குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௫
Qur'an Surah An-Nisa Verse 35
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا ۚ اِنْ يُّرِيْدَآ اِصْلَاحًا يُّوَفِّقِ اللّٰهُ بَيْنَهُمَا ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا (النساء : ٤)
- wa-in khif'tum
- وَإِنْ خِفْتُمْ
- And if you fear
- நீங்கள் பயந்தால்
- shiqāqa
- شِقَاقَ
- a dissension
- பிளவை
- baynihimā
- بَيْنِهِمَا
- between (the) two of them
- அந்த இருவருக்குள்
- fa-ib'ʿathū
- فَٱبْعَثُوا۟
- then send
- ஏற்படுத்துங்கள்
- ḥakaman
- حَكَمًا
- an arbitrator
- ஒரு தீர்ப்பாளரை
- min
- مِّنْ
- from
- இருந்து
- ahlihi
- أَهْلِهِۦ
- his family
- அவனின் உறவினர்
- waḥakaman
- وَحَكَمًا
- and an arbitrator
- இன்னும் ஒரு தீர்ப்பாளரை
- min
- مِّنْ
- from
- இருந்து
- ahlihā
- أَهْلِهَآ
- her family
- அவளின் உறவினர்
- in yurīdā
- إِن يُرِيدَآ
- If they both wish
- இருவரும் நாடினால்
- iṣ'lāḥan
- إِصْلَٰحًا
- reconciliation
- சீர்திருத்தத்தை
- yuwaffiqi
- يُوَفِّقِ
- will cause reconciliation
- ஒற்றுமை ஏற்படுத்துவான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- baynahumā
- بَيْنَهُمَآۗ
- between both of them
- அந்த இருவருக்கிடையில்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- is
- இருக்கிறான்
- ʿalīman
- عَلِيمًا
- All-Knower
- நன்கறிந்தவனாக
- khabīran
- خَبِيرًا
- All-Aware
- ஆழ்ந்தறிந்தவனாக
Transliteration:
Wa in khiftum shiqaaqa baini himaa fab'asoo haka mam min ahlihee wa hakamam min ahlihaa; iny-yureedaaa islaah ai-yuwaffiqil laahu bainahumaa; innal laaha kaana 'Aleeman Khabeeraa(QS. an-Nisāʾ:35)
English Sahih International:
And if you fear dissension between the two, send an arbitrator from his people and an arbitrator from her people. If they both desire reconciliation, Allah will cause it between them. Indeed, Allah is ever Knowing and Aware. (QS. An-Nisa, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவன் உறவினர்களில் ஒருவரையும், அவள் உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், கவனிப்பவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௩௫)
Jan Trust Foundation
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்த (கணவன் மனைவி) இருவருக்குள் பிளவை நீங்கள் பயந்தால் அவனின் உறவினரில் ஒரு தீர்ப்பாளரையும், அவளின் உறவினரில் ஒரு தீர்ப்பாளரையும் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சீர்திருத்தத்தை நாடினால் அந்த (கணவன் மனைவி) இருவருக்கிடையில் அல்லாஹ் ஒற்றுமை ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.