وَمَثَلُ الَّذِيْنَ كَفَرُوْا كَمَثَلِ الَّذِيْ يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ اِلَّا دُعَاۤءً وَّنِدَاۤءً ۗ صُمٌّ ۢ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُوْنَ ١٧١
- wamathalu
- وَمَثَلُ
- இன்னும் உதாரணம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- kamathali
- كَمَثَلِ
- உதாரணத்தைப்போன்று
- alladhī
- ٱلَّذِى
- எவர்
- yanʿiqu
- يَنْعِقُ
- கூவி அழைக்கிறார்
- bimā
- بِمَا
- எதை
- lā yasmaʿu
- لَا يَسْمَعُ
- கேட்காது
- illā
- إِلَّا
- தவிர
- duʿāan
- دُعَآءً
- அழைப்பை
- wanidāan
- وَنِدَآءًۚ
- இன்னும் சப்தத்தை
- ṣummun
- صُمٌّۢ
- செவிடர்கள்
- buk'mun
- بُكْمٌ
- ஊமைகள்
- ʿum'yun
- عُمْىٌ
- குருடர்கள்
- fahum
- فَهُمْ
- எனவே, அவர்கள்
- lā yaʿqilūna
- لَا يَعْقِلُونَ
- புரிய மாட்டார்கள்
(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் காஃபிர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௧)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ ١٧٢
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- kulū
- كُلُوا۟
- உண்ணுங்கள்
- min ṭayyibāti
- مِن طَيِّبَٰتِ
- நல்லவற்றிலிருந்து
- mā
- مَا
- எவை
- razaqnākum
- رَزَقْنَٰكُمْ
- உங்களுக்கு வழங்கினோம்
- wa-ush'kurū
- وَٱشْكُرُوا۟
- இன்னும் நன்றி செலுத்துங்கள்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- iyyāhu
- إِيَّاهُ
- அவனையே
- taʿbudūna
- تَعْبُدُونَ
- வணங்குகிறீர்கள்
நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவைகளில் இருந்தே புசியுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௨)Tafseer
اِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَآ اِثْمَ عَلَيْهِ ۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٧٣
- innamā ḥarrama
- إِنَّمَا حَرَّمَ
- அவன் தடுத்ததெல்லாம்
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- உங்கள் மீது
- l-maytata
- ٱلْمَيْتَةَ
- செத்ததை
- wal-dama
- وَٱلدَّمَ
- இன்னும் இரத்தம்
- walaḥma
- وَلَحْمَ
- இன்னும் இறைச்சி
- l-khinzīri
- ٱلْخِنزِيرِ
- பன்றியின்
- wamā
- وَمَآ
- இன்னும் எது
- uhilla
- أُهِلَّ
- கூறப்பட்டது
- bihi
- بِهِۦ
- அதை
- lighayri
- لِغَيْرِ
- அல்லாதவருக்காக
- l-lahi
- ٱللَّهِۖ
- அல்லாஹ்
- famani
- فَمَنِ
- ஆகவே, எவர்
- uḍ'ṭurra
- ٱضْطُرَّ
- நிர்ப்பந்திக்கப்பட்டார்
- ghayra bāghin
- غَيْرَ بَاغٍ
- பாவத்தை நாடாதவராக
- walā ʿādin
- وَلَا عَادٍ
- இன்னும் வரம்பு மீறாதவராக
- falā
- فَلَآ
- அறவே இல்லை
- ith'ma
- إِثْمَ
- குற்றம்
- ʿalayhi
- عَلَيْهِۚ
- அவர் மீது
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
(நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவைகள் ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௩)Tafseer
اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْكِتٰبِ وَيَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِيْلًاۙ اُولٰۤىِٕكَ مَا يَأْكُلُوْنَ فِيْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ ۚوَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١٧٤
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yaktumūna
- يَكْتُمُونَ
- மறைக்கிறார்கள்
- mā
- مَآ
- எவற்றை
- anzala
- أَنزَلَ
- இறக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- mina l-kitābi
- مِنَ ٱلْكِتَٰبِ
- வேதத்தில்
- wayashtarūna
- وَيَشْتَرُونَ
- இன்னும் வாங்குகிறார்கள்
- bihi
- بِهِۦ
- அதன் மூலம்
- thamanan
- ثَمَنًا
- தொகை
- qalīlan
- قَلِيلًاۙ
- சொற்பம்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- mā yakulūna
