- உற்பத்திசெய்வான்
- lanā
- لَنَا
- எங்களுக்காக
- mimmā
- مِمَّا
- எதிலிருந்து
- tunbitu
- تُنۢبِتُ
- விளைவிக்கிறது
- l-arḍu
- ٱلْأَرْضُ
- பூமி
- min baqlihā
- مِنۢ بَقْلِهَا
- கீரையிலிருந்து/அதன்
- waqithāihā
- وَقِثَّآئِهَا
- இன்னும் வெள்ளரிக்காய்/அதன்
- wafūmihā
- وَفُومِهَا
- இன்னும் கோதுமை/அதன்
- waʿadasihā
- وَعَدَسِهَا
- இன்னும் பருப்பு/அதன்
- wabaṣalihā
- وَبَصَلِهَاۖ
- இன்னும் வெங்காயம்/அதன்
- qāla
- قَالَ
- கூறினார்
- atastabdilūna
- أَتَسْتَبْدِلُونَ
- மாற்றிக் கொள்கிறீர்களா?
- alladhī huwa
- ٱلَّذِى هُوَ
- எது/அது
- adnā
- أَدْنَىٰ
- மிகத் தாழ்ந்தது
- bi-alladhī
- بِٱلَّذِى
- எதற்குப் பகரமாக
- huwa khayrun
- هُوَ خَيْرٌۚ
- அது சிறந்தது
- ih'biṭū
- ٱهْبِطُوا۟
- இறங்குங்கள்
- miṣ'ran
- مِصْرًا
- ஒரு நகரத்தில்
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- mā sa-altum
- مَّا سَأَلْتُمْۗ
- எது/கேட்டீர்கள்
- waḍuribat
- وَضُرِبَتْ
- இன்னும் விதிக்கப்பட்டன
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- அவர்கள் மீது
- l-dhilatu
- ٱلذِّلَّةُ
- இழிவு
- wal-maskanatu
- وَٱلْمَسْكَنَةُ
- இன்னும் வீழ்ச்சி
- wabāū
- وَبَآءُو
- இன்னும் சார்ந்து விட்டார்கள்
- bighaḍabin
- بِغَضَبٍ
- கோபத்தில்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِۗ
- அல்லாஹ்வின்
- dhālika
- ذَٰلِكَ
- அது
- bi-annahum
- بِأَنَّهُمْ
- காரணம்/நிச்சயமாக அவர்கள்
- kānū
- كَانُوا۟
- இருந்தார்கள்
- yakfurūna
- يَكْفُرُونَ
- நிராகரிக்கிறார்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- wayaqtulūna
- وَيَقْتُلُونَ
- இன்னும் கொலை செய்கிறார்கள்
- l-nabiyīna
- ٱلنَّبِيِّۦنَ
- நபிமார்களை
- bighayri l-ḥaqi
- بِغَيْرِ ٱلْحَقِّۗ
- நியாயமின்றி
- dhālika bimā ʿaṣaw
- ذَٰلِكَ بِمَا عَصَوا۟
- அது/காரணமாக/பாவம் செய்தனர்
- wakānū yaʿtadūna
- وَّكَانُوا۟ يَعْتَدُونَ
- இன்னும் இருந்தனர்/வரம்பு மீறுவார்கள்
ஆனால் (அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் முளைக்கக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவைகளை வெளிப்படுத்தித் தரும்படி உங்களுடைய இறைவனை எங்களுக்காக நீங்கள் கேளுங்கள்" என அவரிடம் கேட்டார்கள். அதற்கு (மூஸா) "மேலானதற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்(ள விரும்பு)கின்றீர்களா? (அவ்வாறாயின்) நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கிவிடுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயமாக (அங்குதான்) உங்களுக்குக் கிடைக்கும்" என்று கூறிவிட்டார். ஆகவே, வீழ்ச்சியும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் (அவர்கள்) சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததும், நியாயமின்றி இறைத்தூதர்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணமாகும். இ(வ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்யும்படி நேர்ந்த)தற்குக் காரணம்: அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை அடிக்கடி) வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்ததுதான். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௧)Tafseer
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَالصَّابِــِٕيْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٦٢
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்கள்
- wa-alladhīna hādū
- وَٱلَّذِينَ هَادُوا۟
- இன்னும் யூதர்கள்
- wal-naṣārā
- وَٱلنَّصَٰرَىٰ
- இன்னும் கிறித்தவர்கள்
- wal-ṣābiīna
- وَٱلصَّٰبِـِٔينَ
- இன்னும் ஸாபியீன்கள்
- man
- مَنْ
- எவர்
- āmana
- ءَامَنَ
- நம்பிக்கை கொண்டார்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wal-yawmi l-ākhiri
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- இன்னும் இறுதி நாளை
- waʿamila
- وَعَمِلَ
- இன்னும் செய்தார்
- ṣāliḥan
- صَٰلِحًا
- நன்மையை
- falahum
- فَلَهُمْ
- அவர்களுக்கு
- ajruhum
- أَجْرُهُمْ
- கூலி/அவர்களின்
- ʿinda rabbihim
- عِندَ رَبِّهِمْ
- அவர்களின் இறைவனிடம்
- walā khawfun
- وَلَا خَوْفٌ
- இன்னும் பயம் இல்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௨)Tafseer
وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَۗ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ٦٣
- wa-idh akhadhnā
- وَإِذْ أَخَذْنَا
- இன்னும் சமயம்/வாங்கினோம்
- mīthāqakum
- مِيثَٰقَكُمْ
- உறுதிமொழியை/உங்கள்
- warafaʿnā
- وَرَفَعْنَا
- இன்னும் உயர்த்தினோம்
- fawqakumu
- فَوْقَكُمُ
- மேல்/உங்களுக்கு
- l-ṭūra khudhū
- ٱلطُّورَ خُذُوا۟
- மலையை/பிடியுங்கள்
- mā ātaynākum
- مَآ ءَاتَيْنَٰكُم
- எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
- biquwwatin
- بِقُوَّةٍ
- பலமாக
- wa-udh'kurū mā fīhi
- وَٱذْكُرُوا۟ مَا فِيهِ
- இன்னும் நினைவு கூருங்கள்/எதை/அதில்
