Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 2

Al-Ma'idah

(al-Māʾidah)

௧௧

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ يَّبْسُطُوْٓا اِلَيْكُمْ اَيْدِيَهُمْ فَكَفَّ اَيْدِيَهُمْ عَنْكُمْۚ وَاتَّقُوا اللّٰهَ ۗوَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ࣖ ١١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
udh'kurū
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
niʿ'mata
نِعْمَتَ
அருளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
idh hamma
إِذْ هَمَّ
போது/நாடினர்
qawmun
قَوْمٌ
ஒரு சமுதாயம்
an yabsuṭū
أَن يَبْسُطُوٓا۟
அவர்கள் நீட்டுவதற்கு
ilaykum
إِلَيْكُمْ
உங்கள் பக்கம்
aydiyahum
أَيْدِيَهُمْ
தங்கள் கரங்களை
fakaffa
فَكَفَّ
தடுத்தான்
aydiyahum
أَيْدِيَهُمْ
அவர்களுடைய கரங்களை
ʿankum
عَنكُمْۖ
உங்களை விட்டு
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ் மீது
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கட்டும்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது கைகளை உங்களை விட்டுத் தடுத்து உங்களுக்குப் புரிந்த அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். மேலும், நம்பிக்கை கொண்ட அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧)
Tafseer
௧௨

۞ وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَۚ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيْبًاۗ وَقَالَ اللّٰهُ اِنِّيْ مَعَكُمْ ۗ لَىِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَيْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِيْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَلَاُدْخِلَنَّكُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۚ فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاۤءَ السَّبِيْلِ ١٢

walaqad
وَلَقَدْ
திட்டமாக
akhadha
أَخَذَ
வாங்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mīthāqa
مِيثَٰقَ
உறுதிமொழி
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களின்
wabaʿathnā
وَبَعَثْنَا
இன்னும் அனுப்பினோம்
min'humu
مِنْهُمُ
அவர்களிலிருந்து
ith'nay ʿashara
ٱثْنَىْ عَشَرَ
பன்னிரெண்டு
naqīban
نَقِيبًاۖ
தலைவரை
waqāla
وَقَالَ
இன்னும் கூறினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
maʿakum
مَعَكُمْۖ
உங்களுடன்
la-in aqamtumu
لَئِنْ أَقَمْتُمُ
நீங்கள் நிலைநிறுத்தினால்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātaytumu
وَءَاتَيْتُمُ
இன்னும் நீங்கள் கொடுத்தீர்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
waāmantum
وَءَامَنتُم
இன்னும் நம்பிக்கை கொண்டீர்கள்
birusulī
بِرُسُلِى
என் தூதர்களை
waʿazzartumūhum
وَعَزَّرْتُمُوهُمْ
இன்னும் அவர்களுக்கு உதவிபுரிந்தீர்கள்
wa-aqraḍtumu
وَأَقْرَضْتُمُ
இன்னும் நீங்கள் கடன் கொடுத்தால்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
qarḍan ḥasanan
قَرْضًا حَسَنًا
கடன்/அழகியது
la-ukaffiranna
لَّأُكَفِّرَنَّ
நிச்சயமாக அகற்றிடுவேன்
ʿankum
عَنكُمْ
உங்களைவிட்டு
sayyiātikum
سَيِّـَٔاتِكُمْ
உங்கள் பாவங்களை
wala-ud'khilannakum
وَلَأُدْخِلَنَّكُمْ
இன்னும் நிச்சயமாக நுழைப்பேன்/உங்களை
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
இருந்து/அதன் கீழே
l-anhāru
ٱلْأَنْهَٰرُۚ
நதிகள்
faman
فَمَن
எவர்
kafara
كَفَرَ
நிராகரிப்பார்
baʿda
بَعْدَ
பின்னர்
dhālika
ذَٰلِكَ
இதற்கு
minkum
مِنكُمْ
உங்களில்
faqad
فَقَدْ
திட்டமாக
ḍalla
ضَلَّ
வழி தவறிவிட்டார்
sawāa
سَوَآءَ
நடு (நேரான)
l-sabīli
ٱلسَّبِيلِ
வழி
நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கின்றான். அன்றி, அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் அனுப்பி இருக்கின்றோம். (அவ்வாறு உறுதிமொழி வாங்கிய சமயத்தில் அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, (கஷ்டத்திலிருப்பவர்களுக்கு) அல்லாஹ்வுக்காக அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவைகளை) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் உங்களை நுழைய வைப்பேன்" என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௨)
Tafseer
௧௩

فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِيَةً ۚ يُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰى خَاۤىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ۗاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ ١٣

fabimā naqḍihim
فَبِمَا نَقْضِهِم
ஆகவே அவர்கள் முறித்த காரணத்தால்
mīthāqahum
مِّيثَٰقَهُمْ
உறுதி மொழியை/தங்கள்
laʿannāhum
لَعَنَّٰهُمْ
சபித்தோம்/அவர்களை
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
qulūbahum
قُلُوبَهُمْ
உள்ளங்களை/அவர்களுடைய
qāsiyatan
قَٰسِيَةًۖ
இறுக்கமானதாக
yuḥarrifūna
يُحَرِّفُونَ
புரட்டுகிறார்கள்
l-kalima
ٱلْكَلِمَ
வசனங்களை
ʿan
عَن
இருந்து
mawāḍiʿihi
مَّوَاضِعِهِۦۙ
அதன் இடங்கள்
wanasū
وَنَسُوا۟
இன்னும் மறந்தார்கள்
ḥaẓẓan
حَظًّا
ஒரு பாகத்தை
mimmā
مِّمَّا
எதிலிருந்து
dhukkirū bihi
ذُكِّرُوا۟ بِهِۦۚ
உபதேசிக்கப்பட்டார்கள்/அதை
walā tazālu taṭṭaliʿu
وَلَا تَزَالُ تَطَّلِعُ
கண்டுகொண்டே இருப்பீர்
ʿalā khāinatin
عَلَىٰ خَآئِنَةٍ
மோசடியை
min'hum
مِّنْهُمْ
அவர்களிடமிருந்து
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًا
சிலரை
min'hum
مِّنْهُمْۖ
அவர்களில்
fa-uʿ'fu
فَٱعْفُ
ஆகவே மன்னிப்பீராக
ʿanhum
عَنْهُمْ
அவர்களை
wa-iṣ'faḥ
وَٱصْفَحْۚ
இன்னும் புறக்கணிப்பீராக
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நற்பண்பாளர்களை
அவர்கள் தங்களுடைய உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டு கின்றார்கள். அன்றி, (நம்முடைய இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர்கள். ஆகவே, இ(வ்)வ(ற்ப)ர்களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௩)
Tafseer
௧௪

وَمِنَ الَّذِيْنَ قَالُوْٓا اِنَّا نَصٰرٰٓى اَخَذْنَا مِيْثَاقَهُمْ فَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖۖ فَاَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاۤءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ۗ وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللّٰهُ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ ١٤

wamina alladhīna
وَمِنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
qālū
قَالُوٓا۟
கூறினர்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
naṣārā
نَصَٰرَىٰٓ
கிறிஸ்த்தவர்கள்
akhadhnā
أَخَذْنَا
வாங்கினோம்
mīthāqahum
مِيثَٰقَهُمْ
அவர்களுடைய உறுதிமொழியை
fanasū
فَنَسُوا۟
மறந்தார்கள்
ḥaẓẓan
حَظًّا
ஒரு பகுதியை
mimmā
مِّمَّا
எதிலிருந்து
dhukkirū
ذُكِّرُوا۟
உபதேசிக்கப்பட்டார்கள்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
fa-aghraynā
فَأَغْرَيْنَا
ஆகவே மூட்டினோம்
baynahumu
بَيْنَهُمُ
அவர்களுக்கு மத்தியில்
l-ʿadāwata
ٱلْعَدَاوَةَ
பகைமையை
wal-baghḍāa
وَٱلْبَغْضَآءَ
இன்னும் வெறுப்பை
ilā yawmi l-qiyāmati
إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِۚ
வரை/மறுமை நாள்
wasawfa yunabbi-uhumu
وَسَوْفَ يُنَبِّئُهُمُ
அவர்களுக்கு அறிவிப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bimā
بِمَا
எதை
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
yaṣnaʿūna
يَصْنَعُونَ
செய்கிறார்கள்
அன்றி, எவர்கள் தங்களை "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" எனக் கூறுகின்றார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கின்றோம். எனினும், அவர்களும் (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில்) தங்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தை மறந்து விட்டார்கள். ஆதலால், அவர்களுக்குள் பகைமையையும் கோபத்தையும் மறுமை நாள் வரையில் (நீங்காதிருக்கும்படி) மூட்டி விட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௪)
Tafseer
௧௫

