Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 11

Al-An'am

(al-ʾAnʿām)

௧௦௧

بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ ۗوَخَلَقَ كُلَّ شَيْءٍۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ١٠١

badīʿu
بَدِيعُ
நூதன படைப்பாளன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியின்
annā
أَنَّىٰ
எவ்வாறு?
yakūnu
يَكُونُ
இருக்கும்
lahu
لَهُۥ
அவனுக்கு
waladun
وَلَدٌ
சந்ததி
walam takun
وَلَمْ تَكُن
இல்லையே
lahu
لَّهُۥ
அவனுக்கு
ṣāḥibatun
صَٰحِبَةٌۖ
மனைவி
wakhalaqa
وَخَلَقَ
இன்னும் படைத்தான்
kulla shayin
كُلَّ شَىْءٍۖ
எல்லாவற்றையும்
wahuwa
وَهُوَ
அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவியே கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கின்றான். அன்றி, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௧)
Tafseer
௧௦௨

ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوْهُ ۚوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ وَّكِيْلٌ ١٠٢

dhālikumu
ذَٰلِكُمُ
அவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
rabbukum
رَبُّكُمْۖ
உங்கள் இறைவன்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
khāliqu
خَٰلِقُ
படைப்பாளன்
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
fa-uʿ'budūhu
فَٱعْبُدُوهُۚ
வணங்குங்கள்/அவனை
wahuwa
وَهُوَ
அவன்
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
wakīlun
وَكِيلٌ
கண்காணிப்பவன், பொறுப்பாளன்
இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவன் அவனே. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௨)
Tafseer
௧௦௩

لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَۚ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ ١٠٣

lā tud'rikuhu
لَّا تُدْرِكُهُ
அடையாது/அவனை
l-abṣāru
ٱلْأَبْصَٰرُ
பார்வைகள்
wahuwa
وَهُوَ
அவன்தான்
yud'riku
يُدْرِكُ
அடைகிறான்
l-abṣāra
ٱلْأَبْصَٰرَۖ
பார்வைகளை
wahuwa
وَهُوَ
அவன்
l-laṭīfu
ٱللَّطِيفُ
மிக நுட்பமானவன்
l-khabīru
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிந்தவன்
பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௩)
Tafseer
௧௦௪

قَدْ جَاۤءَكُمْ بَصَاۤىِٕرُ مِنْ رَّبِّكُمْۚ فَمَنْ اَبْصَرَ فَلِنَفْسِهٖۚ وَمَنْ عَمِيَ فَعَلَيْهَاۗ وَمَآ اَنَا۠ عَلَيْكُمْ بِحَفِيْظٍ ١٠٤

qad
قَدْ
வந்துவிட்டன
jāakum
جَآءَكُم
உங்களுக்கு
baṣāiru
بَصَآئِرُ
ஆதாரங்கள்
min
مِن
இருந்து
rabbikum
رَّبِّكُمْۖ
உங்கள் இறைவன்
faman
فَمَنْ
எனவே எவர்
abṣara
أَبْصَرَ
பார்த்தாரோ
falinafsihi
فَلِنَفْسِهِۦۖ
அவருக்குத்தான் நன்மை
waman
وَمَنْ
இன்னும் எவர்
ʿamiya
عَمِىَ
குருடாகி விட்டாரோ
faʿalayhā
فَعَلَيْهَاۚ
அவருக்குத்தான் கேடாகும்
wamā anā
وَمَآ أَنَا۠
நான் இல்லை
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
biḥafīẓin
بِحَفِيظٍ
காவலனாக
உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கின்றானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கின்றானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நான் உங்களைக் காப்பவன் அல்ல" (என்று கூறுங்கள்). ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௪)
Tafseer
௧௦௫

وَكَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ وَلِيَقُوْلُوْا دَرَسْتَ وَلِنُبَيِّنَهٗ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ ١٠٥

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறு
nuṣarrifu
نُصَرِّفُ
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
waliyaqūlū
وَلِيَقُولُوا۟
இன்னும் அவர்கள்சொல்வதற்கு
darasta
دَرَسْتَ
படித்தீர்
walinubayyinahu
وَلِنُبَيِّنَهُۥ
இன்னும் நாம் தெளிவுபடுத்துவதற்காக/அதை
liqawmin
لِقَوْمٍ
மக்களுக்கு
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிவார்கள்
(இதனை) நீங்கள் (எங்களுக்கு) நன்கு ஓதிக்காண்பித்(து அறிவித்)தீர்கள் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறியக்கூடிய மக்களுக்கு நாம் இதனைத் தெளிவாக்குவதற்காகவும், (நம்முடைய) வசனங்களை இவ்வாறு பலவாறாக (அடிக்கடி) விவரிக்கின்றோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௫)
Tafseer
௧௦௬

