اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاۤءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ فَهَلْ اَنْتُمْ مُّنْتَهُوْنَ ٩١
- innamā yurīdu
- إِنَّمَا يُرِيدُ
- எல்லாம்/நாடுகிறான்
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- an yūqiʿa
- أَن يُوقِعَ
- அவன் உண்டுபண்ணுவது
- baynakumu
- بَيْنَكُمُ
- உங்களுக்குமத்தியில்
- l-ʿadāwata
- ٱلْعَدَٰوَةَ
- பகைமை
- wal-baghḍāa
- وَٱلْبَغْضَآءَ
- இன்னும் வெறுப்பை
- fī l-khamri
- فِى ٱلْخَمْرِ
- மதுவினால்
- wal-maysiri
- وَٱلْمَيْسِرِ
- இன்னும் சூதாட்டத்தினால்
- wayaṣuddakum
- وَيَصُدَّكُمْ
- இன்னும் அவன் தடுப்பது/உங்களை
- ʿan dhik'ri
- عَن ذِكْرِ
- ஞாபகத்திலிருந்து
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- waʿani l-ṣalati
- وَعَنِ ٱلصَّلَوٰةِۖ
- இன்னும் தொழுகையிலிருந்து
- fahal antum
- فَهَلْ أَنتُم
- ஆகவே ?/நீங்கள்
- muntahūna
- مُّنتَهُونَ
- விலகுபவர்கள்
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௧)Tafseer
وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚفَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْٓا اَنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ ٩٢
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- இன்னும் கீழ்ப்படியுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வுக்கு
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- இன்னும் கீழ்ப்படியுங்கள்
- l-rasūla
- ٱلرَّسُولَ
- தூதருக்கு
- wa-iḥ'dharū
- وَٱحْذَرُوا۟ۚ
- இன்னும் எச்சரிக்கையாக இருங்கள்
- fa-in tawallaytum
- فَإِن تَوَلَّيْتُمْ
- நீங்கள்திரும்பினால்
- fa-iʿ'lamū
- فَٱعْلَمُوٓا۟
- அறிந்து கொள்ளுங்கள்
- annamā
- أَنَّمَا
- நிச்சயமாக
- ʿalā rasūlinā
- عَلَىٰ رَسُولِنَا
- நம் தூதர் மீது
- l-balāghu
- ٱلْبَلَٰغُ
- எடுத்துரைப்பது
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- தெளிவாக
அல்லாஹ்வுக்கும் வழிப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம்முடைய கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௨)Tafseer
لَيْسَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِيْمَا طَعِمُوْٓا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ۗوَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ ࣖ ٩٣
- laysa
- لَيْسَ
- இல்லை
- ʿalā alladhīna
- عَلَى ٱلَّذِينَ
- மீது/எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- junāḥun
- جُنَاحٌ
- குற்றம்
- fīmā
- فِيمَا
- எதில்
- ṭaʿimū
- طَعِمُوٓا۟
- புசித்தார்கள்
- idhā mā ittaqaw
- إِذَا مَا ٱتَّقَوا۟
- தவிர்ந்து கொண்டால்
- waāmanū
- وَّءَامَنُوا۟
- இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- thumma
- ثُمَّ
- பிறகு
- ittaqaw
- ٱتَّقَوا۟
- அஞ்சினார்கள்
- waāmanū
- وَّءَامَنُوا۟
- இன்னும் நம்பிக்கை கொண்டார்கள்
- thumma
- ثُمَّ
- பிறகு
- ittaqaw
- ٱتَّقَوا۟
- அஞ்சினார்கள்
- wa-aḥsanū
- وَّأَحْسَنُوا۟ۗ
- இன்னும் நல்லறம் செய்தார்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- நேசிக்கிறான்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- நல்லறம்புரிவோரை
நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது. அவர்கள் (தடுக்கப்பட்டபின் அவைகளிலிருந்து) விலகி நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௩)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَيَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَيْءٍ مِّنَ الصَّيْدِ تَنَالُهٗٓ اَيْدِيْكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ اللّٰهُ مَنْ يَّخَافُهٗ بِالْغَيْبِۚ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌ ٩٤
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- layabluwannakumu
- لَيَبْلُوَنَّكُمُ
- நிச்சயமாக சோதிப்பான் / உங்களை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bishayin
- بِشَىْءٍ
- சிலதைக் கொண்டு
- mina l-ṣaydi
- مِّنَ ٱلصَّيْدِ
- வேட்டைகளில்
- tanāluhu
- تَنَالُهُۥٓ
- அடைந்து விடுகின்றன/அதை
- aydīkum
- أَيْدِيكُمْ
- உங்கள் கரங்கள்
- warimāḥukum
- وَرِمَاحُكُمْ
- இன்னும் ஈட்டிகள்/உங்கள்
- liyaʿlama
- لِيَعْلَمَ
- அறிவதற்காக
- l-lahu man
- ٱللَّهُ مَن
- அல்லாஹ்/எவர்
- yakhāfuhu
- يَخَافُهُۥ
- பயப்படுகிறார்/தன்னை
- bil-ghaybi
- بِٱلْغَيْبِۚ
- மறைவில்
- famani iʿ'tadā
- فَمَنِ ٱعْتَدَىٰ
- எவர்/மீறினார்
- baʿda dhālika
