Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௭௬

Qur'an Surah An-Nisa Verse 176

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَسْتَفْتُوْنَكَۗ قُلِ اللّٰهُ يُفْتِيْكُمْ فِى الْكَلٰلَةِ ۗاِنِ امْرُؤٌا هَلَكَ لَيْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗٓ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَۚ وَهُوَ يَرِثُهَآ اِنْ لَّمْ يَكُنْ لَّهَا وَلَدٌ ۚ فَاِنْ كَانَتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ ۗوَاِنْ كَانُوْٓا اِخْوَةً رِّجَالًا وَّنِسَاۤءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِۗ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اَنْ تَضِلُّوْا ۗ وَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ (النساء : ٤)

yastaftūnaka
يَسْتَفْتُونَكَ
They seek your ruling
தீர்ப்பு கேட்கின்றனர்/உம்மிடம்
quli
قُلِ
Say
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
"Allah
அல்லாஹ்
yuf'tīkum
يُفْتِيكُمْ
gives you a ruling
உங்களுக்கு கட்டளையிடுகிறான்
fī l-kalālati
فِى ٱلْكَلَٰلَةِۚ
concerning the Kalala
வாரிசு அற்றவர் பற்றி
ini im'ru-on
إِنِ ٱمْرُؤٌا۟
if a man
(ஆண்) மனிதன்
halaka
هَلَكَ
died
இறந்து விட்டான்
laysa lahu
لَيْسَ لَهُۥ
(and) not he has
இல்லை/அவனுக்கு
waladun
وَلَدٌ
a child
சந்ததி
walahu
وَلَهُۥٓ
and he has
இன்னும் அவனுக்கு
ukh'tun
أُخْتٌ
a sister
ஒரு சகோதரி
falahā niṣ'fu
فَلَهَا نِصْفُ
then for her (is) a half
அவளுக்கு/பாதி
mā taraka
مَا تَرَكَۚ
(of) what he left
எது/விட்டுச்சென்றான்
wahuwa
وَهُوَ
And he
அவன்
yarithuhā
يَرِثُهَآ
will inherit from her
வாரிசாக ஆவான்/அவளுக்கு
in lam yakun
إِن لَّمْ يَكُن
if not is
இல்லையென்றால்
lahā
لَّهَا
for her
அவளுக்கு
waladun
وَلَدٌۚ
a child
சந்ததி
fa-in kānatā
فَإِن كَانَتَا
But if there were
இருந்தால்
ith'natayni
ٱثْنَتَيْنِ
two females
இரு பெண்களாக
falahumā
فَلَهُمَا
then for them
அவ்விருவருக்கும்
l-thuluthāni
ٱلثُّلُثَانِ
two thirds
மூன்றில் இரண்டு
mimmā
مِمَّا
of what
எதிலிருந்து
taraka
تَرَكَۚ
he left
விட்டுச் சென்றான்
wa-in kānū
وَإِن كَانُوٓا۟
But if they were
அவர்கள் இருந்தால்
ikh'watan
إِخْوَةً
brothers and sisters
உடன் பிறந்தவர்கள்
rijālan
رِّجَالًا
men
ஆண்களாக
wanisāan
وَنِسَآءً
and women
இன்னும் பெண்களாக
falildhakari
فَلِلذَّكَرِ
then the male will have
ஆணுக்கு
mith'lu
مِثْلُ
like
போன்று
ḥaẓẓi
حَظِّ
share
பங்கு
l-unthayayni
ٱلْأُنثَيَيْنِۗ
(of) the two females
இரு பெண்களின்
yubayyinu
يُبَيِّنُ
makes clear
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
an taḍillū
أَن تَضِلُّوا۟ۗ
lest you go astray
நீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காக
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
of every thing
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌۢ
(is) All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Yastaftoonaka qulillaahu yafteekum fil kalaalah; inimru'un halaka laisa lahoo waladunw wa lahoo ukhtun falahaa nisfu maa tarak; wa huwa yarisuhaaa il lam yakkul lahaa walad; fa in kaanatas nataini falahumas sulusaani mimmmaa tarak; wa in kaanooo ikhwatar rijaalanw wa nisaaa'an faliz zakari mislu hazzil unsayayn; yubaiyinullaahu lakum an tadilloo; wallaahu bikulli shai'in Aleem (QS. an-Nisāʾ:176)

English Sahih International:

They request from you a [legal] ruling. Say, "Allah gives you a ruling concerning one having neither descendants nor ascendants [as heirs]." If a man dies, leaving no child but [only] a sister, she will have half of what he left. And he inherits from her if she [dies and] has no child. But if there are two sisters [or more], they will have two thirds of what he left. If there are both brothers and sisters, the male will have the share of two females. Allah makes clear to you [His law], lest you go astray. And Allah is Knowing of all things. (QS. An-Nisa, Ayah ௧௭௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) "கலாலா" பற்றிய (அதாவது தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத பொருளைப் பற்றிய) மார்க்கக் கட்டளையை அவர்கள் உங்களிடம் கேட்கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்ற (சொத்)தில் பாதி கிடைக்கும். (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்குச் சந்ததி இல்லாமலிருந்(து ஒரே ஒரு சகோதரன் மட்டும் இருந்)தால் அவள் விட்டுச்சென்ற அனைத்தையும் அவன் அடைவான். ஆணின்றி இரு பெண்கள் (மட்டும்) இருந்தால், அவள் விட்டுச் சென்றதில் மூன்றில் இரு பாகத்தை இவ்விருவரும் அடைவார்கள். அன்றி, ஆணும் பெண்ணும் (ஆகப் பலர்) சகோதரர்களாயிருந்தால், (இறந்தவர் விட்டுச்சென்றதில்) ஆணுக்குப் பெண்ணுக்கிருப்பதைப் போல இரண்டு பங்கு உண்டு. (அதாவது பெண்ணுக்கு ஒரு பங்கும் ஆணுக்கு இரு பங்குகளும் கிடைக்கும்.) நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக (இவைகளை) அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தெளிவாக விவரிக்கின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௭௬)

Jan Trust Foundation

(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்| அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்; ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) ‘கலாலா’ (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாதவர்) பற்றி உம்மிடம் தீர்ப்பு கேட்கிறார்கள். கூறுவீராக! “அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதில் பாதி கிடைக்கும். (ஒரு பெண் இறந்து) அவளுக்கு சந்ததி இல்லையென்றால் (அவளுடைய சகோதரன்) அவளுக்கு (அனைத்து சொத்திற்கும்) வாரிசாக ஆவான். (உடன் பிறந்த சகோதரிகள்) இரு பெண்களாக இருந்தால், (இறந்தவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவ்விருவருக்கும் உண்டு. (இறந்தவருக்கு) உடன் பிறந்தவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்தால், இரு பெண்களின் பங்கு ஓர் ஆணுக்கு உண்டு. நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு விவரிக்கிறான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.