Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 25

Al-Baqarah

(al-Baq̈arah)

௨௪௧

وَلِلْمُطَلَّقٰتِ مَتَاعٌ ۢبِالْمَعْرُوْفِۗ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَ ٢٤١

walil'muṭallaqāti
وَلِلْمُطَلَّقَٰتِ
விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கு
matāʿun
مَتَٰعٌۢ
பொருள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۖ
நல்ல முறையில்
ḥaqqan
حَقًّا
கடமையாகும்
ʿalā
عَلَى
மீது
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
தவிர, தலாக்குக் கூறப்பட்ட பெண்களுக்கு, (அவர்களுடைய இத்தாவின் தவணை வரையிலும்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே) பராமரிப்பு பெறத் தகுதியுண்டு. (அவ்வாறு அவர்களை பராமரிப்பது) இறை அச்சமுடையவர்கள் மீது கடமையாகும். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௧)
Tafseer
௨௪௨

كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ࣖ ٢٤٢

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
yubayyinu
يُبَيِّنُ
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْ
உங்களுக்கு
āyātihi
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
laʿallakum taʿqilūna
لَعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் அறிந்து கொள்வதற்காக
நீங்கள் அறிந்துகொள்வதற்காக தன்னுடைய வசனங்களை அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௨)
Tafseer
௨௪௩

۞ اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِۖ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ۗ ثُمَّ اَحْيَاهُمْ ۗ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ ٢٤٣

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
ilā alladhīna
إِلَى ٱلَّذِينَ
எவர்களை
kharajū
خَرَجُوا۟
வெளியேறினார்கள்
min
مِن
இருந்து
diyārihim
دِيَٰرِهِمْ
அவர்களுடைய இல்லங்கள்
wahum
وَهُمْ
அவர்களோ
ulūfun
أُلُوفٌ
பல ஆயிரங்கள்
ḥadhara
حَذَرَ
பயத்தால்
l-mawti
ٱلْمَوْتِ
மரணத்தின்
faqāla
فَقَالَ
ஆகவே கூறினான்
lahumu
لَهُمُ
அவர்களை நோக்கி
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mūtū
مُوتُوا۟
இறந்து விடுங்கள்
thumma
ثُمَّ
பிறகு
aḥyāhum
أَحْيَٰهُمْۚ
அவர்களை உயிர்ப்பித்தான்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ladhū faḍlin
لَذُو فَضْلٍ
அருளுடையவனே
ʿalā
عَلَى
மீது
l-nāsi
ٱلنَّاسِ
மக்கள்
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yashkurūna
لَا يَشْكُرُونَ
நன்றி செலுத்தமாட்டார்கள்
(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக் கணக்கில் வெளியேறியவர்களை நீங்கள் கவனித்தீர்களா? அல்லாஹ் அவர்களை இறக்கும்படிக் கூறி (இறக்கச் செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது கருணையுள்ளவனாக இருக்கின்றான். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவது இல்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௩)
Tafseer
௨௪௪

وَقَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ ٢٤٤

waqātilū
وَقَٰتِلُوا۟
போரிடுங்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
மிக அறிபவன்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் பிரார்த்தனையை) செவியுறுபவனாகவும், (உங்கள் கஷ்டத்தை) அறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௪)
Tafseer
௨௪௫

مَنْ ذَا الَّذِيْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗٓ اَضْعَافًا كَثِيْرَةً ۗوَاللّٰهُ يَقْبِضُ وَيَبْصُۣطُۖ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ ٢٤٥

man
مَّن
எவர்
dhā
ذَا
அவர்
alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவர்
yuq'riḍu
يُقْرِضُ
கடன் கொடுப்பார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
qarḍan ḥasanan
قَرْضًا حَسَنًا
கடன் / அழகிய
fayuḍāʿifahu
فَيُضَٰعِفَهُۥ
அதை பெருக்குவான்
lahu
لَهُۥٓ
அவனுக்கு
aḍʿāfan
أَضْعَافًا
மடங்குகள்
kathīratan
كَثِيرَةًۚ
பல
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
yaqbiḍu
يَقْبِضُ
சுருக்கிக் கொள்கிறான்
wayabṣuṭu
وَيَبْصُۜطُ
இன்னும் விசாலமாக கொடுக்கிறான்
wa-ilayhi
وَإِلَيْهِ
இன்னும் அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
மீட்கப்படுவீர்கள்
(கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு) அழகான முறையில் அல்லாஹ்விற்காகக் கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். அன்றி அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௫)
Tafseer
௨௪௬

