Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 18

An-Nisa

(an-Nisāʾ)

௧௭௧

يٰٓاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِيْ دِيْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَقَّۗ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَلْقٰهَآ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ ۖفَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۗ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ۗاِنْتَهُوْا خَيْرًا لَّكُمْ ۗ اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ۗ سُبْحٰنَهٗٓ اَنْ يَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا ࣖ ١٧١

yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
lā taghlū
لَا تَغْلُوا۟
அளவு கடக்காதீர்
fī dīnikum
فِى دِينِكُمْ
உங்கள் மார்க்கத்தில்
walā taqūlū
وَلَا تَقُولُوا۟
இன்னும் கூறாதீர்கள்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
illā l-ḥaqa
إِلَّا ٱلْحَقَّۚ
உண்மையைத் தவிர
innamā
إِنَّمَا
எல்லாம்
l-masīḥu
ٱلْمَسِيحُ
மஸீஹ்
ʿīsā
عِيسَى
ஈஸா
ub'nu maryama
ٱبْنُ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
rasūlu
رَسُولُ
தூதர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
wakalimatuhu
وَكَلِمَتُهُۥٓ
இன்னும் அவனுடைய வார்த்தை
alqāhā
أَلْقَىٰهَآ
சேர்ப்பித்தான்/அதை
ilā maryama
إِلَىٰ مَرْيَمَ
மர்யமின் பக்கம்
warūḥun
وَرُوحٌ
இன்னும் உயிர்
min'hu
مِّنْهُۖ
அவன் புறத்திலிருந்து
faāminū
فَـَٔامِنُوا۟
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
warusulihi
وَرُسُلِهِۦۖ
இன்னும் அவனுடைய தூதர்களை
walā taqūlū
وَلَا تَقُولُوا۟
இன்னும் கூறாதீர்கள்
thalāthatun
ثَلَٰثَةٌۚ
மூவர்
intahū
ٱنتَهُوا۟
விலகுங்கள்
khayran
خَيْرًا
மிக நன்று
lakum
لَّكُمْۚ
உங்களுக்கு
innamā l-lahu
إِنَّمَا ٱللَّهُ
அல்லாஹ் எல்லாம்
ilāhun
إِلَٰهٌ
ஒரு கடவுள்
wāḥidun
وَٰحِدٌۖ
ஒரே
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥٓ
அவன் மிக பரிசுத்தமானவன்
an yakūna
أَن يَكُونَ
இருப்பதைவிட்டு
lahu
لَهُۥ
அவனுக்கு
waladun
وَلَدٌۘ
குழந்தை
lahu
لَّهُۥ
அவனுக்கே
مَا
எவை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۗ
இன்னும் எவை/பூமியில்
wakafā
وَكَفَىٰ
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளனாக
வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அன்றி, அவனுடைய ("குன்" என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கின்றார். அல்லாஹ் (தன்னுடைய) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) "மூவர்" என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரித்தானவைகளே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை.) ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௭௧)
Tafseer
௧௭௨

لَنْ يَّسْتَنْكِفَ الْمَسِيْحُ اَنْ يَّكُوْنَ عَبْدًا لِّلّٰهِ وَلَا الْمَلٰۤىِٕكَةُ الْمُقَرَّبُوْنَۗ وَمَنْ يَّسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهٖ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ اِلَيْهِ جَمِيْعًا ١٧٢

lan yastankifa
لَّن يَسْتَنكِفَ
திமிரு கொள்ளமாட்டார்(கள்)
l-masīḥu
ٱلْمَسِيحُ
ஈஸா # மஸீஹ்
an yakūna
أَن يَكُونَ
இருப்பதைவிட்டு
ʿabdan
عَبْدًا
அடிமையாக
lillahi
لِّلَّهِ
அல்லாஹ்விற்கு
walā
وَلَا
இன்னும் இல்லை
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
l-muqarabūna
ٱلْمُقَرَّبُونَۚ
நெருக்கமானவர்கள்
waman
وَمَن
எவர்(கள்)
yastankif
يَسْتَنكِفْ
திமிரு கொள்வார்(கள்)
ʿan
عَنْ
விட்டு
ʿibādatihi
عِبَادَتِهِۦ
அவனைவணங்குவது
wayastakbir
وَيَسْتَكْبِرْ
இன்னும் பெருமை கொள்வார்(கள்)
fasayaḥshuruhum
فَسَيَحْشُرُهُمْ
ஒன்று திரட்டுவான் அவர்கள்
ilayhi
إِلَيْهِ
தன் பக்கம்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
ஈஸாவும், சிறப்பு வாய்ந்த மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைப்பற்றி குறைவாகக் கருதமாட்டார்கள். எவர்கள் கர்வம் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் காண்கின்றனரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன்னிடமே கொண்டு வரச் செய்வான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௭௨)
Tafseer
௧௭௩

فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ وَيَزِيْدُهُمْ مِّنْ فَضْلِهٖۚ وَاَمَّا الَّذِيْنَ اسْتَنْكَفُوْا وَاسْتَكْبَرُوْا فَيُعَذِّبُهُمْ عَذَابًا اَلِيْمًاۙ وَّلَا يَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ١٧٣

fa-ammā
فَأَمَّا
ஆகவே
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
fayuwaffīhim
فَيُوَفِّيهِمْ
முழுமையாக நிறைவேற்றுவான்/ அவர்களுக்கு
ujūrahum
أُجُورَهُمْ
கூலிகளை/அவர்களுடைய
wayazīduhum
وَيَزِيدُهُم
இன்னும் அதிகப்படுத்துவான் அவர்களுக்கு
min faḍlihi
مِّن فَضْلِهِۦۖ
தன் அருளிலிருந்து
wa-ammā
وَأَمَّا
ஆகவே
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
is'tankafū
ٱسْتَنكَفُوا۟
திமிரு பிடித்தார்கள்
wa-is'takbarū
وَٱسْتَكْبَرُوا۟
இன்னும் பெருமையடித்தார்கள்
fayuʿadhibuhum
فَيُعَذِّبُهُمْ
வேதனை செய்வான்/அவர்களை
ʿadhāban
عَذَابًا
வேதனையால்
alīman
أَلِيمًا
துன்புறுத்தும்
walā yajidūna
وَلَا يَجِدُونَ
இன்னும் காணமாட்டார்கள்
lahum
لَهُم
தங்களுக்கு
min dūni
مِّن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
waliyyan
وَلِيًّا
பாதுகாவலரை
walā naṣīran
وَلَا نَصِيرًا
இன்னும் உதவியாளரை
ஆகவே, எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு முழுமையாக அளித்து, தன் அருளால் மென்மேலும் அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் கர்வம் கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைக்) குறைவாகக் காண்கின்றனரோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வையன்றி தங்களுக்குத் துணை புரிபவர்களையும் உதவி புரிபவர்களையும் (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௭௩)
Tafseer
௧௭௪

يٰٓاَيُّهَا النَّاسُ قَدْ جَاۤءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَآ اِلَيْكُمْ نُوْرًا مُّبِيْنًا ١٧٤

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே!
qad
قَدْ
திட்டமாக
jāakum
جَآءَكُم
வந்துள்ளது உங்களிடம்
bur'hānun
بُرْهَٰنٌ
ஓர் அத்தாட்சி
min
مِّن
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
wa-anzalnā
وَأَنزَلْنَآ
இன்னும் இறக்கினோம்
ilaykum
إِلَيْكُمْ
உங்களுக்கு
nūran
نُورًا
ஓர் ஒளியை
mubīnan
مُّبِينًا
தெளிவானது
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சி நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டது. தெளிவான ஒளியையே நாம் உங்களுக்கு இறக்கியிருக்கின்றோம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௭௪)
Tafseer
௧௭௫

فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَيُدْخِلُهُمْ فِيْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍۙ وَّيَهْدِيْهِمْ اِلَيْهِ صِرَاطًا مُّسْتَقِيْمًاۗ ١٧٥

fa-ammā
فَأَمَّا
ஆகவே
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wa-iʿ'taṣamū
وَٱعْتَصَمُوا۟
இன்னும் பற்றிப்பிடித்தார்கள்
bihi
بِهِۦ
அவனை
fasayud'khiluhum
فَسَيُدْخِلُهُمْ
நுழைப்பான்/ அவர்களை
fī raḥmatin
فِى رَحْمَةٍ
கருணையில்
min'hu
مِّنْهُ
தன் புறத்திலிருந்து
wafaḍlin
وَفَضْلٍ
இன்னும் அருள்
wayahdīhim
وَيَهْدِيهِمْ
இன்னும் வழிகாட்டுவான்/அவர்களுக்கு
ilayhi
إِلَيْهِ
தன் பக்கம்
ṣirāṭan
صِرَٰطًا
வழியை
mus'taqīman
مُّسْتَقِيمًا
நேரானது
ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவ(னது வழியி)னைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்களோ அவர்களை அவன் தன்னுடைய அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகின்றான். அன்றி, தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௭௫)
Tafseer
௧௭௬