- laʿallakum tattaqūna
- لَعَلَّكُمْ تَتَّقُونَ
- நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
"தூர்" என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் "நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவீர்கள்" (என்று கூறினோம்.) ([௨] ஸூரத்துல் பகரா: ௬௩)Tafseer
ثُمَّ تَوَلَّيْتُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَكُنْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ ٦٤
- thumma
- ثُمَّ
- பிறகு
- tawallaytum
- تَوَلَّيْتُم
- திரும்பி விட்டீர்கள்
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- பின்னர்
- dhālika
- ذَٰلِكَۖ
- அதன்
- falawlā
- فَلَوْلَا
- இல்லையென்றால்
- faḍlu
- فَضْلُ
- அருள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- waraḥmatuhu
- وَرَحْمَتُهُۥ
- இன்னும் அவனின் கருணை
- lakuntum
- لَكُنتُم
- நீங்கள் ஆகியிருப்பீர்கள்
- mina l-khāsirīna
- مِّنَ ٱلْخَٰسِرِينَ
- நஷ்டவாளிகளில்
இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் கிருபையும் அன்பும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௪)Tafseer
وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِيْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِى السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خَاسِـِٕيْنَ ٦٥
- walaqad ʿalim'tumu
- وَلَقَدْ عَلِمْتُمُ
- திட்டமாக அறிந்து கொண்டீர்கள்
- alladhīna iʿ'tadaw
- ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟
- வரம்பு மீறியவர்களை
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- fī l-sabti
- فِى ٱلسَّبْتِ
- சனிக்கிழமைகளில்
- faqul'nā
- فَقُلْنَا
- எனவே கூறினோம்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- kūnū
- كُونُوا۟
- ஆகிவிடுங்கள்
- qiradatan
- قِرَدَةً
- குரங்குகளாக
- khāsiīna
- خَٰسِـِٔينَ
- சிறுமைப்பட்ட(வர்களாக)
மேலும் சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்கக் கூடாதென்றிருந்த கட்டளையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுக!" எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தேயிருக்கின்றீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௫)Tafseer
فَجَعَلْنٰهَا نَكَالًا لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ ٦٦
- fajaʿalnāhā
- فَجَعَلْنَٰهَا
- ஆகவே, ஆக்கினோம்/அதை
- nakālan
- نَكَٰلًا
- எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாக
- limā bayna yadayhā
- لِّمَا بَيْنَ يَدَيْهَا
- அதற்கு முந்திய பாவங்களுக்கும்
- wamā khalfahā
- وَمَا خَلْفَهَا
- (அதுபோன்ற) அதற்குப் பிந்திய பாவங்களுக்கும்
- wamawʿiẓatan
- وَمَوْعِظَةً
- இன்னும் உபதேசமாக
- lil'muttaqīna
- لِّلْمُتَّقِينَ
- அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
இதனை (அக்காலத்தில்) அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், அவர்களுக்குப் பின் (பிற்காலத்தில்) வருபவர் களுக்கும் ஒரு எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு உபதேசமாகவும் ஆக்கினோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௬)Tafseer
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖٓ اِنَّ اللّٰهَ يَأْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ۗ قَالُوْٓا اَتَتَّخِذُنَا هُزُوًا ۗ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰهِلِيْنَ ٦٧
- wa-idh qāla
- وَإِذْ قَالَ
- இன்னும் சமயம்/கூறினார்
- mūsā
- مُوسَىٰ
- மூசா
- liqawmihi
- لِقَوْمِهِۦٓ
- சமுதாயத்திற்கு/தன்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yamurukum
- يَأْمُرُكُمْ
- ஏவுகிறான்/உங்களை
- an tadhbaḥū
- أَن تَذْبَحُوا۟
- நீங்கள் அறுப்பதற்கு
- baqaratan
- بَقَرَةًۖ
- ஒரு பசுவை
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- atattakhidhunā
- أَتَتَّخِذُنَا
- எடுத்துக் கொள்கிறீரா?/எங்களை
- huzuwan
- هُزُوًاۖ
- பரிகாசமாக
- qāla
- قَالَ
- கூறினார்
- aʿūdhu
- أَعُوذُ
- பாதுகாப்புத் தேடுகிறேன்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- an akūna
- أَنْ أَكُونَ
- நான் ஆகுவதை விட்டு
- mina l-jāhilīna
- مِنَ ٱلْجَٰهِلِينَ
- அறிவிலிகளில்
தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௭)Tafseer
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِيَ ۗ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌۗ عَوَانٌۢ بَيْنَ ذٰلِكَ ۗ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ ٦٨
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- ud'ʿu
- ٱدْعُ
- பிரார்த்திப்பீராக
- lanā
- لَنَا
- எங்களுக்காக
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவனிடம்
- yubayyin
- يُبَيِّن
- விவரிப்பான்
- lanā
- لَّنَا
- எங்களுக்கு
- mā
- مَا
- என்ன?
