اِنْ تَجْتَنِبُوْا كَبَاۤىِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْكُمْ مُّدْخَلًا كَرِيْمًا ٣١
- in tajtanibū
- إِن تَجْتَنِبُوا۟
- நீங்கள் விலகிக் கொண்டால்
- kabāira
- كَبَآئِرَ
- பெரும் பாவங்களை
- mā tun'hawna
- مَا تُنْهَوْنَ
- எது/ தடுக்கப்படுகிறீர்கள்
- ʿanhu
- عَنْهُ
- அதை விட்டு
- nukaffir
- نُكَفِّرْ
- அகற்றி விடுவோம்
- ʿankum
- عَنكُمْ
- உங்களை விட்டு
- sayyiātikum
- سَيِّـَٔاتِكُمْ
- சிறு பாவங்களை/உங்கள்
- wanud'khil'kum
- وَنُدْخِلْكُم
- இன்னும் நுழைப்போம்/உங்களை
- mud'khalan
- مُّدْخَلًا
- இடத்தில்
- karīman
- كَرِيمًا
- கண்ணியமான
உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௧)Tafseer
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ ۗ لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ۗ وَلِلنِّسَاۤءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ ۗوَسْـَٔلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ۗ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا ٣٢
- walā tatamannaw
- وَلَا تَتَمَنَّوْا۟
- ஏங்காதீர்கள்
- mā
- مَا
- எதை
- faḍḍala
- فَضَّلَ
- மேன்மையாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bihi
- بِهِۦ
- அதைக் கொண்டு
- baʿḍakum
- بَعْضَكُمْ
- உங்களில் சிலரை
- ʿalā
- عَلَىٰ
- விட
- baʿḍin
- بَعْضٍۚ
- சிலர்
- lilrrijāli
- لِّلرِّجَالِ
- ஆண்களுக்கு
- naṣībun
- نَصِيبٌ
- ஒரு பங்கு
- mimmā
- مِّمَّا
- எதிலிருந்து
- ik'tasabū
- ٱكْتَسَبُوا۟ۖ
- சம்பாதித்தார்கள்
- walilnnisāi
- وَلِلنِّسَآءِ
- இன்னும் பெண்களுக்கு
- naṣībun
- نَصِيبٌ
- ஒரு பங்கு
- mimmā
- مِّمَّا
- எதி லிருந்து
- ik'tasabna
- ٱكْتَسَبْنَۚ
- சம்பாதித்தார்கள்
- wasalū
- وَسْـَٔلُوا۟
- கேளுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விடம்
- min
- مِن
- இருந்து
- faḍlihi
- فَضْلِهِۦٓۗ
- அவனின் அருள்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- இருக்கிறான்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- ʿalīman
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௨)Tafseer
وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ۗ وَالَّذِيْنَ عَقَدَتْ اَيْمَانُكُمْ فَاٰتُوْهُمْ نَصِيْبَهُمْ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدًا ࣖ ٣٣
- walikullin
- وَلِكُلٍّ
- ஒவ்வொருவருக்கும்
- jaʿalnā
- جَعَلْنَا
- ஆக்கினோம்
- mawāliya
- مَوَٰلِىَ
- வாரிசுகளை
- mimmā taraka
- مِمَّا تَرَكَ
- எதில்/விட்டுச்சென்றார்
- l-wālidāni
- ٱلْوَٰلِدَانِ
- தாய், தந்தை
- wal-aqrabūna
- وَٱلْأَقْرَبُونَۚ
- இன்னும் நெருங்கிய உறவினர்கள்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- ʿaqadat
- عَقَدَتْ
- ஒப்பந்தம் செய்தன
- aymānukum
- أَيْمَٰنُكُمْ
- உங்கள் சத்தியங்கள்
- faātūhum
- فَـَٔاتُوهُمْ
- கொடுத்து விடுங்கள்/அவர்களுக்கு
- naṣībahum
- نَصِيبَهُمْۚ
- பங்கை/அவர்களின்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna ʿalā
- كَانَ عَلَىٰ
- இருக்கிறான்/மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லாம்/பொருள்
- shahīdan
- شَهِيدًا
- சாட்சியாளனாக
தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் (விகிதப்படி அவர்களுடைய சொத்தை அடையக்கூடிய) வாரிசுகளை நாம் குறிப்பிட்டே இருக்கின்றோம். ஆகவே, அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடவும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்து கொள்ளக் கூடியவனாகவே இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௩)Tafseer
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَاۤءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَآ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ۗ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ ۗوَالّٰتِيْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا ۗاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا ٣٤
- al-rijālu
- ٱلرِّجَالُ
- ஆண்கள்
- qawwāmūna
- قَوَّٰمُونَ
- நிர்வகிப்பவர்கள்
- ʿalā l-nisāi
- عَلَى ٱلنِّسَآءِ
- பெண்களை
- bimā
- بِمَا
- எதன் காரணமாக
- faḍḍala
- فَضَّلَ
- மேன்மையாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- baʿḍahum
- بَعْضَهُمْ
- அவர்களில் சிலரை
- ʿalā
- عَلَىٰ
- விட
- baʿḍin
- بَعْضٍ
- சிலர்
- wabimā
- وَبِمَآ
- எதன் காரணமாக
- anfaqū
- أَنفَقُوا۟
- செலவழித்தார்கள்
- min
- مِنْ
- இருந்து
- amwālihim
- أَمْوَٰلِهِمْۚ
- தங்கள் செல்வங்கள்
- fal-ṣāliḥātu
- فَٱلصَّٰلِحَٰتُ
- நல்லபெண்கள்
- qānitātun
- قَٰنِتَٰتٌ
- பணிந்தவர்கள்
- ḥāfiẓātun
- حَٰفِظَٰتٌ
- பாதுகாப்பவர்கள்
- lil'ghaybi
- لِّلْغَيْبِ
- மறைவில்
- bimā
- بِمَا
- எதைக் கொண்டு
- ḥafiẓa
- حَفِظَ
- பாதுகாத்தான்
- l-lahu
- ٱللَّهُۚ
- அல்லாஹ்
- wa-allātī
- وَٱلَّٰتِى
- எவர்கள்
- takhāfūna
- تَخَافُونَ
- பயப்படுகிறீர்கள்
- nushūzahunna
- نُشُوزَهُنَّ
- அவர்கள் மாறுபாடு செய்வதை
- faʿiẓūhunna
- فَعِظُوهُنَّ
- உபதேசியுங்கள் அவர்களுக்கு
- wa-uh'jurūhunna
- وَٱهْجُرُوهُنَّ
- அப்புறப்படுத்துங்கள் அவர்களை
- fī l-maḍājiʿi
- فِى ٱلْمَضَاجِعِ
- படுக்கைகளில்
- wa-iḍ'ribūhunna
- وَٱضْرِبُوهُنَّۖ
- இன்னும் அடியுங்கள் அவர்களை
- fa-in aṭaʿnakum
- فَإِنْ أَطَعْنَكُمْ
- அவர்கள் கீழ்ப்படிந்தால்/ உங்களுக்கு
- falā tabghū
- فَلَا تَبْغُوا۟
- தேடாதீர்கள்
- ʿalayhinna
- عَلَيْهِنَّ
- அவர்கள் மீது
- sabīlan
- سَبِيلًاۗ
- ஒரு வழியை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- இருக்கிறான்
- ʿaliyyan
- عَلِيًّا
- உயர்ந்தவனாக
- kabīran
- كَبِيرًا
- பெரியவனாக
(ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும் மிகப் பெரியவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௪)Tafseer
وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا ۚ اِنْ يُّرِيْدَآ اِصْلَاحًا يُّوَفِّقِ اللّٰهُ بَيْنَهُمَا ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا ٣٥
- wa-in khif'tum
- وَإِنْ خِفْتُمْ
- நீங்கள் பயந்தால்
- shiqāqa
- شِقَاقَ
- பிளவை
- baynihimā
- بَيْنِهِمَا
- அந்த இருவருக்குள்
- fa-ib'ʿathū
- فَٱبْعَثُوا۟
- ஏற்படுத்துங்கள்
- ḥakaman
- حَكَمًا
- ஒரு தீர்ப்பாளரை
- min
- مِّنْ
- இருந்து
- ahlihi
- أَهْلِهِۦ
- அவனின் உறவினர்
- waḥakaman
- وَحَكَمًا
- இன்னும் ஒரு தீர்ப்பாளரை
- min
- مِّنْ
- இருந்து
- ahlihā
- أَهْلِهَآ
- அவளின் உறவினர்
- in yurīdā
- إِن يُرِيدَآ
- இருவரும் நாடினால்
- iṣ'lāḥan
- إِصْلَٰحًا
- சீர்திருத்தத்தை
- yuwaffiqi
- يُوَفِّقِ