- بَعْدَ ذَٰلِكَ
- இதற்குப் பின்பு
- falahu
- فَلَهُۥ
- அவருக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- துன்புறுத்தக்கூடியது
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறிவித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்களுடைய கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய யாதொரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௪)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْتُمْ حُرُمٌ ۗوَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَۤاءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰلِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ۗعَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ۗوَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ۗوَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ ٩٥
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- lā taqtulū
- لَا تَقْتُلُوا۟
- கொல்லாதீர்கள்
- l-ṣayda
- ٱلصَّيْدَ
- வேட்டையை
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்கள்
- ḥurumun
- حُرُمٌۚ
- இஹ்ராமுடையவர்கள்
- waman
- وَمَن
- எவர்
- qatalahu
- قَتَلَهُۥ
- கொன்றார்/அதை
- minkum
- مِنكُم
- உங்களில்
- mutaʿammidan
- مُّتَعَمِّدًا
- வேண்டுமென்றே (நாடியவராக)
- fajazāon
- فَجَزَآءٌ
- தண்டனை
- mith'lu
- مِّثْلُ
- ஒப்பானது
- mā qatala
- مَا قَتَلَ
- எது/கொன்றார்
- mina l-naʿami
- مِنَ ٱلنَّعَمِ
- இருந்து/கால்நடைகள்
- yaḥkumu
- يَحْكُمُ
- தீர்ப்பளிப்பர்
- bihi
- بِهِۦ
- அதற்கு
- dhawā ʿadlin
- ذَوَا عَدْلٍ
- நேர்மையான இருவர்
- minkum
- مِّنكُمْ
- உங்களில்
- hadyan
- هَدْيًۢا
- பலியாக
- bāligha
- بَٰلِغَ
- அடையக் கூடியது
- l-kaʿbati
- ٱلْكَعْبَةِ
- கஅபா
- aw
- أَوْ
- அல்லது
- kaffāratun
- كَفَّٰرَةٌ
- பரிகாரம்
- ṭaʿāmu
- طَعَامُ
- உணவளிப்பது
- masākīna
- مَسَٰكِينَ
- ஏழைகள்
- aw
- أَوْ
- அல்லது
- ʿadlu
- عَدْلُ
- சமமானது
- dhālika
- ذَٰلِكَ
- அது
- ṣiyāman
- صِيَامًا
- நோன்பால்
- liyadhūqa
- لِّيَذُوقَ
- அவன் அனுபவிப்பதற்காக
- wabāla
- وَبَالَ
- கெட்ட முடிவை
- amrihi
- أَمْرِهِۦۗ
- செயல்/தனது
- ʿafā
- عَفَا
- மன்னித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿammā salafa
- عَمَّا سَلَفَۚ
- முன் நடந்தவற்றை
- waman
- وَمَنْ
- எவன்
- ʿāda
- عَادَ
- மீண்டான்
- fayantaqimu
- فَيَنتَقِمُ
- தண்டிப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- min'hu
- مِنْهُۗ
- அவனை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿazīzun
- عَزِيزٌ
- மிகைத்தவன்
- dhū intiqāmin
- ذُو ٱنتِقَامٍ
- தண்டிப்பவன்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதனை வேண்டுமென்றே கொன்றுவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் அதற்குச் சமமானதை (பரிகாரமாக) ஈடுகொடுக்க வேண்டும். உங்களில் நேர்மையான இருவர் நீங்கள் (ஈடாகக்) கொடுக்கும் பொருள் அதற்குச் சமமெனத் தீர்ப்பளிக்க வேண்டும். இதனைக் காணிக்கையாக கஅபாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது (அதன் மதிப்புக்கு) ஏழைகளுக்கு உணவு அளிப்பது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். (பரிகாரமளிக்கப் பொருள் இல்லாதவன்) தான் செய்த குற்றத்தின் பலனை அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும். (இதற்கு) முன் நடந்தவைகளை அல்லாஹ் மன்னித்துவிட்டான். (இத்தகைய குற்றம் செய்ய) எவரேனும் பின்னும் மீண்டால் அல்லாஹ் அவனை தண்டிப்பான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (குற்றவாளிகளை) தண்டிப்பவன். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௫)Tafseer
اُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ ۚوَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ۗوَاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اِلَيْهِ تُحْشَرُوْنَ ٩٦
- uḥilla
- أُحِلَّ
- அனுமதிக்கப்பட்டுள்ளது
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ṣaydu
- صَيْدُ
- வேட்டையாடுவது
- l-baḥri
- ٱلْبَحْرِ
- கடலில்
- waṭaʿāmuhu
- وَطَعَامُهُۥ
- இன்னும் அதை புசிப்பது
- matāʿan
- مَتَٰعًا
- பயனளிப்பதற்காக
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கு
- walilssayyārati
- وَلِلسَّيَّارَةِۖ
- இன்னும் பயணிகளுக்கு
- waḥurrima
- وَحُرِّمَ
- விலக்கப்பட்டுள்ளது
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களுக்கு
- ṣaydu
- صَيْدُ
- வேட்டையாடுவது
