يٰٓاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَاۤءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْ تَسَاۤءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا ١
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- மனிதர்களே!
- ittaqū
- ٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- rabbakumu
- رَبَّكُمُ
- உங்கள் இறைவனை
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- khalaqakum
- خَلَقَكُم
- உங்களைப் படைத்தான்
- min nafsin
- مِّن نَّفْسٍ
- ஓர் ஆன்மாவிலிருந்து
- wāḥidatin
- وَٰحِدَةٍ
- ஒரே
- wakhalaqa
- وَخَلَقَ
- இன்னும் படைத்தான்
- min'hā
- مِنْهَا
- அதிலிருந்து
- zawjahā
- زَوْجَهَا
- அவருடைய மனைவியை
- wabatha
- وَبَثَّ
- இன்னும் பரப்பினான்
- min'humā
- مِنْهُمَا
- அவ்விருவரிலிருந்து
- rijālan
- رِجَالًا
- ஆண்களை
- kathīran
- كَثِيرًا
- அதிகமான
- wanisāan
- وَنِسَآءًۚ
- இன்னும் பெண்களை
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- l-laha alladhī
- ٱللَّهَ ٱلَّذِى
- அல்லாஹ்வை/எவன்
- tasāalūna
- تَسَآءَلُونَ
- உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள்
- bihi
- بِهِۦ
- அவனைக்கொண்டு
- wal-arḥāma
- وَٱلْأَرْحَامَۚ
- இன்னும் இரத்தபந்தங்களை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- இருக்கிறான்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- raqīban
- رَقِيبًا
- கண்காணிப்பாளனாக
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர் களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧)Tafseer
وَاٰتُوا الْيَتٰمٰىٓ اَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيْثَ بِالطَّيِّبِ ۖ وَلَا تَأْكُلُوْٓا اَمْوَالَهُمْ اِلٰٓى اَمْوَالِكُمْ ۗ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِيْرًا ٢
- waātū
- وَءَاتُوا۟
- இன்னும் கொடுங்கள்
- l-yatāmā
- ٱلْيَتَٰمَىٰٓ
- அநாதைகளுக்கு
- amwālahum
- أَمْوَٰلَهُمْۖ
- செல்வங்களை/அவர்களுடைய
- walā tatabaddalū
- وَلَا تَتَبَدَّلُوا۟
- மாற்றி விடாதீர்கள்
- l-khabītha
- ٱلْخَبِيثَ
- கெட்டதை
- bil-ṭayibi
- بِٱلطَّيِّبِۖ
- நல்லதிற்கு பதிலாக
- walā takulū
- وَلَا تَأْكُلُوٓا۟
- விழுங்காதீர்கள்
- amwālahum
- أَمْوَٰلَهُمْ
- செல்வங்களை/அவர்களுடைய
- ilā amwālikum
- إِلَىٰٓ أَمْوَٰلِكُمْۚ
- உங்கள்/செல்வங்கள்/உடன்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அது
- kāna
- كَانَ
- இருக்கிறது
- ḥūban
- حُوبًا
- பாவமாக
- kabīran
- كَبِيرًا
- பெரும்
நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்களுடைய பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௨)Tafseer
وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَاۤءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ۗ ذٰلِكَ اَدْنٰٓى اَلَّا تَعُوْلُوْاۗ ٣
- wa-in khif'tum
- وَإِنْ خِفْتُمْ
- நீங்கள் பயந்தால்
- allā tuq'siṭū
- أَلَّا تُقْسِطُوا۟
- நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை
- fī l-yatāmā
- فِى ٱلْيَتَٰمَىٰ
- அநாதைகள் விஷயத்தில்
- fa-inkiḥū
- فَٱنكِحُوا۟
- மணம் புரியுங்கள்
- mā ṭāba
- مَا طَابَ
- எவளை/விருப்பமாகி விட்டார்
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- mina l-nisāi
- مِّنَ ٱلنِّسَآءِ
- பெண்களிலிருந்து
- mathnā
- مَثْنَىٰ
- இரண்டிரண்டாக
- wathulātha
- وَثُلَٰثَ
- இன்னும் மும்மூன்றாக
- warubāʿa
- وَرُبَٰعَۖ
