Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௬௫

Qur'an Surah Al-Baqarah Verse 265

ஸூரத்துல் பகரா [௨]: ௨௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَاۤءَ مَرْضَاتِ اللّٰهِ وَتَثْبِيْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۢ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَيْنِۚ فَاِنْ لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ۗوَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ (البقرة : ٢)

wamathalu
وَمَثَلُ
And (the) example
இன்னும் உதாரணம்
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்களின்
yunfiqūna
يُنفِقُونَ
spend
தர்மம் புரிகிறார்கள்
amwālahumu
أَمْوَٰلَهُمُ
their wealth
தங்கள்செல்வங்களை
ib'tighāa
ٱبْتِغَآءَ
seeking
தேடி
marḍāti
مَرْضَاتِ
(the) pleasure
திருப்தியை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
watathbītan
وَتَثْبِيتًا
and certainty
இன்னும் உறுதிப்படுத்துவது
min anfusihim
مِّنْ أَنفُسِهِمْ
from their (inner) souls
தங்கள் உள்ளங்களில்
kamathali
كَمَثَلِ
(is) like
உதாரணத்தைப்போன்று
jannatin
جَنَّةٍۭ
a garden
ஒரு தோட்டம்
birabwatin
بِرَبْوَةٍ
on a height
உயர்ந்த பூமியில்
aṣābahā
أَصَابَهَا
fell on it
அதை அடைந்தது
wābilun
وَابِلٌ
heavy rain
அடை மழை
faātat
فَـَٔاتَتْ
so it yielded
ஆகவே அது கொடுத்தது
ukulahā
أُكُلَهَا
its harvest
அதனுடைய பலனை
ḍiʿ'fayni
ضِعْفَيْنِ
double
இரு மடங்குகளாக
fa-in lam yuṣib'hā
فَإِن لَّمْ يُصِبْهَا
Then if (does) not fall (on) it
அதை அடையாவிட்டால்
wābilun
وَابِلٌ
heavy rain
அடை மழை
faṭallun wal-lahu
فَطَلٌّۗ وَٱللَّهُ
then a drizzle And Allah
சிறுதூறல்/அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do
நீங்கள் செய்பவற்றை
baṣīrun
بَصِيرٌ
(is) All-Seer
உற்று நோக்குபவன்

Transliteration:

Wa masalul lazeena yunfiqoona amwaalahumub ti ghaaaa'a mardaatil laahi wa tasbeetam min anfusihim kamasali jannatim birabwatin asaabahaa waabilun fa aatat ukulahaa di'faini fa il lam yusibhaa waabilun fatall; wallaahu bimaa ta'maloona Baseer (QS. al-Baq̈arah:265)

English Sahih International:

And the example of those who spend their wealth seeking means to the approval of Allah and assuring [reward for] themselves is like a garden on high ground which is hit by a downpour – so it yields its fruits in double. And [even] if it is not hit by a downpour, then a drizzle [is sufficient]. And Allah, of what you do, is Seeing. (QS. Al-Baqarah, Ayah ௨௬௫)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தங்களுடைய பொருளை அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை நாடியும் தங்களுடைய உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுடைய (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை) மீதுள்ள ஒரு தோட்டத்தை ஒத்திருக்கின்றது. அதில் ஒரு பெரும் மழை பெய்தால் இரு மடங்கு பலனைத் தருகின்றது. பெரும் மழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே அதற்குப் போதுமானது. அன்றி, அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௬௫)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது| உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடியும் தங்கள் உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் தர்மம் புரிகிறவர்களின் (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை)யிலுள்ள ஒரு தோட்டத்தின் உதாரணத்தைப் போன்றாகும். அதை அடைமழை அடைந்தது. ஆகவே, அது இரு மடங்குகளாக தன் பலனைத் தந்தது. அதைப் பெருமழை அடையாவிட்டாலும் சிறு தூறல் (அடைவது போதும்). அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்.