- l-bari
- ٱلْبَرِّ
- தரையில்
- mā dum'tum
- مَا دُمْتُمْ
- இருக்கும்போதெல்லாம்
- ḥuruman
- حُرُمًاۗ
- இஹ்ராமுடைய வர்களாக
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- alladhī
- ٱلَّذِىٓ
- எவன்
- ilayhi
- إِلَيْهِ
- அவன் பக்கம்
- tuḥ'sharūna
- تُحْشَرُونَ
- நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
(நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதனை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௬)Tafseer
۞ جَعَلَ اللّٰهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيٰمًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْيَ وَالْقَلَاۤىِٕدَ ۗذٰلِكَ لِتَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۙ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ٩٧
- jaʿala
- جَعَلَ
- ஆக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-kaʿbata
- ٱلْكَعْبَةَ
- கஅபாவை
- l-bayta
- ٱلْبَيْتَ
- வீடு
- l-ḥarāma
- ٱلْحَرَامَ
- புனிதமானது
- qiyāman
- قِيَٰمًا
- அபயமளிக்கக்கூடியது,
- lilnnāsi
- لِّلنَّاسِ
- மக்களுக்கு
- wal-shahra
- وَٱلشَّهْرَ
- இன்னும் மாதத்தை
- l-ḥarāma
- ٱلْحَرَامَ
- புனிதமானது
- wal-hadya
- وَٱلْهَدْىَ
- இன்னும் பலியை
- wal-qalāida
- وَٱلْقَلَٰٓئِدَۚ
- இன்னும் மாலைகளை
- dhālika
- ذَٰلِكَ
- அது
- litaʿlamū
- لِتَعْلَمُوٓا۟
- நீங்கள் அறிந்து கொள்வதற்காக
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிகிறான்
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- எவை/வானங்களில்
- wamā
- وَمَا
- இன்னும் எது
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- wa-anna
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு அபயம் அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட மிருகங்களையும் (அபயம் பெற்றவைகளாக ஆக்கியிருக்கின்றான்.) வானங்களிலும், பூமியிலுமுள்ள யாவையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்து கொள்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௭)Tafseer
اِعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِۙ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌۗ ٩٨
- iʿ'lamū
- ٱعْلَمُوٓا۟
- அறிந்து கொள்ளுங்கள்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- shadīdu
- شَدِيدُ
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- தண்டனை
- wa-anna l-laha
- وَأَنَّ ٱللَّهَ
- இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளன்
நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாக இருப்பதுடன் நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௮)Tafseer
مَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ۗوَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ٩٩
- mā
- مَّا
- கடமை இல்லை
- ʿalā
- عَلَى
- மீது
- l-rasūli
- ٱلرَّسُولِ
- தூதர்
- illā
- إِلَّا
- தவிர
- l-balāghu
- ٱلْبَلَٰغُۗ
- எடுத்துரைப்பது
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- நன்கறிவான்
- mā
- مَا
- எதை
- tub'dūna
- تُبْدُونَ
- வெளிப்படுத்துகிறீர்கள்
- wamā
- وَمَا
- இன்னும் எதை
- taktumūna
- تَكْتُمُونَ
- மறைக்கிறீர்கள்
நம் தூதருடைய கடமை (நம்முடைய) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௯)Tafseer
قُلْ لَّا يَسْتَوِى الْخَبِيْثُ وَالطَّيِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيْثِۚ فَاتَّقُوا اللّٰهَ يٰٓاُولِى الْاَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ࣖ ١٠٠
- qul
- قُل
- கூறுவீராக
- lā yastawī
- لَّا يَسْتَوِى
- சமமாகாது
- l-khabīthu
- ٱلْخَبِيثُ
- தீயது
- wal-ṭayibu
- وَٱلطَّيِّبُ
- இன்னும் நல்லது
- walaw aʿjabaka
- وَلَوْ أَعْجَبَكَ
- உம்மை ஆச்சரியப்படுத்தினாலும்
- kathratu
- كَثْرَةُ
- அதிகமாக இருப்பது
- l-khabīthi fa-ittaqū
- ٱلْخَبِيثِۚ فَٱتَّقُوا۟
- தீயது/ஆகவேஅஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- yāulī l-albābi
- يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
- அறிவாளிகளே
- laʿallakum tuf'liḥūna
- لَعَلَّكُمْ تُفْلِحُونَ
- நீங்கள் வெற்றி பெறுவதற்காக
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி "எங்கும்) தீயவைகளே அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்தியபோதிலும், நல்லதும் தீயதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்" என்று கூறுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௧௦௦)Tafseer