الۤمّۤصۤ ۚ ١
- alif-lam-meem-sad
- الٓمٓصٓ
- அலிஃப், லாம், மீம், ஸாத்
அலிஃப், லாம், மீம், ஸாத். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧)Tafseer
كِتٰبٌ اُنْزِلَ اِلَيْكَ فَلَا يَكُنْ فِيْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ ٢
- kitābun
- كِتَٰبٌ
- ஒரு வேதம்
- unzila
- أُنزِلَ
- இறக்கப்பட்டது
- ilayka
- إِلَيْكَ
- உம் மீது
- falā yakun
- فَلَا يَكُن
- இருக்க வேண்டாம்
- fī ṣadrika
- فِى صَدْرِكَ
- உம் இதயத்தில்
- ḥarajun
- حَرَجٌ
- நெருக்கடி
- min'hu
- مِّنْهُ
- இதில்
- litundhira
- لِتُنذِرَ
- நீர் எச்சரிப்பதற்காக
- bihi
- بِهِۦ
- இதைக் கொண்டு
- wadhik'rā
- وَذِكْرَىٰ
- இன்னும் ஒரு நல்லுபதேசம்
- lil'mu'minīna
- لِلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
(நபியே!) இவ்வேதம் உங்கள்மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உங்களுடைய உள்ளங்களில் யாதொரு தயக்கமும் வேண்டாம். இதனைக் கொண்டு நீங்கள் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நல்லுபதேசமாகும். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨)Tafseer
اِتَّبِعُوْا مَآ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَۗ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ ٣
- ittabiʿū
- ٱتَّبِعُوا۟
- பின்பற்றுங்கள்
- mā
- مَآ
- எது
- unzila
- أُنزِلَ
- இறக்கப்பட்டது
- ilaykum
- إِلَيْكُم
- உங்களுக்கு
- min
- مِّن
- இருந்து
- rabbikum
- رَّبِّكُمْ
- உங்கள் இறைவன்
- walā tattabiʿū
- وَلَا تَتَّبِعُوا۟
- பின்பற்றாதீர்கள்
- min dūnihi
- مِن دُونِهِۦٓ
- அதைத் தவிர
- awliyāa
- أَوْلِيَآءَۗ
- பொறுப்பாளர்களை
- qalīlan mā
- قَلِيلًا مَّا
- மிகக் குறைவாக
- tadhakkarūna
- تَذَكَّرُونَ
- நீங்கள் நல்லுணர்வு பெறுவது
(மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குக்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவு. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௩)Tafseer
وَكَمْ مِّنْ قَرْيَةٍ اَهْلَكْنٰهَا فَجَاۤءَهَا بَأْسُنَا بَيَاتًا اَوْ هُمْ قَاۤىِٕلُوْنَ ٤
- wakam min qaryatin
- وَكَم مِّن قَرْيَةٍ
- எத்தனையோ நகரங்கள்
- ahlaknāhā
- أَهْلَكْنَٰهَا
- அழித்தோம்/அவற்றை
- fajāahā
- فَجَآءَهَا
- வந்தது அவற்றுக்கு
- basunā
- بَأْسُنَا
- நம் வேதனை
- bayātan
- بَيَٰتًا
- இரவில்
- aw
- أَوْ
- அல்லது
- hum
- هُمْ
- அவர்கள்
- qāilūna
- قَآئِلُونَ
- பகலில் தூங்குபவர்கள்
(பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கின்றோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும்பொழுது நம்முடைய வேதனை அவர்களை வந்தடைந்தது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௪)Tafseer
فَمَا كَانَ دَعْوٰىهُمْ اِذْ جَاۤءَهُمْ بَأْسُنَآ اِلَّآ اَنْ قَالُوْٓا اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ ٥
- famā kāna
- فَمَا كَانَ
- இருக்கவில்லை
- daʿwāhum
- دَعْوَىٰهُمْ
- அவர்களுடைய வாதம்
- idh
- إِذْ
- வந்த போது
- jāahum
- جَآءَهُم
- அவர்களிடம்
- basunā
- بَأْسُنَآ
- நம் வேதனை
- illā
- إِلَّآ
- தவிர
- an qālū
- أَن قَالُوٓا۟
- அவர்கள் கூறியது
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- kunnā
- كُنَّا
- இருந்தோம்
- ẓālimīna
- ظَٰلِمِينَ
- அநியாயக்காரர்களாக