- இன்னும் நான்கு நான்காக
- fa-in khif'tum
- فَإِنْ خِفْتُمْ
- நீங்கள் பயந்தால்
- allā taʿdilū
- أَلَّا تَعْدِلُوا۟
- நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை
- fawāḥidatan
- فَوَٰحِدَةً
- ஒருத்தியை
- aw
- أَوْ
- அல்லது
- mā malakat
- مَا مَلَكَتْ
- எவளை/ சொந்தமாக்கியது
- aymānukum
- أَيْمَٰنُكُمْۚ
- வலக்கரங்கள்/உங்கள்
- dhālika
- ذَٰلِكَ
- இதுவே
- adnā
- أَدْنَىٰٓ
- சுலபமாகும்
- allā taʿūlū
- أَلَّا تَعُولُوا۟
- நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு
அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௩)Tafseer
وَاٰتُوا النِّسَاۤءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً ۗ فَاِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْۤـًٔا مَّرِيْۤـًٔا ٤
- waātū
- وَءَاتُوا۟
- கொடுங்கள்
- l-nisāa
- ٱلنِّسَآءَ
- பெண்களுக்கு
- ṣaduqātihinna
- صَدُقَٰتِهِنَّ
- மணக்கொடைகளை /அவர்களுடைய
- niḥ'latan
- نِحْلَةًۚ
- கடமையாக
- fa-in ṭib'na
- فَإِن طِبْنَ
- அவர்கள் விரும்பினால்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ʿan shayin
- عَن شَىْءٍ
- ஒரு சிறிதை
- min'hu
- مِّنْهُ
- அதிலிருந்து
- nafsan
- نَفْسًا
- மனதால்
- fakulūhu
- فَكُلُوهُ
- அதைப் புசியுங்கள்
- hanīan
- هَنِيٓـًٔا
- இன்பமாக
- marīan
- مَّرِيٓـًٔا
- மகிழ்ச்சியாக
நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹரை" (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதனை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௪)Tafseer
وَلَا تُؤْتُوا السُّفَهَاۤءَ اَمْوَالَكُمُ الَّتِيْ جَعَلَ اللّٰهُ لَكُمْ قِيٰمًا وَّارْزُقُوْهُمْ فِيْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ٥
- walā tu'tū
- وَلَا تُؤْتُوا۟
- கொடுக்காதீர்கள்
- l-sufahāa
- ٱلسُّفَهَآءَ
- புத்திக் குறைவானவர்களுக்கு
- amwālakumu
- أَمْوَٰلَكُمُ
- செல்வங்களை/உங்கள்
- allatī
- ٱلَّتِى
- எது
- jaʿala
- جَعَلَ
- ஆக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- qiyāman
- قِيَٰمًا
- வாழ்வாதாரமாக
- wa-ur'zuqūhum
- وَٱرْزُقُوهُمْ
- உணவளியுங்கள்
- fīhā
- فِيهَا
- அதில்/அவர்களுக்கு
- wa-ik'sūhum
- وَٱكْسُوهُمْ
- இன்னும் ஆடை அணிவியுங்கள்/அவர்களுக்கு
- waqūlū
- وَقُولُوا۟
- கூறுங்கள்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- qawlan
- قَوْلًا
- சொல்லை
- maʿrūfan
- مَّعْرُوفًا
- நல்லது
(அநாதைகளின் பொருளுக்குக் பொறுப்பாளரான நீங்கள் அந்த அனாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருள்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும், (அவர்களுக்குப் போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் கூறி (நல்லறிவைப் புகட்டி) வருவீர்களாக! ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௫)Tafseer
وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىٓ اِذَا بَلَغُوا النِّكَاحَۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْٓا اِلَيْهِمْ اَمْوَالَهُمْ ۚ وَلَا تَأْكُلُوْهَآ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ يَّكْبَرُوْا ۗ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ ۚ وَمَنْ كَانَ فَقِيْرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوْفِ ۗ فَاِذَا دَفَعْتُمْ اِلَيْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَيْهِمْ ۗ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا ٦
- wa-ib'talū
