Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 27

Al-Baqarah

(al-Baq̈arah)

௨௬௧

مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِيْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَاۤءُ ۗوَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ٢٦١

mathalu
مَّثَلُ
உதாரணம்
alladhīna yunfiqūna
ٱلَّذِينَ يُنفِقُونَ
தர்மம் புரிபவர்கள்
amwālahum
أَمْوَٰلَهُمْ
தங்கள் செல்வங்களை
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப் போன்று
ḥabbatin
حَبَّةٍ
ஒரு விதை
anbatat
أَنۢبَتَتْ
அது முளைக்க வைத்தது
sabʿa
سَبْعَ
ஏழு
sanābila
سَنَابِلَ
கதிர்களை
fī kulli
فِى كُلِّ
ஒவ்வொன்றிலும்
sunbulatin
سُنۢبُلَةٍ
கதிர்
mi-atu
مِّا۟ئَةُ
நூறு
ḥabbatin
حَبَّةٍۗ
விதை
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
yuḍāʿifu
يُضَٰعِفُ
பன்மடங்காக்குகிறான்
liman
لِمَن
எவருக்கு
yashāu
يَشَآءُۗ
நாடுவான்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
மிக அறிந்தவன்
(நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய பொருளைச் செலவு செய்கின்றவர்களுடைய (பொருளின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து உற்பத்தியாயின.) அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை பின்னும்) இரட்டிப்பாக்குகின்றான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனுமாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬௧)
Tafseer
௨௬௨

اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ لَا يُتْبِعُوْنَ مَآ اَنْفَقُوْا مَنًّا وَّلَآ اَذًىۙ لَّهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٢٦٢

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் புரிகிறார்கள்
amwālahum
أَمْوَٰلَهُمْ
தங்கள் செல்வங்களை
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
thumma lā yut'biʿūna
ثُمَّ لَا يُتْبِعُونَ
பிறகு தொடர்ந்து செய்யமாட்டார்கள்
مَآ
எதை
anfaqū
أَنفَقُوا۟
தர்மம் புரிந்தார்கள்
mannan
مَنًّا
சொல்லிக் காட்டுவது
walā adhan
وَلَآ أَذًىۙ
இன்னும் துன்புறுத்துவதில்லை
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
ajruhum
أَجْرُهُمْ
அவர்களின் கூலி
ʿinda
عِندَ
இடம்
rabbihim
رَبِّهِمْ
அவர்களின் இறைவன்
walā khawfun
وَلَا خَوْفٌ
இன்னும் பயம் இல்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
எவர்கள் தங்களுடைய பொருள்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொருளை வாங்கியவனுக்குத்) தாங்கள் அதைக் கொடுத்ததற்காக இகழ்ச்சியையும், துன்பத்தையும் (அதனோடு) சேர்க்கவில்லையோ அவர்களுக்குரிய கூலி அவர் களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬௨)
Tafseer
௨௬௩

۞ قَوْلٌ مَّعْرُوْفٌ وَّمَغْفِرَةٌ خَيْرٌ مِّنْ صَدَقَةٍ يَّتْبَعُهَآ اَذًى ۗ وَاللّٰهُ غَنِيٌّ حَلِيْمٌ ٢٦٣

