Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௧௧

Qur'an Surah Al-Ma'idah Verse 111

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ اَوْحَيْتُ اِلَى الْحَوَارِيّٖنَ اَنْ اٰمِنُوْا بِيْ وَبِرَسُوْلِيْ ۚ قَالُوْٓا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّنَا مُسْلِمُوْنَ (المائدة : ٥)

wa-idh
وَإِذْ
And when
சமயத்தை நினைவு கூர்வீராக
awḥaytu
أَوْحَيْتُ
I inspired
வஹீ அறிவித்தேன்
ilā l-ḥawāriyīna
إِلَى ٱلْحَوَارِيِّۦنَ
to the disciples
பக்கம்/சிஷ்யர்கள்
an āminū bī
أَنْ ءَامِنُوا۟ بِى
to believe in Me
நம்பிக்கை கொள்ளுங்கள் என்று/என்னை
wabirasūlī
وَبِرَسُولِى
and in My Messenger
இன்னும் என் தூதரை
qālū
قَالُوٓا۟
they said
கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
"We believe
நம்பிக்கை கொண்டோம்
wa-ish'had
وَٱشْهَدْ
and bear witness
இன்னும் சாட்சியளிப்பீராக
bi-annanā
بِأَنَّنَا
that indeed we
நிச்சயமாக நாங்கள்
mus'limūna
مُسْلِمُونَ
(are) Muslims
முஸ்லிம்கள்

Transliteration:

Wa iz awhaitu ilal hawaariyyeena an aaminoo bee wa bi Rasoolee qaalooo aamannaa washhad bi annanaa muslimoon (QS. al-Māʾidah:111)

English Sahih International:

And [remember] when I inspired to the disciples, "Believe in Me and in My messenger [i.e., Jesus]." They said, "We have believed, so bear witness that indeed we are Muslims [in submission to Allah]." (QS. Al-Ma'idah, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

அன்றி, என்னையும், என்னுடைய தூதரையும் (அதாவது உங்களையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உங்களது) சிஷ்யர்களுக்கு நான் வஹீயின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (உங்களுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்! என்று கூறியதையும் நினைத்துப் பாருங்கள்" (என்றும் அந்நாளில் கூறுவான்.) (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்| நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என்னையும், என் தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று (உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யி அறிவித்த சமயத்தை நினைவு கூறுவீராக! (அதற்கவர்கள்) நம்பிக்கை கொண்டோம்; நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு (நீர்) சாட்சி அளிப்பீராக! என்று (உம்மிடம்) கூறினார்கள்.