குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௭௪
Qur'an Surah Al-A'raf Verse 74
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاذْكُرُوْٓا اِذْ جَعَلَكُمْ خُلَفَاۤءَ مِنْۢ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِى الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُيُوْتًا ۚفَاذْكُرُوْٓا اٰلَاۤءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ (الأعراف : ٧)
- wa-udh'kurū
- وَٱذْكُرُوٓا۟
- And remember
- நினைவு கூருங்கள்
- idh jaʿalakum
- إِذْ جَعَلَكُمْ
- when He made you
- சமயம்/ஆக்கினான்/உங்களை
- khulafāa
- خُلَفَآءَ
- successors
- பிரதிநிதிகளாக
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- from after
- பின்னர்
- ʿādin
- عَادٍ
- Aad
- ‘ஆது’க்கு
- wabawwa-akum
- وَبَوَّأَكُمْ
- and settled you
- இன்னும் தங்கவைத்தான்/உங்களை
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- tattakhidhūna
- تَتَّخِذُونَ
- You take
- ஆக்கிகொள்கிறீர்கள்
- min suhūlihā
- مِن سُهُولِهَا
- from its plains
- அதன் சமவெளிகளில்
- quṣūran
- قُصُورًا
- palaces
- மாளிகைகளை
- watanḥitūna
- وَتَنْحِتُونَ
- and you carve out
- இன்னும் குடைந்து கொள்கிறீர்கள்
- l-jibāla
- ٱلْجِبَالَ
- the mountains
- மலைகளில்
- buyūtan
- بُيُوتًاۖ
- (as) homes
- வீடுகளை
- fa-udh'kurū
- فَٱذْكُرُوٓا۟
- So remember
- நினைவு கூருங்கள்
- ālāa
- ءَالَآءَ
- (the) Bounties
- அருட்கொடைகளை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- walā taʿthaw
- وَلَا تَعْثَوْا۟
- and (do) not act wickedly
- அளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in (the) earth
- பூமியில்
- muf'sidīna
- مُفْسِدِينَ
- spreading corruption
- விஷமிகளாக
Transliteration:
Wazkkurooo iz ja'alakum khulafaaa'a mim ba'di 'Aadinw wa bawwa akum fil ardi tattakhizoona min suhoolihaa qusooranw wa tanhitoonal jibaala buyootan fazkurooo aalaaa'al laahi wa laa ta'saw fil ardi mufsideen(QS. al-ʾAʿrāf:74)
English Sahih International:
And remember when He made you successors after the Aad and settled you in the land, [and] you take for yourselves palaces from its plains and carve from the mountains, homes. Then remember the favors of Allah and do not commit abuse on the earth, spreading corruption." (QS. Al-A'raf, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
"(அன்றி) "ஆத்" (என்னும்) மக்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் உங்களைக் குடியேறச் செய்து (அதற்கு) உங்களை அதிபதிகளாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்தும் வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள்; அன்றி பூமியில் விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்" (என்றும் கூறினார்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௭௪)
Jan Trust Foundation
இன்னும் நினைவு கூறுங்கள்| “ஆது” கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்” (என்றும் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
‘ஆது’ க்குப் பின்னர் உங்களை பிரதிநிதிகளாக்கி, பூமியில் உங்களை தங்க வைத்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் அதன் சமவெளிகளில் மாளிகைகளை ஆக்கிக் கொள்கிறீர்கள், மலைகளில் வீடுகளை குடைந்து கொள்கிறீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்; விஷமிகளாக இருந்து பூமியில் அளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள்”(என்றும் கூறினார்).