அவர்களிடம் நம்முடைய வேதனை வந்த சமயத்தில் "நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்" என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்கள் கூறவில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௫)Tafseer
فَلَنَسْـَٔلَنَّ الَّذِيْنَ اُرْسِلَ اِلَيْهِمْ وَلَنَسْـَٔلَنَّ الْمُرْسَلِيْنَۙ ٦
- falanasalanna
- فَلَنَسْـَٔلَنَّ
- நிச்சயம் விசாரிப்போம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- ur'sila
- أُرْسِلَ
- அனுப்பப்பட்டார்(கள்)
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்களிடம்
- walanasalanna
- وَلَنَسْـَٔلَنَّ
- இன்னும் நிச்சயம் விசாரிப்போம்
- l-mur'salīna
- ٱلْمُرْسَلِينَ
- தூதர்களை
ஆகவே (இதைப் பற்றி நம்முடைய) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬)Tafseer
فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَّمَا كُنَّا غَاۤىِٕبِيْنَ ٧
- falanaquṣṣanna
- فَلَنَقُصَّنَّ
- நிச்சயம் விவரிப்போம்
- ʿalayhim
- عَلَيْهِم
- அவர்களுக்கு
- biʿil'min
- بِعِلْمٍۖ
- உறுதியான ஞானத்துடன்
- wamā kunnā
- وَمَا كُنَّا
- நாம் இருக்கவில்லை
- ghāibīna
- غَآئِبِينَ
- மறைந்தவர்களாக
(அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭)Tafseer
وَالْوَزْنُ يَوْمَىِٕذِ ِۨالْحَقُّۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ٨
- wal-waznu
- وَٱلْوَزْنُ
- நிறுக்கப்படுதல்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அன்றைய தினம்
- l-ḥaqu
- ٱلْحَقُّۚ
- உண்மைதான்
- faman thaqulat
- فَمَن ثَقُلَتْ
- ஆகவேஎவர்/கனமானது
- mawāzīnuhu
- مَوَٰزِينُهُۥ
- அவருடைய நிறுவைகள்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-muf'liḥūna
- ٱلْمُفْلِحُونَ
- வெற்றியாளர்கள்
(ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௮)Tafseer
وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ ٩
- waman khaffat
- وَمَنْ خَفَّتْ
- எவர்/இலேசானது
- mawāzīnuhu
- مَوَٰزِينُهُۥ
- அவருடைய நிறுவைகள்
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- alladhīna khasirū
- ٱلَّذِينَ خَسِرُوٓا۟
- நஷ்டமிழைத்தவர்கள்
- anfusahum
- أَنفُسَهُم
- தங்களுக்கே
- bimā kānū
- بِمَا كَانُوا۟
- எதன்காரணமாக/ இருந்தனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நம் வசனங்களுக்கு
- yaẓlimūna
- يَظْلِمُونَ
- அநீதியிழைக்கின்றனர்
எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கின்றதோ அவர்கள் நம்முடைய வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௯)Tafseer
وَلَقَدْ مَكَّنّٰكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيْهَا مَعَايِشَۗ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ ࣖ ١٠
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- makkannākum
- مَكَّنَّٰكُمْ
- இடமளித்தோம்/உங்களுக்கு
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- இன்னும் ஏற்படுத்தினோம்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- fīhā
- فِيهَا
- அதில்
- maʿāyisha
- مَعَٰيِشَۗ
- வாழ்வாதாரங்களை
- qalīlan mā
- قَلِيلًا مَّا
- மிகக் குறைவாக
- tashkurūna
- تَشْكُرُونَ
- நன்றி செலுத்துகிறீர்கள்
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து, அதில் உங்களுக்கு வாழ்வதற்குத் தேவையான காரணங்களை ஏற்படுத்தினோம். (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௧௦)Tafseer