- وَٱبْتَلُوا۟
- சோதியுங்கள்
- l-yatāmā
- ٱلْيَتَٰمَىٰ
- அநாதைகளை
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā balaghū
- إِذَا بَلَغُوا۟
- அவர்கள் அடைந்தால்
- l-nikāḥa
- ٱلنِّكَاحَ
- திருமணத்தை
- fa-in ānastum
- فَإِنْ ءَانَسْتُم
- நீங்கள் கண்டால்
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களிடம்
- rush'dan
- رُشْدًا
- தெளிவான அறிவை
- fa-id'faʿū
- فَٱدْفَعُوٓا۟
- ஒப்படையுங்கள்
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்களிடம்
- amwālahum
- أَمْوَٰلَهُمْۖ
- செல்வங்களை/ அவர்களுடைய
- walā takulūhā
- وَلَا تَأْكُلُوهَآ
- சாப்பிடாதீர்கள் / அவற்றை
- is'rāfan
- إِسْرَافًا
- அளவு கடந்து
- wabidāran
- وَبِدَارًا
- இன்னும் அவரை அவசரமாக
- an yakbarū
- أَن يَكْبَرُوا۟ۚ
- அவர்கள் பெரியவர்களாகுவதை
- waman
- وَمَن
- எவர்
- kāna
- كَانَ
- இருக்கிறார்
- ghaniyyan
- غَنِيًّا
- செல்வந்தராக
- falyastaʿfif
- فَلْيَسْتَعْفِفْۖ
- அவர் தவிர்க்கவும்
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- kāna
- كَانَ
- இருக்கிறார்
- faqīran
- فَقِيرًا
- ஏழையாக
- falyakul
- فَلْيَأْكُلْ
- புசிக்கவும்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِۚ
- முறையுடன்
- fa-idhā dafaʿtum
- فَإِذَا دَفَعْتُمْ
- நீங்கள் ஒப்படைத்தால்
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்களிடம்
- amwālahum
- أَمْوَٰلَهُمْ
- செல்வங்களை/ அவர்களுடைய
- fa-ashhidū
- فَأَشْهِدُوا۟
- சாட்சியாக்குங்கள்
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- அவர்கள் மீது
- wakafā
- وَكَفَىٰ
- இன்னும் போதுமானவன்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்
- ḥasīban
- حَسِيبًا
- துல்லியமாக கணக்கெடுப்பவனாக
அன்றி, அநாதை(ச் சிறுவர்)களை (நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து)ச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர் (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய பொருள்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் பொருள்களைப் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்ற எண்ணத்தின் மீது, அவர்களுடைய பொருள்களை அவசரமாகவும் அளவு கடந்தும் சாப்பிட்டு விடாதீர்கள். (அநாதையின் பொருள்களுடைய பொறுப்பாளர்) பணக்காரராக இருந்தால் (தனக்காக அநாதையின் பொருள்களிலிருந்து யாதொன்றையும் பயன் பெறாமல்) தவிர்த்துக் கொள்ளவும். அவர் ஏழையாக இருந்தாலோ முறையான அளவு (அதிலிருந்து) புசிக்கலாம். அவர்களுடைய பொருள்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மைக்) கணக்கை அறிய அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். (ஆகவே அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்.) ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௬)Tafseer
لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَۖ وَلِلنِّسَاۤءِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ۗ نَصِيْبًا مَّفْرُوْضًا ٧
- lilrrijāli
- لِّلرِّجَالِ
- ஆண்களுக்கு
- naṣībun
- نَصِيبٌ
- ஒரு பாகம்
- mimmā taraka
- مِّمَّا تَرَكَ
- எதிலிருந்து/ விட்டுச் சென்றார்
- l-wālidāni
- ٱلْوَٰلِدَانِ
- பெற்றோர்
- wal-aqrabūna
- وَٱلْأَقْرَبُونَ
- இன்னும் நெருங்கிய உறவினர்கள்
- walilnnisāi
- وَلِلنِّسَآءِ
- இன்னும் பெண்களுக்கு
- naṣībun
- نَصِيبٌ
- ஒரு பாகம்
- mimmā taraka
- مِّمَّا تَرَكَ
- எதிலிருந்து/ விட்டுச் சென்றார்
- l-wālidāni
- ٱلْوَٰلِدَانِ
