وَاَنْذِرْ بِهِ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْ يُّحْشَرُوْٓا اِلٰى رَبِّهِمْ لَيْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِيٌّ وَّلَا شَفِيْعٌ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ ٥١
- wa-andhir
- وَأَنذِرْ
- இன்னும் எச்சரிப்பீராக
- bihi
- بِهِ
- இதன் மூலம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yakhāfūna
- يَخَافُونَ
- பயப்படுவார்கள்
- an yuḥ'sharū
- أَن يُحْشَرُوٓا۟
- அவர்கள் ஒன்று திரட்டப்படுவதை
- ilā rabbihim
- إِلَىٰ رَبِّهِمْۙ
- தங்கள் இறைவனிடம்
- laysa
- لَيْسَ
- இல்லை
- lahum
- لَهُم
- தங்களுக்கு
- min dūnihi
- مِّن دُونِهِۦ
- அவனைத் தவிர
- waliyyun
- وَلِىٌّ
- பாதுகாவலர்
- walā shafīʿun
- وَلَا شَفِيعٌ
- இன்னும் இல்லை/பரிந்துரைப்பவர்
- laʿallahum yattaqūna
- لَّعَلَّهُمْ يَتَّقُونَ
- அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
(நபியே!) எவர்கள், "(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்க மாட்டார்" என்று பயப்படுகின்றார்களோ அவர்களை நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக் கொள்வார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௧)Tafseer
وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِيِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ ۗمَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَيْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ ٥٢
- walā taṭrudi
- وَلَا تَطْرُدِ
- விரட்டாதீர்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- yadʿūna
- يَدْعُونَ
- பிரார்த்திப்பார்கள்
- rabbahum
- رَبَّهُم
- தங்கள் இறைவனை
- bil-ghadati
- بِٱلْغَدَوٰةِ
- காலையில்
- wal-ʿashiyi
- وَٱلْعَشِىِّ
- இன்னும் மாலையில்
- yurīdūna
- يُرِيدُونَ
- நாடியவர்களாக
- wajhahu
- وَجْهَهُۥۖ
- அவனின் முகத்தை
- mā ʿalayka
- مَا عَلَيْكَ
- உம் மீதில்லையே
- min
- مِنْ
- இருந்து
- ḥisābihim
- حِسَابِهِم
- அவர்களுடைய கணக்கு
- min shayin
- مِّن شَىْءٍ
- எதுவும்
- wamā
- وَمَا
- இன்னும் இல்லை
- min ḥisābika
- مِنْ حِسَابِكَ
- உம் கணக்கிலிருந்து
- ʿalayhim
- عَلَيْهِم
- அவர்கள் மீது
- min shayin
- مِّن شَىْءٍ
- எதுவும்
- fataṭrudahum
- فَتَطْرُدَهُمْ
- நீர் விரட்டுவதற்கு/அவர்களை
- fatakūna
- فَتَكُونَ
- ஆகிவிடுவீர்
- mina l-ẓālimīna
- مِنَ ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களில்
(நபியே!) தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்கள்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உங்களுடைய பொறுப்பாகாது. உங்களுடைய கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீங்கள் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்! ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௨)Tafseer
وَكَذٰلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِّيَقُوْلُوْٓا اَهٰٓؤُلَاۤءِ مَنَّ اللّٰهُ عَلَيْهِمْ مِّنْۢ بَيْنِنَاۗ اَلَيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِالشّٰكِرِيْنَ ٥٣
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- இவ்வாறே
- fatannā
- فَتَنَّا
- சோதித்தோம்
- baʿḍahum
- بَعْضَهُم
- அவர்களில் சிலரை
- bibaʿḍin
- بِبَعْضٍ
- சிலரைக் கொண்டு
- liyaqūlū
- لِّيَقُولُوٓا۟
- இறுதியில் அவர்கள் கூறுவார்கள்
- ahāulāi
- أَهَٰٓؤُلَآءِ
- இவர்களா?