qawlun
قَوْلٌ
சொல்
maʿrūfun
مَّعْرُوفٌ
நல்லது
wamaghfiratun
وَمَغْفِرَةٌ
இன்னும் மன்னிப்பு
khayrun
خَيْرٌ
சிறந்தது
min
مِّن
விட
ṣadaqatin
صَدَقَةٍ
தர்மம்
yatbaʿuhā
يَتْبَعُهَآ
அதைத் தொடர்கிறது
adhan
أَذًىۗ
துன்புறுத்துவது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghaniyyun
غَنِىٌّ
மகா செல்வன்
ḥalīmun
حَلِيمٌ
பெரும் சகிப்பாளன்
(தர்மம் செய்து அதை வாங்கியவனுக்குத்) துன்பம் தொடரும்(படியாகச் செய்யும்) தர்மத்தைவிட (அன்புடன் கூறும்) இன்சொல்லும், மன்னிப்பும் மிக மேலாகும். அன்றி, அல்லாஹ் தேவையற்றவனாகவும் பொறுமையாளனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬௩)
Tafseer
௨௬௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِيْ يُنْفِقُ مَالَهٗ رِئَاۤءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۗ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ۗ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَيْءٍ مِّمَّا كَسَبُوْا ۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْكٰفِرِيْنَ ٢٦٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā tub'ṭilū
لَا تُبْطِلُوا۟
பாழாக்காதீர்கள்
ṣadaqātikum
صَدَقَٰتِكُم
உங்கள் தர்மங்களை
bil-mani
بِٱلْمَنِّ
சொல்லிக் காட்டுவது
wal-adhā
وَٱلْأَذَىٰ
இன்னும் துன்புறுத்துவது
ka-alladhī
كَٱلَّذِى
எவரைப் போன்று
yunfiqu
يُنفِقُ
தர்மம் செய்கிறான்
mālahu
مَالَهُۥ
தனது செல்வத்தை
riāa
رِئَآءَ
காட்டுவதற்காக
l-nāsi
ٱلنَّاسِ
மக்களுக்கு
walā yu'minu
وَلَا يُؤْمِنُ
இன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டான்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۖ
இன்னும் இறுதி நாள்
famathaluhu
فَمَثَلُهُۥ
அவனின் உதாரணம்
kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப்போன்று
ṣafwānin
صَفْوَانٍ
வழுக்கைப் பாறையின்
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
turābun
تُرَابٌ
மண்
fa-aṣābahu
فَأَصَابَهُۥ
அதை அடைந்தது
wābilun
وَابِلٌ
அடை மழை
fatarakahu
فَتَرَكَهُۥ
அதை விட்டுவிட்டது
ṣaldan
صَلْدًاۖ
வெறும் பாறையாக
lā yaqdirūna
لَّا يَقْدِرُونَ
ஆற்றல் பெறமாட்டார்கள்
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍ
எதையும்
mimmā
مِّمَّا
எதிலிருந்து
kasabū
كَسَبُوا۟ۗ
செய்தார்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
கூட்டத்தை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இத்தகையவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்திற்கு (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬௪)
Tafseer
௨௬௫

وَمَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَاۤءَ مَرْضَاتِ اللّٰهِ وَتَثْبِيْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۢ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَيْنِۚ فَاِنْ لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ۗوَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٢٦٥

wamathalu
وَمَثَلُ
இன்னும் உதாரணம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களின்
yunfiqūna
يُنفِقُونَ
தர்மம் புரிகிறார்கள்
amwālahumu
أَمْوَٰلَهُمُ
தங்கள்செல்வங்களை
ib'tighāa
ٱبْتِغَآءَ
தேடி
marḍāti
مَرْضَاتِ
திருப்தியை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
watathbītan
وَتَثْبِيتًا
இன்னும் உறுதிப்படுத்துவது
min anfusihim
مِّنْ أَنفُسِهِمْ
தங்கள் உள்ளங்களில்
kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப்போன்று
jannatin
جَنَّةٍۭ
ஒரு தோட்டம்
birabwatin
بِرَبْوَةٍ
உயர்ந்த பூமியில்
aṣābahā
أَصَابَهَا
அதை அடைந்தது
wābilun
وَابِلٌ
அடை மழை
faātat
فَـَٔاتَتْ
ஆகவே அது கொடுத்தது
ukulahā
أُكُلَهَا
அதனுடைய பலனை
ḍiʿ'fayni
ضِعْفَيْنِ
இரு மடங்குகளாக
fa-in lam yuṣib'hā
فَإِن لَّمْ يُصِبْهَا
அதை அடையாவிட்டால்
wābilun
وَابِلٌ
அடை மழை
faṭallun wal-lahu
فَطَلٌّۗ وَٱللَّهُ
சிறுதூறல்/அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
எவர்கள் தங்களுடைய பொருளை அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடியும் தங்களுடைய உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுடைய (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை) மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கின்றது. அதில் ஒரு பெரும் மழை பெய்தால் இரு மடங்கு பலனைத் தருகின்றது. பெரும் மழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே அதற்குப் போதுமானது. அன்றி, அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬௫)
Tafseer
௨௬௬

اَيَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ لَهٗ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِۙ وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّيَّةٌ ضُعَفَاۤءُۚ فَاَصَابَهَآ اِعْصَارٌ فِيْهِ نَارٌ فَاحْتَرَقَتْ ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ࣖ ٢٦٦

ayawaddu
أَيَوَدُّ
விரும்புவாரா?
aḥadukum
أَحَدُكُمْ
உங்களில் ஒருவர்
an takūna
أَن تَكُونَ
இருப்பது
lahu
لَهُۥ
அவருக்கு
jannatun
جَنَّةٌ
ஒரு தோட்டம்
min nakhīlin
مِّن نَّخِيلٍ
பேரிச்சங்கனிகளின்
wa-aʿnābin
وَأَعْنَابٍ
இன்னும் திராட்சைகள்
tajrī
تَجْرِى
ஓடுகின்றன
min taḥtihā
مِن تَحْتِهَا
அதன் கீழிருந்து
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
ஆறுகள்
lahu
لَهُۥ
அவருக்கு
fīhā
فِيهَا
அதில்
min
مِن
இருந்து
kulli l-thamarāti
كُلِّ ٱلثَّمَرَٰتِ
எல்லா / பழங்கள்
wa-aṣābahu
وَأَصَابَهُ
இன்னும் அவரை அடைந்தது
l-kibaru
ٱلْكِبَرُ
முதுமை
walahu
وَلَهُۥ
இன்னும் அவருக்கு
dhurriyyatun
ذُرِّيَّةٌ
குழந்தைகள்
ḍuʿafāu
ضُعَفَآءُ
இயலாதவர்கள்
fa-aṣābahā
فَأَصَابَهَآ
அதை அடைந்தது
iʿ'ṣārun
إِعْصَارٌ
புயல் காற்று
fīhi nārun
فِيهِ نَارٌ
அதில் / நெருப்பு
fa-iḥ'taraqat
فَٱحْتَرَقَتْۗ
எரிந்து விட்டது
kadhālika
كَذَٰلِكَ
அவ்வாறே
yubayyinu
يُبَيِّنُ
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
laʿallakum tatafakkarūna
لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
நீங்கள்சிந்திப்பதற்காக
உங்களில் யார்தான் (இதனை) விரும்புவார்: ஒருத்தருக்கு பேரீச்சை மற்றும் திராட்சையின் ஒரு தோப்பு இருக்கின்றது. அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து எல்லா வகை கனிவர்க்கங்களும் அவருக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. (சம்பாதிக்க) இயலாத பல சிறு குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். (இந்த நிலைமையில்) நெருப்புடன் கூடிய புயற்காற்று அடித்து அதனை எரித்துவிட்டது. (இத்தகைய நிலைமையை எவர்தான் விரும்புவார்?) நீங்கள் ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக, அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு இவ்வாறு (உதாரணங்களைக் கொண்டு) தெளிவுபடுத்துகின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬௬)
Tafseer
௨௬௭

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَنْفِقُوْا مِنْ طَيِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّآ اَخْرَجْنَا لَكُمْ مِّنَ الْاَرْضِ ۗ وَلَا تَيَمَّمُوا الْخَبِيْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِيْهِ اِلَّآ اَنْ تُغْمِضُوْا فِيْهِ ۗ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَنِيٌّ حَمِيْدٌ ٢٦٧

