وَاِذْ اَوْحَيْتُ اِلَى الْحَوَارِيّٖنَ اَنْ اٰمِنُوْا بِيْ وَبِرَسُوْلِيْ ۚ قَالُوْٓا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّنَا مُسْلِمُوْنَ ١١١
- wa-idh
- وَإِذْ
- சமயத்தை நினைவு கூர்வீராக
- awḥaytu
- أَوْحَيْتُ
- வஹீ அறிவித்தேன்
- ilā l-ḥawāriyīna
- إِلَى ٱلْحَوَارِيِّۦنَ
- பக்கம்/சிஷ்யர்கள்
- an āminū bī
- أَنْ ءَامِنُوا۟ بِى
- நம்பிக்கை கொள்ளுங்கள் என்று/என்னை
- wabirasūlī
- وَبِرَسُولِى
- இன்னும் என் தூதரை
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- wa-ish'had
- وَٱشْهَدْ
- இன்னும் சாட்சியளிப்பீராக
- bi-annanā
- بِأَنَّنَا
- நிச்சயமாக நாங்கள்
- mus'limūna
- مُسْلِمُونَ
- முஸ்லிம்கள்
அன்றி, என்னையும், என்னுடைய தூதரையும் (அதாவது உங்களையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உங்களது) சிஷ்யர்களுக்கு நான் வஹீயின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (உங்களுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்! என்று கூறியதையும் நினைத்துப் பாருங்கள்" (என்றும் அந்நாளில் கூறுவான்.) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௧)Tafseer
اِذْ قَالَ الْحَوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَاۤىِٕدَةً مِّنَ السَّمَاۤءِ ۗقَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ١١٢
- idh qāla
- إِذْ قَالَ
- கூறிய சமயம்
- l-ḥawāriyūna
- ٱلْحَوَارِيُّونَ
- சிஷ்யர்கள்
- yāʿīsā
- يَٰعِيسَى
- ஈஸாவே
- ib'na
- ٱبْنَ
- மகன்
- maryama
- مَرْيَمَ
- மர்யமுடைய
- hal yastaṭīʿu
- هَلْ يَسْتَطِيعُ
- இயலுவானா?
- rabbuka
- رَبُّكَ
- உம் இறைவன்
- an yunazzila
- أَن يُنَزِّلَ
- அவன் இறக்குவதற்கு
- ʿalaynā
- عَلَيْنَا
- எங்கள் மீது
- māidatan
- مَآئِدَةً
- ஓர் உணவுத் தட்டை
- mina l-samāi
- مِّنَ ٱلسَّمَآءِۖ
- வானத்திலிருந்து
- qāla
- قَالَ
- கூறினார்
- ittaqū
- ٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- in kuntum
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
தவிர (நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்களுடைய இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?" என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) "மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௨)Tafseer
قَالُوْا نُرِيْدُ اَنْ نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَىِٕنَّ قُلُوْبُنَا وَنَعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ ١١٣
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- nurīdu
- نُرِيدُ
- நாடுகிறோம்
- an nakula
- أَن نَّأْكُلَ
- நாங்கள் புசிப்பதற்கு
- min'hā
- مِنْهَا
- அதிலிருந்து
- wataṭma-inna
- وَتَطْمَئِنَّ
- இன்னும் திருப்தியடைவதற்கு
- qulūbunā
- قُلُوبُنَا
- எங்கள் உள்ளங்கள்
- wanaʿlama
- وَنَعْلَمَ
- இன்னும் நாங்கள் அறிவதற்கு
- an
- أَن
- என்று
- qad
- قَدْ
- உறுதியாக
- ṣadaqtanā
- صَدَقْتَنَا
- உண்மைகூறினீர்/எங்களிடம்
- wanakūna
- وَنَكُونَ
- நாங்கள் ஆகிவிடுவதற்கு
- ʿalayhā
- عَلَيْهَا
- அதன் மீது
- mina l-shāhidīna
- مِنَ ٱلشَّٰهِدِينَ
- சாட்சியாளர்களில்
அதற்கவர்கள், அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், அன்றி நீங்கள் (உங்களுடைய தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர்கள் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகின்றோம்" என்று கூறினார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௩)Tafseer
قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللهم رَبَّنَآ اَنْزِلْ عَلَيْنَا مَاۤىِٕدَةً مِّنَ السَّمَاۤءِ تَكُوْنُ لَنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ ١١٤
- qāla
- قَالَ
- கூறினார்
- ʿīsā
- عِيسَى
- ஈஸா
- ub'nu
- ٱبْنُ
- மகன்
- maryama
- مَرْيَمَ
- மர்யமுடைய
- l-lahuma
- ٱللَّهُمَّ
- அல்லாஹ்வே
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- anzil
- أَنزِلْ
- இறக்கு
- ʿalaynā
- عَلَيْنَا
- எங்கள் மீது
- māidatan
- مَآئِدَةً
- ஓர் உணவுத் தட்டை
- mina
- مِّنَ
- இருந்து
- l-samāi
- ٱلسَّمَآءِ
- வானம்
- takūnu
- تَكُونُ
- அது இருக்கும்
- lanā
- لَنَا
- எங்களுக்கு
- ʿīdan
- عِيدًا
- ஒரு பெருநாளாக
- li-awwalinā
- لِّأَوَّلِنَا
- எங்கள் முன் இருப்பவர்களுக்கு
- waākhirinā
- وَءَاخِرِنَا
