Skip to content

ஸூரா ஸூரத்துன்னிஸாவு - Page: 11

An-Nisa

(an-Nisāʾ)

௧௦௧

وَاِذَا ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَقْصُرُوْا مِنَ الصَّلٰوةِ ۖ اِنْ خِفْتُمْ اَنْ يَّفْتِنَكُمُ الَّذِيْنَ كَفَرُوْاۗ اِنَّ الْكٰفِرِيْنَ كَانُوْا لَكُمْ عَدُوًّا مُّبِيْنًا ١٠١

wa-idhā ḍarabtum
وَإِذَا ضَرَبْتُمْ
நீங்கள் பயணித்தால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
falaysa
فَلَيْسَ
இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
junāḥun
جُنَاحٌ
குற்றம்
an taqṣurū
أَن تَقْصُرُوا۟
நீங்கள் சுருக்குவது
mina l-ṣalati
مِنَ ٱلصَّلَوٰةِ
தொழுகையை
in khif'tum
إِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
an yaftinakumu
أَن يَفْتِنَكُمُ
துன்புறுத்துவதை/உங்களை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟ۚ
நிராகரித்தார்கள்
inna l-kāfirīna
إِنَّ ٱلْكَٰفِرِينَ
நிச்சயமாக நிராகரிப்பாளர்கள்
kānū
كَانُوا۟
இருக்கின்றனர்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿaduwwan mubīnan
عَدُوًّا مُّبِينًا
எதிரிகளாக /பகிரங்கமான
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணம் செய்யும் காலத்தில் (நீங்கள் தொழுது கொண்டிருக்கும்போது) நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என பயந்தால் நீங்கள் ("கஸர்" தொழுவது அதாவது உங்கள்) தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. ஏனென்றால், நிராகரிப்பவர்கள் உங்களுக்குப் பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௧)
Tafseer
௧௦௨

وَاِذَا كُنْتَ فِيْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَاۤىِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَأْخُذُوْٓا اَسْلِحَتَهُمْ ۗ فَاِذَا سَجَدُوْا فَلْيَكُوْنُوْا مِنْ وَّرَاۤىِٕكُمْۖ وَلْتَأْتِ طَاۤىِٕفَةٌ اُخْرٰى لَمْ يُصَلُّوْا فَلْيُصَلُّوْا مَعَكَ وَلْيَأْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ ۗ وَدَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَيَمِيْلُوْنَ عَلَيْكُمْ مَّيْلَةً وَّاحِدَةً ۗوَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَذًى مِّنْ مَّطَرٍ اَوْ كُنْتُمْ مَّرْضٰٓى اَنْ تَضَعُوْٓا اَسْلِحَتَكُمْ وَخُذُوْا حِذْرَكُمْ ۗ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا ١٠٢

