ذٰلِكَ اَنْ لَّمْ يَكُنْ رَّبُّكَ مُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا غٰفِلُوْنَ ١٣١
- dhālika
- ذَٰلِكَ
- அதற்குக் காரணம்
- an lam yakun
- أَن لَّمْ يَكُن
- என்பதாகும்/இல்லை
- rabbuka
- رَّبُّكَ
- உமது இறைவன்
- muh'lika
- مُهْلِكَ
- அழிப்பவனாக
- l-qurā
- ٱلْقُرَىٰ
- நகரங்களை
- biẓul'min
- بِظُلْمٍ
- அநியாயத்தினால்
- wa-ahluhā
- وَأَهْلُهَا
- இருக்க /அங்கு வசிப்பவர்கள்
- ghāfilūna
- غَٰفِلُونَ
- கவனமற்றவர்கள்
(நபியே! இவ்வாறு நபிமார்களை அனுப்புவதன் காரணமெல்லாம்) அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உங்களது இறைவன் இருக்கவில்லை என்பதுதான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௧)Tafseer
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْاۗ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ ١٣٢
- walikullin
- وَلِكُلٍّ
- எல்லோருக்கும்
- darajātun
- دَرَجَٰتٌ
- பதவிகள் உண்டு
- mimmā ʿamilū
- مِّمَّا عَمِلُوا۟ۚ
- எதிலிருந்து/செய்தார்கள்
- wamā
- وَمَا
- இல்லை
- rabbuka
- رَبُّكَ
- உம் இறைவன்
- bighāfilin
- بِغَٰفِلٍ
- கவனிக்காதவனாக
- ʿammā yaʿmalūna
- عَمَّا يَعْمَلُونَ
- அவர்கள் செய்வதை
(நபியே! அவர்கள்) அனைவருக்கும் அவர்களின் செயல்களுக்குத் தக்க பதவிகள் உண்டு. அவர்கள் செயல்களைப் பற்றி உங்களுடைய இறைவன் பராமுகமாயில்லை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௨)Tafseer
وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ ۗاِنْ يَّشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْۢ بَعْدِكُمْ مَّا يَشَاۤءُ كَمَآ اَنْشَاَكُمْ مِّنْ ذُرِّيَّةِ قَوْمٍ اٰخَرِيْنَ ١٣٣
- warabbuka
- وَرَبُّكَ
- உம் இறைவன்
- l-ghaniyu
- ٱلْغَنِىُّ
- நிறைவானவன்
- dhū l-raḥmati
- ذُو ٱلرَّحْمَةِۚ
- கருணையுடையவன்
- in yasha
- إِن يَشَأْ
- அவன் நாடினால்
- yudh'hib'kum
- يُذْهِبْكُمْ
- போக்கி விடுவான்/உங்களை
- wayastakhlif
- وَيَسْتَخْلِفْ
- இன்னும் தோன்றச் செய்வான்
- min
- مِنۢ
- பின்னர்
- baʿdikum
- بَعْدِكُم
- பின்னர் உங்களுக்கு
- mā yashāu
- مَّا يَشَآءُ
- எவர்களை/நாடுகிறான்
- kamā
- كَمَآ
- போன்று
- ansha-akum
- أَنشَأَكُم
- உருவாக்கினான் உங்களை
- min dhurriyyati
- مِّن ذُرِّيَّةِ
- சந்ததியிலிருந்து
- qawmin
- قَوْمٍ
- சமுதாயத்தின்
- ākharīna
- ءَاخَرِينَ
- மற்றவர்கள்
(நபியே!) உங்களது இறைவன் (எத்தகைய) தேவையற்றவனாகவும் அன்புடையவனாகவும் இருக்கின்றான். (மனிதர்களே!) அவன் விரும்பினால் உங்களைப் போக்கி தான் நாடிய எவரையும் உங்களுடைய இடத்தில் அமர்த்தி விடுவான். இவ்வாறே (சென்று போன) மற்ற மக்களின் சந்ததிகளிலிருந்து உங்களை உற்பத்தி செய்திருக்கிறான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௩)Tafseer
اِنَّ مَا تُوْعَدُوْنَ لَاٰتٍۙ وَّمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ ١٣٤
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- mā
- مَا
- எது
- tūʿadūna
- تُوعَدُونَ
- வாக்களிக்கப்படுகிறீர்கள்
- laātin
- لَءَاتٍۖ
- வரக்கூடியதே
- wamā antum
- وَمَآ أَنتُم
- நீங்கள் இல்லை
- bimuʿ'jizīna
- بِمُعْجِزِينَ
