Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 4

Al-An'am

(al-ʾAnʿām)

௩௧

قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَاۤءِ اللّٰهِ ۗحَتّٰٓى اِذَا جَاۤءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوْا يٰحَسْرَتَنَا عَلٰى مَا فَرَّطْنَا فِيْهَاۙ وَهُمْ يَحْمِلُوْنَ اَوْزَارَهُمْ عَلٰى ظُهُوْرِهِمْۗ اَلَا سَاۤءَ مَا يَزِرُوْنَ ٣١

qad khasira
قَدْ خَسِرَ
நஷ்டமடைந்து விட்டனர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
biliqāi
بِلِقَآءِ
சந்திப்பை
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
ḥattā
حَتَّىٰٓ
முடிவில்
idhā jāathumu
إِذَا جَآءَتْهُمُ
வந்தால்/அவர்களுக்கு
l-sāʿatu
ٱلسَّاعَةُ
காலம்
baghtatan
بَغْتَةً
திடீரென
qālū
قَالُوا۟
கூறுவர்
yāḥasratanā
يَٰحَسْرَتَنَا
எங்கள் துக்கமே
ʿalā
عَلَىٰ
இல்
mā farraṭnā
مَا فَرَّطْنَا
எவை/குறைசெய்தோம்
fīhā
فِيهَا
அவற்றில்
wahum
وَهُمْ
அவர்களுமோ
yaḥmilūna
يَحْمِلُونَ
சுமப்பார்கள்
awzārahum
أَوْزَارَهُمْ
பாவங்களை தங்கள்
ʿalā ẓuhūrihim
عَلَىٰ ظُهُورِهِمْۚ
மீது/முதுகுகள்/தங்கள்
alā sāa
أَلَا سَآءَ
அறிந்து கொள்ளுங்கள்/கெட்டுவிட்டது
mā yazirūna
مَا يَزِرُونَ
எது/சுமப்பார்கள்
(ஆகவே) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கவேண்டும் என்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர். (எதிர்பாராதவாறு) திடீரென அவர்களுக்கு (விசாரணைக்) காலம் (என்ற மறுமை) வந்துவிட்டால், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மீது சுமந்தவர்களாக "இதை (இந்த வேதத்தைப் பற்றி) நாங்கள் நம்பாத (குற்றத்)தால் எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே!" என்று புலம்புவார்கள். அவர்கள் சுமந்து கொண்டிருப்பவை மிகக் கெட்டவையல்லவா? ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩௧)
Tafseer
௩௨

وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ ۗوَلَلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّلَّذِيْنَ يَتَّقُوْنَۗ اَفَلَا تَعْقِلُوْنَ ٣٢

wamā l-ḥayatu
وَمَا ٱلْحَيَوٰةُ
இல்லை/வாழ்வு
l-dun'yā
ٱلدُّنْيَآ
உலகம்
illā
إِلَّا
தவிர
laʿibun
لَعِبٌ
விளையாட்டு
walahwun
وَلَهْوٌۖ
இன்னும் கேளிக்கை
walalddāru
وَلَلدَّارُ
வீடுதான்
l-ākhiratu
ٱلْءَاخِرَةُ
மறுமை
khayrun
خَيْرٌ
மிக மேலானது
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
yattaqūna
يَتَّقُونَۗ
அஞ்சுகிறார்கள்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமேயன்றி வேறில்லை! எனினும் இறை அச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩௨)
Tafseer
௩௩