اِتَّبِعْ مَآ اُوْحِيَ اِلَيْكَ مِنْ رَّبِّكَۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ ١٠٦

ittabiʿ
ٱتَّبِعْ
பின்பற்றுவீராக
mā ūḥiya
مَآ أُوحِىَ
எதை/வஹீ அறிவிக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உமக்கு
min
مِن
இருந்து
rabbika
رَّبِّكَۖ
உம் இறைவன்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குறியவன்
illā huwa
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
wa-aʿriḍ
وَأَعْرِضْ
இன்னும் புறக்கணிப்பீராக
ʿani l-mush'rikīna
عَنِ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களை
(நபியே!) உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீங்கள் பின்பற்றுங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனுக்கு) இணைவைப்பவர்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௬)
Tafseer
௧௦௭

وَلَوْ شَاۤءَ اللّٰهُ مَآ اَشْرَكُوْاۗ وَمَا جَعَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًاۚ وَمَآ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ ١٠٧

walaw shāa
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mā ashrakū
مَآ أَشْرَكُوا۟ۗ
இணைவைத்திருக்க மாட்டார்கள்
wamā jaʿalnāka
وَمَا جَعَلْنَٰكَ
நாம் ஆக்கவில்லை/உம்மை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ḥafīẓan
حَفِيظًاۖ
காவலராக
wamā anta
وَمَآ أَنتَ
இன்னும் நீர் இல்லை
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
biwakīlin
بِوَكِيلٍ
பொறுப்பாளராக
அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மீது காப்பாளராக நாம் உங்களை ஏற்படுத்தவில்லை. நீங்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புடையவருமல்ல. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௭)
Tafseer
௧௦௮

وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍۗ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْۖ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٠٨

walā tasubbū
وَلَا تَسُبُّوا۟
திட்டாதீர்கள்
alladhīna yadʿūna
ٱلَّذِينَ يَدْعُونَ
எவர்களை/வணங்குகிறார்கள்
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
fayasubbū
فَيَسُبُّوا۟
அதனால் திட்டுவார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ʿadwan
عَدْوًۢا
வரம்பு மீறி
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍۗ
அறிவின்றி
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
zayyannā
زَيَّنَّا
அலங்கரித்தோம்
likulli
لِكُلِّ
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
வகுப்பினர்
ʿamalahum
عَمَلَهُمْ
அவர்களுடைய செயல்களை
thumma ilā rabbihim
ثُمَّ إِلَىٰ رَبِّهِم
அவர்களுடைய இறைவனிடமே
marjiʿuhum
مَّرْجِعُهُمْ
மீட்சி/அவர்களுடைய
fayunabbi-uhum
فَيُنَبِّئُهُم
ஆகவே அறிவிப்பான்/அவர்களுக்கு
bimā kānū yaʿmalūna
بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
எதை/இருந்தார்கள்/செய்வார்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௮)
Tafseer
௧௦௯

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَىِٕنْ جَاۤءَتْهُمْ اٰيَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَاۗ قُلْ اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ وَمَا يُشْعِرُكُمْ اَنَّهَآ اِذَا جَاۤءَتْ لَا يُؤْمِنُوْنَ ١٠٩

wa-aqsamū
وَأَقْسَمُوا۟
சத்தியம் செய்தனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
jahda
جَهْدَ
உறுதியாக
aymānihim
أَيْمَٰنِهِمْ
அவர்களின் சத்தியம்
la-in jāathum
لَئِن جَآءَتْهُمْ
வந்தால்/அவர்களிடம்
āyatun
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
layu'minunna
لَّيُؤْمِنُنَّ
நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள்
bihā
بِهَاۚ
அதை
qul
قُلْ
கூறுவீராக
innamā l-āyātu
إِنَّمَا ٱلْءَايَٰتُ
எல்லாம்/அத்தாட்சிகள்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடமே
wamā yush'ʿirukum
وَمَا يُشْعِرُكُمْ
நீங்கள் அறிவீர்களா?
annahā
أَنَّهَآ
நிச்சயமாக அவை
idhā jāat
إِذَا جَآءَتْ
வந்தால்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
(அவர்கள் விருப்பப்படி) யாதொரு அத்தாட்சி தங்களுக்காக வரும் சமயத்தில், "நிச்சயமாக நாங்கள் அதனை நம்புவோம்" என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (அதற்கு நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுங்கள். (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) வரும் சமயத்திலும் அதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா? ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௦௯)
Tafseer
௧௧௦

وَنُقَلِّبُ اَفْـِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوْا بِهٖٓ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ ࣖ ۔ ١١٠

wanuqallibu afidatahum
وَنُقَلِّبُ أَفْـِٔدَتَهُمْ
புரட்டுகிறோம்/உள்ளங்களை/அவர்களுடைய
wa-abṣārahum
وَأَبْصَٰرَهُمْ
இன்னும் பார்வைகளை/அவர்களுடைய
kamā
كَمَا
போன்று
lam yu'minū
لَمْ يُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை
bihi
بِهِۦٓ
இதை
awwala
أَوَّلَ
முதல்
marratin
مَرَّةٍ
முறையாக
wanadharuhum
وَنَذَرُهُمْ
விடுகிறோம்/அவர்களை
fī ṭugh'yānihim
فِى طُغْيَٰنِهِمْ
அட்டூழியத்தில்/அவர்களுடைய
yaʿmahūna
يَعْمَهُونَ
கடுமையாக அட்டூழியம் செய்வார்கள்
முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கின்றோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧௦)
Tafseer