- பலவீனப்படுத்துபவர்களாக
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (அந்த இறுதி) நாள் நிச்சயமாக வந்தே தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௪)Tafseer
قُلْ يٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّيْ عَامِلٌۚ فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِۗ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ ١٣٥
- qul
- قُلْ
- கூறுவீராக
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் சமுதாயமே
- iʿ'malū
- ٱعْمَلُوا۟
- செய்யுங்கள்
- ʿalā makānatikum
- عَلَىٰ مَكَانَتِكُمْ
- உங்கள் போக்கில்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- ʿāmilun
- عَامِلٌۖ
- செய்கிறேன்
- fasawfa taʿlamūna
- فَسَوْفَ تَعْلَمُونَ
- அறிவீர்கள்
- man
- مَن
- எவர்
- takūnu
- تَكُونُ
- இருக்கும்
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- முடிவு
- l-dāri
- ٱلدَّارِۗ
- மறுமையின்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக செய்தி
- lā yuf'liḥu
- لَا يُفْلِحُ
- வெற்றி பெறமாட்டார்(கள்)
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள்) காரியங்களைச் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக நானும் (என் போக்கில் என்) காரியங்களைச் செய்து கொண்டிருப்பேன். இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாக இருக்கின்றது என்பதை பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்." ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௫)Tafseer
وَجَعَلُوْا لِلّٰهِ مِمَّا ذَرَاَ مِنَ الْحَرْثِ وَالْاَنْعَامِ نَصِيْبًا فَقَالُوْا هٰذَا لِلّٰهِ بِزَعْمِهِمْ وَهٰذَا لِشُرَكَاۤىِٕنَاۚ فَمَا كَانَ لِشُرَكَاۤىِٕهِمْ فَلَا يَصِلُ اِلَى اللّٰهِ ۚوَمَا كَانَ لِلّٰهِ فَهُوَ يَصِلُ اِلٰى شُرَكَاۤىِٕهِمْۗ سَاۤءَ مَا يَحْكُمُوْنَ ١٣٦
- wajaʿalū
- وَجَعَلُوا۟
- ஆக்கினார்கள்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- mimmā
- مِمَّا
- எதிலிருந்து
- dhara-a
- ذَرَأَ
- படைத்தான்
- mina
- مِنَ
- இருந்து
- l-ḥarthi
- ٱلْحَرْثِ
- விவசாயம்
- wal-anʿāmi
- وَٱلْأَنْعَٰمِ
- இன்னும் கால்நடைகள்
- naṣīban
- نَصِيبًا
- ஒரு பாகத்தை
- faqālū
- فَقَالُوا۟
- கூறினர்
- hādhā
- هَٰذَا
- இது
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- bizaʿmihim
- بِزَعْمِهِمْ
- தங்கள் எண்ணப்படி
- wahādhā
- وَهَٰذَا
- இது
- lishurakāinā
- لِشُرَكَآئِنَاۖ
- எங்கள் தெய்வங்களுக்கு
- famā
- فَمَا
- எது
- kāna
- كَانَ
- ஆகிவிட்டது
- lishurakāihim
- لِشُرَكَآئِهِمْ
- அவர்களுடைய தெய்வங்களுக்கு
- falā yaṣilu
- فَلَا يَصِلُ
- சேராது
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِۖ
- அல்லாஹ்வின் பக்கம்
- wamā
- وَمَا
- எது
- kāna
- كَانَ
- ஆகிவிட்டது
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- fahuwa
- فَهُوَ
- அது
- yaṣilu
- يَصِلُ
- சேரும்
- ilā shurakāihim
- إِلَىٰ شُرَكَآئِهِمْۗ
- அவர்களுடைய தெய்வங்களின் பக்கம்
- sāa
- سَآءَ
- கெட்டு விட்டது
- mā yaḥkumūna
- مَا يَحْكُمُونَ
- எது/தீர்ப்புசெய்கிறார்கள்
விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு "இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய தெய்வங்களுக்கு" என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாயிருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௬)Tafseer
وَكَذٰلِكَ زَيَّنَ لِكَثِيْرٍ مِّنَ الْمُشْرِكِيْنَ قَتْلَ اَوْلَادِهِمْ شُرَكَاۤؤُهُمْ لِيُرْدُوْهُمْ وَلِيَلْبِسُوْا عَلَيْهِمْ دِيْنَهُمْۗ وَلَوْ شَاۤءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ ١٣٧
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- இவ்வாறே
- zayyana
- زَيَّنَ
- அலங்கரித்தன
- likathīrin
- لِكَثِيرٍ
- அதிகமானோருக்கு
- mina l-mush'rikīna
- مِّنَ ٱلْمُشْرِكِينَ
- இணைவைப்பவர்களில்
- qatla
- قَتْلَ
- கொல்வதை
- awlādihim
- أَوْلَٰدِهِمْ
- தங்கள்குழந்தைகளை
- shurakāuhum
- شُرَكَآؤُهُمْ
- அவர்களுடைய ஷைத்தான்கள்
- liyur'dūhum
- لِيُرْدُوهُمْ
- அழிப்பதற்காக/அவர்களை
- waliyalbisū
- وَلِيَلْبِسُوا۟
- குழப்புவதற்காக
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- dīnahum walaw shāa
- دِينَهُمْۖ وَلَوْ شَآءَ
- அவர்களுடைய வழிபாட்டை/நாடியிருந்தால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- mā faʿalūhu
- مَا فَعَلُوهُۖ
- அவர்கள் செய்யவில்லை/அதை
- fadharhum
- فَذَرْهُمْ
- விடுங்கள்/அவர்களை
- wamā yaftarūna
- وَمَا يَفْتَرُونَ
- உடன்/எது/இட்டுக் கட்டுகிறார்கள்
இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௭)Tafseer
وَقَالُوْا هٰذِهٖٓ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ لَّا يَطْعَمُهَآ اِلَّا مَنْ نَّشَاۤءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا يَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَيْهَا افْتِرَاۤءً عَلَيْهِۗ سَيَجْزِيْهِمْ بِمَا كَانُوْا يَفْتَرُوْنَ ١٣٨
- waqālū
- وَقَالُوا۟
- கூறினர்
- hādhihi
- هَٰذِهِۦٓ
- இவை
- anʿāmun
- أَنْعَٰمٌ
- கால்நடைகள்
- waḥarthun
- وَحَرْثٌ
- இன்னும் விவசாயம்
- ḥij'run
- حِجْرٌ
- தடுக்கப்பட்டவை
- lā yaṭʿamuhā
- لَّا يَطْعَمُهَآ
- புசிக்கமாட்டார்/அவற்றை
- illā
- إِلَّا
- தவிர
- man
- مَن
- எவர்
- nashāu
- نَّشَآءُ
- நாடுகிறோம்
- bizaʿmihim
- بِزَعْمِهِمْ
- தங்கள் எண்ணப்படி
- wa-anʿāmun
- وَأَنْعَٰمٌ
- இன்னும் கால்நடைகள்
- ḥurrimat
- حُرِّمَتْ
- தடுக்கப்பட்டன
- ẓuhūruhā
- ظُهُورُهَا
- அவற்றின் முதுகுகள்
- wa-anʿāmun
- وَأَنْعَٰمٌ
- இன்னும் கால்நடைகள்
- lā yadhkurūna
- لَّا يَذْكُرُونَ
- கூறமாட்டார்கள்
- is'ma l-lahi
- ٱسْمَ ٱللَّهِ
- அல்லாஹ்வின் பெயரை
- ʿalayhā
- عَلَيْهَا
- அவற்றின் மீது
- if'tirāan
- ٱفْتِرَآءً
- இட்டுக்கட்டுகின்றனர்
- ʿalayhi
- عَلَيْهِۚ
- அவன் மீது
- sayajzīhim
- سَيَجْزِيهِم
- கூலி கொடுப்பான்/அவர்களுக்கு
- bimā
- بِمَا
- எதன் காரணமாக
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- yaftarūna
- يَفْتَرُونَ
- இட்டுக்கட்டுகின்றனர்
