குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௮
Qur'an Surah An-Nisa Verse 8
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا (النساء : ٤)
- wa-idhā ḥaḍara
- وَإِذَا حَضَرَ
- And when present
- வந்தால்
- l-qis'mata
- ٱلْقِسْمَةَ
- (at) the (time of) division
- பங்கு வைக்கும்போது
- ulū l-qur'bā
- أُو۟لُوا۟ ٱلْقُرْبَىٰ
- (of) the relatives
- உறவினர்கள்
- wal-yatāmā
- وَٱلْيَتَٰمَىٰ
- and the orphans
- இன்னும் அனாதைகள்
- wal-masākīnu
- وَٱلْمَسَٰكِينُ
- and the poor
- இன்னும் ஏழைகள்
- fa-ur'zuqūhum
- فَٱرْزُقُوهُم
- then provide them
- கொடுங்கள் அவர்களுக்கு
- min'hu
- مِّنْهُ
- from it
- அதிலிரு ந்து
- waqūlū
- وَقُولُوا۟
- and speak
- இன்னும் கூறுங்கள்
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- qawlan
- قَوْلًا
- words
- சொல்லை
- maʿrūfan
- مَّعْرُوفًا
- (of) kindness
- நல்லது
Transliteration:
Wa izaa hadaral qismata ulul qurbaa walyataamaa walmasaakeenu farzuqoohum minhu wa qooloo lahum qawlam ma'roofaa(QS. an-Nisāʾ:8)
English Sahih International:
And when [other] relatives and orphans and the needy are present at the [time of] division, then provide for them [something] out of it [i.e., the estate] and speak to them words of appropriate kindness. (QS. An-Nisa, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி) விடுங்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௮)
Jan Trust Foundation
பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பங்கு வைக்கும்போது உறவினர்கள், அனாதைகள், ஏழைகள் வந்தால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுங்கள். இன்னும் அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லைக் கூறுங்கள்.