قَدْ نَعْلَمُ اِنَّهٗ لَيَحْزُنُكَ الَّذِيْ يَقُوْلُوْنَ فَاِنَّهُمْ لَا يُكَذِّبُوْنَكَ وَلٰكِنَّ الظّٰلِمِيْنَ بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ ٣٣

qad naʿlamu
قَدْ نَعْلَمُ
திட்டமாக/அறிவோம்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
layaḥzunuka
لَيَحْزُنُكَ
கவலையளிக்கிறது/உமக்கு
alladhī yaqūlūna
ٱلَّذِى يَقُولُونَۖ
எது/கூறுவார்கள்
fa-innahum
فَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lā yukadhibūnaka
لَا يُكَذِّبُونَكَ
பொய்ப்பிப்பதில்லை/உம்மை
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
biāyāti l-lahi
بِـَٔايَٰتِ ٱللَّهِ
அல்லாஹ்வின் வசனங்களை
yajḥadūna
يَجْحَدُونَ
மறுக்கின்றனர்
(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩௩)
Tafseer
௩௪

وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰى مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰٓى اَتٰىهُمْ نَصْرُنَا ۚوَلَا مُبَدِّلَ لِكَلِمٰتِ اللّٰهِ ۚوَلَقَدْ جَاۤءَكَ مِنْ نَّبَإِ۟ى الْمُرْسَلِيْنَ ٣٤

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
kudhibat
كُذِّبَتْ
பொய்ப்பிக்கப்பட்டனர்
rusulun
رُسُلٌ
(பல) தூதர்கள்
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
faṣabarū
فَصَبَرُوا۟
பொறுத்தனர்
ʿalā
عَلَىٰ
மீது
مَا
எது
kudhibū
كُذِّبُوا۟
பொய்ப்பிக்கப்பட்டனர்
waūdhū
وَأُوذُوا۟
இன்னும் துன்புறுத்தப்பட்டனர்
ḥattā
حَتَّىٰٓ
வரை
atāhum
أَتَىٰهُمْ
வந்தது/அவர்களுக்கு
naṣrunā
نَصْرُنَاۚ
நம் உதவி
walā mubaddila
وَلَا مُبَدِّلَ
அறவே இல்லை/மாற்றுபவர்
likalimāti
لِكَلِمَٰتِ
வாக்குகளை
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
walaqad
وَلَقَدْ
திட்டமாக
jāaka
جَآءَكَ
வந்துள்ளது/உமக்கு
min naba-i
مِن نَّبَإِى۟
செய்தியில் சில
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களின்
உங்களுக்கு முன்னிருந்த (நம்முடைய) பல தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம்முடைய உதவி வரும் வரையில் அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே நபியே! நீங்களும் அவ்வாறே பொறுத்திருங்கள்.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உங்களுக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உங்களிடம் வந்தே இருக்கின்றன. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩௪)
Tafseer
௩௫

وَاِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ اِعْرَاضُهُمْ فَاِنِ اسْتَطَعْتَ اَنْ تَبْتَغِيَ نَفَقًا فِى الْاَرْضِ اَوْ سُلَّمًا فِى السَّمَاۤءِ فَتَأْتِيَهُمْ بِاٰيَةٍ ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدٰى فَلَا تَكُوْنَنَّ مِنَ الْجٰهِلِيْنَ ٣٥

