குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௨
Qur'an Surah An-Nisa Verse 32
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ ۗ لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ۗ وَلِلنِّسَاۤءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ ۗوَسْـَٔلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ۗ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا (النساء : ٤)
- walā tatamannaw
- وَلَا تَتَمَنَّوْا۟
- And (do) not covet
- ஏங்காதீர்கள்
- mā
- مَا
- what
- எதை
- faḍḍala
- فَضَّلَ
- (has) bestowed
- மேன்மையாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- bihi
- بِهِۦ
- [with it]
- அதைக் கொண்டு
- baʿḍakum
- بَعْضَكُمْ
- some of you
- உங்களில் சிலரை
- ʿalā
- عَلَىٰ
- over
- விட
- baʿḍin
- بَعْضٍۚ
- others
- சிலர்
- lilrrijāli
- لِّلرِّجَالِ
- For men
- ஆண்களுக்கு
- naṣībun
- نَصِيبٌ
- (is) a share
- ஒரு பங்கு
- mimmā
- مِّمَّا
- of what
- எதிலிருந்து
- ik'tasabū
- ٱكْتَسَبُوا۟ۖ
- they earned
- சம்பாதித்தார்கள்
- walilnnisāi
- وَلِلنِّسَآءِ
- and for women
- இன்னும் பெண்களுக்கு
- naṣībun
- نَصِيبٌ
- (is) a share
- ஒரு பங்கு
- mimmā
- مِّمَّا
- of what
- எதி லிருந்து
- ik'tasabna
- ٱكْتَسَبْنَۚ
- they earned
- சம்பாதித்தார்கள்
- wasalū
- وَسْـَٔلُوا۟
- And ask
- கேளுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்விடம்
- min
- مِن
- of
- இருந்து
- faḍlihi
- فَضْلِهِۦٓۗ
- His Bounty
- அவனின் அருள்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- is
- இருக்கிறான்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- of every thing
- எல்லாவற்றையும்
- ʿalīman
- عَلِيمًا
- All-Knower
- நன்கறிந்தவனாக
Transliteration:
Wa laa tatamannaw maa faddalal laahu bihee ba'dakum 'alaa ba'd; lirrijaali naseebum mimak tasaboo wa linnisaaa'i naseebum mimmak tasabna; was'alullaaha min fadlih; innal laaha kaana bikulli shai'in 'Aleemaa(QS. an-Nisāʾ:32)
English Sahih International:
And do not wish for that by which Allah has made some of you exceed others. For men is a share of what they have earned, and for women is a share of what they have earned. And ask Allah of His bounty. Indeed Allah is ever, of all things, Knowing. (QS. An-Nisa, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௩௨)
Jan Trust Foundation
மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியதை (கண்டு) ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு பங்குண்டு. அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.