(அன்றி அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) "இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர் ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக்கூடாது" என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத் தக்க கூலியை (இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௮)Tafseer
وَقَالُوْا مَا فِيْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰٓى اَزْوَاجِنَاۚ وَاِنْ يَّكُنْ مَّيْتَةً فَهُمْ فِيْهِ شُرَكَاۤءُ ۗسَيَجْزِيْهِمْ وَصْفَهُمْۗ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ ١٣٩
- waqālū
- وَقَالُوا۟
- இன்னும் கூறினர்
- mā fī buṭūni
- مَا فِى بُطُونِ
- எவை/வயிறுகளில்
- hādhihi l-anʿāmi
- هَٰذِهِ ٱلْأَنْعَٰمِ
- இந்த கால்நடைகளின்
- khāliṣatun
- خَالِصَةٌ
- தூயது, மட்டும்
- lidhukūrinā
- لِّذُكُورِنَا
- எங்கள் ஆண்களுக்கு உரியது
- wamuḥarramun
- وَمُحَرَّمٌ
- இன்னும் தடுக்கப்பட்டது
- ʿalā azwājinā
- عَلَىٰٓ أَزْوَٰجِنَاۖ
- எங்கள்பெண்களுக்கு
- wa-in yakun
- وَإِن يَكُن
- அது இருந்தால்
- maytatan
- مَّيْتَةً
- செத்ததாக
- fahum fīhi
- فَهُمْ فِيهِ
- அவர்களும்/அதில்
- shurakāu
- شُرَكَآءُۚ
- பங்காளிகள்
- sayajzīhim
- سَيَجْزِيهِمْ
- கூலி கொடுப்பான்/அவர்களுக்கு
- waṣfahum
- وَصْفَهُمْۚ
- அவர்களுடைய வர்ணிப்பிற்கு
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- ஞானவான்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
அன்றி, அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) "இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்களுடைய ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்களுடைய பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு" (அப்போது பெண்களும் புசிக்கலாம்.) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர் களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௯)Tafseer
قَدْ خَسِرَ الَّذِيْنَ قَتَلُوْٓا اَوْلَادَهُمْ سَفَهًاۢ بِغَيْرِ عِلْمٍ وَّحَرَّمُوْا مَا رَزَقَهُمُ اللّٰهُ افْتِرَاۤءً عَلَى اللّٰهِ ۗقَدْ ضَلُّوْا وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ ࣖ ١٤٠
- qad khasira
- قَدْ خَسِرَ
- நஷ்டமடைந்து விட்டனர்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- qatalū
- قَتَلُوٓا۟
- கொன்றார்கள்
- awlādahum
- أَوْلَٰدَهُمْ
- தங்கள் பிள்ளைகளை
- safahan
- سَفَهًۢا
- மூடத்தனமாக
- bighayri ʿil'min
- بِغَيْرِ عِلْمٍ
- அறிவின்றி
- waḥarramū
- وَحَرَّمُوا۟
- இன்னும் தடுத்தார்கள்
- mā razaqahumu
- مَا رَزَقَهُمُ
- எதை/கொடுத்தான்/அவர்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- if'tirāan
- ٱفْتِرَآءً
- இட்டுக்கட்டுகின்றனர்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِۚ
- அல்லாஹ்வின் மீது
- qad ḍallū
- قَدْ ضَلُّوا۟
- வழிகெட்டனர்
- wamā kānū muh'tadīna
- وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ
- அவர்கள் இருக்கவில்லை/நேர்வழி பெற்றவர்களாக
எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் மக்களைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய்கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர் களன்று; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௦)Tafseer