குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௯௭
Qur'an Surah Al-Ma'idah Verse 97
ஸூரத்துல் மாயிதா [௫]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ جَعَلَ اللّٰهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيٰمًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْيَ وَالْقَلَاۤىِٕدَ ۗذٰلِكَ لِتَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۙ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ (المائدة : ٥)
- jaʿala
- جَعَلَ
- Has (been) made
- ஆக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- l-kaʿbata
- ٱلْكَعْبَةَ
- the Kabah
- கஅபாவை
- l-bayta
- ٱلْبَيْتَ
- the House
- வீடு
- l-ḥarāma
- ٱلْحَرَامَ
- the Sacred
- புனிதமானது
- qiyāman
- قِيَٰمًا
- an establishment
- அபயமளிக்கக்கூடியது,
- lilnnāsi
- لِّلنَّاسِ
- for mankind
- மக்களுக்கு
- wal-shahra
- وَٱلشَّهْرَ
- and the month(s)
- இன்னும் மாதத்தை
- l-ḥarāma
- ٱلْحَرَامَ
- [the] sacred
- புனிதமானது
- wal-hadya
- وَٱلْهَدْىَ
- and the (animals) for offering
- இன்னும் பலியை
- wal-qalāida
- وَٱلْقَلَٰٓئِدَۚ
- and the garlands
- இன்னும் மாலைகளை
- dhālika
- ذَٰلِكَ
- That (is)
- அது
- litaʿlamū
- لِتَعْلَمُوٓا۟
- so that you may know
- நீங்கள் அறிந்து கொள்வதற்காக
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- that Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- knows
- அறிகிறான்
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- what (is) in the heavens
- எவை/வானங்களில்
- wamā
- وَمَا
- and what
- இன்னும் எது
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- (is) in the earth
- பூமியில்
- wa-anna
- وَأَنَّ
- and that
- இன்னும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- of every thing
- எல்லாவற்றையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- (is) All-Knowing
- நன்கறிந்தவன்
Transliteration:
Ja'alal laahul Ka'batal Baital Haraama qiyaamal linnaasi wash Shahral Haraama walhadya walqalaaa'id; zaalika lita'lamooo annal laaha ya'lamu maa fis samaawaati wa maa fil ardi wa annal laaha bikulli shai'in 'Aleem(QS. al-Māʾidah:97)
English Sahih International:
Allah has made the Ka’bah, the Sacred House, standing for the people and [has sanctified] the sacred months and the sacrificial animals and the garlands [by which they are identified]. That is so you may know that Allah knows what is in the heavens and what is in the earth and that Allah is Knowing of all things. (QS. Al-Ma'idah, Ayah ௯௭)
Abdul Hameed Baqavi:
சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு அபயம் அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட மிருகங்களையும் (அபயம் பெற்றவைகளாக ஆக்கியிருக்கின்றான்.) வானங்களிலும், பூமியிலுமுள்ள யாவையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்து கொள்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௯௭)
Jan Trust Foundation
அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மக்களுக்கு புனித வீடாகிய கஅபாவையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) பலியையும், மாலை(யிடப்பட்ட பலி)களையும் கியாமாக (அடையாளமாக) அல்லாஹ் ஆக்கினான். அது, வானங்களிலுள்ளதையும் பூமியிலுள்ளதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும்.