wa-idhā kunta
وَإِذَا كُنتَ
நீர் இருந்தால்
fīhim
فِيهِمْ
அவர்களில்
fa-aqamta
فَأَقَمْتَ
இன்னும் நிலைநிறுத்தினால்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
faltaqum
فَلْتَقُمْ
நிற்கவும்
ṭāifatun
طَآئِفَةٌ
ஒரு பிரிவு
min'hum
مِّنْهُم
அவர்களில்
maʿaka
مَّعَكَ
உம்முடன்
walyakhudhū
وَلْيَأْخُذُوٓا۟
அவர்கள் எடுக்கவும்
asliḥatahum
أَسْلِحَتَهُمْ
ஆயுதங்களை/தங்கள்
fa-idhā sajadū
فَإِذَا سَجَدُوا۟
அவர்கள் சஜ்தா செய்து விட்டால்
falyakūnū
فَلْيَكُونُوا۟
அவர்கள் இருக்கவும்
min warāikum
مِن وَرَآئِكُمْ
உங்களுக்குப் பின்னர்
waltati
وَلْتَأْتِ
இன்னும் வரவும்
ṭāifatun ukh'rā
طَآئِفَةٌ أُخْرَىٰ
ஒரு பிரிவு/மற்ற
lam yuṣallū
لَمْ يُصَلُّوا۟
அவர்கள் தொழவில்லை
falyuṣallū
فَلْيُصَلُّوا۟
அவர்கள் தொழவும்
maʿaka
مَعَكَ
உம்முடன்
walyakhudhū
وَلْيَأْخُذُوا۟
அவர்கள் எடுக்கவும்
ḥidh'rahum
حِذْرَهُمْ
தங்கள் தற்காப்பை
wa-asliḥatahum
وَأَسْلِحَتَهُمْۗ
இன்னும் தங்கள் ஆயுதங்களை
wadda alladhīna
وَدَّ ٱلَّذِينَ
விரும்பினார்(கள்)/ எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
law taghfulūna
لَوْ تَغْفُلُونَ
நீங்கள் கவனமற்று விடுவதை
ʿan
عَنْ
இருந்து
asliḥatikum
أَسْلِحَتِكُمْ
உங்கள் ஆயுதங்கள்
wa-amtiʿatikum
وَأَمْتِعَتِكُمْ
இன்னும் உங்கள் பொருள்கள்
fayamīlūna
فَيَمِيلُونَ
அவர்கள் பாய்ந்து விடுவார்கள்
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
maylatan
مَّيْلَةً
பாய்ச்சல்
wāḥidatan
وَٰحِدَةًۚ
ஒரே பாய்ச்சல்
walā junāḥa
وَلَا جُنَاحَ
குற்றமில்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
in kāna
إِن كَانَ
இருந்தால்
bikum
بِكُمْ
உங்களுக்கு
adhan
أَذًى
சிரமம்
min
مِّن
காரணமாக
maṭarin
مَّطَرٍ
மழை
aw
أَوْ
அல்லது
kuntum
كُنتُم
இருந்தீர்கள்
marḍā
مَّرْضَىٰٓ
நோயாளிகளாக
an taḍaʿū
أَن تَضَعُوٓا۟
நீங்கள் வைப்பது
asliḥatakum
أَسْلِحَتَكُمْۖ
உங்கள் ஆயுதங்களை
wakhudhū
وَخُذُوا۟
இன்னும் எடுங்கள்
ḥidh'rakum
حِذْرَكُمْۗ
உங்கள் தற்காப்பை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
aʿadda
أَعَدَّ
ஏற்படுத்தினான்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
muhīnan
مُّهِينًا
இழிவான
(நபியே! போர் முனையில்) நீங்களும் அவர்களுடன் இருந்து அவர்களைத் தொழவைக்க நீங்கள் (இமாமாக) முன்னின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (மட்டும் தங்கள் கையில்) தங்களுடைய ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டே உங்களுடன் தொழவும். இவர்கள் உங்களுடன் (தொழுது) "ஸஜ்தா" செய்துவிட்டால் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உங்களுடன் சேர்ந்து தொழவும். எனினும் அவர்களும் தங்கள் (கையில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருக்கவும். ஏனென்றால், நீங்கள் உங்கள் பொருள் களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டு மென்று அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். இந்நிலைமையில், மழையின் தொந்தரவினாலோ அல்லது நீங்கள் நோயாளியாக இருந்தோ உங்கள் ஆயுதங்களைக் (கையில் பிடிக்க முடியா விட்டால்) கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் (அவர்களைப் பற்றி) எச்சரிக்கையாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௨)
Tafseer
௧௦௩

فَاِذَا قَضَيْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِكُمْ ۚ فَاِذَا اطْمَأْنَنْتُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ ۚ اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا ١٠٣

fa-idhā qaḍaytumu
فَإِذَا قَضَيْتُمُ
நீங்கள் முடித்தால்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
fa-udh'kurū
فَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
qiyāman
قِيَٰمًا
நின்றவர்களாக
waquʿūdan
وَقُعُودًا
இன்னும் உட்கார்ந்தவர்களாக
waʿalā
وَعَلَىٰ
இன்னும் மீது
junūbikum
جُنُوبِكُمْۚ
உங்கள் விலாக்கள்
fa-idhā iṭ'manantum
فَإِذَا ٱطْمَأْنَنتُمْ
நீங்கள் நிம்மதியடைந்தால்
fa-aqīmū
فَأَقِيمُوا۟
நிலை நிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَۚ
தொழுகையை
inna l-ṣalata
إِنَّ ٱلصَّلَوٰةَ
நிச்சயமாக தொழுகை
kānat ʿalā
كَانَتْ عَلَى
இருக்கிறது/மீது
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
kitāban
كِتَٰبًا
கடமையாக
mawqūtan
مَّوْقُوتًا
நேரம் குறிக்கப்பட்டது
(நம்பிக்கையாளர்களே! இவ்வாறு) நீங்கள் (தொழுது) தொழுகையை முடித்துக் கொண்டால் உங்கள் நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறி "திக்ரு" செய்துகொண்டே இருங்கள். (எதிரியின் தாக்குதலிளிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால் (முறைப்படி) தொழுங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கின்றது. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௩)
Tafseer
௧௦௪

