Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௬௯

Qur'an Surah Al-Baqarah Verse 269

ஸூரத்துல் பகரா [௨]: ௨௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُّؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَاۤءُ ۚ وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِيَ خَيْرًا كَثِيْرًا ۗ وَمَا يَذَّكَّرُ اِلَّآ اُولُوا الْاَلْبَابِ (البقرة : ٢)

yu'tī
يُؤْتِى
He grants
தருகிறான்
l-ḥik'mata
ٱلْحِكْمَةَ
[the] wisdom
ஞானத்தை
man yashāu
مَن يَشَآءُۚ
(to) whom He wills
எவர்/நாடுகிறான்
waman yu'ta
وَمَن يُؤْتَ
and whoever is granted
இன்னும் எவர்/தரப்படுவார்
l-ḥik'mata
ٱلْحِكْمَةَ
[the] wisdom
ஞானம்
faqad
فَقَدْ
then certainly
திட்டமாக
ūtiya
أُوتِىَ
he is granted
தரப்பட்டார்
khayran kathīran
خَيْرًا كَثِيرًاۗ
good abundant
நன்மை/அதிகமான
wamā yadhakkaru
وَمَا يَذَّكَّرُ
And none remembers
உபதேசம் பெறமாட்டார்
illā ulū l-albābi
إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
except those (of) understanding
தவிர/அறிவாளிகள்

Transliteration:

Yu'til Hikmata mai yashaaa'; wa mai yutal Hikmata faqad ootiya khairan kaseeraa; wa maa yazzakkaru illaaa ulul albaab (QS. al-Baq̈arah:269)

English Sahih International:

He gives wisdom to whom He wills, and whoever has been given wisdom has certainly been given much good. And none will remember except those of understanding. (QS. Al-Baqarah, Ayah ௨௬௯)

Abdul Hameed Baqavi:

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே "ஹிக்மா" (இறைஞானம், நுண்ணறி)வை கொடுக்கின்றான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, இறைஞானத்தைக் கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெறமாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௬௯)

Jan Trust Foundation

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு ஞானத்தை தருகிறான். ஞானம் தரப்படுகிறவர் திட்டமாக அதிக நன்மை தரப்பட்டார். அறிவாளிகளைத் தவிர (பிறர்) உபதேசம் பெறமாட்டார்.