Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௦௪

Qur'an Surah An-Nisa Verse 104

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَهِنُوْا فِى ابْتِغَاۤءِ الْقَوْمِ ۗ اِنْ تَكُوْنُوْا تَأْلَمُوْنَ فَاِنَّهُمْ يَأْلَمُوْنَ كَمَا تَأْلَمُوْنَ ۚوَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا يَرْجُوْنَ ۗوَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ࣖ (النساء : ٤)

walā tahinū
وَلَا تَهِنُوا۟
And (do) not be weak
சோர்வடையாதீர்கள்
fī ib'tighāi
فِى ٱبْتِغَآءِ
in pursuit
தேடுவதில்
l-qawmi
ٱلْقَوْمِۖ
(of) the people
கூட்டத்தை
in takūnū
إِن تَكُونُوا۟
If you are
நீங்கள் இருந்தால்
talamūna
تَأْلَمُونَ
suffering
வேதனைப் படுபவர்களாக
fa-innahum
فَإِنَّهُمْ
then indeed, they
நிச்சயமாக அவர்கள்
yalamūna kamā
يَأْلَمُونَ كَمَا
are (also) suffering like what
வேதனைப்படுகிறார்கள்/போன்று
talamūna
تَأْلَمُونَۖ
you are suffering
வேதனைப் படுபவர்களாக
watarjūna
وَتَرْجُونَ
while you (have) hope
இன்னும் ஆதரவு வைக்கிறீர்கள்
mina l-lahi mā
مِنَ ٱللَّهِ مَا
from Allah what
அல்லாஹ்விடம்/எது
lā yarjūna
لَا يَرْجُونَۗ
not they hope
அவர்கள் ஆதரவு வைக்க மாட்டார்கள்
wakāna l-lahu
وَكَانَ ٱللَّهُ
And is Allah
இருக்கிறான்/அல்லாஹ்
ʿalīman
عَلِيمًا
All-Knowing
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
All-Wise
ஞானவானாக

Transliteration:

Wa laa tahinoo fibtighaaa'il qawmi in takoonoo taalamoona fa innahum yaalamoona kamaa taalamoona wa tarjoona minal laahi maa laa yarjoon; wa kaanal laahu 'Aleeman Hakeemaa (QS. an-Nisāʾ:104)

English Sahih International:

And do not weaken in pursuit of the enemy. If you should be suffering – so are they suffering as you are suffering, but you expect from Allah that which they expect not. And Allah is ever Knowing and Wise. (QS. An-Nisa, Ayah ௧௦௪)

Abdul Hameed Baqavi:

எதிரிகளைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள். (அதனால்) உங்களுக்குக் கஷ்டம் நேருவதாயினும் (பொருட்படுத்தாதீர்கள். ஏனென்றால்) நீங்கள் கஷ்டத்தை அனுபவிப்பதைப் போலவே அவர்களும் கஷ்டத்தை அனுபவிப்பதுடன் அவர்கள் எதிர்பார்க்க முடியாத (வெற்றி, நற்கூலி அனைத்)தையும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்கின் றீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௦௪)

Jan Trust Foundation

மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(எதிரி) கூட்டத்தைத் தேடுவதில் (நீங்கள் சிறிதும்) சோர்வடையாதீர்கள். நீங்கள் (காயத்தினால்) வேதனைப்படுபவர்களாக இருந்தால் நீங்கள் வேதனைப்படுவது போன்று நிச்சயமாக அவர்களும் வேதனைப்படுகிறார்கள். அவர்கள் ஆதரவு வைக்காத (வெற்றி, நற்கூலி அனைத்)தை(யும்) அல்லாஹ்விடம் நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.