Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௫

Qur'an Surah Al-An'am Verse 35

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ اِعْرَاضُهُمْ فَاِنِ اسْتَطَعْتَ اَنْ تَبْتَغِيَ نَفَقًا فِى الْاَرْضِ اَوْ سُلَّمًا فِى السَّمَاۤءِ فَتَأْتِيَهُمْ بِاٰيَةٍ ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدٰى فَلَا تَكُوْنَنَّ مِنَ الْجٰهِلِيْنَ (الأنعام : ٦)

wa-in kāna
وَإِن كَانَ
And if is
இருந்தால்
kabura
كَبُرَ
difficult
பெரிதாக
ʿalayka
عَلَيْكَ
for you
உமக்கு
iʿ'rāḍuhum
إِعْرَاضُهُمْ
their aversion
அவர்களின் புறக்கணிப்பு
fa-ini is'taṭaʿta
فَإِنِ ٱسْتَطَعْتَ
then if you are able
நீர் இயன்றால்...
an tabtaghiya
أَن تَبْتَغِىَ
to seek
நீர் தேடுவது
nafaqan
نَفَقًا
a tunnel
ஒரு சுரங்கத்தை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
aw sullaman
أَوْ سُلَّمًا
or a ladder
அல்லது/ஒர் ஏணியை
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
into the sky
வானத்தில்
fatatiyahum
فَتَأْتِيَهُم
so that you bring to them
நீர் வருவதற்கு/அவர்களுக்கு
biāyatin
بِـَٔايَةٍۚ
a Sign
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
walaw shāa
وَلَوْ شَآءَ
But if (had) willed
நாடினால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
lajamaʿahum
لَجَمَعَهُمْ
surely He (would) have gathered them
ஒன்றுசேர்த்திருப்பான் /அவர்களை
ʿalā l-hudā
عَلَى ٱلْهُدَىٰۚ
on the guidance
நேர்வழியில்
falā takūnanna
فَلَا تَكُونَنَّ
So (do) not be
நிச்சயமாக ஆகிவிடாதீர்
mina l-jāhilīna
مِنَ ٱلْجَٰهِلِينَ
of the ignorant
அறியாதவர்களில்

Transliteration:

Wa in kaana kabura 'alaika i'raaduhum fa inistata'ta an tabtaghiya nafaqan fil ardi aw sullaman fis samaaa'i fataa tiyahum bi Aayah; wa law shaaa'al laahu lajama'ahum 'alal hudaa; falaa takoonanna minal jaahileen (QS. al-ʾAnʿām:35)

English Sahih International:

And if their evasion is difficult for you, then if you are able to seek a tunnel into the earth or a stairway into the sky to bring them a sign, [then do so]. But if Allah had willed, He would have united them upon guidance. So never be of the ignorant. (QS. Al-An'am, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் (உங்களைப்) புறக்கணிப்பது உங்களுக்குப் பெரும் கஷ்டமாகத் தோன்றினால், உங்களால் முடியுமானால் பூமியில் சுரங்கமிட்டு(ச் சென்றோ) அல்லது வானத்தில் ஒரு ஏணி வைத்து (ஏறியோ அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை நீங்கள் அவர்களுக்குக் கொண்டு வாருங்கள். (அப்பொழுதும் அவர்கள் உங்களை நிராகரித்துக்கொண்டே இருப்பார்கள்.) எனினும் அல்லாஹ் நாடினால், அவர்கள் அனைவரையும் நேரான வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, ஒருபோதும் நீங்கள் அறியாதவர்களுடன் சேர்ந்துவிட வேண்டாம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௩௫)

Jan Trust Foundation

(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெரிதாக இருந்தால், நீ பூமியில் ஒரு சுரங்கத்தை அல்லது வானத்தில் ஓர் ஏணியைத் தேடி, (அதன் மூலம்) ஓர் அத்தாட்சியை அவர்களுக்குக் கொண்டு வருவதற்கு நீர் இயன்றால்... (கொண்டு வாரீர்.) அல்லாஹ் நாடினால், அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். ஆகவே, அறியாதவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்.