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
anfiqū
أَنفِقُوا۟
தர்மம் புரியுங்கள்
min ṭayyibāti
مِن طَيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
مَا
எது
kasabtum
كَسَبْتُمْ
சம்பாதித்தீர்கள்
wamimmā
وَمِمَّآ
இன்னும் எதிலிருந்து
akhrajnā
أَخْرَجْنَا
வெளியாக்கினோம்
lakum
لَكُم
உங்களுக்கு
mina
مِّنَ
இருந்து
l-arḍi
ٱلْأَرْضِۖ
பூமி
walā tayammamū
وَلَا تَيَمَّمُوا۟
இன்னும் நாடாதீர்கள்
l-khabītha
ٱلْخَبِيثَ
கெட்டதை
min'hu
مِنْهُ
அதில்
tunfiqūna
تُنفِقُونَ
தர்மம் புரிகிறீர்கள்
walastum
وَلَسْتُم
நீங்கள் இல்லை
biākhidhīhi illā
بِـَٔاخِذِيهِ إِلَّآ
அதை வாங்குபவர்களாக/தவிர
an tugh'miḍū
أَن تُغْمِضُوا۟
நீங்கள்கண்மூடியவர்களாக
fīhi
فِيهِۚ
அதில்
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghaniyyun
غَنِىٌّ
மகா செல்வன்
ḥamīdun
حَمِيدٌ
பெரும் புகழாளன்
நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வைகளிலிருந்தும் நல்லவைகளையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவைகளில் கெட்டவைகளைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவைகளை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாக அன்றி வாங்கிக் கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬௭)
Tafseer
௨௬௮

اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاۤءِ ۚ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ۗ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ۖ ٢٦٨

al-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
yaʿidukumu
يَعِدُكُمُ
உங்களுக்கு அச்சுறுத்துகிறான்
l-faqra
ٱلْفَقْرَ
வறுமையை
wayamurukum
وَيَأْمُرُكُم
இன்னும் உங்களுக்கு ஏவுகிறான்
bil-faḥshāi
بِٱلْفَحْشَآءِۖ
மானக்கேடானதை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿidukum
يَعِدُكُم
உங்களுக்கு வாக்களிக்கிறான்
maghfiratan
مَّغْفِرَةً
மன்னிப்பை
min'hu
مِّنْهُ
தன்னிடமிருந்து
wafaḍlan
وَفَضْلًاۗ
இன்னும் அருளை
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
மிக அறிந்தவன்
(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன்னுடைய மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கின்றான். அன்றி, அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬௮)
Tafseer
௨௬௯

يُّؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَاۤءُ ۚ وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِيَ خَيْرًا كَثِيْرًا ۗ وَمَا يَذَّكَّرُ اِلَّآ اُولُوا الْاَلْبَابِ ٢٦٩

yu'tī
يُؤْتِى
தருகிறான்
l-ḥik'mata
ٱلْحِكْمَةَ
ஞானத்தை
man yashāu
مَن يَشَآءُۚ
எவர்/நாடுகிறான்
waman yu'ta
وَمَن يُؤْتَ
இன்னும் எவர்/தரப்படுவார்
l-ḥik'mata
ٱلْحِكْمَةَ
ஞானம்
faqad
فَقَدْ
திட்டமாக
ūtiya
أُوتِىَ
தரப்பட்டார்
khayran kathīran
خَيْرًا كَثِيرًاۗ
நன்மை/அதிகமான
wamā yadhakkaru
وَمَا يَذَّكَّرُ
உபதேசம் பெறமாட்டார்
illā ulū l-albābi
إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
தவிர/அறிவாளிகள்
(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே "ஹிக்மா" (இறைஞானம், நுண்ணறி)வை கொடுக்கின்றான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, இறைஞானத்தைக் கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெறமாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௬௯)
Tafseer
௨௭௦

وَمَآ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ يَعْلَمُهٗ ۗ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ ٢٧٠

wamā anfaqtum
وَمَآ أَنفَقْتُم
நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
min nafaqatin
مِّن نَّفَقَةٍ
தர்மத்தில்
aw
أَوْ
அல்லது
nadhartum
نَذَرْتُم
நேர்ந்து கொண்டீர்கள்
min nadhrin
مِّن نَّذْرٍ
நேர்ச்சையில்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yaʿlamuhu
يَعْلَمُهُۥۗ
அதை நன்கறிவான்
wamā
وَمَا
இல்லை
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
min anṣārin
مِنْ أَنصَارٍ
உதவியாளர்களில்
(நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்ச்சை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிகின்றான். அன்றி (நேர்ச்சை செய்தபின் அதை நிறைவேற்றாத) அநியாயக் காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவருமே) இல்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௭௦)
Tafseer