- பெற்றோர்
- wal-aqrabūna
- وَٱلْأَقْرَبُونَ
- இன்னும் நெருங்கிய உறவினர்கள்
- mimmā qalla
- مِمَّا قَلَّ
- எதிலிருந்து/குறைந்தது
- min'hu
- مِنْهُ
- அதில்
- aw
- أَوْ
- அல்லது
- kathura
- كَثُرَۚ
- அதிகமானது
- naṣīban
- نَصِيبًا
- பாகமாக
- mafrūḍan
- مَّفْرُوضًا
- கடமையாக்கப்பட்டது
(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வாறே) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௭)Tafseer
وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ٨
- wa-idhā ḥaḍara
- وَإِذَا حَضَرَ
- வந்தால்
- l-qis'mata
- ٱلْقِسْمَةَ
- பங்கு வைக்கும்போது
- ulū l-qur'bā
- أُو۟لُوا۟ ٱلْقُرْبَىٰ
- உறவினர்கள்
- wal-yatāmā
- وَٱلْيَتَٰمَىٰ
- இன்னும் அனாதைகள்
- wal-masākīnu
- وَٱلْمَسَٰكِينُ
- இன்னும் ஏழைகள்
- fa-ur'zuqūhum
- فَٱرْزُقُوهُم
- கொடுங்கள் அவர்களுக்கு
- min'hu
- مِّنْهُ
- அதிலிரு ந்து
- waqūlū
- وَقُولُوا۟
- இன்னும் கூறுங்கள்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- qawlan
- قَوْلًا
- சொல்லை
- maʿrūfan
- مَّعْرُوفًا
- நல்லது
(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி) விடுங்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௮)Tafseer
وَلْيَخْشَ الَّذِيْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعٰفًا خَافُوْا عَلَيْهِمْۖ فَلْيَتَّقُوا اللّٰهَ وَلْيَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ٩
- walyakhsha
- وَلْيَخْشَ
- பயப்படட்டும்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- law tarakū
- لَوْ تَرَكُوا۟
- அவர்கள் விட்டுச் சென்றால்
- min
- مِنْ
- இருந்து
- khalfihim
- خَلْفِهِمْ
- அவர்களுக்குப் பின்
- dhurriyyatan
- ذُرِّيَّةً
- ஒரு சந்ததியை
- ḍiʿāfan
- ضِعَٰفًا
- பலவீனர்கள்
- khāfū
- خَافُوا۟
- பயப்படுவார்கள்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- falyattaqū
- فَلْيَتَّقُوا۟
- ஆகவே அவர்கள் அஞ்சட்டும்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- walyaqūlū
- وَلْيَقُولُوا۟
- இன்னும் அவர்கள் சொல்லட்டும்
- qawlan
- قَوْلًا
- சொல்லை
- sadīdan
- سَدِيدًا
- நேர்மையானது
எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று பயப்படுகிறார்களோ அதுபோன்று அவர்கள் பிற (உறவினர்களின்) அநாதைகளின் விஷயத்திலும் பயந்து கொள்ளட்டும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், நேர்மையான வார்த்தையை சொல்லட்டும். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௯)Tafseer
اِنَّ الَّذِيْنَ يَأْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَأْكُلُوْنَ فِيْ بُطُوْنِهِمْ نَارًا ۗ وَسَيَصْلَوْنَ سَعِيْرًا ࣖ ١٠
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yakulūna
- يَأْكُلُونَ
- விழுங்குகிறார்கள்
- amwāla
- أَمْوَٰلَ
- செல்வங்களை
- l-yatāmā
- ٱلْيَتَٰمَىٰ
- அநாதைகளின்
- ẓul'man
- ظُلْمًا
- அநியாயமாக
- innamā
- إِنَّمَا
- எல்லாம்
- yakulūna
- يَأْكُلُونَ
- விழுங்குகிறார்கள்
- fī buṭūnihim
- فِى بُطُونِهِمْ
- வயிறுகளில்/ அவர்களுடைய
- nāran
- نَارًاۖ
- நெருப்பை
- wasayaṣlawna
- وَسَيَصْلَوْنَ
- இன்னும் எரிவார்கள்
- saʿīran
- سَعِيرًا
- நரக ஜுவாலையில்
எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகின்றார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கின்றார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள். ([௪] ஸூரத்துன்னிஸாவு: ௧௦)Tafseer