يٰٓاَهْلَ الْكِتٰبِ قَدْ جَاۤءَكُمْ رَسُوْلُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍەۗ قَدْ جَاۤءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌۙ ١٥

yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
qad
قَدْ
திட்டமாக வந்து விட்டார்
jāakum
جَآءَكُمْ
உங்களிடம்
rasūlunā
رَسُولُنَا
நம் தூதர்
yubayyinu
يُبَيِّنُ
தெளிவுபடுத்துவார்
lakum
لَكُمْ
உங்களுக்கு
kathīran
كَثِيرًا
பலவற்றை
mimmā
مِّمَّا
எதிலிருந்து
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
tukh'fūna
تُخْفُونَ
மறைக்கிறீர்கள்
mina l-kitābi
مِنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
wayaʿfū
وَيَعْفُوا۟
இன்னும் விட்டுவிடுவார்
ʿan kathīrin
عَن كَثِيرٍۚ
பலவற்றை
qad
قَدْ
திட்டமாக வந்து விட்டது
jāakum
جَآءَكُم
உங்களிடம்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
nūrun
نُورٌ
ஓர் ஒளி
wakitābun
وَكِتَٰبٌ
இன்னும் ஒரு வேதம்
mubīnun
مُّبِينٌ
தெளிவானது
வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௫)
Tafseer
௧௬

يَّهْدِيْ بِهِ اللّٰهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلٰمِ وَيُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ بِاِذْنِهٖ وَيَهْدِيْهِمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ١٦

yahdī
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
bihi
بِهِ
அதன் மூலமாக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mani
مَنِ
எவர்கள்
ittabaʿa
ٱتَّبَعَ
பின்பற்றினார்(கள்)
riḍ'wānahu
رِضْوَٰنَهُۥ
அவனின் பொருத்தத்தை
subula
سُبُلَ
பாதைகளை
l-salāmi
ٱلسَّلَٰمِ
ஈடேற்றத்தின்
wayukh'rijuhum
وَيُخْرِجُهُم
இன்னும் வெளியேற்றுகிறான்/அவர்களை
mina l-ẓulumāti
مِّنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
ilā
إِلَى
பக்கம்
l-nūri
ٱلنُّورِ
ஒளி
bi-idh'nihi
بِإِذْنِهِۦ
தன் கட்டளைப்படி
wayahdīhim
وَيَهْدِيهِمْ
இன்னும் அவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான்
ilā ṣirāṭin
إِلَىٰ صِرَٰطٍ
பக்கம்/வழி
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேர்
(உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகின்றார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகின்றான். அன்றி, இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகின்றான். தவிர, அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௬)
Tafseer
௧௭

لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَۗ قُلْ فَمَنْ يَّمْلِكُ مِنَ اللّٰهِ شَيْـًٔا اِنْ اَرَادَ اَنْ يُّهْلِكَ الْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗ وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۗوَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ۗ يَخْلُقُ مَا يَشَاۤءُ ۗوَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١٧