- مَا يَأْكُلُونَ
- அவர்கள் சாப்பிடுவதில்லை
- fī buṭūnihim
- فِى بُطُونِهِمْ
- தங்கள் வயிறுகளில்
- illā
- إِلَّا
- தவிர
- l-nāra
- ٱلنَّارَ
- நெருப்பை
- walā yukallimuhumu
- وَلَا يُكَلِّمُهُمُ
- இன்னும் அவர்களிடம் பேசமாட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- walā yuzakkīhim
- وَلَا يُزَكِّيهِمْ
- இன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான்
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- துன்புறுத்தக் கூடியது
எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவைகளை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக் கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கின்றார்கள். அன்றி, மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவுமாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௪)Tafseer
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ فَمَآ اَصْبَرَهُمْ عَلَى النَّارِ ١٧٥
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்(தான்)
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ish'tarawū
- ٱشْتَرَوُا۟
- வாங்கினார்கள்
- l-ḍalālata
- ٱلضَّلَٰلَةَ
- வழிகேட்டை
- bil-hudā
- بِٱلْهُدَىٰ
- நேர்வழிக்குப் பதிலாக
- wal-ʿadhāba
- وَٱلْعَذَابَ
- இன்னும் தண்டனை
- bil-maghfirati
- بِٱلْمَغْفِرَةِۚ
- மன்னிப்புக்குப்பதிலாக
- famā
- فَمَآ
- எது
- aṣbarahum
- أَصْبَرَهُمْ
- அவர்களைத் துணிவுகொள்ளும்படி செய்தது
- ʿalā
- عَلَى
- மீது
- l-nāri
- ٱلنَّارِ
- (நரக) நெருப்பு
இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்களாவர். (நரக) நெருப்பை (இவ்விதம்) அவர்கள் (சுவைத்து) சகிக்கும்படிச் செய்தது எதுவோ? ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௫)Tafseer
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْكِتٰبَ بِالْحَقِّ ۗ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِى الْكِتٰبِ لَفِيْ شِقَاقٍۢ بَعِيْدٍ ࣖ ١٧٦
- dhālika
- ذَٰلِكَ
- அது
- bi-anna
- بِأَنَّ
- காரணம்/நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- nazzala
- نَزَّلَ
- இறக்கினான்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۗ
- உண்மையுடன்
- wa-inna
- وَإِنَّ
- இன்னும் நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ikh'talafū
- ٱخْتَلَفُوا۟
- முரண்பட்டார்கள்
- fī l-kitābi
- فِى ٱلْكِتَٰبِ
- வேதத்தில்
- lafī shiqāqin
- لَفِى شِقَاقٍۭ
- பகைமையில்தான்
- baʿīdin
- بَعِيدٍ
- தூரமான
இதன் காரணம்: நிச்சயமாக அல்லாஹ் (முற்றிலும்) உண்மையாகவே வேதத்தை இறக்கியிரு(க்க, சொற்பத் தொகையைப் பெறுவதற்காக அதன் வசனங்களை மறை)ப்பதுதான். மேலும், வேதத்தைப் புரட்டுகிறவர்கள் நிச்சயமாக (நேர்வழியை விட்டுப்) பிரிந்து வெகுதூரத்தில் இருக்கின்றார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௬)Tafseer
۞ لَيْسَ الْبِرَّاَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلٰكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰۤىِٕكَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ ۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّاۤىِٕلِيْنَ وَفىِ الرِّقَابِۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عَاهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَأْسَاۤءِ وَالضَّرَّاۤءِ وَحِيْنَ الْبَأْسِۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ۗوَاُولٰۤىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ١٧٧
- laysa
- لَّيْسَ
- அல்ல
- l-bira
- ٱلْبِرَّ
- நன்மை
- an tuwallū
- أَن تُوَلُّوا۟