wa-in kāna
وَإِن كَانَ
இருந்தால்
kabura
كَبُرَ
பெரிதாக
ʿalayka
عَلَيْكَ
உமக்கு
iʿ'rāḍuhum
إِعْرَاضُهُمْ
அவர்களின் புறக்கணிப்பு
fa-ini is'taṭaʿta
فَإِنِ ٱسْتَطَعْتَ
நீர் இயன்றால்...
an tabtaghiya
أَن تَبْتَغِىَ
நீர் தேடுவது
nafaqan
نَفَقًا
ஒரு சுரங்கத்தை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
aw sullaman
أَوْ سُلَّمًا
அல்லது/ஒர் ஏணியை
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
வானத்தில்
fatatiyahum
فَتَأْتِيَهُم
நீர் வருவதற்கு/அவர்களுக்கு
biāyatin
بِـَٔايَةٍۚ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
walaw shāa
وَلَوْ شَآءَ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lajamaʿahum
لَجَمَعَهُمْ
ஒன்றுசேர்த்திருப்பான் /அவர்களை
ʿalā l-hudā
عَلَى ٱلْهُدَىٰۚ
நேர்வழியில்
falā takūnanna
فَلَا تَكُونَنَّ
நிச்சயமாக ஆகிவிடாதீர்
mina l-jāhilīna
مِنَ ٱلْجَٰهِلِينَ
அறியாதவர்களில்
(நபியே!) அவர்கள் (உங்களைப்) புறக்கணிப்பது உங்களுக்குப் பெரும் கஷ்டமாகத் தோன்றினால், உங்களால் முடியுமானால் பூமியில் சுரங்கமிட்டு(ச் சென்றோ) அல்லது வானத்தில் ஒரு ஏணி வைத்து (ஏறியோ அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை நீங்கள் அவர்களுக்குக் கொண்டு வாருங்கள். (அப்பொழுதும் அவர்கள் உங்களை நிராகரித்துக்கொண்டே இருப்பார்கள்.) எனினும் அல்லாஹ் நாடினால், அவர்கள் அனைவரையும் நேரான வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, ஒருபோதும் நீங்கள் அறியாதவர்களுடன் சேர்ந்துவிட வேண்டாம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩௫)
Tafseer
௩௬

۞ اِنَّمَا يَسْتَجِيْبُ الَّذِيْنَ يَسْمَعُوْنَ ۗوَالْمَوْتٰى يَبْعَثُهُمُ اللّٰهُ ثُمَّ اِلَيْهِ يُرْجَعُوْنَ ٣٦

innamā
إِنَّمَا
எல்லாம்
yastajību
يَسْتَجِيبُ
ஏற்றுக் கொள்வார்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yasmaʿūna
يَسْمَعُونَۘ
செவிசாய்ப்பார்கள்
wal-mawtā
وَٱلْمَوْتَىٰ
இறந்தவர்கள்
yabʿathuhumu
يَبْعَثُهُمُ
எழுப்புவான்/அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
thumma
ثُمَّ
பிறகு
ilayhi
إِلَيْهِ
அவனிடமே
yur'jaʿūna
يُرْجَعُونَ
திருப்பப்படுவார்கள்
எவர்கள் (உங்களுக்குச்) செவிசாய்க்கக்கூடிய (உயிருள்ள)வர்களாக இருக்கின்றனரோ அவர்கள்தான் (உங்களை) ஏற்றுக் கொள்வார்கள். (ஆனால், இந்த காஃபிர்களோ செவிமடுக்க முடியாத இறந்தவர்களைப் போலவே இருக்கின்றனர்.) ஆகவே, இறந்தவர்களை (மறுமையில்தான்) அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩௬)
Tafseer
௩௭

وَقَالُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖۗ قُلْ اِنَّ اللّٰهَ قَادِرٌ عَلٰٓى اَنْ يُّنَزِّلَ اٰيَةً وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ ٣٧

waqālū
وَقَالُوا۟
கூறினர்
lawlā nuzzila
لَوْلَا نُزِّلَ
இறக்கப்பட வேண்டாமா
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
āyatun
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
min
مِّن
இருந்து
rabbihi
رَّبِّهِۦۚ
அவருடைய இறைவன்
qul
قُلْ
கூறுவீராக
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
qādirun
قَادِرٌ
ஆற்றலுடையவன்
ʿalā
عَلَىٰٓ
மீது
an yunazzila
أَن يُنَزِّلَ
அவன் இறக்குவது
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியை
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
aktharahum
أَكْثَرَهُمْ
அவர்களில் அதிகமானோர்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
("நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவருடைய இறைவன் அவர்மீது இறக்கி வைக்க வேண்டாமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதனை) அறிந்து கொள்வதில்லை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩௭)
Tafseer
௩௮