- manna
- مَنَّ
- அருள் புரிந்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalayhim
- عَلَيْهِم
- இவர்கள் மீது
- min
- مِّنۢ
- இருந்து
- bayninā
- بَيْنِنَآۗ
- எங்களுக்கு மத்தியில்
- alaysa
- أَلَيْسَ
- இல்லையா?
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bi-aʿlama
- بِأَعْلَمَ
- மிக அறிந்தவனாக
- bil-shākirīna
- بِٱلشَّٰكِرِينَ
- நன்றியுள்ளவர்களை
(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் "எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?" என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா? ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௩)Tafseer
وَاِذَا جَاۤءَكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاٰيٰتِنَا فَقُلْ سَلٰمٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَۙ اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْۤءًاۢ بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْۢ بَعْدِهٖ وَاَصْلَحَ فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِيْمٌ ٥٤
- wa-idhā
- وَإِذَا
- வந்தால்
- jāaka
- جَآءَكَ
- வந்தால் உம்மிடம்
- alladhīna yu'minūna
- ٱلَّذِينَ يُؤْمِنُونَ
- எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- நம் வசனங்களை
- faqul
- فَقُلْ
- கூறுவீராக
- salāmun
- سَلَٰمٌ
- ஈடேற்றம்
- ʿalaykum
- عَلَيْكُمْۖ
- உங்களுக்கு
- kataba
- كَتَبَ
- கடமையாக்கினான்
- rabbukum
- رَبُّكُمْ
- உங்கள் இறைவன்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- nafsihi
- نَفْسِهِ
- தன்
- l-raḥmata
- ٱلرَّحْمَةَۖ
- கருணையை
- annahu
- أَنَّهُۥ
- நிச்சயமாக
- man
- مَنْ
- எவர்
- ʿamila
- عَمِلَ
- செய்தார்
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- sūan
- سُوٓءًۢا
- ஒரு தீமையை
- bijahālatin
- بِجَهَٰلَةٍ
- அறியாமையினால்
- thumma
- ثُمَّ
- பிறகு
- tāba
- تَابَ
- (திருந்தி) திரும்பினார்
- min baʿdihi
- مِنۢ بَعْدِهِۦ
- அதன் பின்னர்
- wa-aṣlaḥa
- وَأَصْلَحَ
- இன்னும் சீர்திருத்தினார்
- fa-annahu
- فَأَنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளன்
(நபியே!) நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்கள் உங்களிடம் வந்தால் (நீங்கள் அவர்களை நோக்கி "ஸலாமுன் அலைக்கும்) உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! உங்களுடைய இறைவன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (யாதொரு) பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக கைசேதப்பட்டு (அதில் இருந்து விலகி) நற்செயல்களைச் செய்தால் (அவருடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான்" என்று கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௪)Tafseer
وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلِتَسْتَبِيْنَ سَبِيْلُ الْمُجْرِمِيْنَ ࣖ ٥٥
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- nufaṣṣilu
- نُفَصِّلُ
- விவரிக்கிறோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- வசனங்களை
- walitastabīna
- وَلِتَسْتَبِينَ
- இன்னும் தெளிவாகுவதற்கு
- sabīlu
- سَبِيلُ
- வழி
- l-muj'rimīna
- ٱلْمُجْرِمِينَ
- குற்றவாளிகளின்
குற்றவாளிகள் செல்லும் வழி (இன்னதென சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காக (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கின்றோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௫)Tafseer