- இன்னும் எங்களுக்குப் பின் வருபவர்களுக்கு
- waāyatan
- وَءَايَةً
- இன்னும் ஓர் அத்தாட்சியாக
- minka
- مِّنكَۖ
- உன்னிடமிருந்து
- wa-ur'zuq'nā
- وَٱرْزُقْنَا
- இன்னும் எங்களுக்கு உணவளி
- wa-anta khayru
- وَأَنتَ خَيْرُ
- நீ மிகச் சிறந்தவன்
- l-rāziqīna
- ٱلرَّٰزِقِينَ
- உணவளிப்பவர்களில்
அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா "எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னுடைய (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௪)Tafseer
قَالَ اللّٰهُ اِنِّيْ مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّيْٓ اُعَذِّبُهٗ عَذَابًا لَّآ اُعَذِّبُهٗٓ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ ࣖ ١١٥
- qāla
- قَالَ
- கூறினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- munazziluhā
- مُنَزِّلُهَا
- அதை இறக்குவேன்
- ʿalaykum
- عَلَيْكُمْۖ
- உங்கள் மீது
- faman
- فَمَن
- ஆகவே எவர்
- yakfur
- يَكْفُرْ
- நிராகரிப்பாரோ
- baʿdu
- بَعْدُ
- பின்னர்
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- fa-innī
- فَإِنِّىٓ
- நிச்சயமாக நான்
- uʿadhibuhu
- أُعَذِّبُهُۥ
- வேதனை செய்வேன்/ அவருக்கு
- ʿadhāban
- عَذَابًا
- வேதனையால்
- lā uʿadhibuhu
- لَّآ أُعَذِّبُهُۥٓ
- தண்டிக்க மாட்டேன்/அதைக்கொண்டு
- aḥadan
- أَحَدًا
- ஒருவரையும்
- mina l-ʿālamīna
- مِّنَ ٱلْعَٰلَمِينَ
- உலகத்தாரில்
அதற்கு அல்லாஹ் "நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதனை உங்களுக்கு இறக்கி வைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்" என்று கூறினான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௫)Tafseer
وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِيْ وَاُمِّيَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ۗقَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِيْٓ اَنْ اَقُوْلَ مَا لَيْسَ لِيْ بِحَقٍّ ۗاِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ۗتَعْلَمُ مَا فِيْ نَفْسِيْ وَلَآ اَعْلَمُ مَا فِيْ نَفْسِكَ ۗاِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ ١١٦
- wa-idh qāla
- وَإِذْ قَالَ
- சமயம்/கூறினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yāʿīsā
- يَٰعِيسَى
- ஈஸாவே
- ib'na
- ٱبْنَ
- மகன்
- maryama
- مَرْيَمَ
- மர்யமுடைய
- a-anta
- ءَأَنتَ
- நீர்
- qul'ta
- قُلْتَ
- கூறினீர்
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- ittakhidhūnī
- ٱتَّخِذُونِى
- எடுத்துக் கொள்ளுங்கள்/என்னை
- wa-ummiya
- وَأُمِّىَ
- இன்னும் என் தாயை
- ilāhayni
- إِلَٰهَيْنِ
- வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِۖ
- அல்லாஹ்வையன்றி
- qāla
- قَالَ
- கூறுவார்
- sub'ḥānaka
- سُبْحَٰنَكَ
- நீ மிகப்பரிசுத்தமானவன்
- mā yakūnu
- مَا يَكُونُ
- ஆகாது
- lī
- لِىٓ
- எனக்கு
- an aqūla
- أَنْ أَقُولَ
- நான் கூறுவது
- mā
- مَا
- எதை
- laysa lī
- لَيْسَ لِى
- இல்லை/எனக்கு
- biḥaqqin
- بِحَقٍّۚ
- தகுதி
- in kuntu
- إِن كُنتُ
- நான் இருந்தால்
- qul'tuhu
- قُلْتُهُۥ
- அதைக் கூறினேன்
- faqad ʿalim'tahu
- فَقَدْ عَلِمْتَهُۥۚ
- திட்டமாக நீ அதை அறிந்திருப்பாய்
- taʿlamu
- تَعْلَمُ
- நன்கறிவாய்
- mā fī nafsī
- مَا فِى نَفْسِى
- எதை/என் உள்ளத்தில்
- walā aʿlamu mā
- وَلَآ أَعْلَمُ مَا
- இன்னும் அறிய மாட்டேன்/எதை
- fī nafsika
- فِى نَفْسِكَۚ
- உன் உள்ளத்தில்
- innaka anta
- إِنَّكَ أَنتَ
- நிச்சயமாக நீதான்
- ʿallāmu
- عَلَّٰمُ
- மிக மிக அறிந்தவன்
- l-ghuyūbi
- ٱلْغُيُوبِ
- மறைவானவற்றை
அன்றி, அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி) "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என்னுடைய தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீங்கள் கூறினீர்களா?" என்று கேட்பான் என்பதையும் ஞாபமூட்டுங்கள். அதற்கு அவர் கூறுவார்: "நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௬)Tafseer
مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَآ اَمَرْتَنِيْ بِهٖٓ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّيْ وَرَبَّكُمْ ۚوَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ ۚ فَلَمَّا تَوَفَّيْتَنِيْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ ۗوَاَنْتَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ١١٧
