Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 4

Al-A'raf

(al-ʾAʿrāf)

௩௧

۞ يٰبَنِيْٓ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْاۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ ࣖ ٣١

yābanī ādama
يَٰبَنِىٓ ءَادَمَ
ஆதமின் சந்ததிகளே
khudhū zīnatakum
خُذُوا۟ زِينَتَكُمْ
அலங்கரித்துக் கொள்ளுங்கள்/உங்களை
ʿinda kulli
عِندَ كُلِّ
இடம்/எல்லாம்
masjidin
مَسْجِدٍ
மஸ்ஜிது
wakulū
وَكُلُوا۟
இன்னும் புசியுங்கள்
wa-ish'rabū
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
walā tus'rifū
وَلَا تُسْرِفُوٓا۟ۚ
விரயம் செய்யாதீர்கள்
innahu
إِنَّهُۥ
நிச்சயம் அவன்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-mus'rifīna
ٱلْمُسْرِفِينَ
விரயம் செய்பவர்களை
ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண்செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௧)
Tafseer
௩௨

قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِيْٓ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِۗ قُلْ هِيَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِۗ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ ٣٢

qul man
قُلْ مَنْ
கூறுவீராக/எவன்?
ḥarrama
حَرَّمَ
தடை செய்தான்
zīnata
زِينَةَ
அலங்காரத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
allatī
ٱلَّتِىٓ
எது
akhraja
أَخْرَجَ
வெளிப்படுத்தினான்
liʿibādihi
لِعِبَادِهِۦ
தன் அடியார்களுக்காக
wal-ṭayibāti
وَٱلطَّيِّبَٰتِ
இன்னும் நல்லவற்றை
mina l-riz'qi
مِنَ ٱلرِّزْقِۚ
உணவில்
qul
قُلْ
கூறுவீராக
hiya
هِىَ
அது
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
khāliṣatan
خَالِصَةً
பிரத்தியோகமாக
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
nufaṣṣilu
نُفَصِّلُ
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
liqawmin
لِقَوْمٍ
மக்களுக்கு
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிகின்றார்கள்
(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?" என்று கேட்டு "அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது" என்றும் கூறுங்கள். அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௨)
Tafseer
௩௩

قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْاِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ٣٣

qul
قُلْ
கூறுவீராக
innamā
إِنَّمَا
எல்லாம்
ḥarrama
حَرَّمَ
தடைசெய்தான்
rabbiya
رَبِّىَ
என் இறைவன்
l-fawāḥisha
ٱلْفَوَٰحِشَ
மானக்கேடான காரியங்கள்
mā ẓahara
مَا ظَهَرَ
எது/வெளிப்படையாக இருக்கிறது
min'hā
مِنْهَا
அவற்றில்
wamā
وَمَا
இன்னும் எது
baṭana
بَطَنَ
மறைவாகஇருக்கிறது
wal-ith'ma
وَٱلْإِثْمَ
இன்னும் பாவத்தை
wal-baghya
وَٱلْبَغْىَ
இன்னும் கொடுமைப்படுத்துவது
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّ
நியாயமின்றி
wa-an tush'rikū
وَأَن تُشْرِكُوا۟
இன்னும் நீங்கள் இணையாக்குவதை
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
mā lam yunazzil bihi
مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ
எதை/அவன் இறக்கவில்லை/அதற்கு
sul'ṭānan
سُلْطَٰنًا
ஓர் ஆதாரத்தை
wa-an taqūlū
وَأَن تَقُولُوا۟
இன்னும் நீங்கள் கூறுவதை
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
مَا
எவற்றை
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய இறைவன் (ஆகாது என்று) தடுத்திருப்பதெல்லாம் பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், யாதொரு ஆதாரமும் இல்லாதிருக்கும் போதே அல்லாஹ்வுக்கு நீங்கள் இணைவைப்பதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௩)
Tafseer
௩௪

وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌۚ فَاِذَا جَاۤءَ اَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ ٣٤

walikulli
وَلِكُلِّ
எல்லோருக்கும்
ummatin
أُمَّةٍ
இனத்தவர்
ajalun
أَجَلٌۖ
ஒரு தவணை
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
வந்தால்
ajaluhum
أَجَلُهُمْ
அவர்களுடைய தவணை
lā yastakhirūna
لَا يَسْتَأْخِرُونَ
பிந்த மாட்டார்கள்
sāʿatan
سَاعَةًۖ
ஒரு வினாடி
walā yastaqdimūna
وَلَا يَسْتَقْدِمُونَ
இன்னும் முந்த மாட்டார்கள்
ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய காலம் வரும் பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௪)
Tafseer
௩௫

