Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 8

Al-A'raf

(al-ʾAʿrāf)

௭௧

قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ رِجْسٌ وَّغَضَبٌۗ اَتُجَادِلُوْنَنِيْ فِيْٓ اَسْمَاۤءٍ سَمَّيْتُمُوْهَآ اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمْ مَّا نَزَّلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍۗ فَانْتَظِرُوْٓا اِنِّيْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ ٧١

qāla
قَالَ
கூறினார்
qad waqaʿa
قَدْ وَقَعَ
நிகழ்ந்து விட்டது
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
rij'sun
رِجْسٌ
வேதனை
waghaḍabun
وَغَضَبٌۖ
இன்னும் கோபம்
atujādilūnanī
أَتُجَٰدِلُونَنِى
தர்க்கிக்கிறீர்களா?/என்னுடன்
fī asmāin
فِىٓ أَسْمَآءٍ
பெயர்களில்
sammaytumūhā
سَمَّيْتُمُوهَآ
பெயர் வைத்தீர்கள்/அவற்றை
antum
أَنتُمْ
நீங்களும்
waābāukum
وَءَابَآؤُكُم
இன்னும் மூதாதைகள் உங்கள்
mā nazzala
مَّا نَزَّلَ
இறக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihā
بِهَا
அதற்கு
min sul'ṭānin
مِن سُلْطَٰنٍۚ
ஓர் ஆதாரத்தை
fa-intaẓirū
فَٱنتَظِرُوٓا۟
ஆகவே, எதிர்பாருங்கள்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
maʿakum
مَعَكُم
உங்களுடன்
mina l-muntaẓirīna
مِّنَ ٱلْمُنتَظِرِينَ
எதிர்பார்ப்பவர்களில்
அதற்கவர் "உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் (உங்களுக்கு விதிக்கப்பட்டுவிட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் உங்கள் முன்னோர்களும் (கடவுள்களென) வைத்துக் கொண்டவற்றின் (வெறும்) பெயர்களைப் பற்றியா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கின்றீர்கள்? அதற்கு யாதொரு ஆதாரத்தையும் அல்லாஹ் (உங்களுக்கு) இறக்கி வைக்கவில்லை. ஆகவே, (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭௧)
Tafseer
௭௨

فَاَنْجَيْنٰهُ وَالَّذِيْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَمَا كَانُوْا مُؤْمِنِيْنَ ࣖ ٧٢

fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
biraḥmatin
بِرَحْمَةٍ
கருணையினால்
minnā
مِّنَّا
நமது
waqaṭaʿnā
وَقَطَعْنَا
இன்னும் அறுத்தோம்
dābira
دَابِرَ
வேரை
alladhīna
ٱلَّذِينَ
எவர்களின்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்த
biāyātinā
بِـَٔايَٰتِنَاۖ
நம் வசனங்களை
wamā kānū
وَمَا كَانُوا۟
இன்னும் அவர்கள் இருக்கவில்லை
mu'minīna
مُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டு நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, நம்பிக்கை கொள்ளாதிருந்த வர்களை வேரறுத்து விட்டோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭௨)
Tafseer
௭௩

وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًاۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ قَدْ جَاۤءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْۗ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰيَةً فَذَرُوْهَا تَأْكُلْ فِيْٓ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْۤءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ اَلِيْمٌ ٧٣