- mā qul'tu
- مَا قُلْتُ
- நான் கூறவில்லை
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- illā mā amartanī
- إِلَّا مَآ أَمَرْتَنِى
- தவிர/எதை/நீ ஏவினாய்/எனக்கு
- bihi ani uʿ'budū
- بِهِۦٓ أَنِ ٱعْبُدُوا۟
- அதை/என்பதை/வணங்குங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- rabbī
- رَبِّى
- என் இறைவன்
- warabbakum
- وَرَبَّكُمْۚ
- இன்னும் உங்கள் இறைவன்
- wakuntu
- وَكُنتُ
- இருந்தேன்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- shahīdan
- شَهِيدًا
- சாட்சியாளனாக
- mā dum'tu
- مَّا دُمْتُ
- நான் இருந்தவரை
- fīhim
- فِيهِمْۖ
- அவர்களுடன்
- falammā tawaffaytanī
- فَلَمَّا تَوَفَّيْتَنِى
- நீ கைப்பற்றிய போது/என்னை
- kunta
- كُنتَ
- இருந்தாய்
- anta
- أَنتَ
- நீ
- l-raqība
- ٱلرَّقِيبَ
- கண்கானிப்பவனாக
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- அவர்கள் மீது
- wa-anta
- وَأَنتَ
- நீ
- ʿalā
- عَلَىٰ
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின்
- shahīdun
- شَهِيدٌ
- சாட்சியாளன்
(அன்றி) நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்று கூறினேனேயன்றி வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களின் செயலை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௭)Tafseer
اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ ۚوَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ١١٨
- in tuʿadhib'hum
- إِن تُعَذِّبْهُمْ
- நீ வேதனை செய்தால்/அவர்களை
- fa-innahum
- فَإِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- ʿibāduka
- عِبَادُكَۖ
- உன் அடியார்கள்
- wa-in taghfir
- وَإِن تَغْفِرْ
- நீ மன்னித்தால்
- lahum
- لَهُمْ
- அவர்களை
- fa-innaka anta
- فَإِنَّكَ أَنتَ
- நிச்சயமாக நீதான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- ஞானவான்
அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! (உன்னுடைய அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அன்றி, அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதனை தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறுவார்.) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௮)Tafseer
قَالَ اللّٰهُ هٰذَا يَوْمُ يَنْفَعُ الصّٰدِقِيْنَ صِدْقُهُمْ ۗ لَهُمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗرَضِيَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ۗذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ ١١٩
- qāla
- قَالَ
- கூறுவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- hādhā
- هَٰذَا
- இது
- yawmu
- يَوْمُ
- நாள்
- yanfaʿu
- يَنفَعُ
- பலனளிக்கும்
- l-ṣādiqīna
- ٱلصَّٰدِقِينَ
- உண்மையாளர்களுக்கு
- ṣid'quhum
- صِدْقُهُمْۚ
- அவர்களுடைய உண்மை
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- jannātun
- جَنَّٰتٌ
- சொர்க்கங்கள்
- tajrī
- تَجْرِى
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- இருந்து/அதன் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்கள்
- fīhā abadan
- فِيهَآ أَبَدًاۚ
- அதில்/என்றென்றும்
- raḍiya
- رَّضِىَ
- மகிழ்ச்சியடைவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களைப் பற்றி
- waraḍū
- وَرَضُوا۟
- இன்னும் மகிழ்ச்சியடைவார்கள்
- ʿanhu
- عَنْهُۚ
- அவனைப் பற்றி
- dhālika
- ذَٰلِكَ
- இதுதான்
- l-fawzu
- ٱلْفَوْزُ
- வெற்றி
- l-ʿaẓīmu
- ٱلْعَظِيمُ
- மகத்தான
அதற்கு அல்லாஹ் "உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள்" என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௧௯)Tafseer
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا فِيْهِنَّ ۗوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ ١٢٠
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்குரியதே
- mul'ku
- مُلْكُ
- ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களின்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமி
- wamā fīhinna
- وَمَا فِيهِنَّۚ
- இன்னும் அவற்றிலுள்ளவை
- wahuwa
- وَهُوَ
- அவன்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின் மீது
- qadīrun
- قَدِيرٌۢ
- பேராற்றலுடையவன்
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவைகளிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௨௦)Tafseer