يٰبَنِيْٓ اٰدَمَ اِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِيْۙ فَمَنِ اتَّقٰى وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٣٥

yābanī ādama
يَٰبَنِىٓ ءَادَمَ
ஆதமின் சந்ததிகளே
immā yatiyannakum
إِمَّا يَأْتِيَنَّكُمْ
நிச்சயமாக வந்தால்/உங்களிடம்
rusulun
رُسُلٌ
தூதர்கள்
minkum
مِّنكُمْ
உங்களில் இருந்தே
yaquṣṣūna
يَقُصُّونَ
விவரித்தவர்களாக
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
āyātī
ءَايَٰتِىۙ
என் வசனங்களை
famani
فَمَنِ
எவர்(கள்)
ittaqā
ٱتَّقَىٰ
அஞ்சினார்(கள்)
wa-aṣlaḥa
وَأَصْلَحَ
இன்னும் சீர்திருத்தினார்(கள்)
falā khawfun
فَلَا خَوْفٌ
பயமில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
ஆதமுடைய மக்களே! (என்னுடைய) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் வந்து என்னுடைய வசனங்களை மெய்யாகவே உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போது, (அவற்றை செவியுற்ற உங்களில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௫)
Tafseer
௩௬

وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٣٦

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
wa-is'takbarū
وَٱسْتَكْبَرُوا۟
பெருமையடித்து புறக்கணித்தனர்
ʿanhā
عَنْهَآ
அவற்றை விட்டு
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
hum
هُمْ
அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
(எனினும்) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௬)
Tafseer
௩௭

فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖۗ اُولٰۤىِٕكَ يَنَالُهُمْ نَصِيْبُهُمْ مِّنَ الْكِتٰبِۗ حَتّٰٓى اِذَا جَاۤءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْۙ قَالُوْٓا اَيْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗقَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ ٣٧

faman aẓlamu
فَمَنْ أَظْلَمُ
யார்?/மிகப்பெரிய அநியாயக்காரன்
mimmani
مِمَّنِ
எவனைவிட
if'tarā
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
பொய்யை
aw
أَوْ
அல்லது
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தான்
biāyātihi
بِـَٔايَٰتِهِۦٓۚ
அவனுடைய வசனங்களை
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
yanāluhum
يَنَالُهُمْ
அடையும்/இவர்களை
naṣībuhum
نَصِيبُهُم
பாகம்/இவர்களுடைய
mina l-kitābi
مِّنَ ٱلْكِتَٰبِۖ
விதியில்
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā jāathum
إِذَا جَآءَتْهُمْ
வந்தால்/இவர்களிடம்
rusulunā
رُسُلُنَا
நம் தூதர்கள்
yatawaffawnahum
يَتَوَفَّوْنَهُمْ
உயிர்வாங்குபவர்களாக/இவர்களை
qālū
قَالُوٓا۟
கூறுவார்கள்
ayna
أَيْنَ
எங்கே?
mā kuntum
مَا كُنتُمْ
எவை/இருந்தீர்கள்
tadʿūna
تَدْعُونَ
பிரார்த்திப்பீர்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِۖ
அல்லாஹ்வையன்றி
qālū
قَالُوا۟
கூறினார்கள்
ḍallū
ضَلُّوا۟
மறைந்தனர்
ʿannā
عَنَّا
எங்களை விட்டு
washahidū
وَشَهِدُوا۟
இன்னும் சாட்சியளிப்பார்கள்
ʿalā
عَلَىٰٓ
எதிராக
anfusihim
أَنفُسِهِمْ
தங்களுக்கு
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக தாங்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
kāfirīna
كَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக
எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகின்றானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரையில்) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம்முடைய மலக்குகள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் "கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?" என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் "(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன" என்று கூறி மெய்யாகவே தாங்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்ததாகவும், தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௭)
Tafseer
௩௮

قَالَ ادْخُلُوْا فِيْٓ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِى النَّارِۙ كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا ۗحَتّٰٓى اِذَا ادَّارَكُوْا فِيْهَا جَمِيْعًا ۙقَالَتْ اُخْرٰىهُمْ لِاُوْلٰىهُمْ رَبَّنَا هٰٓؤُلَاۤءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ ەۗ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰكِنْ لَّا تَعْلَمُوْنَ ٣٨