- ஒற்றுமை ஏற்படுத்துவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- baynahumā
- بَيْنَهُمَآۗ
- அந்த இருவருக்கிடையில்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- இருக்கிறான்
- ʿalīman
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
- khabīran
- خَبِيرًا
- ஆழ்ந்தறிந்தவனாக
(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவன் உறவினர்களில் ஒருவரையும், அவள் உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், கவனிப்பவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௫)Tafseer
۞ وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْـًٔا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَالْجَارِ ذِى الْقُرْبٰى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِيْلِۙ وَمَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرًاۙ ٣٦
- wa-uʿ'budū
- وَٱعْبُدُوا۟
- வணங்குங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- walā tush'rikū
- وَلَا تُشْرِكُوا۟
- இன்னும் இணையாக்காதீர்கள்
- bihi
- بِهِۦ
- அவனுக்கு
- shayan
- شَيْـًٔاۖ
- எதையும்
- wabil-wālidayni
- وَبِٱلْوَٰلِدَيْنِ
- இன்னும் தாய் தந்தைக்கு
- iḥ'sānan
- إِحْسَٰنًا
- நன்மை செய்யுங்கள்
- wabidhī l-qur'bā
- وَبِذِى ٱلْقُرْبَىٰ
- இன்னும் உறவினருக்கு
- wal-yatāmā
- وَٱلْيَتَٰمَىٰ
- இன்னும் அநாதைகள்
- wal-masākīni
- وَٱلْمَسَٰكِينِ
- இன்னும் ஏழைகள்
- wal-jāri
- وَٱلْجَارِ
- இன்னும் அண்டைவீட்டார்
- dhī l-qur'bā
- ذِى ٱلْقُرْبَىٰ
- உறவினர்
- wal-jāri
- وَٱلْجَارِ
- இன்னும் அண்டைவீட்டார்
- l-junubi
- ٱلْجُنُبِ
- அந்நியர்
- wal-ṣāḥibi
- وَٱلصَّاحِبِ
- இன்னும் நண்பர்
- bil-janbi
- بِٱلْجَنۢبِ
- அருகில் இருக்கும்
- wa-ib'ni l-sabīli
- وَٱبْنِ ٱلسَّبِيلِ
- இன்னும் பயணி(கள்)
- wamā malakat
- وَمَا مَلَكَتْ
- இன்னும் எவர்/ சொந்தமாக்கின
- aymānukum
- أَيْمَٰنُكُمْۗ
- உங்கள் வலக்கரங்கள்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- man kāna
- مَن كَانَ
- எவன்/இருக்கிறான்
- mukh'tālan
- مُخْتَالًا
- கர்வமுடையவனாக
- fakhūran
- فَخُورًا
- பெருமையுடையவனாக
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௬)Tafseer
ۨالَّذِيْنَ يَبْخَلُوْنَ وَيَأْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُوْنَ مَآ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۗ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًاۚ ٣٧
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yabkhalūna
- يَبْخَلُونَ
- கருமித்தனம் செய்கிறார்கள்
- wayamurūna
- وَيَأْمُرُونَ
- இன்னும் ஏவுகிறார்கள்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களுக்கு
- bil-bukh'li
- بِٱلْبُخْلِ
- கருமித்தனத்தை
- wayaktumūna
- وَيَكْتُمُونَ
- இன்னும் மறைக்கிறார்கள்
- mā
- مَآ
- எதை
- ātāhumu
- ءَاتَىٰهُمُ
- கொடுத்தான்/அவர்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- min faḍlihi
- مِن فَضْلِهِۦۗ
- தன் அருளிலிருந்து
- wa-aʿtadnā
- وَأَعْتَدْنَا
- தயார்படுத்தினோம்
- lil'kāfirīna
- لِلْكَٰفِرِينَ
- நிராகரிப்பவர்களுக்கு
- ʿadhāban
- عَذَابًا
- வேதனையை
- muhīnan
- مُّهِينًا
- இழிவான
எவர்கள் (தாங்கள்) கருமித்தனம் செய்வதுடன் (மற்ற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கின்றார்களோ, அத்தகைய நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௭)Tafseer
وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَاۤءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ ۗ وَمَنْ يَّكُنِ الشَّيْطٰنُ لَهٗ قَرِيْنًا فَسَاۤءَ قَرِيْنًا ٣٨
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- yunfiqūna
- يُنفِقُونَ
- தர்மம் செய்கிறார்கள்
- amwālahum
- أَمْوَٰلَهُمْ
- தங்கள் செல்வங்களை
- riāa
- رِئَآءَ
- காண்பிப்பதற்காக
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களுக்கு
- walā yu'minūna
- وَلَا يُؤْمِنُونَ
- இன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- walā bil-yawmi l-ākhiri
- وَلَا بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِۗ
- இன்னும் இறுதி நாளை
- waman
- وَمَن
- எவருக்கு
- yakuni
- يَكُنِ
- ஆகிவிட்டான்
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- lahu
- لَهُۥ
- அவனுக்கு
- qarīnan
- قَرِينًا
- நண்பனாக
- fasāa
- فَسَآءَ
- கெட்டுவிட்டான்
- qarīnan
- قَرِينًا
- நண்பனால்
எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருளைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளா திருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கின்றானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௮)Tafseer
وَمَاذَا عَلَيْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ ۗوَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِيْمًا ٣٩
- wamādhā
- وَمَاذَا
- என்னதான்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- law āmanū
- لَوْ ءَامَنُوا۟
- அவர்கள் நம்பிக்கை கொண்டால்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wal-yawmi
- وَٱلْيَوْمِ
- இன்னும் நாளை
- l-ākhiri
- ٱلْءَاخِرِ
- இறுதி
- wa-anfaqū
- وَأَنفَقُوا۟
- இன்னும் தர்மம் செய்தனர்
- mimmā
- مِمَّا
- எதிலிருந்து
- razaqahumu
- رَزَقَهُمُ
- வழங்கினான்/அவர்களுக்கு
- l-lahu
- ٱللَّهُۚ
- அல்லாஹ்
- wakāna
- وَكَانَ
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bihim
- بِهِمْ
- அவர்களை
- ʿalīman
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் இவர்களுக்கு அளித்தவற்றையும் தானம் செய்து வந்தால் அதனால் இவர்களுக்கு என்னதான் நஷ்டமேற்பட்டு விடும்? அல்லாஹ் இவர்களை நன்கறிந்தே இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩௯)Tafseer
اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۚوَاِنْ تَكُ حَسَنَةً يُّضٰعِفْهَا وَيُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِيْمًا ٤٠
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- lā yaẓlimu
- لَا يَظْلِمُ
- அநியாயம் செய்ய மாட்டான்
- mith'qāla dharratin
- مِثْقَالَ ذَرَّةٍۖ
- ஓர் அணு அளவு
- wa-in taku
- وَإِن تَكُ
- இருந்தால்
- ḥasanatan
- حَسَنَةً
- நன்மையாக
- yuḍāʿif'hā
- يُضَٰعِفْهَا
- அதை பன்மடங்காக்குவான்
- wayu'ti
- وَيُؤْتِ
- இன்னும் கொடுப்பான்
- min ladun'hu
- مِن لَّدُنْهُ
- தன்னிடமிருந்து
- ajran
- أَجْرًا
- கூலியை
- ʿaẓīman
- عَظِيمًا
- மகத்தான
நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதனை இரட்டிப்பாக்கித் தன் அருளால் பின்னும் அதற்கு மகத்தான கூலியைக் கொடுக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪௦)Tafseer