قُلْ اِنِّيْ نُهِيْتُ اَنْ اَعْبُدَ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗ قُلْ لَّآ اَتَّبِعُ اَهْوَاۤءَكُمْۙ قَدْ ضَلَلْتُ اِذًا وَّمَآ اَنَا۠ مِنَ الْمُهْتَدِيْنَ ٥٦
- qul
- قُلْ
- கூறுவீராக
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- nuhītu
- نُهِيتُ
- தடுக்கப்பட்டுள்ளேன்
- an aʿbuda
- أَنْ أَعْبُدَ
- நான் வணங்குவதற்கு
- alladhīna tadʿūna
- ٱلَّذِينَ تَدْعُونَ
- எவற்றை/பிரார்த்திக்கிறீர்கள்
- min dūni
- مِن دُونِ
- தவிர
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வை
- qul
- قُل
- கூறுவீராக
- lā attabiʿu
- لَّآ أَتَّبِعُ
- பின்பற்றமாட்டேன்
- ahwāakum
- أَهْوَآءَكُمْۙ
- உங்கள் ஆசைகளை
- qad ḍalaltu
- قَدْ ضَلَلْتُ
- வழி தவறிவிடுவேன்
- idhan
- إِذًا
- அவ்வாறாயின்
- wamā anā
- وَمَآ أَنَا۠
- நான் இருக்க மாட்டேன்
- mina l-muh'tadīna
- مِنَ ٱلْمُهْتَدِينَ
- நேர்வழி பெற்றவர்களில்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி எவைகளை நீங்கள் (கடவுள்களென) அழைக்கின்றீர்களோ அவைகளை வணங்கக்கூடாதென்று நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன். ஆகவே உங்களுடைய விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறாயின், நிச்சயமாக நானும் வழி தவறிவிடுவேன். நேரான வழியை அடைந்தவனாக மாட்டேன்." ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௬)Tafseer
قُلْ اِنِّيْ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّيْ وَكَذَّبْتُمْ بِهٖۗ مَا عِنْدِيْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖۗ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ۗيَقُصُّ الْحَقَّ وَهُوَ خَيْرُ الْفَاصِلِيْنَ ٥٧
- qul
- قُلْ
- கூறுவீராக
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- bayyinatin
- بَيِّنَةٍ
- ஓர் அத்தாட்சி
- min rabbī
- مِّن رَّبِّى
- என் இறைவனின்
- wakadhabtum
- وَكَذَّبْتُم
- இன்னும் பொய்ப்பித்தீர்கள்
- bihi
- بِهِۦۚ
- அவனை
- mā ʿindī
- مَا عِندِى
- இல்லை/என்னிடம்
- mā
- مَا
- எது
- tastaʿjilūna
- تَسْتَعْجِلُونَ
- அவசரப்படுகிறீர்கள்
- bihi
- بِهِۦٓۚ
- அதற்கு
- ini l-ḥuk'mu
- إِنِ ٱلْحُكْمُ
- இல்லை/அதிகாரம்
- illā
- إِلَّا
- தவிர
- lillahi
- لِلَّهِۖ
- அல்லாஹ்வுக்கே
- yaquṣṣu
- يَقُصُّ
- விவரிக்கிறான்
- l-ḥaqa
- ٱلْحَقَّۖ
- உண்மையை
- wahuwa
- وَهُوَ
- அவன்
- khayru
- خَيْرُ
- மிக மேலானவன்
- l-fāṣilīna
- ٱلْفَٰصِلِينَ
- தீர்ப்பாளர்களில்
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக நான் என் இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன். எனினும், அதனை நீங்கள் பொய்யாக்கினீர்கள். எதற்கு நீங்கள் அவசரப்படுகின்றீர்களோ அ(ந்த வேதனையான)து என்னிடம் இல்லை. (அதன்) அதிகாரம் அனைத்தையும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு) எவருக்குமில்லை. அவன் உண்மையையே கூறுகின்றான். அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௭)Tafseer
قُلْ لَّوْ اَنَّ عِنْدِيْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖ لَقُضِيَ الْاَمْرُ بَيْنِيْ وَبَيْنَكُمْ ۗوَاللّٰهُ اَعْلَمُ بِالظّٰلِمِيْنَ ٥٨
- qul
- قُل
- கூறுவீராக
- law anna ʿindī
- لَّوْ أَنَّ عِندِى
- இருந்திருந்தால்/என்னிடம்/நிச்சயம்
- mā tastaʿjilūna
- مَا تَسْتَعْجِلُونَ
- எது/ அவசரப்படுகிறீர்கள்
- bihi
- بِهِۦ
- அதற்கு
- laquḍiya
- لَقُضِىَ
- முடிக்கப்பட்டிருக்கும்
- l-amru
- ٱلْأَمْرُ
- காரியம்
- baynī
- بَيْنِى
- எனக்கு மத்தியில்
- wabaynakum
- وَبَيْنَكُمْۗ