laqad
لَّقَدْ
திட்டவட்டமாக
kafara
كَفَرَ
நிராகரித்தனர்
alladhīna qālū
ٱلَّذِينَ قَالُوٓا۟
எவர்கள்/கூறினர்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
huwa
هُوَ
அவன்
l-masīḥu
ٱلْمَسِيحُ
மஸீஹ்தான்
ub'nu
ٱبْنُ
மகன்
maryama
مَرْيَمَۚ
மர்யமுடைய
qul
قُلْ
கூறுவீராக
faman
فَمَن
யார்
yamliku
يَمْلِكُ
சக்தி பெறுவான்
mina
مِنَ
இடம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
shayan
شَيْـًٔا
ஒரு சிறிதும்
in arāda
إِنْ أَرَادَ
நாடினால்
an yuh'lika
أَن يُهْلِكَ
அவன் அழிப்பதை
l-masīḥa
ٱلْمَسِيحَ
மஸீஹை
ib'na
ٱبْنَ
மகன்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
wa-ummahu
وَأُمَّهُۥ
இன்னும் அவருடைய தாயை
waman
وَمَن
யார்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
jamīʿan
جَمِيعًاۗ
அனைவரையும்
walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَاۚ
இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்
yakhluqu
يَخْلُقُ
படைக்கிறான்
mā yashāu
مَا يَشَآءُۚ
எதை/நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீதும்
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
எவர்கள், மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர் களாகவே இருக்கின்றனர். ஆகவே (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், உலகத்திலுள்ள (மற்ற) அனைத்தையும் அல்லாஹ் அழித்துவிடக் கருதினால் (அவனைத் தடுக்க) எவன்தான் சிறிதேனும் சக்தி பெறுவான்? (ஏனென்றால், வானங்கள், பூமி இன்னும் இவைகளுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியதை படைக்கின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவனாக இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௭)
Tafseer
௧௮

وَقَالَتِ الْيَهُوْدُ وَالنَّصٰرٰى نَحْنُ اَبْنٰۤؤُ اللّٰهِ وَاَحِبَّاۤؤُهٗ ۗ قُلْ فَلِمَ يُعَذِّبُكُمْ بِذُنُوْبِكُمْ ۗ بَلْ اَنْتُمْ بَشَرٌ مِّمَّنْ خَلَقَۗ يَغْفِرُ لِمَنْ يَّشَاۤءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَاۤءُۗ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖوَاِلَيْهِ الْمَصِيْرُ ١٨

waqālati
وَقَالَتِ
கூறினர்
l-yahūdu
ٱلْيَهُودُ
யூதர்கள்
wal-naṣārā
وَٱلنَّصَٰرَىٰ
இன்னும் கிறித்தவர்கள்
naḥnu
نَحْنُ
நாங்கள்
abnāu
أَبْنَٰٓؤُا۟
பிள்ளைகள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
wa-aḥibbāuhu
وَأَحِبَّٰٓؤُهُۥۚ
இன்னும் அவனுடைய நேசர்கள்
qul
قُلْ
கூறுவீராக
falima yuʿadhibukum
فَلِمَ يُعَذِّبُكُم
அவ்வாறாயின் ஏன்/வேதனை செய்கிறான்/உங்களை
bidhunūbikum
بِذُنُوبِكُمۖ
உங்கள் குற்றங்களுக்காக
bal
بَلْ
மாறாக
antum
أَنتُم
நீங்கள்
basharun
بَشَرٌ
மனிதர்கள்
mimman
مِّمَّنْ
எவர்களில்
khalaqa
خَلَقَۚ
படைத்தான்
yaghfiru
يَغْفِرُ
மன்னிக்கிறான்
liman yashāu
لِمَن يَشَآءُ
எவர்களை/நாடுகிறான்
wayuʿadhibu
وَيُعَذِّبُ
இன்னும் வேதனை செய்கிறான்
man yashāu
مَن يَشَآءُۚ
எவர்களை/நாடுகிறான்
walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்குரியதே
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَاۖ
இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்
wa-ilayhi
وَإِلَيْهِ
அவனளவில்தான்
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடம்
யூதர்களும், கிறிஸ்தவர்களும் "நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகளாகவும் அவனுடைய அன்பிற்குரியவர்களாகவும் இருக்கின்றோம்" என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக (இறைவன்) உங்களை ஏன் (அடிக்கடி துன்புறுத்தித்) தண்டிக்கிறான்? (உண்மை) அவ்வாறன்று. நீங்களும் அவனால் படைக்கப்பட்ட (மற்ற) மனிதர்கள் (போன்று)தான். (நீங்கள் அவனுக்குப் பிறந்த பிள்ளை களல்ல. ஆகவே உங்களிலும்) அவன் நாடியவர்களை மன்னிக்கின்றான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கின்றான். வானங்கள், பூமி இவைகளுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவனளவில்தான் (அனைவரும்) செல்ல வேண்டியதாக இருக்கின்றது. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௮)
Tafseer
௧௯