- hiya
- هِىَۚ
- அது
- qāla
- قَالَ
- கூறினார்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- yaqūlu
- يَقُولُ
- கூறுகிறான்
- innahā
- إِنَّهَا
- நிச்சயமாக அது
- baqaratun
- بَقَرَةٌ
- பசு
- lā fāriḍun
- لَّا فَارِضٌ
- கிழடு அல்ல
- walā bik'run
- وَلَا بِكْرٌ
- இன்னும் இளங்கன்றல்ல
- ʿawānun
- عَوَانٌۢ
- நடுத்தரமானது
- bayna
- بَيْنَ
- மத்தியில்
- dhālika
- ذَٰلِكَۖ
- அதற்கு
- fa-if'ʿalū
- فَٱفْعَلُوا۟
- எனவே செய்யுங்கள்
- mā tu'marūna
- مَا تُؤْمَرُونَ
- எதை/ஏவப்படுகிறீர்கள்
"அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அறிவிக்கும்படி உங்களது இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்" எனக் கூறி "உங்களுக்கிடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்" என்றார். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௮)Tafseer
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا لَوْنُهَا ۗ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَاۤءُ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِيْنَ ٦٩
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- ud'ʿu
- ٱدْعُ
- பிரார்த்திப்பீராக
- lanā
- لَنَا
- எங்களுக்காக
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவனிடம்
- yubayyin
- يُبَيِّن
- விவரிப்பான்
- lanā
- لَّنَا
- எங்களுக்கு
- mā
- مَا
- என்ன?
- lawnuhā
- لَوْنُهَاۚ
- அதன் நிறம்
- qāla
- قَالَ
- கூறினார்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- yaqūlu
- يَقُولُ
- கூறுகிறான்
- innahā
- إِنَّهَا
- நிச்சயமாக அது
- baqaratun
- بَقَرَةٌ
- பசு
- ṣafrāu
- صَفْرَآءُ
- மஞ்சள் நிறமானது
- fāqiʿun
- فَاقِعٌ
- தூய்மையானது
- lawnuhā
- لَّوْنُهَا
- நிறம்/அதன்
- tasurru
- تَسُرُّ
- அது மகிழ்விக்கும்
- l-nāẓirīna
- ٱلنَّٰظِرِينَ
- பார்ப்பவர்களை
அதற்கவர்கள் "அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீங்கள் உங்களுடைய இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "அது பார்ப்பவர் மனதைக் கவரக்கூடிய கலப்பற்ற மஞ்சள் நிறமான மாடு என அவன் கூறுகிறான்" என்றார். ([௨] ஸூரத்துல் பகரா: ௬௯)Tafseer
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِيَۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَيْنَاۗ وَاِنَّآ اِنْ شَاۤءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ ٧٠
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- ud'ʿu
- ٱدْعُ
- பிரார்த்திப்பீராக
- lanā
- لَنَا
- எங்களுக்காக
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவனிடம்
- yubayyin
- يُبَيِّن
- விவரிப்பான்
- lanā
- لَّنَا
- எங்களுக்கு
- mā
- مَا
- என்ன?
- hiya
- هِىَ
- அது
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-baqara
- ٱلْبَقَرَ
- மாடுகள்
- tashābaha
- تَشَٰبَهَ
- குழப்பமாகி விட்டன
- ʿalaynā
- عَلَيْنَا
- எங்களுக்கு
- wa-innā
- وَإِنَّآ
- இன்னும் நிச்சயமாகநாங்கள்
- in shāa l-lahu
- إِن شَآءَ ٱللَّهُ
- நாடினால்/அல்லாஹ்
- lamuh'tadūna
- لَمُهْتَدُونَ
- திட்டமாக (நாம்) நேர்வழி பெறுவோம்
அதற்கவர்கள் அம்மாடு எங்களைச் சந்தேகத்திற் குள்ளாக்குகின்றது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்தறிவிக்கும்படி உங்களுடைய இறைவனை நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நாடினால் இனி நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்" எனக் கூறினார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௭௦)Tafseer