குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪
Qur'an Surah Al-A'raf Verse 4
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَمْ مِّنْ قَرْيَةٍ اَهْلَكْنٰهَا فَجَاۤءَهَا بَأْسُنَا بَيَاتًا اَوْ هُمْ قَاۤىِٕلُوْنَ (الأعراف : ٧)
- wakam min qaryatin
- وَكَم مِّن قَرْيَةٍ
- And how many of a city
- எத்தனையோ நகரங்கள்
- ahlaknāhā
- أَهْلَكْنَٰهَا
- We destroyed it
- அழித்தோம்/அவற்றை
- fajāahā
- فَجَآءَهَا
- and came to it
- வந்தது அவற்றுக்கு
- basunā
- بَأْسُنَا
- Our punishment
- நம் வேதனை
- bayātan
- بَيَٰتًا
- (at) night
- இரவில்
- aw
- أَوْ
- or
- அல்லது
- hum
- هُمْ
- (while) they
- அவர்கள்
- qāilūna
- قَآئِلُونَ
- were sleeping at noon
- பகலில் தூங்குபவர்கள்
Transliteration:
Wa kam min qaryatin ahlaknaahaa fajaaa'ahaa baasunaa bayaatan aw hum qaaa'iloon(QS. al-ʾAʿrāf:4)
English Sahih International:
And how many cities have We destroyed, and Our punishment came to them at night or while they were sleeping at noon. (QS. Al-A'raf, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கின்றோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும்பொழுது நம்முடைய வேதனை அவர்களை வந்தடைந்தது. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௪)
Jan Trust Foundation
(பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எத்தனையோ நகரங்கள், அவற்றை அழித்தோம். அவற்றுக்கு நம் வேதனை இரவில் அல்லது அவர்கள் பகலில் தூங்கிக் கொண்டிருந்தபோது வந்தது.