اَلَمْ تَرَ اِلَى الْمَلَاِ مِنْۢ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ مِنْۢ بَعْدِ مُوْسٰىۘ اِذْ قَالُوْا لِنَبِيٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۗ قَالَ هَلْ عَسَيْتُمْ اِنْ كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ۗ قَالُوْا وَمَا لَنَآ اَلَّا نُقَاتِلَ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَقَدْاُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَاَبْنَاۤىِٕنَا ۗ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ ۗوَاللّٰهُ عَلِيْمٌ ۢبِالظّٰلِمِيْنَ ٢٤٦

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
ilā l-mala-i
إِلَى ٱلْمَلَإِ
தலைவர்களை
min
مِنۢ
சேர்ந்த
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின் சந்ததிகள்
min baʿdi mūsā
مِنۢ بَعْدِ مُوسَىٰٓ
மூஸாவிற்குப் பின்னர்
idh qālū
إِذْ قَالُوا۟
அவர்கள் கூறியபோது
linabiyyin
لِنَبِىٍّ
நபிக்கு
lahumu
لَّهُمُ
தங்களுக்குரிய
ib'ʿath
ٱبْعَثْ
அனுப்புவீராக
lanā
لَنَا
எங்களுக்கு
malikan
مَلِكًا
ஓர் அரசரை
nuqātil
نُّقَٰتِلْ
போர் புரிவோம்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வுடைய
qāla
قَالَ
கூறினார்
hal ʿasaytum
هَلْ عَسَيْتُمْ
நீங்கள் இருக்கக் கூடுமா?
in kutiba
إِن كُتِبَ
கடமையாக்கப்பட்டால்
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-qitālu
ٱلْقِتَالُ
போர்
allā tuqātilū
أَلَّا تُقَٰتِلُوا۟ۖ
நீங்கள் போர் புரியாமல்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
wamā lanā
وَمَا لَنَآ
எங்களுக்கு என்ன
allā nuqātila
أَلَّا نُقَٰتِلَ
நாங்கள் போர் புரியாமல் இருக்க
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
waqad
وَقَدْ
திட்டமாக
ukh'rij'nā
أُخْرِجْنَا
வெளியேற்றப் பட்டோம்
min
مِن
இருந்து
diyārinā
دِيَٰرِنَا
எங்கள் இல்லங்கள்
wa-abnāinā
وَأَبْنَآئِنَاۖ
இன்னும் எங்கள் சந்ததிகள்
falammā kutiba
فَلَمَّا كُتِبَ
கடமையாக்கப்பட்ட போது
ʿalayhimu l-qitālu
عَلَيْهِمُ ٱلْقِتَالُ
அவர்கள் மீது/போர்
tawallaw
تَوَلَّوْا۟
விலகினார்கள்
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًا
குறைவானவர்கள்
min'hum
مِّنْهُمْۗ
அவர்களில்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bil-ẓālimīna
بِٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளில் மூஸாவுக்குப் பின் இருந்த தலைவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்கள்) "அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிய எங்களுக்கு(த் தலைமை வகிக்க) ஒரு அரசனை அனுப்பி வையுங்கள்" என்று தங்கள் நபியிடம் கூறியபோது, (அவர்) "போர் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டால் நீங்கள் போர் செய்யாமல் (விலகி) இருந்து விடுவீர்களா?" என்று கேட்டார். (அதற்கு) அவர்கள் "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்க, (எங்களை வெளியேற்றிய) அவர்களுடன் அல்லாஹ் வுடைய பாதையில் நாங்கள் போர் செய்யாதிருக்க எங்களுக்கென்ன (தடை)?" என்று கூறினார்கள். ஆனால், போர் செய்யும்படி கட்டளையிடப்பட்டபொழுதோ அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள் போர் செய்யாது) பின் சென்றுவிட்டார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௬)
Tafseer
௨௪௭

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوْتَ مَلِكًا ۗ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِۗ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰىهُ عَلَيْكُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَالْجِسْمِ ۗ وَاللّٰهُ يُؤْتِيْ مُلْكَهٗ مَنْ يَّشَاۤءُ ۗ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ٢٤٧

waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
nabiyyuhum
نَبِيُّهُمْ
அவர்களுடைய நபி
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
qad baʿatha
قَدْ بَعَثَ
அனுப்பி இருக்கிறான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ṭālūta
طَالُوتَ
தாலூத்தை
malikan
مَلِكًاۚ
அரசராக
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
annā yakūnu
أَنَّىٰ يَكُونُ
எப்படி?/இருக்கும்
lahu l-mul'ku
لَهُ ٱلْمُلْكُ
அவருக்கு/ஆட்சி
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
wanaḥnu
وَنَحْنُ
நாங்கள்
aḥaqqu
أَحَقُّ
மிகவும் தகுதியுடையவர்(கள்)
bil-mul'ki
بِٱلْمُلْكِ
ஆட்சிக்கு
min'hu
مِنْهُ
அவரைவிட
walam yu'ta
وَلَمْ يُؤْتَ
அவர் கொடுக்கப்படவில்லையே
saʿatan
سَعَةً
வசதி
mina l-māli
مِّنَ ٱلْمَالِۚ
செல்வத்தின்
qāla
قَالَ
கூறினார்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
iṣ'ṭafāhu ʿalaykum
ٱصْطَفَىٰهُ عَلَيْكُمْ
அவரைத் தேர்ந்தெடுத்தான்/உங்கள் மீது
wazādahu
وَزَادَهُۥ
இன்னும் அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான்
basṭatan
بَسْطَةً
ஆற்றலை
fī l-ʿil'mi
فِى ٱلْعِلْمِ
கல்வியில்
wal-jis'mi
وَٱلْجِسْمِۖ
இன்னும் உடல்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
yu'tī
يُؤْتِى
தருவான்
mul'kahu
مُلْكَهُۥ
தனது ஆட்சியை
man
مَن
எவர்
yashāu
يَشَآءُۚ
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
மிக அறிபவன்
மேலும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கின்றான்" என்று கூறியதற்கு (அவர்கள்) "எங்கள் மீது அரசாலும் உரிமை அவருக்கு எவ்வாறு ஏற்படும். அவரை விட நாங்கள்தான் அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்கள், (அரசாட்சி புரிவதற்கு அவசியமான) திரளான செல்வத்தையும் அவர் அடையவில்லை" என்று கூறினார்கள். (அதற்கு அவர் களுடைய நபி) "நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அன்றி (போர்க்) கல்வியிலும், தேகத்(தின் பருமனிலும் பலத்)திலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் இருக்கின்றான். அல்லாஹ் தான் விரும்பியவர் களுக்கே தன் ஆட்சியை வழங்குவான். அல்லாஹ் (வழங்குவதில்) அதிக விசாலமானவன் (அரசாட்சி புரியத் தகுதியுடையவர்களை) நன்கறிந்தவன்" என்று கூறினார். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௭)
Tafseer
௨௪௮

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اٰيَةَ مُلْكِهٖٓ اَنْ يَّأْتِيَكُمُ التَّابُوْتُ فِيْهِ سَكِيْنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰى وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰۤىِٕكَةُ ۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ࣖ ٢٤٨

waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
nabiyyuhum
نَبِيُّهُمْ
அவர்களுடைய நபி
inna
إِنَّ
நிச்சயமாக
āyata
ءَايَةَ
அத்தாட்சி
mul'kihi
مُلْكِهِۦٓ
அவருடைய ஆட்சிக்கு
an yatiyakumu
أَن يَأْتِيَكُمُ
உங்களிடம் வருவது
l-tābūtu
ٱلتَّابُوتُ
பேழை
fīhi sakīnatun
فِيهِ سَكِينَةٌ
அதில்/ஆறுதல்
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
wabaqiyyatun
وَبَقِيَّةٌ
இன்னும் மீதப் பொருட்கள்
mimmā
مِّمَّا
எதிலிருந்து
taraka
تَرَكَ
விட்டுச் சென்றார்
ālu mūsā
ءَالُ مُوسَىٰ
மூஸாவின்குடும்பத்தார்
waālu
وَءَالُ
இன்னும் குடும்பத்தார்
hārūna
هَٰرُونَ
ஹாரூனுடைய
taḥmiluhu
تَحْمِلُهُ
அதைச் சுமப்பா(ர்க)ள்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُۚ
வானவர்கள்
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக/அதில்
laāyatan
لَءَايَةً
திட்டமாக ஓர் அத்தாட்சி
lakum
لَّكُمْ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
பின்னும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி "அவருடைய அரசுரிமைக்கு அறிகுறியாவது: உங்கள் இறைவனிடமிருந்து மலக்குகள் சுமந்த வண்ணமாக ஒரு பேழை திண்ணமாக உங்களிடம் வரும். அதில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதும், மூஸாவின் சந்ததிகள் மற்றும் ஹாரூனுடைய சந்ததிகள் விட்டுச் சென்றதில் மீதமுள்ளதும் இருக்கும். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி உண்டு" என்று கூறினார். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௮)
Tafseer
௨௪௯

فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُنُوْدِ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِيْكُمْ بِنَهَرٍۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّيْۚ وَمَنْ لَّمْ يَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّيْٓ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً ۢبِيَدِهٖ ۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ ۗ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ ۗ قَالَ الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِ ۙ كَمْ مِّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيْرَةً ۢبِاِذْنِ اللّٰهِ ۗ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ ٢٤٩

falammā faṣala
فَلَمَّا فَصَلَ
புறப்பட்டார்/போது
ṭālūtu
طَالُوتُ
தாலூத்
bil-junūdi
بِٱلْجُنُودِ
படைகளுடன்
qāla
قَالَ
கூறினார்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
mub'talīkum
مُبْتَلِيكُم
உங்களைச்சோதிப்பான்
binaharin
بِنَهَرٍ
ஓர் ஆற்றின் மூலம்
faman
فَمَن
ஆகவே எவர்
shariba min'hu
شَرِبَ مِنْهُ
அதிலிருந்து குடித்தார்
falaysa
فَلَيْسَ
அவர் இல்லை
minnī
مِنِّى
என்னை சேர்ந்த
waman
وَمَن
இன்னும் எவர்
lam yaṭʿamhu
لَّمْ يَطْعَمْهُ
அதைச் சுவைக்கவில்லை
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
minnī
مِنِّىٓ
என்னைச் சேர்ந்த
illā mani
إِلَّا مَنِ
தவிர/எவர்
igh'tarafa
ٱغْتَرَفَ
கையளவு நீர் அள்ளினார்
ghur'fatan
غُرْفَةًۢ
கையளவு நீர்
biyadihi
بِيَدِهِۦۚ
தன் கரத்தால்
fasharibū
فَشَرِبُوا۟
குடித்தார்கள்
min'hu
مِنْهُ
அதிலிருந்து
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًا
குறைவானவர்கள்
min'hum
مِّنْهُمْۚ
அவர்களில்
falammā jāwazahu
فَلَمَّا جَاوَزَهُۥ
அதை அவர் கடந்தபோது
huwa
هُوَ
அவர்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
lā ṭāqata
لَا طَاقَةَ
அறவே சக்தியில்லை
lanā l-yawma
لَنَا ٱلْيَوْمَ
எங்களுக்கு/இன்று
bijālūta
بِجَالُوتَ
ஜாலூத்துடன்
wajunūdihi
وَجُنُودِهِۦۚ
இன்னும் அவனுடைய படைகள்
qāla
قَالَ
கூறினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaẓunnūna
يَظُنُّونَ
அறிகிறார்கள்
annahum
أَنَّهُم
நிச்சயமாக தாங்கள்
mulāqū
مُّلَٰقُوا۟
சந்திப்பவர்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
kam
كَم
எத்தனை
min
مِّن
இருந்து
fi-atin
فِئَةٍ
கூட்டம்
qalīlatin
قَلِيلَةٍ
குறைவான
ghalabat
غَلَبَتْ
வென்றுள்ளன
fi-atan
فِئَةً
கூட்டத்தை
kathīratan
كَثِيرَةًۢ
அதிகமான
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
maʿa
مَعَ
உடன்
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்கள்
பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தன் இராணுவத்தை நோக்கி) "நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றைக் கொண்டு உங்களைச் சோதிப்பான். (உங்களில்) எவர் அதிலிருந்து தன் கைக்கொண்ட ஒரு உள்ளங்கை அளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர். எவர் அதில் இருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல" எனக் கூறினார். ஆனால், (ஆற்றைக் கடக்கவே) அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்துவிட்டார்கள். பின்னர், அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதனைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் "இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை" என்று கூறி (விலகி) விட்டார்கள். (ஆனால் அவர்களில்) எவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என உறுதி கொண்டிருந்தார்களோ அவர்கள் மற்றவர்களை நோக்கி "(எவ்வளவோ) பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வெற்றி பெற்று இருக்கின்றார்கள், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௪௯)
Tafseer
௨௫௦

وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ ۗ ٢٥٠

walammā barazū
وَلَمَّا بَرَزُوا۟
அவர்கள் முன்னால் வந்தபோது
lijālūta
لِجَالُوتَ
ஜாலூத்திற்கு
wajunūdihi
وَجُنُودِهِۦ
இன்னும் அவனுடைய படைகள்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
afrigh
أَفْرِغْ
இறக்கு
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
ṣabran
صَبْرًا
பொறுமையை
wathabbit
وَثَبِّتْ
இன்னும் உறுதிப்படுத்து
aqdāmanā
أَقْدَامَنَا
எங்கள் பாதங்களை
wa-unṣur'nā
وَٱنصُرْنَا
இன்னும் எங்களுக்கு உதவு
ʿalā
عَلَى
எதிராக
l-qawmi
ٱلْقَوْمِ
மக்களுக்கு
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்
மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது "எங்கள் இறைவனே! நீ எங்கள்மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! அன்றி, நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!" என்றும் பிரார்த்தனை செய்தார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௫௦)
Tafseer