يٰٓاَهْلَ الْكِتٰبِ قَدْ جَاۤءَكُمْ رَسُوْلُنَا يُبَيِّنُ لَكُمْ عَلٰى فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَاۤءَنَا مِنْۢ بَشِيْرٍ وَّلَا نَذِيْرٍۗ فَقَدْ جَاۤءَكُمْ بَشِيْرٌ وَّنَذِيْرٌ ۗوَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ ١٩

yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
qad
قَدْ
வந்துவிட்டார்
jāakum
جَآءَكُمْ
உங்களிடம்
rasūlunā
رَسُولُنَا
நம் தூதர்
yubayyinu
يُبَيِّنُ
தெளிவுபடுத்துகிறார்
lakum
لَكُمْ
உங்களிடம்
ʿalā fatratin
عَلَىٰ فَتْرَةٍ
இடைவெளியில்
mina l-rusuli
مِّنَ ٱلرُّسُلِ
தூதர்களின்
an taqūlū
أَن تَقُولُوا۟
நீங்கள் கூறாதிருக்க
مَا
வரவில்லை
jāanā
جَآءَنَا
வரவில்லை எங்களுக்கு
min
مِنۢ
எவரும்
bashīrin
بَشِيرٍ
நற்செய்தி கூறுபவர்
walā
وَلَا
இன்னும் இல்லை
nadhīrin
نَذِيرٍۖ
எச்சரிப்பவர்
faqad
فَقَدْ
உறுதியாக
jāakum
جَآءَكُم
வந்துவிட்டார் உங்களிடம்
bashīrun
بَشِيرٌ
நற்செய்தி கூறுபவர்
wanadhīrun
وَنَذِيرٌۗ
இன்னும் எச்சரிப்பவர்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீதும்
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர் இதுவரையில்) தூதர்கள் வராது தடைப்பட்டிருந்த காலத்தில் "நற்செய்தி கூறவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் கூடிய (ஒரு தூது)வர் எங்களிடம் வரவேயில்லை" என்று நீங்கள் (குறை) கூறாதிருக்க, (மார்க்கக் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக அறிவிக்கக்கூடிய நம்முடைய (இத்)தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். அவர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவுமே இருக்கின்றார். அல்லாஹ், அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௯)
Tafseer
௨௦

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْۢبِيَاۤءَ وَجَعَلَكُمْ مُّلُوْكًاۙ وَّاٰتٰىكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ ٢٠

wa-idh qāla
وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை...
mūsā
مُوسَىٰ
மூஸா
liqawmihi
لِقَوْمِهِۦ
தன் சமுதாயத்திற்கு
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
udh'kurū
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
niʿ'mata
نِعْمَةَ
அருளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
idh jaʿala
إِذْ جَعَلَ
அந்நேரத்தில்/ ஆக்கினான்
fīkum
فِيكُمْ
உங்களில்
anbiyāa
أَنۢبِيَآءَ
நபிமார்களை
wajaʿalakum
وَجَعَلَكُم
ஆக்கினான்/உங்களை
mulūkan
مُّلُوكًا
அரசர்களாக
waātākum
وَءَاتَىٰكُم
இன்னும் கொடுத்தான்/உங்களுக்கு
مَّا
எவற்றை
lam yu'ti
لَمْ يُؤْتِ
கொடுக்கவில்லை
aḥadan
أَحَدًا
ஒருவருக்கும்
mina l-ʿālamīna
مِّنَ ٱلْعَٰلَمِينَ
உலகத்தாரில்
அன்றி, மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், "மன்னுஸல்வா" என்ற உணவு போன்ற)வைகளையும் உங்களுக்கு அளித்திருக்கின்றான்" என்று கூறியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௨௦)
Tafseer