Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 17

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௬௧

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰۤىِٕكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰۤىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ ١٦١

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
wamātū
وَمَاتُوا۟
இன்னும் இறந்தார்கள்
wahum
وَهُمْ
அவர்கள்
kuffārun
كُفَّارٌ
நிராகரிப்பாளர்கள்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீதுதான்
laʿnatu l-lahi
لَعْنَةُ ٱللَّهِ
அல்லாஹ்வின் சாபம்
wal-malāikati
وَٱلْمَلَٰٓئِكَةِ
இன்னும் வானவர்கள்
wal-nāsi
وَٱلنَّاسِ
இன்னும் மக்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவர்
(அன்றி,) எவர்கள் (தங்கள் வேதத்திலுள்ள உண்மைகளை மறைத்து) நிராகரித்துவிட்டு (அதனை சீர்திருத்தாமல்) நிராகரித்த வண்ணமாகவே இறந்து விடுகின்றார்களோ அவர்கள்மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் நிச்சயமாக உண்டாகின்றன. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௧)
Tafseer
௧௬௨

خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَ ١٦٢

khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۖ
அதில்
lā yukhaffafu
لَا يُخَفَّفُ
இலேசாக்கப்படாது
ʿanhumu
عَنْهُمُ
அவர்களை விட்டு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
walā hum yunẓarūna
وَلَا هُمْ يُنظَرُونَ
இன்னும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்
(மேலும் அவர்கள்) அ(ச்சாபத்)தில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (மறுமையில்) அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்கள் (ஓய்வு எடுப்பதற்கு) அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௨)
Tafseer
௧௬௩

وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌۚ لَآاِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ ࣖ ١٦٣

wa-ilāhukum
وَإِلَٰهُكُمْ
இன்னும் உங்கள்இறைவன்
ilāhun
إِلَٰهٌ
ஓர் இறைவன்
wāḥidun
وَٰحِدٌۖ
ஒரே
لَّآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
இறைவன்
illā
إِلَّا
அவனைத் தவிர
huwa l-raḥmānu
هُوَ ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்
(மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௩)
Tafseer
௧௬௪

اِنَّ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِيْ تَجْرِيْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَاۤءِ مِنْ مَّاۤءٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ كُلِّ دَاۤبَّةٍ ۖ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاۤءِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ ١٦٤

inna
إِنَّ
நிச்சயமாக
fī khalqi
فِى خَلْقِ
படைத்திருப்பதில்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியை
wa-ikh'tilāfi
وَٱخْتِلَٰفِ
இன்னும் மாறுவதில்
al-layli
ٱلَّيْلِ
இரவு
wal-nahāri
وَٱلنَّهَارِ
இன்னும் பகல்
wal-ful'ki
وَٱلْفُلْكِ
இன்னும் கப்பல்கள்
allatī
ٱلَّتِى
எவை
tajrī
تَجْرِى
ஓடுகின்றன
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
கடலில்
bimā
بِمَا
எவற்றைக் கொண்டு
yanfaʿu
يَنفَعُ
பலன் தருகின்றன
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
wamā
وَمَآ
இன்னும் எது
anzala
أَنزَلَ
இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mina
مِنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
வானம்/மேகம்
min
مِن
இருந்து
māin
مَّآءٍ
தண்ணீர்
fa-aḥyā
فَأَحْيَا
உயிர்ப்பித்தான்
bihi
بِهِ
அதன் மூலம்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
baʿda
بَعْدَ
பின்னர்
mawtihā
مَوْتِهَا
அது இறந்த
wabatha
وَبَثَّ
இன்னும் பரப்பினான்
fīhā
فِيهَا
அதில்
min
مِن
இருந்து
kulli
كُلِّ
எல்லாம்
dābbatin
دَآبَّةٍ
கால்நடைகள்
wataṣrīfi
وَتَصْرِيفِ
இன்னும் திருப்பிவிடுதல்
l-riyāḥi
ٱلرِّيَٰحِ
காற்றுகளை
wal-saḥābi
وَٱلسَّحَابِ
இன்னும் மேகம்
l-musakhari
ٱلْمُسَخَّرِ
கட்டுப்படுத்தப்பட்ட
bayna
بَيْنَ
இடையில்
l-samāi wal-arḍi
ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ
வானம்/இன்னும் பூமி
laāyātin
لَءَايَٰتٍ
திட்டமாக அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yaʿqilūna
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகிறார்கள்
அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி அதைக்கொண்டு (வறண்டு) இறந்த பூமியை அல்லாஹ் உயிர்ப்பி(த்துச் செழிப்பாக்கிவை)ப்பதிலும், கால்நடைகள் அனைத்தையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்றை(ப் பல கோணங்களில் திருப்பி)த் திருப்பி விடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அமர்த்தப்பட்டிருக்கும் மேகத்திலும், (மனிதர்களுக்குள்ள பயன்களை ஆராய்ந்து) சிந்திக்கும் மக்களுக்கு (அவனுடைய அருளையும், அன்பையும் ஆற்றலையும் அறிவிக்கக்கூடிய) பல அத்தாட்சிகள் நிச்சயமாக இருக்கின்றன. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௪)
Tafseer
௧௬௫

وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا يُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ ۗ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ۙوَلَوْ يَرَى الَّذِيْنَ ظَلَمُوْٓا اِذْ يَرَوْنَ الْعَذَابَۙ اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِيْعًا ۙوَّاَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعَذَابِ ١٦٥

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
மக்களிலிருந்து
man
مَن
எவர்
yattakhidhu
يَتَّخِذُ
எடுத்துக் கொள்கிறார்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
andādan
أَندَادًا
இணைகளை
yuḥibbūnahum
يُحِبُّونَهُمْ
அவற்றை நேசிக்கிறார்கள்
kaḥubbi
كَحُبِّ
நேசிப்பது/போல
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வை
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்கள்
ashaddu
أَشَدُّ
மிகக் கடுமையானவர்கள்
ḥubban
حُبًّا
நேசிப்பதில்
lillahi
لِّلَّهِۗ
அல்லாஹ்வை
walaw
وَلَوْ
பார்த்தால்
yarā alladhīna
يَرَى ٱلَّذِينَ
எவர்கள்
ẓalamū
ظَلَمُوٓا۟
அநியாயம்செய்தார்கள்
idh
إِذْ
போது
yarawna
يَرَوْنَ
காண்பார்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
anna
أَنَّ
நிச்சயமாக
l-quwata
ٱلْقُوَّةَ
பலம்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
jamīʿan
جَمِيعًا
அனைத்தும்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
கடினமானவன்
l-ʿadhābi
ٱلْعَذَابِ
வேதனை செய்வதில்
மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும், இறை நம்பிக்கையாளர்கள் (இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வையே நேசிப்பார்கள். (தவிர) இந்த அநியாயக்காரர்கள் (சிறிது) சிந்திக்க வேண்டாமா? இவர்கள் வேதனையைத் (தங்கள் கண்ணால்) காணும் போது வேதனை செய்வதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவனாக இருப்பதுடன், எல்லா வல்லமையும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே இருக்கின்றன (தாங்கள் பிரியம் வைத்தவைகளுக்கு இல்லை என்றும் அறிந்துகொள்வார்கள்). ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௫)
Tafseer
௧௬௬

اِذْ تَبَرَّاَ الَّذِيْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِيْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ ١٦٦

idh
إِذْ
போது
tabarra-a
تَبَرَّأَ
விலகிக்கொண்டார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittubiʿū
ٱتُّبِعُوا۟
பின்பற்றப்பட்டார்கள்
mina
مِنَ
இருந்து
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittabaʿū
ٱتَّبَعُوا۟
பின்பற்றினார்கள்
wara-awū
وَرَأَوُا۟
இன்னும் கண்டார்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
wataqaṭṭaʿat
وَتَقَطَّعَتْ
இன்னும் அறுந்தது
bihimu
بِهِمُ
அவர்களுக்கிடையில்
l-asbābu
ٱلْأَسْبَابُ
தொடர்புகள்
(இவர்களுக்குத் தவறான) இவ்வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்டவுடன் (தங்களைப்) பின்பற்றிய இவர்களை (முற்றிலும் கைவிட்டு) விட்டு விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கு(ம், அவர்களைப் பின்பற்றிய இவர்களுக்குமிடையில்) இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௬)
Tafseer
௧௬௭

