குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௭
Qur'an Surah Al-An'am Verse 37
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖۗ قُلْ اِنَّ اللّٰهَ قَادِرٌ عَلٰٓى اَنْ يُّنَزِّلَ اٰيَةً وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ (الأنعام : ٦)
- waqālū
- وَقَالُوا۟
- And they said
- கூறினர்
- lawlā nuzzila
- لَوْلَا نُزِّلَ
- "Why (is) not sent down
- இறக்கப்பட வேண்டாமா
- ʿalayhi
- عَلَيْهِ
- to him
- அவர் மீது
- āyatun
- ءَايَةٌ
- a Sign
- ஓர் அத்தாட்சி
- min
- مِّن
- from
- இருந்து
- rabbihi
- رَّبِّهِۦۚ
- his Lord?"
- அவருடைய இறைவன்
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- "Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- qādirun
- قَادِرٌ
- (is) Able
- ஆற்றலுடையவன்
- ʿalā
- عَلَىٰٓ
- [on]
- மீது
- an yunazzila
- أَن يُنَزِّلَ
- to send down
- அவன் இறக்குவது
- āyatan
- ءَايَةً
- a Sign
- ஓர் அத்தாட்சியை
- walākinna
- وَلَٰكِنَّ
- but
- எனினும்
- aktharahum
- أَكْثَرَهُمْ
- most of them
- அவர்களில் அதிகமானோர்
- lā yaʿlamūna
- لَا يَعْلَمُونَ
- (do) not know"
- அறியமாட்டார்கள்
Transliteration:
Wa qaaloo law laa nuzzila 'alaihi Aayatum mir Rabbih; qul innal laaha qaadirun 'alaaa ai yunazzila Aayatanw wa laakinna aksarahum laa ya'lamoon(QS. al-ʾAnʿām:37)
English Sahih International:
And they say, "Why has a sign not been sent down to him from his Lord?" Say, "Indeed, Allah is Able to send down a sign, but most of them do not know." (QS. Al-An'am, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
("நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவருடைய இறைவன் அவர்மீது இறக்கி வைக்க வேண்டாமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதனை) அறிந்து கொள்வதில்லை. (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௩௭)
Jan Trust Foundation
(நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்| “நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே; எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"(நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறினர். (நபியே!) கூறுவீராக: ஓர் அத்தாட்சியை இறக்க நிச்சயமாக அல்லாஹ் ஆற்றலுடையவன். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.