Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௬௧

Qur'an Surah Al-Baqarah Verse 261

ஸூரத்துல் பகரா [௨]: ௨௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِيْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَاۤءُ ۗوَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ (البقرة : ٢)

mathalu
مَّثَلُ
Example
உதாரணம்
alladhīna yunfiqūna
ٱلَّذِينَ يُنفِقُونَ
(of) those who spend
தர்மம் புரிபவர்கள்
amwālahum
أَمْوَٰلَهُمْ
their wealth
தங்கள் செல்வங்களை
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
kamathali
كَمَثَلِ
(is) like
உதாரணத்தைப் போன்று
ḥabbatin
حَبَّةٍ
a grain
ஒரு விதை
anbatat
أَنۢبَتَتْ
which grows
அது முளைக்க வைத்தது
sabʿa
سَبْعَ
seven
ஏழு
sanābila
سَنَابِلَ
ears
கதிர்களை
fī kulli
فِى كُلِّ
in each
ஒவ்வொன்றிலும்
sunbulatin
سُنۢبُلَةٍ
ear
கதிர்
mi-atu
مِّا۟ئَةُ
hundred
நூறு
ḥabbatin
حَبَّةٍۗ
grain(s)
விதை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
இன்னும் அல்லாஹ்
yuḍāʿifu
يُضَٰعِفُ
gives manifold
பன்மடங்காக்குகிறான்
liman
لِمَن
to whom
எவருக்கு
yashāu
يَشَآءُۗ
He wills
நாடுவான்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
இன்னும் அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
(is) All-Encompassing
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
மிக அறிந்தவன்

Transliteration:

Masalul lazeena yunfiqoona amwaalahum fee sabeelil laahi kamasali habbatin ambatat sab'a sanaabila fee kulli sumbulatim mi'atu habbah; wallaahu yudaa'ifu limai yashaaa; wallaahu Waasi'un 'Aleem (QS. al-Baq̈arah:261)

English Sahih International:

The example of those who spend their wealth in the way of Allah is like a seed [of grain] which grows seven spikes; in each spike is a hundred grains. And Allah multiplies [His reward] for whom He wills. And Allah is all-Encompassing and Knowing. (QS. Al-Baqarah, Ayah ௨௬௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய பொருளைச் செலவு செய்கின்றவர்களுடைய (பொருளின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து உற்பத்தியாயின.) அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை பின்னும்) இரட்டிப்பாக்குகின்றான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனுமாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௬௧)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது| ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றதாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதை(கள் வந்தன). அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், மிக அறிந்தவன்.