وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ لَمْ يَكُنْ مِّنَ السّٰجِدِيْنَ ١١
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- khalaqnākum
- خَلَقْنَٰكُمْ
- உங்களைப் படைத்தோம்
- thumma
- ثُمَّ
- பிறகு
- ṣawwarnākum
- صَوَّرْنَٰكُمْ
- வடிவமைத்தோம்/உங்களை
- thumma
- ثُمَّ
- பிறகு
- qul'nā
- قُلْنَا
- கூறினோம்
- lil'malāikati
- لِلْمَلَٰٓئِكَةِ
- வானவர்களுக்கு
- us'judū
- ٱسْجُدُوا۟
- சிரம் பணியுங்கள்
- liādama
- لِءَادَمَ
- ஆதமுக்கு
- fasajadū
- فَسَجَدُوٓا۟
- சிரம் பணிந்தனர்
- illā ib'līsa
- إِلَّآ إِبْلِيسَ
- இப்லீஸைத் தவிர
- lam yakun
- لَمْ يَكُن
- அவன் ஆகவில்லை
- mina l-sājidīna
- مِّنَ ٱلسَّٰجِدِينَ
- சிரம் பணிந்தவர்களில்
நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருப்படுத்தினோம். பின்னர் நாம் மலக்குகளை நோக்கி "ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்" எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௧)Tafseer
قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ۗقَالَ اَنَا۠ خَيْرٌ مِّنْهُۚ خَلَقْتَنِيْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ ١٢
- qāla mā
- قَالَ مَا
- கூறினான்/எது?
- manaʿaka
- مَنَعَكَ
- உம்மை தடுத்தது
- allā tasjuda
- أَلَّا تَسْجُدَ
- நீ சிரம் பணியாதிருக்க
- idh
- إِذْ
- போது
- amartuka
- أَمَرْتُكَۖ
- கட்டளையிட்டேன்/உனக்கு
- qāla
- قَالَ
- கூறினான்
- anā
- أَنَا۠
- நான்
- khayrun
- خَيْرٌ
- மேலானவன்
- min'hu
- مِّنْهُ
- அவரைவிட
- khalaqtanī
- خَلَقْتَنِى
- என்னை படைத்தாய்
- min nārin
- مِن نَّارٍ
- நெருப்பால்
- wakhalaqtahu
- وَخَلَقْتَهُۥ
- இன்னும் படைத்தாய்/அவரை
- min ṭīnin
- مِن طِينٍ
- களிமண்ணால்
(ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி) "நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?" என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) "நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக் கின்றாய். (களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது)" என்று (இறுமாப்புடன்) கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௨)Tafseer
قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُوْنُ لَكَ اَنْ تَتَكَبَّرَ فِيْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِيْنَ ١٣
- qāla
- قَالَ
- கூறினான்
- fa-ih'biṭ
- فَٱهْبِطْ
- ஆகவே இறங்கிவிடு
- min'hā
- مِنْهَا
- இதிலிருந்து
- famā yakūnu
- فَمَا يَكُونُ
- அனுமதியில்லை
- laka
- لَكَ
- உமக்கு
- an tatakabbara
- أَن تَتَكَبَّرَ
- நீ பெருமை கொள்வதற்கு
- fīhā
- فِيهَا
- இதில்
- fa-ukh'ruj
- فَٱخْرُجْ
- வெளியேறி விடு!
- innaka
- إِنَّكَ
- நிச்சயமாக நீ
- mina l-ṣāghirīna
- مِنَ ٱلصَّٰغِرِينَ
- இழிவானவர்களில்
(அதற்கு இறைவன்) "இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால் இதிலிருந்து) நீ வெளியேறிவிடு" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௩)Tafseer
قَالَ اَنْظِرْنِيْٓ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ ١٤
- qāla
- قَالَ
- கூறினான்
- anẓir'nī
- أَنظِرْنِىٓ
- அவகாசமளி/எனக்கு
- ilā
- إِلَىٰ
- வரை
- yawmi
- يَوْمِ
- நாள்
- yub'ʿathūna
- يُبْعَثُونَ
- எழுப்பப்படுவார்கள்
(அதற்கு இப்லீஸாகிய) அவன் ("இறந்தவர்களை) எழுப்பும் நாள் வரையில் எனக்கு அவகாசம் அளி" என்று கேட்டான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௪)Tafseer
قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَ ١٥
- qāla
- قَالَ
- கூறினான்
- innaka
- إِنَّكَ
- நிச்சயமாக நீ
- mina l-munẓarīna
- مِنَ ٱلْمُنظَرِينَ
- அவகாசமளிக்கப்பட்டவர்களில்
(அதற்கு இறைவன்) "நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டிருக்கின்றாய்" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௫)Tafseer
قَالَ فَبِمَآ اَغْوَيْتَنِيْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ ١٦
- qāla
- قَالَ
- கூறினான்
- fabimā
- فَبِمَآ
- காரணமாக
- aghwaytanī
- أَغْوَيْتَنِى
- நீ வழிகெடுத்தாய்/என்னை
- la-aqʿudanna
- لَأَقْعُدَنَّ
- நிச்சயமாக உட்காருவேன்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்காக
- ṣirāṭaka
- صِرَٰطَكَ
- உன் பாதையில்
- l-mus'taqīma
- ٱلْمُسْتَقِيمَ
- நேரானது
(அதற்கு இப்லீஸ், இறைவனை நோக்கி) "நீ என்னை பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன்னுடைய நேரான வழியில் செல்லாது (தடைசெய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்" (என்றும்) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௬)Tafseer
