Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௦௫

Qur'an Surah Al-An'am Verse 105

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ وَلِيَقُوْلُوْا دَرَسْتَ وَلِنُبَيِّنَهٗ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ (الأنعام : ٦)

wakadhālika
وَكَذَٰلِكَ
And thus
இவ்வாறு
nuṣarrifu
نُصَرِّفُ
We explain
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
the Signs
வசனங்களை
waliyaqūlū
وَلِيَقُولُوا۟
that they (may) say
இன்னும் அவர்கள்சொல்வதற்கு
darasta
دَرَسْتَ
"You have studied"
படித்தீர்
walinubayyinahu
وَلِنُبَيِّنَهُۥ
and that We (may) make it clear
இன்னும் நாம் தெளிவுபடுத்துவதற்காக/அதை
liqawmin
لِقَوْمٍ
for a people
மக்களுக்கு
yaʿlamūna
يَعْلَمُونَ
who know
அறிவார்கள்

Transliteration:

Wa kazaalika nusarriful Aayaati wa liyaqooloo darasta wa linubaiyinahoo liqawminy ya'lamoon (QS. al-ʾAnʿām:105)

English Sahih International:

And thus do We diversify the verses so they [i.e., the disbelievers] will say, "You have studied," and so We may make it [i.e., the Quran] clear for a people who know. (QS. Al-An'am, Ayah ௧௦௫)

Abdul Hameed Baqavi:

(இதனை) நீங்கள் (எங்களுக்கு) நன்கு ஓதிக்காண்பித்(து அறிவித்)தீர்கள் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறியக்கூடிய மக்களுக்கு நாம் இதனைத் தெளிவாக்குவதற்காகவும், (நம்முடைய) வசனங்களை இவ்வாறு பலவாறாக (அடிக்கடி) விவரிக்கின்றோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௦௫)

Jan Trust Foundation

நீர் (பல வேதங்களிலிருந்து) பாடம் படித்து வந்தீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும், இன்னும், அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறு விளக்குகிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நேர்வழி நாடுவோர் நேர்வழி பெற) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம். இன்னும், நீர் படித்தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறிகின்ற மக்களுக்கு நாம் அதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் (நம் வசனங்களை விவரிக்கிறோம்).