وَمَا مِنْ دَاۤبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤىِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّآ اُمَمٌ اَمْثَالُكُمْ ۗمَا فَرَّطْنَا فِى الْكِتٰبِ مِنْ شَيْءٍ ثُمَّ اِلٰى رَبِّهِمْ يُحْشَرُوْنَ ٣٨

wamā
وَمَا
இல்லை
min dābbatin
مِن دَآبَّةٍ
ஓர் ஊர்வன
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walā ṭāirin
وَلَا طَٰٓئِرٍ
இன்னும் இல்லை/பறவை
yaṭīru
يَطِيرُ
பறக்கும்
bijanāḥayhi
بِجَنَاحَيْهِ
தன் இரு இறக்கைகள்
illā
إِلَّآ
தவிர
umamun
أُمَمٌ
படைப்புகளே
amthālukum
أَمْثَالُكُمۚ
உங்களைப் போன்ற(வர்கள்)
mā farraṭnā
مَّا فَرَّطْنَا
நாம் விடவில்லை
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
புத்தகத்தில்
min
مِن
இருந்து
shayin
شَىْءٍۚ
எதையும்
thumma
ثُمَّ
பிறகு
ilā rabbihim
إِلَىٰ رَبِّهِمْ
தங்கள் இறைவனிடம்
yuḥ'sharūna
يُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவார்கள்
பூமியில் ஊர்ந்து திரியக் கூடியவைகளும், தன்னுடைய இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவைகளும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) அன்றி வேறில்லை. (இவைகளில்) ஒன்றையுமே (நம்முடைய பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர் (ஒரு நாளில்) இவைகளும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩௮)
Tafseer
௩௯

وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا صُمٌّ وَّبُكْمٌ فِى الظُّلُمٰتِۗ مَنْ يَّشَاِ اللّٰهُ يُضْلِلْهُ وَمَنْ يَّشَأْ يَجْعَلْهُ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٣٩

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
ṣummun
صُمٌّ
செவிடர்கள்
wabuk'mun
وَبُكْمٌ
இன்னும் ஊமையர்கள்
fī l-ẓulumāti
فِى ٱلظُّلُمَٰتِۗ
இருள்களில்
man yasha-i
مَن يَشَإِ
எவரை/நாடுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yuḍ'lil'hu
يُضْلِلْهُ
வழிகெடுக்கிறான்/அவரை
waman yasha
وَمَن يَشَأْ
இன்னும் எவரை/நாடுகிறான்
yajʿalhu
يَجْعَلْهُ
ஆக்குகிறான்/அவரை
ʿalā ṣirāṭin
عَلَىٰ صِرَٰطٍ
பாதையில்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரானது
எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார் களோ அவர்கள் இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்லவிட்டு விடுகின்றான்; அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௩௯)
Tafseer
௪௦

قُلْ اَرَءَيْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ اَوْ اَتَتْكُمُ السَّاعَةُ اَغَيْرَ اللّٰهِ تَدْعُوْنَۚ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٤٠

qul
قُلْ
கூறுவீராக
ara-aytakum
أَرَءَيْتَكُمْ
அறிவியுங்கள்
in atākum
إِنْ أَتَىٰكُمْ
வந்தால்/உங்களுக்கு
ʿadhābu l-lahi
عَذَابُ ٱللَّهِ
அல்லாஹ்வின் வேதனை
aw
أَوْ
அல்லது
atatkumu
أَتَتْكُمُ
வந்தால்/உங்களுக்கு
l-sāʿatu
ٱلسَّاعَةُ
காலம்
aghayra
أَغَيْرَ
அல்லாதவர்களையா?
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
tadʿūna
تَدْعُونَ
அழைப்பீர்கள்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு விசாரணைக்காலம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாத (இ)வைகளையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்! என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? (இந்த சிலைகளை உங்கள் தெய்வங்கள் என்று கூறும்) நீங்கள் உண்மை சொல்பவர் களாயிருந்தால் (அவைகளையே உங்கள் உதவிக்கு அழையுங்கள்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௪௦)
Tafseer