ثُمَّ لَاٰتِيَنَّهُمْ مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَانِهِمْ وَعَنْ شَمَاۤىِٕلِهِمْۗ وَلَا تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ ١٧
- thumma laātiyannahum
- ثُمَّ لَءَاتِيَنَّهُم
- பிறகு/நிச்சயம் வருவேன்/அவர்களிடம்
- min bayni aydīhim
- مِّنۢ بَيْنِ أَيْدِيهِمْ
- அவர்களுக்கு முன் புறத்திலிருந்து
- wamin khalfihim
- وَمِنْ خَلْفِهِمْ
- இன்னும் அவர்களுக்கு பின் புறத்திலிருந்து
- waʿan aymānihim
- وَعَنْ أَيْمَٰنِهِمْ
- இன்னும் அவர்களின் வலது புறத்திலிருந்து
- waʿan shamāilihim
- وَعَن شَمَآئِلِهِمْۖ
- இன்னும் அவர்களின் இடது புறத்திலிருந்து
- walā tajidu
- وَلَا تَجِدُ
- நீ காணமாட்டாய்
- aktharahum
- أَكْثَرَهُمْ
- அதிகமானவர்களை அவர்களில்
- shākirīna
- شَٰكِرِينَ
- நன்றி செலுத்துபவர்களாக
"நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர் களாக நீ காணமாட்டாய்" என்றும் கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௭)Tafseer
قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ۗ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِيْنَ ١٨
- qāla
- قَالَ
- கூறினான்
- ukh'ruj
- ٱخْرُجْ
- வெளியேறு
- min'hā
- مِنْهَا
- இதிலிருந்து
- madhūman
- مَذْءُومًا
- நீ இகழப்பட்டவனாக
- madḥūran
- مَّدْحُورًاۖ
- விரட்டப்பட்டவனாக
- laman tabiʿaka
- لَّمَن تَبِعَكَ
- எவர்/பின்பற்றினார்/உன்னை
- min'hum
- مِنْهُمْ
- அவர்களில்
- la-amla-anna
- لَأَمْلَأَنَّ
- நிச்சயம் நிரப்புவேன்
- jahannama
- جَهَنَّمَ
- நரகத்தை
- minkum
- مِنكُمْ
- உங்களைக் கொண்டு
- ajmaʿīna
- أَجْمَعِينَ
- அனைவரை
(அதற்கு இறைவன்) "நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௮)Tafseer
وَيٰٓاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ ١٩
- wayāādamu
- وَيَٰٓـَٔادَمُ
- ஆதமே
- us'kun
- ٱسْكُنْ
- வசித்திரு
- anta
- أَنتَ
- நீ
- wazawjuka
- وَزَوْجُكَ
- இன்னும் உம் மனைவி
- l-janata
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- fakulā
- فَكُلَا
- (இருவரும்)புசியுங்கள்
- min ḥaythu
- مِنْ حَيْثُ
- இடத்தில்
- shi'tumā
- شِئْتُمَا
- (இருவரும்)நாடினீர்கள்
- walā taqrabā
- وَلَا تَقْرَبَا
- (இருவரும்) நெருங்காதீர்கள்
- hādhihi l-shajarata
- هَٰذِهِ ٱلشَّجَرَةَ
- இந்த மரத்தை
- fatakūnā
- فَتَكُونَا
- (இருவரும்) ஆகிவிடுவீர்கள்
- mina l-ẓālimīna
- مِنَ ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களில்
(பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) "ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில் கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்" (என்று கூறினான்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௯)Tafseer
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطٰنُ لِيُبْدِيَ لَهُمَا مَا وٗرِيَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰىكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ ِالَّآ اَنْ تَكُوْنَا مَلَكَيْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِيْنَ ٢٠
- fawaswasa
- فَوَسْوَسَ
- ஊசலாட்டத்தை உண்டாக்கினான்
- lahumā
- لَهُمَا
- அவ்விருவருக்கும்
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- liyub'diya
- لِيُبْدِىَ
- (அவன்) வெளிப்படுத்துவதற்காக
- lahumā
- لَهُمَا
- அவ்விருவருக்கு
- mā wūriya
- مَا وُۥرِىَ
- எது/மறைக்கப்பட்டது
- ʿanhumā
- عَنْهُمَا
- அவ்விருவரை விட்டு
- min sawātihimā
- مِن سَوْءَٰتِهِمَا
- அவ்விருவரின் வெட்கத் தலங்களை
- waqāla
- وَقَالَ
- கூறினான்
- mā nahākumā
- مَا نَهَىٰكُمَا
- அவன் தடுக்கவில்லை/உங்களிருவரை
- rabbukumā
- رَبُّكُمَا
- உங்களிருவரின் இறைவன்
- ʿan hādhihi
- عَنْ هَٰذِهِ
- விட்டு
- l-shajarati
- ٱلشَّجَرَةِ
- இம்மரம்
- illā
- إِلَّآ
- தவிர
- an takūnā
- أَن تَكُونَا
- நீங்கள் ஆகிவிடுவீர்கள்
- malakayni
- مَلَكَيْنِ
- இரு வானவர்களாக
- aw
- أَوْ
- அல்லது
- takūnā
- تَكُونَا
- நீங்கள் ஆகிவிடுவீர்கள்
- mina l-khālidīna
- مِنَ ٱلْخَٰلِدِينَ
- நிரந்தரமானவர்களில்
(எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி "(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடுக்கவில்லை" என்று கூறியதுடன், ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௦)Tafseer