يَسْتَفْتُوْنَكَۗ قُلِ اللّٰهُ يُفْتِيْكُمْ فِى الْكَلٰلَةِ ۗاِنِ امْرُؤٌا هَلَكَ لَيْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗٓ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَۚ وَهُوَ يَرِثُهَآ اِنْ لَّمْ يَكُنْ لَّهَا وَلَدٌ ۚ فَاِنْ كَانَتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ ۗوَاِنْ كَانُوْٓا اِخْوَةً رِّجَالًا وَّنِسَاۤءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِۗ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اَنْ تَضِلُّوْا ۗ وَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ ١٧٦

yastaftūnaka
يَسْتَفْتُونَكَ
தீர்ப்பு கேட்கின்றனர்/உம்மிடம்
quli
قُلِ
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yuf'tīkum
يُفْتِيكُمْ
உங்களுக்கு கட்டளையிடுகிறான்
fī l-kalālati
فِى ٱلْكَلَٰلَةِۚ
வாரிசு அற்றவர் பற்றி
ini im'ru-on
إِنِ ٱمْرُؤٌا۟
(ஆண்) மனிதன்
halaka
هَلَكَ
இறந்து விட்டான்
laysa lahu
لَيْسَ لَهُۥ
இல்லை/அவனுக்கு
waladun
وَلَدٌ
சந்ததி
walahu
وَلَهُۥٓ
இன்னும் அவனுக்கு
ukh'tun
أُخْتٌ
ஒரு சகோதரி
falahā niṣ'fu
فَلَهَا نِصْفُ
அவளுக்கு/பாதி
mā taraka
مَا تَرَكَۚ
எது/விட்டுச்சென்றான்
wahuwa
وَهُوَ
அவன்
yarithuhā
يَرِثُهَآ
வாரிசாக ஆவான்/அவளுக்கு
in lam yakun
إِن لَّمْ يَكُن
இல்லையென்றால்
lahā
لَّهَا
அவளுக்கு
waladun
وَلَدٌۚ
சந்ததி
fa-in kānatā
فَإِن كَانَتَا
இருந்தால்
ith'natayni
ٱثْنَتَيْنِ
இரு பெண்களாக
falahumā
فَلَهُمَا
அவ்விருவருக்கும்
l-thuluthāni
ٱلثُّلُثَانِ
மூன்றில் இரண்டு
mimmā
مِمَّا
எதிலிருந்து
taraka
تَرَكَۚ
விட்டுச் சென்றான்
wa-in kānū
وَإِن كَانُوٓا۟
அவர்கள் இருந்தால்
ikh'watan
إِخْوَةً
உடன் பிறந்தவர்கள்
rijālan
رِّجَالًا
ஆண்களாக
wanisāan
وَنِسَآءً
இன்னும் பெண்களாக
falildhakari
فَلِلذَّكَرِ
ஆணுக்கு
mith'lu
مِثْلُ
போன்று
ḥaẓẓi
حَظِّ
பங்கு
l-unthayayni
ٱلْأُنثَيَيْنِۗ
இரு பெண்களின்
yubayyinu
يُبَيِّنُ
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْ
உங்களுக்கு
an taḍillū
أَن تَضِلُّوا۟ۗ
நீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காக
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
(நபியே!) "கலாலா" பற்றிய (அதாவது தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத பொருளைப் பற்றிய) மார்க்கக் கட்டளையை அவர்கள் உங்களிடம் கேட்கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்ற (சொத்)தில் பாதி கிடைக்கும். (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்குச் சந்ததி இல்லாமலிருந்(து ஒரே ஒரு சகோதரன் மட்டும் இருந்)தால் அவள் விட்டுச்சென்ற அனைத்தையும் அவன் அடைவான். ஆணின்றி இரு பெண்கள் (மட்டும்) இருந்தால், அவள் விட்டுச் சென்றதில் மூன்றில் இரு பாகத்தை இவ்விருவரும் அடைவார்கள். அன்றி, ஆணும் பெண்ணும் (ஆகப் பலர்) சகோதரர்களாயிருந்தால், (இறந்தவர் விட்டுச்சென்றதில்) ஆணுக்குப் பெண்ணுக்கிருப்பதைப் போல இரண்டு பங்கு உண்டு. (அதாவது பெண்ணுக்கு ஒரு பங்கும் ஆணுக்கு இரு பங்குகளும் கிடைக்கும்.) நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக (இவைகளை) அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தெளிவாக விவரிக்கின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௭௬)
Tafseer