- நீங்கள் திருப்புவது
- wujūhakum
- وُجُوهَكُمْ
- உங்கள் முகங்களை
- qibala
- قِبَلَ
- நோக்கி
- l-mashriqi
- ٱلْمَشْرِقِ
- கிழக்கு
- wal-maghribi
- وَٱلْمَغْرِبِ
- இன்னும் மேற்கு
- walākinna
- وَلَٰكِنَّ
- எனினும்
- l-bira
- ٱلْبِرَّ
- நன்மை
- man
- مَنْ
- எவர்
- āmana
- ءَامَنَ
- நம்பிக்கை கொண்டார்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wal-yawmi l-ākhiri
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- இன்னும் இறுதி நாள்
- wal-malāikati
- وَٱلْمَلَٰٓئِكَةِ
- இன்னும் வானவர்கள்
- wal-kitābi
- وَٱلْكِتَٰبِ
- இன்னும் வேதம்
- wal-nabiyīna
- وَٱلنَّبِيِّۦنَ
- இன்னும் நபிமார்கள்
- waātā
- وَءَاتَى
- இன்னும் கொடுத்தார்
- l-māla
- ٱلْمَالَ
- செல்வத்தை
- ʿalā
- عَلَىٰ
- உடன்
- ḥubbihi
- حُبِّهِۦ
- அதன் விருப்பம்
- dhawī l-qur'bā
- ذَوِى ٱلْقُرْبَىٰ
- உறவினர்களுக்கு
- wal-yatāmā
- وَٱلْيَتَٰمَىٰ
- இன்னும் அநாதைகளுக்கு
- wal-masākīna
- وَٱلْمَسَٰكِينَ
- இன்னும் ஏழைகளுக்கு
- wa-ib'na l-sabīli
- وَٱبْنَ ٱلسَّبِيلِ
- இன்னும் வழிப்போக்கருக்கு
- wal-sāilīna
- وَٱلسَّآئِلِينَ
- இன்னும் யாசகர்களுக்கு
- wafī l-riqābi
- وَفِى ٱلرِّقَابِ
- இன்னும் அடிமைகளுக்கு
- wa-aqāma
- وَأَقَامَ
- இன்னும் நிலைநிறுத்தினார்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- waātā
- وَءَاتَى
- இன்னும் கொடுத்தார்
- l-zakata
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- wal-mūfūna
- وَٱلْمُوفُونَ
- இன்னும் நிறைவேற்றுபவர்கள்
- biʿahdihim
- بِعَهْدِهِمْ
- ஒப்பந்தத்தை தங்கள்
- idhā ʿāhadū
- إِذَا عَٰهَدُوا۟ۖ
- அவர்கள் ஒப்பந்தம் செய்தால்
- wal-ṣābirīna
- وَٱلصَّٰبِرِينَ
- இன்னும் பொறுமையாளர்கள்
- fī l-basāi
- فِى ٱلْبَأْسَآءِ
- கொடிய வறுமையில்
- wal-ḍarāi
- وَٱلضَّرَّآءِ
- இன்னும் நோய்
- waḥīna l-basi
- وَحِينَ ٱلْبَأْسِۗ
- இன்னும் போர் சமயத்தில்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- alladhīna ṣadaqū
- ٱلَّذِينَ صَدَقُوا۟ۖ
- உண்மையாளர்கள்
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- இன்னும் அவர்கள்தான்
- l-mutaqūna
- ٱلْمُتَّقُونَ
- அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய) வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்து (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்! ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௭)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰىۗ اَلْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُنْثٰى بِالْاُنْثٰىۗ فَمَنْ عُفِيَ لَهٗ مِنْ اَخِيْهِ شَيْءٌ فَاتِّبَاعٌ ۢبِالْمَعْرُوْفِ وَاَدَاۤءٌ اِلَيْهِ بِاِحْسَانٍ ۗ ذٰلِكَ تَخْفِيْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ ۗفَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌ ١٧٨
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- kutiba
- كُتِبَ
- கடமையாக்கப் பட்டுள்ளது
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- உங்கள் மீது
- l-qiṣāṣu
- ٱلْقِصَاصُ
- பழிவாங்குதல்
- fī l-qatlā
- فِى ٱلْقَتْلَىۖ
- கொலை செய்யப்பட்டவர்களுக்காக
- l-ḥuru
- ٱلْحُرُّ
- சுதந்திரமானவன்
- bil-ḥuri
- بِٱلْحُرِّ
- சுதந்திரமான வனுக்குப் பதிலாக
- wal-ʿabdu
- وَٱلْعَبْدُ
- இன்னும் அடிமை
- bil-ʿabdi
- بِٱلْعَبْدِ
- அடிமைக்குப்பதிலாக
- wal-unthā
- وَٱلْأُنثَىٰ
- இன்னும் பெண்
- bil-unthā
- بِٱلْأُنثَىٰۚ
- பெண்ணுக்குப்பதிலாக
- faman
- فَمَنْ
- எவர்
- ʿufiya
- عُفِىَ
- மன்னிக்கப்பட்டது
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- min
- مِنْ
- இருந்து
