Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௬௯

Qur'an Surah Al-Baqarah Verse 169

ஸூரத்துல் பகரா [௨]: ௧௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّمَا يَأْمُرُكُمْ بِالسُّوْۤءِ وَالْفَحْشَاۤءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ (البقرة : ٢)

innamā yamurukum
إِنَّمَا يَأْمُرُكُم
Only he commands you
உங்களுக்கு அவன் ஏவுவதெல்லாம்
bil-sūi
بِٱلسُّوٓءِ
to (do) the evil
தீமையை
wal-faḥshāi
وَٱلْفَحْشَآءِ
and the shameful
இன்னும் மானக்கேடானதை
wa-an taqūlū
وَأَن تَقُولُوا۟
and that you say
இன்னும் நீங்கள் கூறுவதை
ʿalā
عَلَى
about
மீது
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
mā lā taʿlamūna
مَا لَا تَعْلَمُونَ
what not you know
நீங்கள் அறியாதவற்றை

Transliteration:

Innamaa yaamurukum bissooo'i walfahshaaa'i wa an taqooloo alal laahi maa laa ta'lamoon (QS. al-Baq̈arah:169)

English Sahih International:

He only orders you to evil and immorality and to say about Allah what you do not know. (QS. Al-Baqarah, Ayah ௧௬௯)

Abdul Hameed Baqavi:

தீமைகள் மற்றும் மானக்கேடானவைகளை நீங்கள் செய்வதற்கும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதற்கும் ஷைத்தான் உங்களைத் தூண்டுகிறான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௬௯)

Jan Trust Foundation

நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீமையையும், மானக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான்.