qāla
قَالَ
கூறுவான்
ud'khulū
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
fī umamin
فِىٓ أُمَمٍ
கூட்டங்களில்
qad khalat
قَدْ خَلَتْ
சென்றுவிட்டன
min qablikum
مِن قَبْلِكُم
உங்களுக்கு முன்னர்
mina l-jini
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
wal-insi
وَٱلْإِنسِ
இன்னும் மனிதர்களில்
fī l-nāri
فِى ٱلنَّارِۖ
நரகத்தில்
kullamā
كُلَّمَا
எல்லாம்
dakhalat
دَخَلَتْ
நுழைந்தது
ummatun
أُمَّةٌ
ஒரு கூட்டம்
laʿanat
لَّعَنَتْ
சபிக்கும்
ukh'tahā
أُخْتَهَاۖ
தன் சக கூட்டத்தை
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā iddārakū
إِذَا ٱدَّارَكُوا۟
அவர்கள் ஒன்றுசேர்ந்தால்
fīhā
فِيهَا
அதில்
jamīʿan
جَمِيعًا
அனைவரும்
qālat
قَالَتْ
கூறும்
ukh'rāhum
أُخْرَىٰهُمْ
அவர்களில் பின் வந்த கூட்டம்
liūlāhum
لِأُولَىٰهُمْ
தங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்து
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்தான்
aḍallūnā
أَضَلُّونَا
வழி கெடுத்தனர்/எங்களை
faātihim
فَـَٔاتِهِمْ
எனவே கொடு/அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
ḍiʿ'fan
ضِعْفًا
இரு மடங்கு
mina l-nāri
مِّنَ ٱلنَّارِۖ
நரகில்
qāla
قَالَ
கூறுவான்
likullin
لِكُلٍّ
எல்லோருக்கும்
ḍiʿ'fun
ضِعْفٌ
இரு மடங்கு
walākin
وَلَٰكِن
எனினும்
lā taʿlamūna
لَّا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்
(அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) கூட்டத்தினருடன் நீங்களும் சேர்ந்து நரகத்திற்குச் சென்று விடுங்கள்" என்று கூறுவான். அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் (நரகத்திற்குச்) சென்றபொழுது (முன்னர் அங்கு வந்துள்ள) தங்கள் இனத்தாரை கோபித்து சபிப்பார்கள். (இவ்வாறு) இவர்கள் அனைவரும் நரகத்தையடைந்த பின்னர் (அவர்களில்) பின் சென்றவர்கள் (தங்களுக்கு) முன் சென்றவர் களைச் சுட்டிக் காட்டி "எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களை விட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக!" என்று கூறுவார்கள். அதற்கு அவன் "உங்களில் அனைவருக்குமே இரு மடங்கு வேதனை உண்டு. எனினும் (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறுவான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௮)
Tafseer
௩௯

وَقَالَتْ اُوْلٰىهُمْ لِاُخْرٰىهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ࣖ ٣٩

waqālat ūlāhum
وَقَالَتْ أُولَىٰهُمْ
இன்னும் கூறும்/அவர்களில் முன்சென்ற கூட்டம்
li-ukh'rāhum
لِأُخْرَىٰهُمْ
அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு
famā kāna lakum
فَمَا كَانَ لَكُمْ
உங்களுக்கு இல்லை
ʿalaynā
عَلَيْنَا
எங்களை விட
min faḍlin
مِن فَضْلٍ
ஒரு மேன்மை
fadhūqū
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
bimā
بِمَا
எதன் காரணமாக
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
taksibūna
تَكْسِبُونَ
செய்வீர்கள்
அவர்களில் முன் சென்றவர்கள் பின் சென்றவர்களை நோக்கி "எங்களை விட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது. ஆதலால், நீங்களாகவே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக (நீங்களும் இரு மடங்கு) வேதனையைச் சுவையுங்கள்" என்று கூறுவார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩௯)
Tafseer
௪௦

اِنَّ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَاۤءِ وَلَا يَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰى يَلِجَ الْجَمَلُ فِيْ سَمِّ الْخِيَاطِ ۗ وَكَذٰلِكَ نَجْزِى الْمُجْرِمِيْنَ ٤٠

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna kadhabū
ٱلَّذِينَ كَذَّبُوا۟
பொய்ப்பித்தவர்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
wa-is'takbarū
وَٱسْتَكْبَرُوا۟
இன்னும் பெருமையடித்து புறக்கணித்தனர்
ʿanhā
عَنْهَا
அவற்றை விட்டு
lā tufattaḥu
لَا تُفَتَّحُ
திறக்கப்படாது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
abwābu
أَبْوَٰبُ
வாசல்கள்
l-samāi
ٱلسَّمَآءِ
வானத்தின்
walā yadkhulūna
وَلَا يَدْخُلُونَ
இன்னும் நுழைய மாட்டார்கள்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
ḥattā yalija
حَتَّىٰ يَلِجَ
நுழையும் வரை
l-jamalu
ٱلْجَمَلُ
ஒட்டகம்
fī sammi
فِى سَمِّ
காதில்
l-khiyāṭi
ٱلْخِيَاطِۚ
ஊசியின்
wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
najzī
نَجْزِى
கூலி கொடுப்போம்
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுக்கு
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அதனைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪௦)
Tafseer