- akhīhi
- أَخِيهِ
- தன் சகோதரன்
- shayon
- شَىْءٌ
- ஏதேனும்
- fa-ittibāʿun
- فَٱتِّبَاعٌۢ
- பின்பற்றுதல்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِ
- கண்ணியமான முறையில்
- wa-adāon
- وَأَدَآءٌ
- இன்னும் நிறைவேற்றுதல்
- ilayhi
- إِلَيْهِ
- அவரிடம்
- bi-iḥ'sānin
- بِإِحْسَٰنٍۗ
- நன்றி அறிதலுடன்
- dhālika
- ذَٰلِكَ
- அது
- takhfīfun
- تَخْفِيفٌ
- சலுகை
- min
- مِّن
- இருந்து
- rabbikum
- رَّبِّكُمْ
- உங்கள் இறைவன்
- waraḥmatun
- وَرَحْمَةٌۗ
- இன்னும் அருள்
- famani
- فَمَنِ
- இன்னும் எவர்
- iʿ'tadā
- ٱعْتَدَىٰ
- வரம்பு மீறினார்
- baʿda dhālika
- بَعْدَ ذَٰلِكَ
- அதற்குப் பின்னர்
- falahu
- فَلَهُۥ
- அவருக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- துன்புறுத்தக் கூடியது
நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (ஆகவே, கொலை செய்யப்பட்டவன்) சுதந்திரமானவனாயின் (அவனை கொலை செய்த) சுதந்திரமானவனையே, (கொலை செய்யப்பட்டவன்) அடிமையாயின் (அவனை கொலை செய்த அந்த) அடிமையையே, (கொலை செய்யப்பட்டவள்) பெண்ணாயின் (கொலை செய்த அந்தப்) பெண்ணையே நீங்கள் கொலை செய்துவிடுங்கள். (ஆயினும், பழிவாங்கும் விஷயத்தில்) ஒரு சிறிதேனும் அ(க் கொலையுண்ட) வனுடைய சகோதரரால் மன்னிக்கப்பட்டுவிட்டால், மிக்க கண்ணியமான முறையைப் பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு) விடவேண்டும். (பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தால், அந்த நஷ்டஈட்டைத்) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும். இ(வ்வாறு நஷ்டஈட்டை அனுமதித்திருப்ப)து உங்கள் இறைவனுடைய சலுகையும், அருளுமாகும். இ(வ்வாறு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்ட)தற்குப் பின் எவரேனும் வரம்பு மீறி (நஷ்டஈடு கொடுத்த கொலையாளியைத் துன்புறுத்தி)னால் அவனுக்கு (மறுமையில்) மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௮)Tafseer
وَلَكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓاُولِى الْاَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ١٧٩
- walakum
- وَلَكُمْ
- உங்களுக்கு
- fī l-qiṣāṣi
- فِى ٱلْقِصَاصِ
- பழிவாங்குவதில்
- ḥayatun
- حَيَوٰةٌ
- வாழ்க்கை
- yāulī l-albābi
- يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
- அறிவாளிகளே
- laʿallakum tattaqūna
- لَعَلَّكُمْ تَتَّقُونَ
- நீங்கள் பயந்து கொள்ளவேண்டுமே
அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௯)Tafseer
كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرًا ۖ ۨالْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَ ۗ ١٨٠
- kutiba
- كُتِبَ
- கடமையாக்கப்பட்டது
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- idhā ḥaḍara
- إِذَا حَضَرَ
- வந்தால்
- aḥadakumu
- أَحَدَكُمُ
- உங்களில் ஒருவருக்கு
- l-mawtu
- ٱلْمَوْتُ
- மரணம்
- in taraka
- إِن تَرَكَ
- அவர் விட்டுச் சென்றால்
- khayran
- خَيْرًا
- செல்வத்தை
- l-waṣiyatu
- ٱلْوَصِيَّةُ
- மரணசாசனம்
- lil'wālidayni
- لِلْوَٰلِدَيْنِ
- பெற்றோருக்கு
- wal-aqrabīna
- وَٱلْأَقْرَبِينَ
- இன்னும் உறவினர்களுக்கு
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِۖ
- நல்ல முறையில்
- ḥaqqan
- حَقًّا
- அவசியமாக
- ʿalā
- عَلَى
- மீது
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து அவர் பொருளை விட்டுவிட்டு இறப்பவராகவும் இருந்தால், (அவர் தன்னுடைய) தாய் தந்தைக்கும், பந்துக்களுக்கும், நியாயமான முறைப்படி (பொருள் சேர்வதற்காக) மரண சாசனம் (கூற) விதிக்கப்பட்டிருக்கிறது. (இது) இறை அச்சமுடையவர்கள் மீது கடமையாகும். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௦)Tafseer