wa-ilā thamūda
وَإِلَىٰ ثَمُودَ
‘ஸமூது’க்கு
akhāhum
أَخَاهُمْ
அவர்களுடைய சகோதரர்
ṣāliḥan
صَٰلِحًاۗ
ஸாலிஹை
qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mā lakum
مَا لَكُم
உங்களுக்கில்லை
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
வணங்கப்படும் ஒரு கடவுள்
ghayruhu
غَيْرُهُۥۖ
அவனையன்றி
qad jāatkum
قَدْ جَآءَتْكُم
வந்து விட்டது/உங்களிடம்
bayyinatun
بَيِّنَةٌ
ஓர் அத்தாட்சி
min
مِّن
இருந்து
rabbikum
رَّبِّكُمْۖ
உங்கள் இறைவன்
hādhihi
هَٰذِهِۦ
இது
nāqatu
نَاقَةُ
ஒட்டகம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
lakum
لَكُمْ
உங்களுக்கு
āyatan
ءَايَةًۖ
ஓர் அத்தாட்சியாக
fadharūhā
فَذَرُوهَا
ஆகவே, விட்டு விடுங்கள்/அதை
takul
تَأْكُلْ
அது மேயும்
fī arḍi
فِىٓ أَرْضِ
பூமியில்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வுடைய
walā tamassūhā
وَلَا تَمَسُّوهَا
அதை தொடாதீர்கள்
bisūin
بِسُوٓءٍ
தீமையைக் கொண்டு
fayakhudhakum
فَيَأْخُذَكُمْ
பிடிக்கும்/உங்களை
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தும்
"ஸமூத்" (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் "ஸாலிஹை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத் தவிர வேறு இறைவனில்லை. (இதற்காக) உங்கள் இறைவனிடம் இருந்து தெளிவான ஓர் அத்தாட்சியும் உங்களிடம் வந்திருக்கின்றது. இது அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். (இது) உங்களுக்கோர் அத்தாட்சியாகவும் இருக்கின்றது. ஆகவே, அதனை அல்லாஹ் வுடைய பூமியில் (எங்கும் தடையின்றி தாராளமாக) மேய விடுங்கள். அதற்கு எத்தகைய தீங்கும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭௩)
Tafseer
௭௪

وَاذْكُرُوْٓا اِذْ جَعَلَكُمْ خُلَفَاۤءَ مِنْۢ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِى الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُيُوْتًا ۚفَاذْكُرُوْٓا اٰلَاۤءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ ٧٤

wa-udh'kurū
وَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
idh jaʿalakum
إِذْ جَعَلَكُمْ
சமயம்/ஆக்கினான்/உங்களை
khulafāa
خُلَفَآءَ
பிரதிநிதிகளாக
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
ʿādin
عَادٍ
‘ஆது’க்கு
wabawwa-akum
وَبَوَّأَكُمْ
இன்னும் தங்கவைத்தான்/உங்களை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
tattakhidhūna
تَتَّخِذُونَ
ஆக்கிகொள்கிறீர்கள்
min suhūlihā
مِن سُهُولِهَا
அதன் சமவெளிகளில்
quṣūran
قُصُورًا
மாளிகைகளை
watanḥitūna
وَتَنْحِتُونَ
இன்னும் குடைந்து கொள்கிறீர்கள்
l-jibāla
ٱلْجِبَالَ
மலைகளில்
buyūtan
بُيُوتًاۖ
வீடுகளை
fa-udh'kurū
فَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
ālāa
ءَالَآءَ
அருட்கொடைகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā taʿthaw
وَلَا تَعْثَوْا۟
அளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
muf'sidīna
مُفْسِدِينَ
விஷமிகளாக
"(அன்றி) "ஆத்" (என்னும்) மக்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் உங்களைக் குடியேறச் செய்து (அதற்கு) உங்களை அதிபதிகளாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்தும் வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள்; அன்றி பூமியில் விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்" (என்றும் கூறினார்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭௪)
Tafseer
௭௫

قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖۗ قَالُوْٓا اِنَّا بِمَآ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ ٧٥

qāla
قَالَ
கூறினார்(கள்)
l-mala-u
ٱلْمَلَأُ
தலைவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
is'takbarū
ٱسْتَكْبَرُوا۟
பெருமையடித்தனர்
min qawmihi
مِن قَوْمِهِۦ
அவருடைய சமுதாயத்தில்
lilladhīna us'tuḍ'ʿifū
لِلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
எவர்களுக்கு/பலவீனர்களாக கருதப்பட்டனர்
liman
لِمَنْ
எவருக்கு
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
ataʿlamūna
أَتَعْلَمُونَ
அறிவீர்களா?
anna ṣāliḥan
أَنَّ صَٰلِحًا
நிச்சயமாக ஸாலிஹ்
mur'salun
مُّرْسَلٌ
அனுப்பப்பட்டவர்
min rabbihi
مِّن رَّبِّهِۦۚ
தன் இறைவனிடமிருந்து
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
bimā
بِمَآ
எதைக் கொண்டு
ur'sila
أُرْسِلَ
அனுப்பப்பட்டார்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
mu'minūna
مُؤْمِنُونَ
நம்பிக்கை கொண்டவர்கள்
அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி "நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள் "நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கின்றோம்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭௫)
Tafseer
௭௬

قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْٓا اِنَّا بِالَّذِيْٓ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ٧٦

qāla
قَالَ
கூறினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
is'takbarū
ٱسْتَكْبَرُوٓا۟
பெருமையடித்தனர்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
bi-alladhī
بِٱلَّذِىٓ
எதைக்கொண்டு
āmantum
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டீர்கள்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
kāfirūna
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்
அதற்கு கர்வம்கொண்ட அவர்கள் (அந்த நம்பிக்கை யாளர்களை நோக்கி) "நீங்கள் நம்பியவைகளை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறியதுடன், ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭௬)
Tafseer
௭௭

فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَقَالُوْا يٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَآ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِيْنَ ٧٧

faʿaqarū
فَعَقَرُوا۟
ஆகவே அறுத்தனர்
l-nāqata
ٱلنَّاقَةَ
பெண் ஒட்டகத்தை
waʿataw
وَعَتَوْا۟
இன்னும் மீறினர்
ʿan amri
عَنْ أَمْرِ
கட்டளையை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினர்
yāṣāliḥu
يَٰصَٰلِحُ
ஸாலிஹே
i'tinā
ٱئْتِنَا
வருவீராக/எங்களிடம்
bimā
بِمَا
எதைக் கொண்டு
taʿidunā
تَعِدُنَآ
அச்சுறுத்துகிறீர்/எங்களை
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
mina l-mur'salīna
مِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில்
தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ்) நபியை நோக்கி) "ஸாலிஹே! மெய்யாகவே நீங்கள் இறைவனுடைய தூதர்களில் ஒருவராக இருந்தால் நீங்கள் அச்சமூட்டும் அ(ந்)த (வேத)னை(யை) எங்களிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭௭)
Tafseer
௭௮

فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِيْ دَارِهِمْ جٰثِمِيْنَ ٧٨

fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
l-rajfatu
ٱلرَّجْفَةُ
பயங்கர சப்தம்
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
காலையை அடைந்தனர்
fī dārihim
فِى دَارِهِمْ
தங்கள் பூமியில்
jāthimīna
جَٰثِمِينَ
இறந்தவர்களாக
ஆகவே (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭௮)
Tafseer
௭௯

فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّيْ وَنَصَحْتُ لَكُمْ وَلٰكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِيْنَ ٧٩

fatawallā
فَتَوَلَّىٰ
திரும்பினார்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
laqad ablaghtukum
لَقَدْ أَبْلَغْتُكُمْ
திட்டவட்டமாக/ எடுத்துரைத்தேன்/உங்களுக்கு
risālata
رِسَالَةَ
தூதை
rabbī
رَبِّى
என் இறைவனின்
wanaṣaḥtu
وَنَصَحْتُ
உபதேசித்தேன்
lakum walākin
لَكُمْ وَلَٰكِن
உங்களுக்கு/எனினும்
lā tuḥibbūna
لَّا تُحِبُّونَ
நீங்கள் நேசிப்பதில்லை
l-nāṣiḥīna
ٱلنَّٰصِحِينَ
உபதேசிப்பவர்களை
(அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக் கொண்டு (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭௯)
Tafseer
௮௦

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖٓ اَتَأْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِيْنَ ٨٠

walūṭan
وَلُوطًا
இன்னும் லூத்தை
idh
إِذْ
சமயம்
qāla
قَالَ
கூறினார்
liqawmihi
لِقَوْمِهِۦٓ
தம் சமுதாயத்திற்கு
atatūna
أَتَأْتُونَ
வருகிறீர்களா?
l-fāḥishata
ٱلْفَٰحِشَةَ
மானக்கேடானதிற்கு
mā sabaqakum
مَا سَبَقَكُم
முந்தவில்லை/உங்களை
bihā
بِهَا
இதற்கு
min aḥadin
مِنْ أَحَدٍ
ஒருவருமே
mina l-ʿālamīna
مِّنَ ٱلْعَٰلَمِينَ
உலகத்தாரில்
லூத்தையும் (நம்முடைய தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பி வைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி "உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கின்றீர்கள்? ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮௦)
Tafseer