Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௩௨

Qur'an Surah Al-A'raf Verse 32

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِيْٓ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِۗ قُلْ هِيَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِۗ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ (الأعراف : ٧)

qul man
قُلْ مَنْ
Say "Who
கூறுவீராக/எவன்?
ḥarrama
حَرَّمَ
has forbidden
தடை செய்தான்
zīnata
زِينَةَ
(the) adornment
அலங்காரத்தை
l-lahi
ٱللَّهِ
(from) Allah
அல்லாஹ்
allatī
ٱلَّتِىٓ
which
எது
akhraja
أَخْرَجَ
He has brought forth
வெளிப்படுத்தினான்
liʿibādihi
لِعِبَادِهِۦ
for His slaves
தன் அடியார்களுக்காக
wal-ṭayibāti
وَٱلطَّيِّبَٰتِ
and the pure things
இன்னும் நல்லவற்றை
mina l-riz'qi
مِنَ ٱلرِّزْقِۚ
of sustenance?"
உணவில்
qul
قُلْ
Say
கூறுவீராக
hiya
هِىَ
"They
அது
lilladhīna
لِلَّذِينَ
(are) for those who
எவர்களுக்கு
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டார்கள்
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
during the life
வாழ்க்கையில்
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
இவ்வுலகம்
khāliṣatan
خَالِصَةً
exclusively (for them)
பிரத்தியோகமாக
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
(on the) Day (of) Resurrection
மறுமை நாளில்
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறு
nufaṣṣilu
نُفَصِّلُ
We explain
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
the Signs
வசனங்களை
liqawmin
لِقَوْمٍ
for (the) people
மக்களுக்கு
yaʿlamūna
يَعْلَمُونَ
who know"
அறிகின்றார்கள்

Transliteration:

Qul man harrama zeenatal laahil lateee akhraja li'ibaadihee wattaiyibaati minar rizq; qul hiya lillazeena aamanoo fil hayaatid dunyaa khaalisatany Yawmal Qiyaamah; kazaalika nufassihul Aayaati liqawminy ya'lamoon (QS. al-ʾAʿrāf:32)

English Sahih International:

Say, "Who has forbidden the adornment of [i.e., from] Allah which He has produced for His servants and the good [lawful] things of provision?" Say, "They are for those who believed during the life of this world, exclusively [for them] on the Day of Resurrection." Thus do We detail the verses for a people who know. (QS. Al-A'raf, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?" என்று கேட்டு "அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது" என்றும் கூறுங்கள். அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௩௨)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கேட்பீராக| “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்| “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்திய அலங்காரத்தையும், உணவில் நல்லவற்றையும் எவன் தடைசெய்தான்?” என்று கூறுவீராக “அது இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (ஆகுமானதே!) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டும்) பிரத்தியேகமாக இருக்கும்”என்று கூறுவீராக. அறிகின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.