وَلَا تَهِنُوْا فِى ابْتِغَاۤءِ الْقَوْمِ ۗ اِنْ تَكُوْنُوْا تَأْلَمُوْنَ فَاِنَّهُمْ يَأْلَمُوْنَ كَمَا تَأْلَمُوْنَ ۚوَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا يَرْجُوْنَ ۗوَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ࣖ ١٠٤

walā tahinū
وَلَا تَهِنُوا۟
சோர்வடையாதீர்கள்
fī ib'tighāi
فِى ٱبْتِغَآءِ
தேடுவதில்
l-qawmi
ٱلْقَوْمِۖ
கூட்டத்தை
in takūnū
إِن تَكُونُوا۟
நீங்கள் இருந்தால்
talamūna
تَأْلَمُونَ
வேதனைப் படுபவர்களாக
fa-innahum
فَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
yalamūna kamā
يَأْلَمُونَ كَمَا
வேதனைப்படுகிறார்கள்/போன்று
talamūna
تَأْلَمُونَۖ
வேதனைப் படுபவர்களாக
watarjūna
وَتَرْجُونَ
இன்னும் ஆதரவு வைக்கிறீர்கள்
mina l-lahi mā
مِنَ ٱللَّهِ مَا
அல்லாஹ்விடம்/எது
lā yarjūna
لَا يَرْجُونَۗ
அவர்கள் ஆதரவு வைக்க மாட்டார்கள்
wakāna l-lahu
وَكَانَ ٱللَّهُ
இருக்கிறான்/அல்லாஹ்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
ஞானவானாக
எதிரிகளைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள். (அதனால்) உங்களுக்குக் கஷ்டம் நேருவதாயினும் (பொருட்படுத்தாதீர்கள். ஏனென்றால்) நீங்கள் கஷ்டத்தை அனுபவிப்பதைப் போலவே அவர்களும் கஷ்டத்தை அனுபவிப்பதுடன் அவர்கள் எதிர்பார்க்க முடியாத (வெற்றி, நற்கூலி அனைத்)தையும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்கின் றீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௪)
Tafseer
௧௦௫

اِنَّآ اَنْزَلْنَآ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَآ اَرٰىكَ اللّٰهُ ۗوَلَا تَكُنْ لِّلْخَاۤىِٕنِيْنَ خَصِيْمًا ۙ ١٠٥

innā
إِنَّآ
நிச்சயமாக நாமே
anzalnā
أَنزَلْنَآ
இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
இவ்வேதத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையுடன்
litaḥkuma
لِتَحْكُمَ
நீர் தீர்ப்பளிப்பதற்காக
bayna
بَيْنَ
மத்தியில்
l-nāsi
ٱلنَّاسِ
மக்கள்
bimā
بِمَآ
எதைக்கொண்டு
arāka
أَرَىٰكَ
உமக்கு அறிவித்தான்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
walā takun
وَلَا تَكُن
ஆகிவிடாதீர்
lil'khāinīna
لِّلْخَآئِنِينَ
மோசடிக்காரர்களுக்கு
khaṣīman
خَصِيمًا
தர்க்கிப்பவராக
(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவைகளைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உங்கள் மீது இறக்கியிருக்கின்றோம். ஆகவே, நீங்கள் மோசடிக்காரர்களுக்குச் (சார்பாக) தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௫)
Tafseer
௧௦௬

وَّاسْتَغْفِرِ اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًاۚ ١٠٦

wa-is'taghfiri
وَٱسْتَغْفِرِ
இன்னும் மன்னிப்புக் கோருவீராக
l-laha
ٱللَّهَۖ
அல்லாஹ்விடம்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கிறான்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
(இதில் ஏதும் தவறேற்பட்டுவிட்டால் அதற்காக) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும் அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௬)
Tafseer
௧௦௭

وَلَا تُجَادِلْ عَنِ الَّذِيْنَ يَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ ۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِيْمًاۙ ١٠٧

walā tujādil
وَلَا تُجَٰدِلْ
இன்னும் வாதிடாதீர்
ʿani
عَنِ
சார்பாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yakhtānūna
يَخْتَانُونَ
மோசடி செய்கிறார்கள்
anfusahum
أَنفُسَهُمْۚ
தங்களுக்கே
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
man
مَن
எவன்
kāna
كَانَ
இருக்கிறான்
khawwānan
خَوَّانًا
சதிகாரனாக
athīman
أَثِيمًا
பாவியாக
(நபியே!) எவர்கள் (மனிதர்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே சதி செய்து கொண்டார்களோ அவர்களுக்காக (என்னிடம் மன்னிப்பைக் கோரி) நீங்கள் தர்க்கிக்க வேண்டாம். ஏனென்றால், எவன் சதிசெய்யும் பாவியாக இருக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௭)
Tafseer
௧௦௮

يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ يُبَيِّتُوْنَ مَا لَا يَرْضٰى مِنَ الْقَوْلِ ۗ وَكَانَ اللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطًا ١٠٨

yastakhfūna mina l-nāsi
يَسْتَخْفُونَ مِنَ ٱلنَّاسِ
மறைக்கத் தேடுகிறார்கள்/மக்களிடம்
walā yastakhfūna
وَلَا يَسْتَخْفُونَ
அவர்கள் மறைக்கத் தேடுவதில்லை
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
wahuwa
وَهُوَ
அவன்
maʿahum
مَعَهُمْ
அவர்களுடன்
idh
إِذْ
போது
yubayyitūna mā
يُبَيِّتُونَ مَا
சதித்திட்டம் செய்கின்றனர்/எதை
lā yarḍā
لَا يَرْضَىٰ
விரும்பமாட்டான்
mina l-qawli
مِنَ ٱلْقَوْلِۚ
பேச்சில்
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu bimā
ٱللَّهُ بِمَا
அல்லாஹ்/எதை
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
muḥīṭan
مُحِيطًا
சூழ்ந்தவனாக
இவர்கள் (சதி செய்யும் தங்கள் குற்றத்தை) மனிதர்களுக்கு மறைக்கின்றார்கள். எனினும், (அதனை) அல்லாஹ்வுக்கு மறைத்து விட முடியாது. (அல்லாஹ்) விரும்பாத விஷயங்களைக் கொண்டு இவர்கள் இரவெல்லாம் பேசி சதி ஆலோசனை செய்யும்போது அவன் அவர்களுடன்தான் இருக்கின்றான். அல்லாஹ் அவர்களுடைய(சதிச்) செயலை(த் தன் ஞானத்தால்) சூழ்ந்து கொண்டும் இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௮)
Tafseer
௧௦௯

هٰٓاَنْتُمْ هٰٓؤُلَاۤءِ جَادَلْتُمْ عَنْهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَاۗ فَمَنْ يُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ يَوْمَ الْقِيٰمَةِ اَمْ مَّنْ يَّكُوْنُ عَلَيْهِمْ وَكِيْلًا ١٠٩

hāantum
هَٰٓأَنتُمْ
நீங்கள்
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
jādaltum
جَٰدَلْتُمْ
வாதிடுகிறீர்களா?
ʿanhum
عَنْهُمْ
இவர்கள் சார்பாக
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
faman
فَمَن
யார்
yujādilu
يُجَٰدِلُ
வாதிடுவார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
ʿanhum
عَنْهُمْ
இவர்கள் சார்பாக
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
am
أَم
அல்லது
man
مَّن
யார்
yakūnu
يَكُونُ
இருப்பார்
ʿalayhim
عَلَيْهِمْ
இவர்கள் மீது
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளராக
நம்பிக்கையாளர்களே! இவர்களுக்(கு உதவுவதற்)காகவா நீங்கள் இவ்வுலகத்தில் தர்கிக்கின்றீர்கள்? மறுமைநாளில் இவர்களுக்காக அல்லாஹ்விடம் தர்க்கிப்பவன் யார்? அன்றி (அந்நாளில்) இவர்களுக்குப் பரிந்து பேசுபவன் யார்? ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦௯)
Tafseer
௧௧௦

وَمَنْ يَّعْمَلْ سُوْۤءًا اَوْ يَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ يَسْتَغْفِرِ اللّٰهَ يَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِيْمًا ١١٠

waman yaʿmal
وَمَن يَعْمَلْ
எவர்/செய்வார்
sūan
سُوٓءًا
ஒரு தீமையை
aw
أَوْ
அல்லது
yaẓlim
يَظْلِمْ
அநீதியிழைப்பார்
nafsahu
نَفْسَهُۥ
தனக்கு
thumma
ثُمَّ
பிறகு
yastaghfiri
يَسْتَغْفِرِ
மன்னிப்புக் கேட்பார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
yajidi
يَجِدِ
காண்பார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
எவரேனும், யாதொரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும் (அவன் மீது) நிகரற்ற அன்புடையவனாகவும் காண்பான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௧௦)
Tafseer