وَقَالَ الَّذِيْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ ۗ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ۗ كَذٰلِكَ يُرِيْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَيْهِمْ ۗ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنَ النَّارِ ࣖ ١٦٧

waqāla
وَقَالَ
இன்னும் கூறுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittabaʿū
ٱتَّبَعُوا۟
பின்பற்றினார்கள்
law anna lanā
لَوْ أَنَّ لَنَا
நிச்சயமாக நமக்கு முடிந்தால்
karratan
كَرَّةً
திரும்பச்செல்வது
fanatabarra-a
فَنَتَبَرَّأَ
விலகிக் கொள்வோம்
min'hum
مِنْهُمْ
அவர்களை விட்டு
kamā
كَمَا
போல
tabarraū
تَبَرَّءُوا۟
விலகிக்கொண்டார்கள்
minnā
مِنَّاۗ
எங்களைவிட்டு
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
yurīhimu
يُرِيهِمُ
காண்பிப்பான்/ அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
ḥasarātin
حَسَرَٰتٍ
மனவேதனைகளாக
ʿalayhim
عَلَيْهِمْۖ
அவர்களுக்கு
wamā
وَمَا
இன்னும் இல்லை
hum
هُم
அவர்கள்
bikhārijīna
بِخَٰرِجِينَ
வெளியேறுபவர்களாக
mina l-nāri
مِنَ ٱلنَّارِ
நெருப்பிலிருந்து
தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொருமுறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு வழிகாட்டிய) அவர்கள், (இப்பொழுது முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக் கொண்டபடியே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக்கொள்வோம் என்று கூறுவார்கள். (அவர்களுடைய உடல்கள் நரகில் வேதனைப்படும்.) இவ்வாறே (அவர்களுடைய உள்ளங்களும் வேதனையடைவதற்காக) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக் காண்பிப்பான். மேலும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௭)
Tafseer
௧௬௮

يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا ۖوَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِۗ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ١٦٨

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
kulū
كُلُوا۟
உண்ணுங்கள்
mimmā
مِمَّا
எவற்றில்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
ḥalālan
حَلَٰلًا
அனுமதிக்கப்பட்டதை
ṭayyiban
طَيِّبًا
நல்லது
walā tattabiʿū
وَلَا تَتَّبِعُوا۟
இன்னும் பின்பற்றாதீர்கள்
khuṭuwāti
خُطُوَٰتِ
அடிச்சுவடுகளை
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿaduwwun mubīnun
عَدُوٌّ مُّبِينٌ
எதிரி/பகிரங்கமான
மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (புசிக்க உங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். (இதற்கு மாறு செய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௮)
Tafseer
௧௬௯

اِنَّمَا يَأْمُرُكُمْ بِالسُّوْۤءِ وَالْفَحْشَاۤءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ١٦٩

innamā yamurukum
إِنَّمَا يَأْمُرُكُم
உங்களுக்கு அவன் ஏவுவதெல்லாம்
bil-sūi
بِٱلسُّوٓءِ
தீமையை
wal-faḥshāi
وَٱلْفَحْشَآءِ
இன்னும் மானக்கேடானதை
wa-an taqūlū
وَأَن تَقُولُوا۟
இன்னும் நீங்கள் கூறுவதை
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
mā lā taʿlamūna
مَا لَا تَعْلَمُونَ
நீங்கள் அறியாதவற்றை
தீமைகள் மற்றும் மானக்கேடானவைகளை நீங்கள் செய்வதற்கும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதற்கும் ஷைத்தான் உங்களைத் தூண்டுகிறான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬௯)
Tafseer
௧௭௦

وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَاۤءَنَا ۗ اَوَلَوْ كَانَ اٰبَاۤؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـًٔا وَّلَا يَهْتَدُوْنَ ١٧٠

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
ittabiʿū
ٱتَّبِعُوا۟
பின்பற்றுங்கள்
مَآ
எதை
anzala
أَنزَلَ
இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
qālū
قَالُوا۟
கூறுகிறார்கள்
bal
بَلْ
மாறாக
nattabiʿu
نَتَّبِعُ
பின்பற்றுவோம்
مَآ
எதை
alfaynā
أَلْفَيْنَا
பெற்றோம்
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
ābāanā
ءَابَآءَنَآۗ
எங்கள் மூதாதைகளை
awalaw kāna
أَوَلَوْ كَانَ
இருந்தாலுமா?
ābāuhum
ءَابَآؤُهُمْ
மூதாதைகள் அவர்களுடைய
lā yaʿqilūna
لَا يَعْقِلُونَ
அறியமாட்டார்கள்
shayan walā
شَيْـًٔا وَلَا
எதையும்
yahtadūna
يَهْتَدُونَ
இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்
மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் (அவர்கள்) "அவ்வாறன்று. எவற்றின் மீது எங்களுடைய மூதாதைகள் (இருந்து, அவர்கள் எவற்றைச் செய்துகொண்டு) இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்" எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்!) ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭௦)
Tafseer