Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௪௭

Qur'an Surah Al-Baqarah Verse 247

ஸூரத்துல் பகரா [௨]: ௨௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوْتَ مَلِكًا ۗ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِۗ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰىهُ عَلَيْكُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَالْجِسْمِ ۗ وَاللّٰهُ يُؤْتِيْ مُلْكَهٗ مَنْ يَّشَاۤءُ ۗ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ (البقرة : ٢)

waqāla
وَقَالَ
And said
இன்னும் கூறினார்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
nabiyyuhum
نَبِيُّهُمْ
their Prophet
அவர்களுடைய நபி
inna
إِنَّ
"Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
qad baʿatha
قَدْ بَعَثَ
(has) surely raised
அனுப்பி இருக்கிறான்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
ṭālūta
طَالُوتَ
Talut
தாலூத்தை
malikan
مَلِكًاۚ
(as) a king"
அரசராக
qālū
قَالُوٓا۟
They said
கூறினார்கள்
annā yakūnu
أَنَّىٰ يَكُونُ
How can be
எப்படி?/இருக்கும்
lahu l-mul'ku
لَهُ ٱلْمُلْكُ
for him the kingship
அவருக்கு/ஆட்சி
ʿalaynā
عَلَيْنَا
over us
எங்கள் மீது
wanaḥnu
وَنَحْنُ
while we
நாங்கள்
aḥaqqu
أَحَقُّ
(are) more entitled
மிகவும் தகுதியுடையவர்(கள்)
bil-mul'ki
بِٱلْمُلْكِ
to kingship
ஆட்சிக்கு
min'hu
مِنْهُ
than him
அவரைவிட
walam yu'ta
وَلَمْ يُؤْتَ
and not he has been given
அவர் கொடுக்கப்படவில்லையே
saʿatan
سَعَةً
abundance
வசதி
mina l-māli
مِّنَ ٱلْمَالِۚ
of [the] wealth?"
செல்வத்தின்
qāla
قَالَ
He said
கூறினார்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
"Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
iṣ'ṭafāhu ʿalaykum
ٱصْطَفَىٰهُ عَلَيْكُمْ
has chosen him over you
அவரைத் தேர்ந்தெடுத்தான்/உங்கள் மீது
wazādahu
وَزَادَهُۥ
and increased him
இன்னும் அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான்
basṭatan
بَسْطَةً
abundantly
ஆற்றலை
fī l-ʿil'mi
فِى ٱلْعِلْمِ
in [the] knowledge
கல்வியில்
wal-jis'mi
وَٱلْجِسْمِۖ
and [the] physique
இன்னும் உடல்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
இன்னும் அல்லாஹ்
yu'tī
يُؤْتِى
gives
தருவான்
mul'kahu
مُلْكَهُۥ
His kingdom
தனது ஆட்சியை
man
مَن
(to) whom
எவர்
yashāu
يَشَآءُۚ
He wills
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
இன்னும் அல்லாஹ்
wāsiʿun
وَٰسِعٌ
(is) All-Encompassing
விசாலமானவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing"
மிக அறிபவன்

Transliteration:

Wa qaala lahum Nabiy yuhum innal laaha qad ba'asa lakum Taaloota malikaa; qaalooo annaa yakoonu lahul mulku 'alainaa wa nahnu ahaqqu bilmulki minhu wa lam yu'ta sa'atamminal maal; qaala innallaahas tafaahu 'alaikum wa zaadahoo bastatan fil'ilmi waljismi wallaahu yu'tee mulkahoo mai yashaaa'; wallaahu Waasi'un 'Aleem (QS. al-Baq̈arah:247)

English Sahih International:

And their prophet said to them, "Indeed, Allah has sent to you Saul as a king." They said, "How can he have kingship over us while we are more worthy of kingship than him and he has not been given any measure of wealth?" He said, "Indeed, Allah has chosen him over you and has increased him abundantly in knowledge and stature. And Allah gives His sovereignty to whom He wills. And Allah is all-Encompassing [in favor] and Knowing." (QS. Al-Baqarah, Ayah ௨௪௭)

Abdul Hameed Baqavi:

மேலும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கின்றான்" என்று கூறியதற்கு (அவர்கள்) "எங்கள் மீது அரசாலும் உரிமை அவருக்கு எவ்வாறு ஏற்படும். அவரை விட நாங்கள்தான் அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்கள், (அரசாட்சி புரிவதற்கு அவசியமான) திரளான செல்வத்தையும் அவர் அடையவில்லை" என்று கூறினார்கள். (அதற்கு அவர் களுடைய நபி) "நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அன்றி (போர்க்) கல்வியிலும், தேகத்(தின் பருமனிலும் பலத்)திலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் இருக்கின்றான். அல்லாஹ் தான் விரும்பியவர் களுக்கே தன் ஆட்சியை வழங்குவான். அல்லாஹ் (வழங்குவதில்) அதிக விசாலமானவன் (அரசாட்சி புரியத் தகுதியுடையவர்களை) நன்கறிந்தவன்" என்று கூறினார். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௪௭)

Jan Trust Foundation

அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய நபி, "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்" என்று அவர்களுக்குக் கூறினார்.”எங்கள் மீது ஆட்சி (செலுத்த) அவருக்கு (தகுதி) எப்படி இருக்கும்? அவரைவிட நாங்கள் ஆட்சிக்கு மிகவும் தகுதியுடையவர்கள். அவர் செல்வத்தின் வசதி கொடுக்கப்படவில்லையே" என்று (அம்மக்கள்) கூறினார்கள். "நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்தான். (போர்க்) கல்வியிலும், உடலிலும் ஆற்றலை அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான். "அல்லாஹ், தான் நாடியவருக்கே தனது ஆட்சியைத் தருவான். அல்லாஹ் விசாலமானவன். மிக அறிபவன்" என்று (தூதர்) கூறினார்.