- இன்னும் உங்களுக்கு மத்தியில்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- bil-ẓālimīna
- بِٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களை
(அன்றி,) "நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள விவகாரம் (இதுவரையில்) தீர்க்கப்பட்டே இருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கின்றான்" என்றும் கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௮)Tafseer
۞ وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَآ اِلَّا هُوَۗ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِۗ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِيْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِيْ كِتٰبٍ مُّبِيْنٍ ٥٩
- waʿindahu
- وَعِندَهُۥ
- அவனிடமே
- mafātiḥu
- مَفَاتِحُ
- சாவிகள்
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- மறைவானவற்றின்
- lā yaʿlamuhā
- لَا يَعْلَمُهَآ
- அறியமாட்டார்/அவற்றை
- illā huwa
- إِلَّا هُوَۚ
- அவனைத் தவிர
- wayaʿlamu
- وَيَعْلَمُ
- இன்னும் நன்கறிவான்
- mā
- مَا
- எவை
- fī l-bari
- فِى ٱلْبَرِّ
- நிலத்தில்
- wal-baḥri
- وَٱلْبَحْرِۚ
- இன்னும் நீரில்
- wamā tasquṭu
- وَمَا تَسْقُطُ
- விழுவதில்லை
- min waraqatin
- مِن وَرَقَةٍ
- ஓர் இலை
- illā
- إِلَّا
- தவிர
- yaʿlamuhā
- يَعْلَمُهَا
- அறிவான்/அதை
- walā ḥabbatin
- وَلَا حَبَّةٍ
- இன்னும் இல்லை/வித்து
- fī ẓulumāti
- فِى ظُلُمَٰتِ
- இருள்களில்
- l-arḍi
- ٱلْأَرْضِ
- பூமியின்
- walā raṭbin
- وَلَا رَطْبٍ
- இன்னும் இல்லை பசுமையானது
- walā yābisin
- وَلَا يَابِسٍ
- இன்னும் இல்லை/உலர்ந்தது
- illā
- إِلَّا
- தவிர
- fī kitābin
- فِى كِتَٰبٍ
- புத்தகத்தில்
- mubīnin
- مُّبِينٍ
- தெளிவானது
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறிய மாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௫௯)Tafseer
وَهُوَ الَّذِيْ يَتَوَفّٰىكُمْ بِالَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّىۚ ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ࣖ ٦٠
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِى
- அவன்/எவன்
- yatawaffākum
- يَتَوَفَّىٰكُم
- கைப்பற்றுகிறான்/உங்களை
- bi-al-layli
- بِٱلَّيْلِ
- இரவில்
- wayaʿlamu
- وَيَعْلَمُ
- அறிவான்
- mā jaraḥtum
- مَا جَرَحْتُم
- எதை/செய்தீர்கள்
- bil-nahāri
- بِٱلنَّهَارِ
- பகலில்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yabʿathukum
- يَبْعَثُكُمْ
- எழுப்புகிறான்/உங்களை
- fīhi
- فِيهِ
- அதில்
- liyuq'ḍā
- لِيُقْضَىٰٓ
- முடிக்கப்படுவதற்காக
- ajalun
- أَجَلٌ
- ஒரு தவணை
- musamman
- مُّسَمًّىۖ
- குறிப்பிட்ட
- thumma
- ثُمَّ
- பிறகு
- ilayhi
- إِلَيْهِ
- அவன் பக்கமே
- marjiʿukum
- مَرْجِعُكُمْ
- உங்கள் மீளுமிடம்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yunabbi-ukum
- يُنَبِّئُكُم
- அறிவிப்பான்/உங்களுக்கு
- bimā
- بِمَا
- எதை
- kuntum
- كُنتُمْ
- இருந்தீர்கள்
- taʿmalūna
- تَعْمَلُونَ
- செய்கிறீர்கள்
(மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும்பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகின்றான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகின்றான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர் நீங்கள் அவனிடம்தான் திரும்பப் போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளை (அங்கு) உங்களுக்கு அறிவிப்பான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௬௦)Tafseer