Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௩௧

Qur'an Surah Al-An'am Verse 131

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ اَنْ لَّمْ يَكُنْ رَّبُّكَ مُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا غٰفِلُوْنَ (الأنعام : ٦)

dhālika
ذَٰلِكَ
That (is because)
அதற்குக் காரணம்
an lam yakun
أَن لَّمْ يَكُن
[that] not is
என்பதாகும்/இல்லை
rabbuka
رَّبُّكَ
your Lord
உமது இறைவன்
muh'lika
مُهْلِكَ
one who destroys
அழிப்பவனாக
l-qurā
ٱلْقُرَىٰ
the cities
நகரங்களை
biẓul'min
بِظُلْمٍ
for their wrongdoing
அநியாயத்தினால்
wa-ahluhā
وَأَهْلُهَا
while their people
இருக்க /அங்கு வசிப்பவர்கள்
ghāfilūna
غَٰفِلُونَ
(are) unaware
கவனமற்றவர்கள்

Transliteration:

Zaalika al lam yakkur Rabbuka muhlikal quraa bizulminw wa ahluhaa ghaafiloon (QS. al-ʾAnʿām:131)

English Sahih International:

That is because your Lord would not destroy the cities for wrongdoing while their people were unaware. (QS. Al-An'am, Ayah ௧௩௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! இவ்வாறு நபிமார்களை அனுப்புவதன் காரணமெல்லாம்) அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உங்களது இறைவன் இருக்கவில்லை என்பதுதான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௩௧)

Jan Trust Foundation

(இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதற்குக் காரணம், நகரங்களை அங்கு வசிப்பவர்கள் கவனமற்றவர்களாக இருக்க (அவர்களுடைய ஷிர்க் எனும்) அநியாயத்தினால் அழிப்பவனாக உமது இறைவன் இல்லை என்பதாகும்.